For previous parts -- > Part1
தெரு கிரிக்கெட்டில் முதல் சவால் எங்கே ஸ்டெம்ப் நடுவது என்பது தான். ஒரே இடத்தில் டெய்லி விளையாடினால் அந்த வீட்டு மாமிக்கு சாமியேறி ஸ்டெம்ப் வெந்நீர் அடுப்புக்கு போய்விடும். முதலில் பையன்கள் ஒரு கூட்டமாக நின்று விளையாடாமல் 'கொச கொச'வென்று பேசி ஒரு முன்னோட்டம் நடக்கும். பிரச்சனை வருவதென்றால் இதற்குள் மூக்கில் வேர்த்து "குச்சியை இங்க நட்டேள் தெரியும் சேதி" என்று ஆரம்பித்து "பாய்ஞ்சு அடிக்கிறதுல பல்லி...பாயாம அடிக்கிறதுல வில்லி" என்று சிவகாசி விஜய் டயலாகெல்லாம் பேசி முடிப்பதற்குள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துவிடுவோம். ஆனால் அத்தோடு ஓயாது. அந்த மாமியும் அதற்கப்புறம் பீல்டிங்க்கில் இருப்பார்கள். பந்து தப்பித் தவறி அந்தப் பக்கம் போனது என்றால் லபக் தான். இதுல் கூட்டணியெல்லாம் வேறு சேர்ந்துகொள்வார்கள். காப்பிப் பொடி கடன் சண்டையெல்லாம் மறந்து கூட்டணி சேர்ந்து, கிரிக்கெட் நிறய தரம் ரக்பியான கதையெல்லாம் நடந்ததுண்டு.
விளையாடும் போது சில சமயம் பந்தை தூக்கி அடித்தால் போச்சு. யார் வீட்டு முற்றத்திலாவது, கொல்லைப்புறத்திலாவது விழுந்துவிடும்.தெருவில் வெகு சில வீடுகளில் மட்டுமே பந்து இந்த மாதிரி விழுந்தால் திருப்பி தருவார்கள். அனேகமாக அவர்கள் வீட்டு குரங்கு எங்கள் டீமில் இருக்கும். ஆனாலும் "பந்துலு"வின் சித்தி வீட்டில் மட்டும் தரமாட்டார்கள். பந்துலுவை நாங்கள் முறுக்கிற முறுக்கில் எதாவது டகால்டி வேலை செய்து பந்தைக் கொண்டுவருவான். அவ சித்தி விடாமல் தெருவில் வந்து எங்களை தெலுங்கில் திட்டுவார்கள். நாங்களும் பதிலுக்கு "ஏமி எக்கட போயிந்தி எருமைமாட்டுக்கு வாலுந்தி" என்று ஒரு கோரஸ் பாட்டு பாடுவோம். பந்துலு வீட்டுக்குப் போய் எங்களுக்கும் சேர்த்து வாங்கிக்கட்டிக் கொள்வான். மற்ற வீடுகளிலெல்லாம் தட்டோட்டி (மொட்டை மாடி) வழியாக ஏறிக் குதித்து தான் பந்தை மீட்கவேண்டும் . டீமில் உள்ள அனைவரும் மொட்டை மாடி ஏறுவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஒரு முறை பந்தை எவனோ தூக்கி அடிக்க பந்து ஒரு ரக்பி மாமி வீட்டின் முற்றத்தில் போய் விழுந்துவிட்டது. ரக்பி மாமி, தெருவில் இருந்த ஒரு கோவிலுக்கு போயிருந்தார்கள். ரக்பி மாமி திரும்பி வருவதற்குள் பந்தை எடுக்க வேண்டுமே என்று என்னையும் சேர்த்து மூன்று பேர் கொண்ட மீட்புப் படை தயாரானது.(நிறைய பேர் மொட்டைமாடியில் ஏறினால் பக்கத்து வீடுகளில் மாட்டிக்கொள்வோம்)
