Thursday, July 13, 2006
The Ring
விடலைப் பருவத்திலிருந்தே திகில்/ பேய்ப் படங்களை பார்ப்பது ரொம்பவும் பிடிக்கும். “பாதி ராத்திரி எக்ஸாசிர்ஸ்ட தனியா பார்த்தோம்ல” என்று பந்தா விட்டுக்கொள்வது படத்தை விட த்ரில்லாக இருக்கும். சமீபத்தில் தி ரிங்க் படத்தின் மேலோட்டமான கதையை கேள்விப் பட்டதிலிருந்தே இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். வீடியோ லைப்ரரியில் டி.வி.டியைப் பார்த்ததும் லபக்கென்று கவ்வி விட்டேன்.
இந்த மாதிரி ஆர்வமான படங்களைப் பார்ப்பதற்கு மனைவி குழந்தைகளை தாஜா காட்டி பேக்கப் செய்துவிட்டு தனியாளாக டுபுக்கு தியேட்டரில் படத்தை ஓடவிடுவது வழக்கம். இந்த படத்துக்கு தாஜா செய்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. "பயமா எனக்கா...இந்த ரெண்டு மணி நேர படத்துக்கா?...இங்க நான் குடித்தனமே நடத்திகிட்டு இருக்கேன்.." என்று க்ளீனாக சமாளித்துவிட்டதாக நினைத்துக் கொண்டே மாடிக்குப் போய்விட்டார்கள். சரவுண்ட் சவுண்டெல்லாம் கும்முன்னு ஏத்தி ராத்திரி பதினோரு மணிக்கு ஆரம்பித்தாகிவிட்டது. படத்தின் கரு என்னவென்றால் இரண்டு நிமிடம் ஓடும் ஒரு வீடியோ கேஸட்டைப் பார்த்து முடித்தவுடன், பார்த்தவர்களுக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு பெண் குரல் "இன்னும் ஒரு வாரம்" என்று டைம் குடுக்கிறது. கரெக்டாக ஒரு வாரத்தில் அவர்கள் (விகாரமாக) இறந்துவிடுகிறார்கள். படத்தின் கதாநாகியின் சொந்தக்கார பெண் இறந்துவிட, அதை துப்பறிகிறேன் பேர்வழி என்று அவரும் அவர் பையனும் பார்த்துவிடுகிறார்கள். அதில் ஆரம்பிகிறது வினை. அது ஏன், எப்படி, நடக்கிறது கதாநாயகி எப்படி தப்புகிறாள் என்பது தான் கதை.
கிங்காங்கில் கொரில்லாவுடன் லவ்ஸ் விட்ட நவோமி தான் கதாநாயகி. படம் நன்றாக எடுத்திருக்கிறார்கள். திகில் ரேட்டிங்கில் ஓகேக்கு அடுத்த மேல் ரகம். வழக்கமாக பேய்ப் படங்களில் வரும் ரத்தம், விகாரமாக சிதைந்த முகம் இதையெல்லாம் மட்டும் நம்பாமல் கதையில் "பேய் வருது பேய் வருது" என்று பீதியைக் கிளப்பி, நம்மை திகிலைடைய வைத்திருக்கிறார்கள். கதாநாயகியும் , அவர் பையனும் எப்படி தப்புகிறார்கள் என்ற முடிவு ஹாலிவுட் ரகம். ஆனால் அதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. அப்படி என்ன அந்த வீடியோ டேப்பில் இருக்கு என்று ஆர்வம் கொப்பளிக்க, படத்தில் முதல் முக்கால் மணி நேரத்திலேயே காட்டி விடுகிறார்கள். கரெக்டாக அதைப் பார்த்து முடித்ததும் எதற்கும் இருக்கட்டும் என்று நான் எங்கள் வீட்டுப் தொலைபேசியை ஆஃப் செய்துவிட்டேன். இருந்தாலும் அடுத்த வீட்டில் இருக்கும் அம்மணி பாதி ராத்திரிக்கு மேல் பெருச்சாளி குடைவது மாதிரி குடைந்து பாத்திரங்களை தட தட வென்று கீழே போட்டு அவர் பங்குக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் குடுதத போது சரவுண்ட் சவுண்டை ஆஃப் செய்துவிட்டேன்.
