Tuesday, May 08, 2007

சொல்ல மறந்த கதை

பிரேமலதாவின் இந்தப் பதிவைப் பார்த்ததும் வழக்கம் போல் டார்ட்டாய்ஸ் சுத்தல் தான். நான் நல்லா படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும்னா ட்ராவெல்லாம் வைத்த ஒரு கோத்ரேஜ் டேபிளெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்று மாமாவிடம் ரொம்ப நாளாக வேண்டுதல் இருந்தது. ஊரில் ஒரே ஒரு கடையில் தான் அந்த மாதிரி டேபிளெல்லாம் வைத்திருந்தார்கள். மாமியுடன் கடை தெருவுக்கு போகும் போதெல்லாம் அந்தக் கடைக்குப் போய் ஆசையாய் ட்ராவெல்லாம் திறந்து பார்த்துவிட்டு விலை கேட்டுவிட்டு வருவேன். கடைக்காரரும்.."என்னிக்கு வேணா வாப்பா...இதே விலை தான் உனக்கு..விலைய ஏத்தவே மாட்டேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார். நான் அரிப்பது போறாது என்று மாமியும் கூட சேர்ந்து அரித்ததில் மாமா அரிப்பு தாங்காமல் ஒரு வழியாக வாங்கிக் கொடுத்துவிட்டார்.

அதை மாடிப் படிக்கு கீழே வைத்து அப்பா வீட்டிலிருந்து ஒரு பழைய டேபிள் லாம்ப் லவுட்டிக் கொண்டு வந்து, மணிரத்னம் பட எபஃக்ட்டில் வைத்து படித்துக் கிழிக்கிற மாதிரி டேபிள் ஃபேன் எல்லாம் செட் செய்து வைத்தேன். ஐய்யோ பாவம் மாமாவும் பையன் இனிமே படித்து பர்ஸ்ட் ராங்க் வாங்கிவிடுவான் என்று நம்பினார். அது என்னம்மோ தெரியவில்லை மணிரத்னம் எப்ஃக்ட்டில் லைட்டை வைத்ததாலோ தெரியவில்லை டேபிளில் உட்கார்ந்தாலே ஃபேன் போடாமலே நல்ல தூக்கம் வரும். சததம் வரவில்லை என்றால் மாமியும் அடுத்த ரூமிலிருந்து "கோந்தே படிக்கிறியா" என்று குரல் குடுப்பார். "ம்ம் நோட்ஸ் எழுதிண்டு இருக்கேன்" என்று கூசாமல் கதை விடுவேன். நானும் டேபிள் லாம்ப் மாதிரி மணடையை கவுத்தி பதினோரு மணி வரை அங்கு தூங்கிவிட்டு அப்புறம் படுக்கைக்கு வந்து தூக்கத்தை கண்டினியூ செய்வேன். சில சமயம் மாமியே நான் மண்டைய கவுத்தி படிப்பதை பார்த்துவிட்டால் "சரி போய் படுக்கை விரிச்சு படுத்துக்கோ நாளைக்கு எழுந்து படிக்கலாம்" என்று சொல்லிவிடுவார்.

இப்படி படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடுக்க வாங்கிய டேபிள் அதைத் தவிர எனக்கு பலவிதத்திலும் உபயோகப் பட்டது. குறைச்சு மார்க் வாங்கிய டெஸ்ட் பேப்பர், கதை புஸ்தகங்கள் இவற்றையெல்லாம் ஒளித்து வைத்தால் நான் மட்டும் தான் கண்டு பிடிக்க முடியும். ஸ்கூலில் நான் பிறந்த அதே தேதியில் பிறந்த குரங்கு ஒன்று என் கூட படித்துவந்தது. ஒரு நாள் பொழுது போகாத டீச்சர் ஒருவர் எல்லோரையும் பிறந்த நாள் பிரகாரம் வரிசையாக உட்காரவைத்துவிட்டதால் அந்த குரங்கும் நானும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து ராசியாகிவிட்டோம். அப்புறம் எல்லாக் க்ளாசிலும் சேர்ந்தே உட்கார ஆரம்பித்தோம்.