ரக்பி மாமி வீட்டு முற்றம் கொஞ்சம் கஷ்டமானது. மற்ற வீடுகளில் சிமிண்ட் தொட்டி இருக்கும் கால் வைத்து இறங்கிவிடலாம். ஆனால் இவர்கள் வீட்டில் சிமிண்ட் தொட்டி கிடையாது. ப்ளாஸ்டிக் தொட்டி தான் உண்டு. எப்பிடி இறங்க என்று யோசித்து, எடை குறைய என்பதால் தண்ணி பிடிக்க வைத்திருந்த ஹோஸ் டியூப்பை கயிறு மாதிரி உபயோகப் படுத்தி பந்தாங்கொள்ளி பாலாஜியை முற்றத்தில் இறக்கிவிட்டோம். பயந்தாங்கொள்ளி பந்தை எடுத்து போட்டது. அதற்குள் மாமி கோவிலில் இருந்து கிளம்பியாச்சு என்று தகவல் வர..பயந்தாங்கொள்ளி பாலாஜி ரொம்பவே பயந்துவிட்டான். பயத்தில் ஹோஸ் டியூப்பை பிடித்து திரும்ப ஏறமுடியவில்லை. வாளியில் ஏற முயற்சித்து பிடித்து வைதிருந்த தண்ணியை வேறு கொட்டிவிட்டான். இதற்க்குள் மாமி கதவை திறக்கிற சத்தம் கேட்க ஆரம்பித்தது. பயந்தாங்கொள்ளி பதறி அடித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் முற்றத்துக்கு பக்கதிலிருந்த டாய்லெட்டில் போய் ஒளிந்து கொண்டான். எங்க நேரம், மாமிக்கும் அந்த நேரம் பார்த்து தானா வரணும்.. சொல்லி வைத்த மாதிரி நேராக டாய்லெட்டுக்குப் போய் கதவை திறக்க உள்ளே குத்த வைச்ச குரங்காய் பயந்தாங்கொள்ளி ஒளிந்துகொண்டிருக்க...அவனைப் பார்த்து திருடன் என்று நினைத்து மாமி "திருடன் திருடன்" என்று சத்தம் போட..ஒரே அமளி துமளி ஆகிவிட்டது. அப்புறம் வேலை வெட்டி இல்லாத நாலு பேர் சேர்ந்து பஞ்சாயத்து சொல்லி சமாதானப் படுத்தினார்கள். (தண்ணி கொட்டிவிட்டதே அப்புறம் அந்த மாமி எப்பிடி போனா? என்று பின்னூட்டத்தில் சந்தேகம் கேட்காதீர்கள்...ஊரில் எல்லா வீட்டிலும் கிணறு உண்டு :) )
எங்கள் தெரு பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கம் என்பதால் வழிப்போக்கர்கள் தொல்லை வேறு ரொம்ப உண்டு. ஒரு முறை காட்டான் கணேசன் பேட் வழக்கம் போல் செய்து கொண்டிருந்தான். "டேய் காட்டான் ...ரொம்ப வெக்கையா இருக்கு இந்தப் பக்கம் காத்து வர மாதிரி பேட்ட வீசுடா"ன்னு பசங்கள் வெறுப்பேத்த அவனுக்கு வேகம் வந்து பேட் மாதிரி மரத்தில் செதுக்கின ஒரு வஸ்துவை(அது தான் லக்கி பேட் என்று வேறு சொல்லிக்கொள்வான்) சுத்தின சுத்தில் பந்து மீட்டாகி வந்து கொண்டிருந்த ஒருத்தர் நெஞ்சை உண்மையிலேயே நக்கி ஆள் அந்த இடத்திலேயே மயக்கமாகிவிடார். எஸ்.வீ.சேகர் டிராமாவில் வருவது மாதிரி நாங்கள் எல்லோரும் மறைந்துவிட விட்டோம். நான் அடுத்த தெருவிலிருந்த இன்னொரு வீட்டுக்குப் போய் சட்டை மாத்திக் கொண்டு டியூஷனிலிருந்து திரும்ப வருவது மாதிரி நோட்டெல்லாம் எடுத்துக் கொண்டு நல்ல பையனாய் வந்தேன். அதற்குள் அந்த ஆளை உட்கார வைத்து...காட்டான் கணேசனின் சொந்தக்காரரின் ஹோட்டலில் இருந்து காபி வாங்கிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது..அவருக்கு லோ பிரஷராம், அதனால் தான் மயக்கமாம் பந்து அடித்ததால் அல்ல என்று. விஷயம் தெரிந்த அப்புறம் காட்டான் கணேசன் தைரியமாய் தெருவில் தலையை காட்டினான். அதற்கப்புறம் அந்த லக்கி பேட்டை அவன் உபயோகப் படுத்துவதை நிப்பாட்டிவிட்டான்.