பொதுவாக பேய்ப் படங்களில் பேயைக் காட்டும் வரை தான் பேச்சுலர் மாதிரி பயமாக இருக்கும். அப்புறம் பழகிவிடும். அதனால் தானோ என்னவோ இந்தப் படத்தில் கடைசியில் தான் பேயைக் காட்டுகிறார்கள். படத்தில் "ரிங்" என்றால் என்ன என்பதில் முக்கியமான கதை முடிச்சை வைத்திருக்கிறார்கள்.(ஆனால் இந்த ரிங் மேட்டரில் கொஞ்சம் டெக்னிக்கல் ஓட்டை இருக்கிறது. படம் பார்த்துவிட்டு ஐஎம்டிபியில் போய் பார்த்தீர்களானால் நான் சொல்லுவது புரியும். எதற்கு சஸ்பென்ஸை உடைப்பானேன்?)
திகில் படங்களில் பின்ணனி இசைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் படத்தில் அது ஓ.கே ரகம் தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. திரைக்கதை நன்றாக இருந்தது. முன்னர் சொன்னமாதிரி சஸ்பென்ஸை மெதுவாக உடைத்து நம்மையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பேய் எதற்காக இவ்வாறு செய்கிறது என்பதையெல்லாம் விளக்கவில்லை. ரிங் 2வில் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இப்பொது ரிங் 2 வைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது முதல் படம் மாதிரி அவ்வளவு நன்றாக இல்லை என்று கேள்விப்பட்டேன். வேறு உங்களுக்குப் பிடித்த நல்ல பேய்/திகில் படங்கள் இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லுஙகளேன். தேர்ந்தெடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
paiyavathu pisasavathu, aiyo amma, appa... inthamathiri naraiyavattie payathuirukan iravil thaniyaga bathroom pogumpothu. ennakkum english padam pathal gom gom endru sathathudan parthal thaan thirupthiyaga irukkum.
நானும் உங்களை போல் தான். ஃபுல் சரவுண்ட் சவுண்டுடன் தான் படம் பார்ப்பேன். இந்த படங்களையும் பாருங்கள்.
Boogeyman - OK
The Others - Good
Darkness falls - OK
The Eye (japanesh) - OK
Cannibal Movies:-
Wrong Turn - Good
Hills have eyes (2006) - OK
Texas chainsaw massacre(latest) - Good
Jeeper Creeper part 1 - OK
PHONE BOOTH என்று ஒரு படம் நேற்று பார்த்தேன். நல்லா இருந்தது.
PANIC ROOM - பரவாயில்லை ரகம்.
இன்னும் இரண்டு படம் இருக்கு, என்ன படம் தெரியலை, இன்னிக்கு ராத்திரி பாத்துட்டு நாளைக்கு வந்து சொல்லுறேன்.
அப்ப வரட்டா
"Sixth Sense" in case you have not seen!
http://www.sonypictures.com/movies/thegrudge/site/flash/
ensaai
http://www.hallofmaat.com/read.php?3,331963,331963#msg-331963
go through the thread. there are so many good horror movies mentioned.
சொல்ல மறந்து விட்டேனே...'The Eye' தான் தமிழில் சினேகா நடித்து வெளிவந்த 'அது' படத்தின் மூலக்கதை;-)
The Omen
//பொதுவாக பேய்ப் படங்களில் பேயைக் காட்டும் வரை தான் பேச்சுலர் மாதிரி பயமாக இருக்கும். //
என்ன சொல்ல வர்றீங்க?
நானும் இந்த படம் பார்த்துவிட்டு ரெண்டுநாள் ராவெல்லாம் அந்த தலைவிரிகோல பாப்பா வந்து பயமுறுத்தியது. that was a good technique.