இந்தக் குரங்கு தான் பின்னாளில் "டேய் அவ அடிக்கடி உன்ன பார்க்கிறாடா"ன்னு என்னை ஏத்திவிட்டு வடை வாங்கிக் கொடுத்து ஒரு ஃபிகர் பின்னாடி அலைய விட்டது. ஹிஸ்டரி க்ளாசில் வாத்தியார் பானிபட் யுத்ததில் பாபர் எப்படி ஜெயித்தார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது "பாபர் கிடக்கான் மூதேவி...இப்படி சண்டை போட்டு போட்டே மண்ணோடு மண்ணாப் போய்..பொதைச்ச இடத்துல புல் முளைச்சு மரமாயிடிச்சி...நீ சாயங்காலம் வடை வாங்குறதுக்கு காசு எப்படி தேத்தலாம்னு யோசிச்சியா?"ன்னு நம்ம கடமையுணர்ச்சியை அடிக்கடி தூண்டுவார். நானும் அன்றாட நிகழ்வுகளை இந்தக் குரங்கிடம் தான் பகிர்ந்துகொள்வேன்.இதுல நான் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பொண்ணு வேறு எனக்கு ஒரு வருடம் சீனியர் (என்ன பண்றது இதெல்லாம் நாபிக் கமலத்துலேர்ந்து அப்பிடியே வரது தானே)
நம்ம ஐடியா அய்யாச்சாமி..."டேய் அந்தப் பொண்ணு கிட்ட போய் மேத்ஸ் புஸ்தகம் கடன் கேளுடா...கேட்டா இப்பவே அடுத்த வருஷ சிலபஸ் படிக்கிறேன்னு சொல்லிடு"ன்னு அடிக்கடி ஐடியா கொடுப்பார். எங்க...எனக்கு நான் படிக்கிற சிலபஸுக்கும் அடுத்த வருஷ சிலபஸுக்கும் யாராவது சொன்னாத்தான் வித்தியாசமே தெரியும் - படிப்புல அவ்வளவு சூரப்புலி. இருந்தாலும் குரங்கு சொன்னதே என்பதற்காக போய் புஸ்தகத்தை வேறு கேட்டுவைத்தேன். அந்தப் பொண்ணுக்கும் நம்ம மேல ஒரு இது (என்று நான் நம்பியதால்) என்பதால் கொடுத்து உதவினாள். இதில் அந்தக் க்ளாசில் இருப்பவர்களுக்கு ஏகத்துக்கும் குறை.

"டேய் வடையேழு வள்ளல்...நீ எங்க சிலபஸ ரொம்ப படிக்கிறியாமே...முதல்ல உன் புஸ்தகத்த ஒழுங்கா படிடா அப்போதான் பாஸ் பண்ணி அடுத்தவருஷம் இத படிக்கமுடியும்"ன்னு அடிக்கடி மிரட்டுவார்கள்.

"சரிங்க ஆபிஸர்ஸ்"ன்னு நானும் ஒரு கும்பிட போட்டுட்டு என்பாட்டுக்கு வடை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருப்பேன். இந்தக் குரங்கு கொடுத்த ஐடியா மூலமாக அந்தப் பொண்ணு கூட மேத்ஸ் புஸ்தக கொடுக்கல் வாங்கல் நடந்துவந்தது. ஒருநாள் பி.டி பீரியட் முடிந்து வரும் போது இந்தப் பெண் "உன் இடத்தில் புஸ்தகத்தை வைத்கிருக்கிறேன் எடுத்துக்கோ" என்று சொல்லிப்போனது. அந்த மாதிரி கொடுப்பது அது தான் முதல் முறை. ஆஹா வாங்கிக் கொடுத்த வடைக்கு இம்புட்டு விசுவாசமா இருக்காளே பயபுள்ளன்னு...யாரும் பார்ப்பதற்கு முன்னால் புஸ்தகத்தை உள்ளே எடுத்து வைத்துக்கொண்டுவிட்டேன்.

ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து படிக்கிற மாதிரி நடிக்கிறதுக்கு அவளோடு மேத்ஸ் புஸ்தகத்தை எடுத்து திறந்தால் ஒரு அழகான பர்த்டே கார்டு. நமக்கு எந்த கிறுக்குப் பயலும் பர்த்டே கார்டு அனுப்பமாட்டானே என்று தெனவெட்டாய் பார்த்தால்...எனக்கே தான். என் பெயர் போட்டு அடியில் வித் லாட்ஸ் ஆஃப் லவ்ன்னு இந்தப் பெண்ணோட கையெழுத்து. இந்தப் பெண்ணின் கையெழுத்து எனக்கு அத்துப்படி என்பதால் எனக்குத் தலையை சுத்த ஆரம்பித்தது. என்னால் நம்பவே முடியவில்லை கையெழுத்து தெரியுமாதலால் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. அடுத்த நாள் என்னோட பிறந்தநாள் வேறு.

அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போய் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்தப் பெண்ணை பார்ப்பதற்கே பயமாய் இருந்தது, அன்றைக்கு வடை வழங்கும் விழாவையும் கேன்சல் செய்துவிட்டேன். கூட வந்த நம்ம குரங்குக்கு ஒரே சந்தேகம். குடை குடைன்னு குடைந்தெடுத்து விட்டது. எனக்கும் சொல்லி அழ வேறு எந்தக் குரங்குமில்லாததால் அவனிடம் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்து கார்டையும் காட்டினேன். ராஜ் டீவியில் வரும் ஸ்கலித பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் டாக்டர் மாதிரி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு "இத கொஞ்சம் கேர்புல்லா ஹேன்டில் பண்ணு, நேர போய் கேட்டு மாட்டிக்காத...இரு நானும் இதப் பத்தி கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றேன்"ன்னு நாட்டாமை தீர்ப்பை தள்ளி போட்டுவிட்டார்.

அடுத்த நாள் அங்க இங்க பிச்சையெடுத்து அந்தப் பெண்ணின் கையெழுத்தை சரிபார்ப்பதற்கு கொஞ்சம் தேத்தி வந்தான். ரிசர்வ் வங்கியில் கூட அப்பிடி சோதனை செய்திருக்க மாட்டார்கள் அப்படி கையெழுத்தை நோண்டி நொங்கெடுத்தோம். எல்லாம் ரொம்ப கரெக்டாக இருந்தது. சந்தேகமே இல்லைடா அவளே தான்னு தீர்ப்பாகியது. எனக்கு அதுக்கப்புறம் ஒரே உதறல்.

மாமா வேற படிப்பு தான் முக்கியம்ன்னு பெப்ஸி உமா மாதிரி அடிக்கடி அட்வைஸ் பண்ணுவாரே இதெல்லாம் நமக்குத் தேவையா...பத்தாம் க்ளாஸ் படிசதுக்கெல்லாம் எவனாவது வேலை குடுப்பானா...வடை வாங்கிக் கொடுத்த காசுக்கு ஒரு கிரைண்டரே வாங்கியிருக்கலாமேன்னு நான் புலம்பிக் கொண்டிருந்த போது இந்த குரங்கு முதேவி அந்தப் பொண்ணு என்னைத் தேடிக் கொண்டிருந்தாக சேதி கொண்டுவந்தது.

ஆஞ்சனேயா இந்தப் பிரச்சனைலேர்ந்து எப்படியாவது காப்பாத்துப்பா உனக்கு வடமாலை சாத்றேன்னு வேண்டிக்கொண்டு ஆஞ்சனேயர் மேல வடையப் போட்டுட்டு ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டேன். டேபிள் லாம்ப்பை போட்டுக்கொண்டு யோசித்ததில் வேற வழியே இல்லை அந்தப் பெண்ணிடம் நேர போய் பேசிவிடுவது தான் சரி..என்று முடிவு செய்தேன். அடுத்த நாள் குரங்கிடம் இந்த முடிவைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் என்னை நோக்கி வந்தாள். கூட குரங்கை கழட்டிவிட்டு மேதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவளுக்கு க்ளாசில் டெஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று அவளும் பேச்சை ஆரம்பித்தாள். ஏன் உன்னை நேற்று காணவில்லை என்று கேட்ட போது ..சரி இனிமேல் உடைத்துவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து பேச்சை ஆரம்பித்தேன்.

"...இல்ல...உன்கூட கொஞ்சம் தனியா பேச வேண்டும். இன்னிக்கு தொண்டைல ஜுரம்...நாளை பேசுகிறேன்"ன்னு சொல்லி வாய்தா வாங்கிட்டேன். அவளும் ஜோதிகா மாதிரி ஒரே நேரத்தில் ரெண்டு மூனு ரியாக்ஷன் காட்டிவிட்டு போய்விட்டாள்.