Wednesday, March 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//அந்த மாமியும் அதற்கப்புறம் பீல்டிங்க்கில் இருப்பார்கள்//
ஹா ஹா.. கலக்கிபுட்டீங்க...
நானெல்லாம் colony'ல இருந்ததாலே, straight'ஆ ஜன்னல்தான். ஒரு முற கண்ணாடிய உடைச்சிட்டு, escape ஆகுறேன் பேர்வழினுட்டு அவங்க flat'குள்ளேயே போய் மாட்டி அப்புறம் batting செஞ்சவன போட்டு குடுத்து ஒரு மாசம் வீட்டுக்குள்ள book cricket ஆடி என் strike rate'அ தக்க வச்சிக்கிட்டேன்.
டுபுக்கு... Chancey இல்ல.. சில சமயம் இந்த வரிதான் இந்த பதிவுலயே டாப்னு quote பண்ண தோணும்... ஆனா இந்த ரெண்டு பதிவுலயும் அப்படி சொல்ல முடியல... (அட, பாராட்டுதாங்க...:-) டார்டாய்ஸ் கொசுவத்தி சுருள் சுத்திவிட்டுடீங்க... கலக்கீட்டீங்க....
கொஞ்ச நாள் உங்க ப்ளாக் பக்கம் தலை காட்டலை அதுக்குள்ள.. இவ்ளோ போஸ்டா... பயங்கர வேகமாத்தான் இருக்கீங்க..
heheh. I have seen similar incidents in my neighbourhood too. Boys will be Boys , ella oorlayum - avlodaan!
இப்பிடி சிரிக்க வச்சா ஆபீஸ்ல எவ்ளோ தான் ஒளிஞ்சு ஒளிஞ்சு சிரிக்க முடியும்?
நீங்க உங்க நினைவுகளை என் ஒரு புஸ்தகமா எழுதக் கூடாது? உதாரணத்துக்கு 'கல்லிடைக்குறிச்சி தேவதைகள்' இல்லன்னா 'Kallidai Days' அந்த மாதிரி. ஐடியாவுக்காகத் தனியா நமக்கு ராயல்டி மட்டும் குடுத்துடுங்க.
hilarious writing..keep it up
I second kaipulla, unga way of writing book ezhudara madhiridhan iruku. Hilarious!
"மாமியும் அதற்கப்புறம் பீல்டிங்க்கில் இருப்பார்கள்" - Excellent touch...
நம்ம வெளையாடும் போது தான் வாசலுக்கு கோலம் போட வருவா அல்லது வாசலில் வந்து நின்னு தலை வாரிண்டு இருப்பா. அப்பதான் எப்பவுமே காத்து வீசற நம்ம ப்ளேயர் கரெக்டா அங்க அடிப்பான்.