முதல்ல Scary Movie 3 பாருங்க...The Ring-ஐ மத்த படங்களை விட அதிகமா கேவலப் படுத்தி இருப்பாங்க :))
//ஆனால் அது முதல் படம் மாதிரி அவ்வளவு நன்றாக இல்லை என்று கேள்விப்பட்டேன்//
உண்மை தான்...
முதல் படத்தையே மீண்டும் பார்ப்பது போல் இருந்தது...
//பொதுவாக பேய்ப் படங்களில் பேயைக் காட்டும் வரை தான் பேச்சுலர் மாதிரி பயமாக இருக்கும்//
- இது தான் தி ரிங் -2
//பொதுவாக பேய்ப் படங்களில் பேயைக் காட்டும் வரை தான் பேச்சுலர் மாதிரி பயமாக இருக்கும். அப்புறம் பழகிவிடும். //
he hee, enakku purinju pocheee! londonkku 4 poori kattai orderrrrr..
pey padam ellam naan pakkave maateen. coz pachchaaa kozhanthai naaaan (with a innocent look) :)
hello dubbukku sir,
naan unga blog a konjam naala follow panikitu iruken.. nenga
blog update panra speed a pathu
thegaichu poiten..
ipo en blogla oru pudu post
potu iruken.. ennamo theriyala
nenga atha ensoy pannuvenganu
thonichu... mudinja antha pakkam
konjam vandutu ponga
www.jega-pethal.blogspot.com
Ring movie is a Triology...
"Skeleton Key" is a worth watching.. not too scary but good twist in the end.
vankatramani,ambi..same blood...naanum ithey thaan ketkalaamnu vandhen... :-)
1) What lies beneath-konjam namma oor style viLaKkam in the end
2) The others - as some one above has mentioned. I loved the climax (it stretches about 5mins after that)
3) Oru Halle Berry movie for which i think she was nominated or won an award
BT
My first visit to your site.
I'm glad to see a fellow Nellaite in the blogworld.
I absolutely enjoyed your sense of humour. Most posts in your archives were truly hilarious.
Raji
My IE isn't working. And I'm having trouble reading your entries with Firefox. Argh. It's so frustrating, I can't comment on your entries.
Anyways, hope you have a great weekend.
Ps: I'll get my IE working soon, just to read you. :P
நான் பார்த்த Horror படங்களிள் மிகவும் பிடித்த படம் "The Others".
சமீபத்தில் பார்த்த "The Exorcism of Emily Rose" அருமையாக இருந்தது.
மற்றபடி எனக்கு பிடித்த வேறு சில படங்கள்...
1. The Omen
2. Interview with a Vampire
3. The Blair witch project
4. Saw I & Saw II
5. The Sixth Sense
6. Signs
7. The Shining
8. The Cell
Don't miss "Lady in the water". The trailers look promising.
Thanks for the concern ya :) I'm perfectly fine...
Shobha
Jeevan- naanum chinna vayasula neriaya bayanthirukken.Kalayanam aana appuram pazhakidichu :)
ஞானதேவன்- மிக்க நன்றி. பெரிய லிஸ்ட் குடுத்திருக்கீங்க...ரொம்ப நன்றி.
நாகை சிவா- நன்றி. அடப்பாவிங்களா(சும்மா ஒரு எக்ஸ்க்ளமேஷன்..கோச்சுக்காதீங்க)...என்ன படம் இருக்குன்னே தெரியாத அளவுக்கு படம் வாங்கிப் பார்க்கிறீங்களா...காதுல புகை வருது :)
anon - sixth sense parthachu. Nalla padam. romba pidichuthu.
Premalatha - romba danks. Indha dvd yellam vechirukeengala?? :P
ஞானதேவன் - ஓ அப்பிடியா...ரொம்ப நன்றி அதையும் லிஸ்ட்ல சேர்த்திருவோம்.