அடுத்த நாள் வழக்கம் போல் குரங்காலோசனை நடத்தினால் குரங்கு சினிமால வர்ற பெருசு மாதிரி எதுக்கும் நல்ல யோசனை பண்ணிக்கோ....பிரின்சிபாலிடம் போட்டுக் குடுத்துடுவா...அப்புறம் சொல்லலையேன்னு சொல்லாத ...நாள் பாரு நட்சத்திரம் பாருன்னு என் கதையை மெகா சீரியலாக்கப் பார்த்தது. நான் வேற அதுக்குள்ள் தனியா பேசனும்ன்னு சிக்கலாக்கிவிட்டிருந்தேன். பேச்சு வளர்ந்து பொறி தட்டி கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு அவன் மேல சந்தேகம் திரும்ப ஆரம்பித்தது. கடைசியில் நான் என்னம்மோ பிரின்சிபாலை லவ்ஸ் விடுவது மாதிரி "அப்பிடின்னா இந்த லெட்டரை பேசாம பிரின்சிபாலிடமே கொடுத்திடறேன்னு" பூச்சாண்டி காட்ட...குரங்கு ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்டது. என் பெயர் மாதிரியே ஆரம்பிக்கும் அவளுடைய தோழிக்கு அவள் குடுத்த பர்த்டே கார்டை லவட்டிக் கொண்டு வந்து டகால்ட்டி வேலை காட்டி என்னை சும்மா ஏத்திவிடலாமென்று நினைத்திருக்கிறான். விஷயம் தெரிந்ததற்கப்புறம் எனக்கு உண்மையைச் சொல்லவேண்டுமானால் நிம்மதியாயிருந்தது. எங்கே அவ பாட்டுக்கு நம்ம பெர்சனாலிட்டியப் பார்த்து மயங்கி லெட்டரக் குடுத்து அப்புறம் நாம கமிட்டாகி, அப்புறம் அவளுக்கும் பர்ஸ்ட் ரேங்க் எடுக்க டேபிள் வாஙக மாமாவை அரிக்க வேண்டியிருக்குமேன்னு யோசித்து பயந்து போயிருந்தேன். அத்தோடு அந்தப் பெண் வேறு கொஞ்சம் பூசின மாதிரி இருக்கும். ஓமகுச்சி மாதிரி என் உடம்பை வைத்துக் கொண்டு அதை சைக்கிளில் பின்னாடி வைத்து ஸ்கூலுக்கு மிதிப்பதெல்லாம் நடவாத காரியம். நல்லவேளை அப்படி எதுவும் நடக்க வில்லை. அப்புறம் அந்த கார்டை வைத்துக் கொண்டு ரெண்டு நாளைக்கு டேபிளில் யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாளிலிருந்து மண்டையைக் கவுத்தி வழக்கம் போல படிக்க அரம்பித்துவிட்டேன்.

அந்த கார்ட்டு இன்னமும் என் டேபிள் ட்ராவில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியாக முதல் லவ்ஸ் ட்ராஜடியில் முடிந்தது. அப்புறமும் தேமேன்னு இராமல் இரண்டாவதாக ஒரு பெண் பின்னால் போய் லவ்ஸ் விட்டு அது இதை விட பெரிய ட்ராஜ்டியில் முடிந்து கல்யாணமாகி ரெண்டு குழந்தைகளும் ஆயாச்சு.. ஹூம்....

பி.கு. - தலைப்பு உங்களுக்கு இல்லை ஹி ஹீ தங்கமணிக்கு..(இன்னிக்கு இருக்கு எனக்கு)

43 comments:

PKS said...

Enjoyed reading it. - PK Sivakumar

Anonymous said...

Arumaiyaana padhippu. Nandraanga sirithean. Naanum adhey kurangu pola yen nanbanidam aadina vilaiyaattu gnyabagam vandhadhu.

:-)
Arun.

பெருசு said...

//சினிமால வர்ற பெருசு மாதிரி//

என்னைய சொல்லலியே.

பேர எல்லாம் மாத்தி போட்டா
எனக்கும் அப்படியே ரிபிட்டே.

Syam said...

ROTFL...ஸ்கூல் வாழ்க்கைல இது எல்லாம் சாதாரணம்...தல அந்த கார்டு மாமா கண்ணுல பட்டு உங்க முதுகுல மேப் போட்டாருன்னு கேள்விப்பட்டேன்...அத விட்டுட்டீங்க
:-)

பாலராஜன்கீதா said...

//.(இன்னிக்கு இருக்கு எனக்கு)//

குடும்ப வாழ்க்கையில இது சகஜமப்பா
:-)))

CVR said...

வழக்கம் போல கலகலப்பான பதிவு!
வாழ்த்துக்கள்! :-)

B o o said...

Oh man! This was hilarious! You are an amazing writer. Thanks for all the laughs!

sriram said...