மொட்ட மாடில விழுந்தா எடுக்கறது ஈஸி. அகரஹாரத்துல எல்லா வீடும் (கோவணம் மாதிரி) சேர்ந்தாப்ல இருக்கறதுனால (பொது சுவர்) ஒரு வீட்டு மாடில ஏறினா அப்படியே தாவிதாவி பந்து விழுந்த மாடில போய் எடுக்கலாம். தாழ்வாரத்துல விழுந்தா ரொம்ப கஷ்டம் தான்.
எஙக அக்ரஹாரத்து வீடுகளுக்கு காம்பவுண்ட் வால் கெடையாது. straight-ஆ வீடு ஆரம்பம் தான். முன்னாடி குறுக்க(vertical) கம்பி வெச்ச அழி இருக்கும். பந்து அதுக்குள்ளார போய்டுத்துனா அழி வெளிய கைய விட்டு (பந்து முன்னாடி இருந்தா) எடுக்கணும். இல்லைனா ஒரு பெரிய குச்சிய விட்டு எடுக்கணும். 99% மாட்டிப்போம்.
PK solraa maadhiri your posts are getting better and better
sooper postnga...
appadiyya athanai vishyamum naan pannirukaan.. paakthu veetu koorailia thirtu thanamma yeri otta udaithu .. yeemma yemmma yeppa yeppa anga oru jaathi kalavaram nadha maathiri ayu poochu
THen our help "ஹோ" indha letteroda english key enaaa.. I tried ennalaa kandu pidika mudiyalae..
ஹோ
hahaaa, narration flow is like watching a live video. i guess, it's you only enterd that mamai's home instead of balaji. correctaa?
vadivelu vai herova pottu oru padam edukkalaam - isme comedy hai, (tons), tragedy hai (aruvamanai and ball), thrill be hai (toilet incident)....kaipullai madiri enakkku royalty kuduthudunga when the movie is made :)-
அய்யா டுபுக்கு.
ஏன்யா Bush லாம் இழக்குரீங்க.
நல்லா வெலயாடி பீதிய கிளபிட்டு இப்ப நாயத்த பாரு.
ஜெகன்
neighbour => you've typed that letter and asking how to do...?
Hope you are not kidding ..if so
"-hoo" will give you "ஹோ"
ஹோ.. ஹோ.. ஹோ... *க்ரிஸ்மஸ் தாத்தா சிரிப்பு* (also wanted to try out the new letter ;)
Excellent narration டுபுக்கு sir.
Inspite of repeated glances from others, I was laughing continuosly for around 20 minutes (எனக்கு எழுத்து கூட்டி படிப்பதர்க்கு கொந்ஜம் time ஆச்சு.)
ramachandran:: andha type pannunanu yen nenaikareenga.. irukavae iruku namma CCP- -cut copy paste protocol..
Thanks for the letter rams.
டுபுக்கு!!பக்கத்து தெரு பசங்க கூட மேட்ச் வெளயாடி சண்டை போட்டதில்லயா ??
வி.கே.புரத்தில முக்காவாசி கிரவுண்டு இல்லேன்னா வயக்காட்டு-ல (சம்மர் லீவு-ல) தான் வெளயடுவோம்... உளத்றதிலதான் நிறய சண்டை வரும்..
classic dubukku,
The experiences are similar though I have not lived in Agraharam. Street cricket is everywhere the same. Apart from the "encounters" with mamis, and mamas - there are stray dogs, cattles, autos and scooters (those days it was not so much traffic as it is now) in Madras. Apart from these rescue of ball from open gutter is a separate experience. Thinking back, I used to wonder how it was possible to play - now I dont' have so much guts to repeat the games of those days. Pity present generation misses these and sits in front to PC to play "simulated games".