The Omen - parthuten :) nice one
Venkatramani- என்ன புரியலையா...கல்யாணமாச்சுன்னா பயம் பழகிடும்னு சொல்லவந்தேன்.:P
கப்பி பய - ஓ அப்பிடியா...இருந்தாலும் ரிங் 2 பாப்பேன் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றிங்க.
ambi - Unakku puriyamalaya...kedi payalache nee.
Pachha kozhanthaiya...see the prev. line. :P
anantha-krishnan - romba danks. naan post pannara speeda parthu thigaichiteengala..Neenga thana athu...kannu pottathu.ungala thaan thedikittu irundhen.:))
Unga video parthen nalla irukku anga comment podaren
யாத்திரீகன் - ohh appidiya? ellathaiyum parpomla :)
anon - danks. will add it to the list.
Syam - bachelorsku athellam puriyathu. :P
bt - The others- neraiya peru sollitanga...that tops the list now. Will add the other ones to the list too danks.
Raji - welcome here. Neegalum nellaite aa?? You too are in UK ? Great!! will touch base.
thewoman - heey that was great!! you made my day.danks. This post is about "The Ring" movie :). Hope your IE probs gets resolved soon :)
Sugavasi - நீங்க சொன்ன லிஸ்ட்ல The Omen, The Sixth Sense, Signs பார்த்தாச்சு. மத்ததெல்லாம் லிஸ்ட்ல சேர்த்துட்டேன். உங்க லிஸ்டுக்கு மிக்க நன்றி.
Bharat - will keep an eye. danks a lot.
shobs - great to hear that :)
All -நேரமெடுத்து டைப்படித்து லிஸ்ட் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி. இப்பொ இருக்கும் லிஸ்டைப் பார்த்தால் வாடைக்கு எடுப்பதை விட வீடியோ லைப்ரரி ஆரம்பிப்பது தான் லாபமாக இருக்கும் என்று தோன்றுகிறது. :)
//bachelorsku athellam puriyathu//
annatha naanum pulla kutti kaaran thaan :-)
Part 2 avalavu nalla illanu thaan naanum kaelvi patten. but this one was good. btw...naanum night oru effect oda thaan paathaen :-)
//என்ன படம் இருக்குன்னே தெரியாத அளவுக்கு படம் வாங்கிப் பார்க்கிறீங்களா...காதுல புகை வருது :)//
அண்ணாத்த, அந்த சோக கதை தான் உங்களுக்கு தெரியுமுல, அப்புறம் என்ன.
Syam - யோவ் அதான் கல்யாணம் ஆகிடுச்சில்ல அப்புறம் ஏன்யா பயம்னா தெரியாத மாதிரி சீன்வுடுறீங்க?? :))
Harish - naanum paarthutu solren :))neengalum namala maathiri thaana? sound vechikitte bayapadara partyaa? :P
நாகை சிவா - அப்புறம் தான்யா தெரியும். நானும் உங்களுக்கு கிடைச்ச மாதிரி இரவல் வாங்குறதுக்கு ஒரு ஆள தேடிக்கிட்டு இருக்கேன் :))
Enjoyed ur narration !! I've queued the movie. I like thrillers too !! Thanks for a long list !
Hi,
I'm a new Poster!
No one has mentioned this movie
"THE GRUDGE" - a Japanese horror movie...
After Exorcist this is the Scariest movie ever!! I liked "Texas Chainsaw Massacre" too..
The shining by Stephen Kubrick.
padam theeya irrukum paarunga.
Konjam late-a inge vandhutten, adhukkaga first mannipu. Ring - bare minimum volume-la vechu paartha padam - initialla nalla dhigil effect create panniruppanga. (Andha bachelor reference - trademark Dubukku!!!) :)
But andha effectku mela oru rendu naal raathiri thookam varama paduthina padam (padangal) - Silence of the lambs, Red Dragon.
http://moviesrecorded.blogspot.com/2006/08/amityville-horror-2005.html
yes, we have DVD. you can take it. (we have japanese version of The Grudge. you can watch it with english dubbing. I haven't watched yet. )
Post a Comment