Vandhutarayya, Vanduttaru, Indian cricket team madiri Long term - out of form illama - namma Dubukku immediataa formukku vanduttaru.
Dubuks, A great post followed by that so so post, man... I rushed thru my dinner and started reading this posting, Looking at the way I was laughing all alone at 10PM, my wife (still at the dining table) started suspecting (rather confirming her long term doubts.
namakkum pala solla madantha kathaikal irukku anaal solla neramum, thiramaiyuum kammiya irukku.
Keep it up dude.
P.S: Inda Simbu voda thollai thanga mudialai sami (did u see the may 1 interview on Sun TV), Why dont you write a post about his insane over confidence and build up.

யாத்ரீகன் said...

dubuks sir.. that was a very good one...

indha yaethi vitu yaethi vitu udamba ranakalamaakura goshti-la irunthavandra muraila solraen... sema comedy ponga ;-)

அபி அப்பா said...

////.(இன்னிக்கு இருக்கு எனக்கு)//

குடும்ப வாழ்க்கையில இது சகஜமப்பா
:-))) //

அதே அதே!

Chakra said...

> என் பெயர் மாதிரியே ஆரம்பிக்கும் அவளுடைய தோழிக்கு

- உன் பேர் மாதிரியே ஒரு பொண்ணு பேரா? லாஜிக் உதைக்குதேடா?

ஜி said...

aaha... aayiram pen kanda aboorva dubukkaarnu per vaikura alavukku ekkachakkamaa kaathal kathaikal irunthirukkum pola... asathunga annatchi :))

லக்ஷ்மி said...

ஸ்கூல் நாட்களிலேயே இவ்வளவு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிகளில் கலந்து கொண்டவரா நீங்கள்?? ஆனா அதுக்கப்புறம் ஒரு லாங்ஜம்ப் செய்து கல்யாணத்துல முடிக்கறதைத்தான் நம்ப முடியல. :-)

ambi said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
Happy that U r back to form, with usual quality. :)

ஊருக்கு போறேன், இருங்க, அந்த கார்ட் கிடைக்குதா?னு பாக்கறேன்.
உங்க பெயர் மாதிரியே ஒரு பெண்ணின் பெயரா? எனக்கு தெரிஞ்சு ஒரு இங்க்லீஸ் புரபஸர் மேடம் பெயர் தானே அப்பிடி?

சரி, நான் ஒன்னும் வாய தொறக்கலைண்ணா!

பாலராஜன்கீதா said...

//ஊருக்கு போறேன், இருங்க, அந்த கார்ட் கிடைக்குதா?னு பாக்கறேன்.//

அம்பி, அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்குமா என்ன ? :-)))

dubukudisciple said...

guruve!!!
enna ippadi supera oru post potu silenta irukeenga??? seri part - 2 podunga.. solla marantha kadai sonnathala enna nadathuchu veetlanu sollunga.. nangalum santhosha paduvomla!!!

@ambi..
unaku dubuku kadai therinja mathiri avarukum unnoda kadai ellam theriyum.. adunala konjam jakrathaiya iru

குரு said...

Hi Dubukuu,
Vanakkam nan romba nal kalithuthan ungaloada blogs parthen ippo daily unga old stories ellam parthu parthu padikiren. nan ingu chennaiyl than iruken.namma sontha ooru mayavaram.nan thanjavurkaran enbathal hello sollamal irukadheengo.summa sonnen.nan thanjavur karana irunthaum ennoda friend unga oor pakkam than karungulam.anyway all the best.

Guru

Unknown said...

சொல்ல மறந்த கதைக்கு அடுத்து ஆட்டோகிராப் எதிர்பார்க்கலாமா தலைவா!!!

Unknown said...

Thala..pesama thalaippa.. Vaanga Marandha odhai nu vachirundha porathuma irudhirikkum Thangamani Akkavukku straightaa actionla erangiruppanga..btw andha kujiliyoda peru (adhaan thalaivaa.. un 1st loveroda friend peru... Renganayagi thaane... ???) meyyaluma sollunga..

Munimma said...

hilarious, true to form!

Dubukks, what was her friend's name? Can't think of any, unless it is as Ramachandran says.

part deux please? title ipidi vechukalam - ayyo, amma, ammmamma! :-)

btw, met someone from sundarapandipuram who is related to raju sir (temple)!

kalias 's' dasan said...

mothham ethaanai love irunthaalum first love is the best love...unmai thaanae?...very nice ..enjoyed reading it...There is lot of gap for ur post..plz take less time to post... i used to check everyday and get back empty...so plz try to make it atleast once in a week....

regards
kalias s dasan

Anonymous said...