Wonderfully nostalgic.
kalakiteenga dubuks..
most of us wu have such experience esp playing cricket in komanam roads..but to write them hilariously..gr8! keep it up..
btw, i used to send jokes regularly to my frineds..ippolam sarakku illatha timela i just fwd ur link..athukkum danks..(no..no royalty..aamam solliputen)
Saymee - danks. it was very thrilling when we did that but now we just relish it :)
buspass - :) ஆஹா மே மாசத்தில் பகலில் விளையாட விட மாட்டார்கள் அப்போதெல்லாம் புக் கிரிக்கெட் தான்
யாத்திரீகன் - நன்றிங்க...ரொம்ப புகழறீங்க கூச்சமா இருக்கு...அடிக்கடி ஒரு எட்டு வந்துட்டுப் போங்க...
Usha - ahaa unga side nyayangala kekanum nenaichene...sollunga :)
கைப்புள்ள- வாங்க வாங்க...இதானே வேணாங்கிறது...அம்பாசமுத்திரத்துக்காரன் புக் போட்டா எதுக்கு கல்லிடைக் குறிச்சி தேவதைகள்"ன்னு பெயர் வைக்கனும்? :P
(ஆனா கல்லிடைக்குறிச்சியில தான் தேவதைங்களாம் இருந்தாங்க அப்போ அதனால் கரெகடாத் தான் இருக்கும் :) )
புக்கு போடறதெல்லாம் சரி யாரு போடுவாங்க யாரு வாங்குவாங்க? ஹீ ஹீ
Londonkaran - danks yes it was thrilling when we did that :)) but now we just laught it out
anonymous - danks...summa oru nicknameavadhu vechukonga...repeat comment podum pothu identify panna vasathiya irukkum
Usha - danks...book ellam seri yaaru poduva yaaru vaanguvanga? ellarum thittam pottu ethi vidara maathiri irukke :P
WA - danks neenga etho kavutharathukku plan pannarenga maathiri theriyuthu enakku. I better be careful
neighbour - Yes all these are common experiences isn't? ellarum indha maadhiri neraya dakalti velai panni iruppom illa? -hoo for ஹோ
ambi - danks. Illada..unmaiyileye naan illa adhu...irundha enna thayakkam sollarathukku
Paavai - haha vadivelu Kovai brothers la oru crikcet comedy panni irukanga partheengala? hehe Padam edutha kandippa royalti kuduthiralam:)
Jegan - சும்மா டமாசு டமாசு..அவரு வெளயாடி நாம பார்க்கவா ஹீ ஹீ
Ramachandran - I think he would have CTRL C +V from my post
Newton - romba danksga..for taking pains to read this post :)
சிங்கை சிவா - ஆஹா வாங்கய்யா வாங்க..நான் முதல்ல எல்லாம் சிங்கைன்னா..ஓடிப் போய் பார்ப்பேன்...அவங்க சிங்கப்பூர சிங்கைன்னு சொல்லியிருப்பாங்க...
உங்களுக்கு வீ.கே.புரமா...எல நம்ம மக்கா அங்க நிறைய பேரு இருகாங்களே...அப்பிடி போடு அருவாள..
Venkat - yes very true Venkat. Same here open gutter is a bit dangerous and once I saw a very big cobra in it too.(those were common in our place as we had a vaaykaal nearby)
Current generation is missing all those sort of fun.
Ananthoo - danks sir. Email fwd service ku romba nanri :)
Uma Krishna- ada unmaiyanga...naan illa adhu...irundha sollrathula enna thayakkam :)
hehe neengaluma book aasai kaati ethi vidureenga...seri book potta oru 10 copy unga kitta thalliruven :)
Naladhukku kalam ille ippo ellam :P
//இதானே வேணாங்கிறது...அம்பாசமுத்திரத்துக்காரன் புக் போட்டா எதுக்கு கல்லிடைக் குறிச்சி தேவதைகள்"ன்னு பெயர் வைக்கனும்?//
சாரி! சாரி! கல்லிடைக்குறிச்சி உங்க புகுந்த வீடுங்கறதை மறந்துட்டு எழுதிட்டேன்.
:)
'Pandhulu' - Very nice name....
Post a Comment