டுபுக்கு, ரெங்கநாயகி ஃப்ரெண்டு உங்களை ரொம்ப கேட்டதா சொன்னா ;) ...

Ms Congeniality said...

ROTFL!! Kalakkal post anna :)
Modhalendhu friend en korangu nu sonneenga nu paathen, panna velai paatha nejamaave innum nalla thittirkanum..

ACE !! said...

ROTFL :) :)... 2 காதல் தானா.. நம்பற மாதிரி இல்லைங்க.. இது ஹைஸ்கூல் காதல், அடுத்து ஹையர் செகண்டரி, காலேஜ் னு எடுத்து விடுங்க..

உங்களை நல்லாவே கலாய்ச்சிருக்காங்க.. :D :D

Premalatha said...

சொல்ல மறந்த கதைக்கு அப்புறம் நேரா மேர்ரேஜ்-தான் பின்னூட்டியமிட்டவர்களெல்லாம் டுபுக்குவின் ஜொள்ளித்திரிந்த காலம் பார்க்கவும். லின்க் வேண்டுமென்று கேட்டால், கட்டாயம் நான் கொடுக்க முடியும்.

@டுபுக்கு,
நன்றி: நிறயப் பேருக்கு என் ப்ளாக் இருக்கும் இடம் காட்டியதற்கு.


ஸீனியர் மேல ஜொள்ளா, கொழுப்புதான. ஆனா, அதுக்குமேல போக பயமாயிடுச்சா. பாலன்கிட்ட பாடம் எடுத்திருக்கலாம்ல! ;-)


அப்புறம் என்ன ஸ்பெஷல் தோசை இன்னைக்கு உங்கவீட்டுல?

கதம்பமாலைல இணைக்கச்செல்லி ஏக பரிந்துரை. நாளைக்குத்தான் செய்வேன்.

@சக்ரா,
ரெங்கு-ன்னா, ரெங்கநாயகி, ரெங்கலட்சுமி...

Aani Pidunganum said...

Hi Dubuks

Dhool, Amarkalam, Attagasam,
Kalakarael...Everyone more or less has got Sollamal Solla Marandhai Kadhai Irukumnu ninaika thonudhu (Ennai thavira :))

Unknown said...

$Premalatha

It should be Appuram enna special unga "mudhugula" innaikku unga veetla??.. "Kothu barottava illa Kaima Dhosayaa"!!

காயத்ரி சித்தார்த் said...

//ஸ்கூலில் நான் பிறந்த அதே தேதியில் பிறந்த குரங்கு ஒன்று என் கூட படித்துவந்தது//

இப்படி அதுவும்.. சாரி அவரும் ஏதாவது ஒரு பதிவுல எழுதிட்டு இருக்கப் போறாரு அண்ணா! மேற்கோள் காட்டி பாராட்டணும்னா உங்க பதிவ ஃபுல்லா copy.. paste பண்ணனும் போல! தலன்னா சும்மாவா?

"டுபுக்கு" நற்பணி(?!) மன்றம்
தமிழ்மாநில செயலாளர்!

காயத்ரி சித்தார்த் said...

என் பதிவுக்கு வந்திங்களா அண்ணா? நம்ப முடியவில்லை..இல்லை.. இல்லை..விஸ்வாமித்திரர் வாயால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்கு! மக்களே பாருங்க இங்க! மாமியார் மெச்சின மருமகள் மாதிரி.. நான் தலைவர் மெச்சின 'தொண்டி' (தொண்டனுக்கு எதிர்பதம்?) ஆயிட்டேஏஏஏஏன்!

https://www.blogger.com/comment.g?blogID=32904504&postID=3085801313558787569&isPopup=true

"டுபுக்கு" நற்பணி மன்றம்!
தமிழ்மாநில செயலாளர்!

Unknown said...

Hi Renga,
As usual Hilarious..Enjoyed reading..
Heard of your wedding anniversary..
All the very best.Prosperous and Joyous years ahead :)

Dubukku said...

பி.கே.சிவகுமார் - நன்றி.

அருண் - ஆமாமா நிறைய பேர் இந்த மாதிரி விளையாடியிருப்பார்கள்...நானே கூட பின்னாளில் ஏத்திவிட்டிருக்கிறேன் நிறையபேரை :)

பெருசு - ஆத்தி உங்களைச் சொல்லைங்கோவ்...நீங்களுமா இப்படியெல்லாம் விளையாடியிருகீங்க...ஆமா பாதிக்கப்பட்டவரா இல்லை..?

ஸ்யாம் - மாம கண்ணுல இன்னிக்கு வரைக்கும் படலை. பட்டிருந்தாலும் சொல்லியிருப்போம்ல...யாரு சிங்கம்ல...

பாலராஜன்கீதா - அது சரி எகஸ்பீரியண்ஸ்ட் ஹேண்ட் சொன்னா கரெக்டாத் தான் இருக்கும். :) வாங்க என்னா ரொம்ப நாளா நம்ம பேட்டையில காணோம்? ஆமா ப்ளாக் அரம்பிசிடீங்களா..உங்க பொரொபைல் லிங்க் வேலை செய்யமாட்டேங்குதே?

டேங்க்ஸ்கோவ்...

நன்றி ஹை. ரைட்டரா....நானா ...உதைக்குதே இருந்தாலும் நீங்க சொல்லும் போது கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

வாங்க ஸ்ரிராம். நானும் இந்தியன் டீம் மாதிரி தாங்க...அடிக்கடி ஊத்திக்கிட்டு காணாம போயிடறேன் :)) நிறைய மேட்டர் வைச்சிருக்கீங்க போல ப்ளாக் ஆரம்பிச்சு கொட்டிறவேண்டி தானே

யாத்திரிகன் - வாங்க எதுக்கு சாரேல்லாம்...நீங்களும் உண்டா இந்தக் கோஷ்டியில நானும் அப்புறம் ஏத்திவிடறதுல தேறிட்டேம்ல

அபி அப்பா - ஏகப்பட்ட பேருக்கு எக்ஸ்பீரியன்ஸ் போல...ஆனாலும் ஒரு குடும்பஸ்தன இன்னொரு குடும்பஸ்தன் தேத்துறது மாதிரி யாரலையும் முடியாது அவ்வ்வ்வ்வ்வ்

Dubukku said...

சக்ரா - அது வேற கொஞ்சம் மாதிரி...அப்பிடியே ஆரம்பிக்காது ஆனா அத கையெழுத்தா போட்டா என்னோட பேருக்கு மாத்தறது ஈ.சி நேர்ல அப்புறம் சொல்றேன்...இங்க பெயரெல்லாம் போட்டா டின்னு கட்டிருவாங்க...

ஜி - நன்றி...வாங்க உங்க பங்குக்கு அள்ளி விடுங்க...வீட்டுல வாங்கப்போறது நான் தானே..அவ்வ்வ்வ்

லஷ்மி - அட ஆமாங்க ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடீஸ்...நீங்களுமா நம்பல...சரிதான் ஹூம் ஆனா உண்மைதான்.


அம்பி- டேய் அவங்க மேடம்டா...நான் சீனியர வேணா ரூட்டு விட்டிருக்கேன் ஆனா மேடம் அளவுக்கு மோசமாகல..ஊருக்குப் போய் கல்யாணம் பண்ணிண்டு..என் வீட்டுக்குப் போய் லெட்டர தேடப் போறியா...வேஸ்டுடா நீ...

பாலராஜன்கீதா- நல்லா கேளுங்க சார்

dubukudisciple - வாங்க...நம்ம திண்டாட்டம் ஊருக்கு கொண்டாட்டமா... ஆனா வீட்டுல தங்கமணிக்கு விஷயம் ஓரளவுக்கு தெரியும் அதனால பிரச்சனை இல்லை :))

Dubukku said...

குரு - வாங்க குரு.ரொம்ப சந்தோஷம். நன்றி. அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...தஞ்சாவூருக்கும் திருநெல்வேலிக்கும் என்ன சண்டையா...என்ன...அடிக்கடி வாங்க....

தேவ்- எதிர்பார்க்கலாம்...ஆனா கொஞ்சம் பொறுங்க காயம் ஆறட்டும்.

ராம்சந்திரன் - வாங்கைய்யா...ஊருக்காரன் நக்கல காட்டிட்டீங்களே....ரைமிங்கா நல்லாத்தேன் இருக்கு (கேக்கிறதுக்கு)..இல்ல நீங்க சொன்ன பேரு இல்ல..ஃபோன்ல அப்புறமா சொல்றேன் :)

முனிம்மா - நன்றியம்மா..ராமசந்திரன் சொன்னதுலேர்ந்து கொஞ்சம் வேறு பட்டு...ஐய்யையோ எல்லோரும் கேக்கிறாங்களே...மாட்டிக்குவேன் போல இருக்கே :))

Dubukku said...

kalias 's' dasan - வாங்க (தமிழ்ல எப்படி சொல்வீங்க உங்க பெயர?) இங்க கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க...அதான் போட முடியலை...வந்து அடிக்கடி பார்க்கிறதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களுக்காகவாது...அடிக்கடி போட முயற்சி செய்யறேன்.

Madura - ஹை அப்பிடியா...யாருங்க அது இன்ட்ரொடியூஸ் பண்ணுங்களேன்....நானும் கேட்டதா சொல்லுவேன்ல :P

Ms.Congeniality - ஆமாம்...நானும் திட்டியிருப்பேன்...ஆனா அவன விட்டா என்னையெல்லாம் ஏத்தி விடறதுக்கு வேற ஆளே இல்லை அதான் சரி பொழச்சி போகட்டும்னு விட்டுட்டேன். :))

ACE - வாங்க உங்க பங்குக்கு நீங்களும் கொளுத்தி போடுங்க...ஆச்சா திருப்தியா...நன்றி ஹை :))


பிரேமலதா - ரொம்ப நன்றி. பாலன் கிட்ட கேட்டுக்கிறேன் எதுக்காச்சும் யூஸாகும் :P

ஆணி - வாங்கைய்யா ரொம்ப விவரமாத்தேன் இருக்கீங்க... :))

ராமச்சந்திரன் - நல்லா இருங்க

காயத்ரி - என்னாங்க இப்படி ஏத்திவிட்டிருக்கீங்க...ஏங்க விஸ்வாமித்திரரா...யாரு இந்த தாடி கம்புலாம் வைச்சிருப்பாரே...ரொம்ப நக்கல்ங்க...இருந்தாலும் வசிஷ்டருக்கு இந்தாள் பரவாயில்ல..

நான் ஏதோ சின்னப் பையன்ங்க...
(இருந்தாலும் நீங்க சொன்னது சும்மா ஜிவ்வ்வ்வ்வ்வ்ன்ன்னு ஏத்திவிட்டிருச்சு) ரொம்ப டேங்ஸ்....

Anonymous said...

அவங்க பேரு R. அங்கமுத்துதானே ;-)

ulagam sutrum valibi said...

wish you a happy anniversary.!!!

Anonymous said...

belated anniversary wishes. nalla nyaabagam irundhadhu but call panna dhan time illa.

'Nachu' post by the way. summa kadha vidaadheenga, idhu onnu dhan solla marandha kadaiyaa, illa one of the kadhais -a? nice one after a long gap.

Dubukku said...

Anonymous - நக்கலு ஆங்....:))))

ulagam Sutrum Valibi - அட உங்களுக்கு எப்படிங்க தெரிஞ்சிது?...ரொம்ப நன்றி!!!

Anonymous - ஹீ ஹீ உண்மை தான். சரி நீங்க எழுதியிருக்கிறதுலேர்ந்து நீங்க தெரிஞ்சவங்கன்னு தெரியுது ஆனா யாருன்னு கரெக்டா பிடிபடலையே..??

Jeevan said...

Ada ippadi mudinchipochea, naan ennamo imagine pannean lol :)
Me too had a table and draw where I used to store all my things like bombbaram, koli and useless things whatever I collect and lock the draw.

Dubukku Thangamani ketta irunthu reaction eppadi irunthathu?

Anonymous said...

Magesh - somehow missed replying to you - ரொம்ப சார் மன்னிச்சுக்கோங்க.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. ரொம்ப ஆச்சரியமா இருக்கு எப்பிடியோ கண்டுபிடிச்சு வாழ்த்து சொல்றீங்களே (எனக்கு தேதி சொன்னாலே நியாபகம் இருக்காது :) )

Anonymous said...

Jeevan - ஆமா ஜீவன் நானும் அத மாதிரி நிறையா போட்டு வைச்சிருக்கேன். (ஆனா கோலி கில்லிலாம் இல்லை)

தங்கமணி வழக்கம் போல (இதெல்லாம் திருந்தாத கேசு) பொழச்சு போகட்டும்ன்னு விட்டுட்டாங்க...

Arunram said...

Ha.. Too good a post. Mani-ratnam, babar, jyotika, pepsi-uma have contributed as comedians for your post. G8! It will be helpful to indicate an appropriate time to read these kind of posts, since I am laughing aloud in the night 10:30 when everyone is already fast asleep. சிரிக்கவும் முடியல.. சிரிக்காம இருக்கவும் முடியல.

Unknown said...
This comment has been removed by the author.

Post a Comment

Related Posts