Wednesday, January 04, 2006

The Village

சமீபத்தில் தான் இந்தப் படம் பார்த்தேன். கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை மனோஜ் ஷ்யாமளன். நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் கதையை கேட்டுவிடாதீர்கள். நான் மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தார்ங்கிற ரீதியில் மட்டுமே தெரிந்து கொண்டு பார்த்ததால் தப்பித்தேன். கதையின் மையக் கருவில் கொஞ்சமூண்டு மசாலா இருந்தாலும் திரைக்கதையில் கலக்கியிருக்கிறார்.

கல்யாணமாகி இருந்தால் நீங்கள் மட்டும் மதியம் தூங்கி, மனைவி மற்றும் குழந்தைகளை சாயங்காலமாக வெளியே ஹோட்டலுக்கு கூட்டிப் போய் சாப்பிட்டு விட்டு ராத்திரி பத்து மணி வாக்குக்கு வீட்டுக்கு வந்தீர்களானால் அவர்கள் எல்லோரும் சீக்கிரம் தூங்கப் போய்விடுவார்கள். அப்புறம் மங்கலாக வெளிச்சம் தரும் ஒரு குட்டி லைட்டைப் போடுக் கொண்டு, சோபாவில் தலைக்கு ரெண்டு, காலுக்கு ரெண்டு தலையணை வைத்துக் கொண்டு, வால்யுமை நிறைய வைத்துக் கொண்டு கொறிப்பதற்க்கு மசாலா கடலையோ, நேத்திரங்காய் சிப்ஸோ வைத்துக்கொண்டு பார்க்க வேண்டிய படம் இது. வால்யும் குறைய வைத்தீர்களானால் எழவு சில டயலாக்குகள் புரியாது. இடைவேளையின் போது ஒரு இஞ்சி டீயும் போட்டுக் குடித்தீர்களானால் படம் கலக்குகிற கலக்கில் காலையில் சாப்பிட்ட அனைத்தும் தவமாய் தவமிருந்து வயிறு க்ளீனாகி விடும்.

அடுத்த அரைமணி நேரத்தில் அமெரிக்கா புஸ்வானமாகிவிடும், ஹீரோ ஒரு அரை குறை குட்டியுடன் சல்லாபம் பண்ணி சஞ்சீவி மலையைக் கொண்டு வராவிட்டால் 'ஊஷ்' உலகத்தை காக்காய் கொண்டுபோய்விடும் என்ற ரீதியில் கதை சொல்லாமல் இப்பிடிப் பட்ட சிக்கலான கருவையும் திறமையாக சொல்ல முடியும் என்று அழகாக சொல்லியிருக்கிறார். திரைக்கதை அமைத்த விதம் அருமை. ஒரு நிறைவான கதையை எழுத்தில் படித்த திருப்தி எனக்கு. சம்பிரதாயமாக எல்லோரும் சிரித்துக் கொண்டு போஸ் குடுத்து முடிக்காமல் பாதியை நம் கற்பனைக்கு விட்ட கவித்துவமான முடிவுக்கு ஒரு சபாஷ்.

இவரின் "Signs" படம்மும் பார்த்தேன். ஆனால் அது அவ்வளவு பிடிக்கவில்லை. பில்டப் நல்ல செய்திருந்தாலும் கதையமைப்பு கொஞ்சம் சொதப்பி விட்டதோ என்று தோன்றியது.

எனக்கு மனோஜ் நைட் ஷ்யாமளனைத் தெரியாது. ஆனால் அவரை மாதிரி படம் எடுத்து கூடிய சீக்கிரம் ஜொலிப்பார் என்று அருண் மேல் நம்பிக்கை இருக்கிறது. அருணைத் தெரியாதவர்களுக்கு - இங்கே சென்று அவரது குறும்படங்களை காணலாம்.

PS- அருண்..பிச்சைக்காரன் மாதிரியெல்லாம் நானும் தத்பரூபமா நடிப்பேன் ஹீ ஹீ ஒரு சான்ஸூ.....:P

17 comments:

Subhashri said...

Hey ..
I also appreciated the movie a lot..although it was hyped to be a scary movie which it wasnt..incidently my first movie of that kind if it was..
prolly bcos lot of ppl i know dint have the setup ambience like what you said when they watched this movie which is y they cudnt appreciated it ..
bhooma

Balaji S Rajan said...

டுபுக்ஸ் என்னங்க படம் விமர்சனம் கலக்கறீங்க. அது என்ன கடைசியில் பிச்சைகாரன் ரோல் கேட்டு சும்மா பில்டு குடுக்கறீங்க. அப்புறம் என்ன பொங்கல் பார்டி ஏற்பாடு எல்லாம் எப்படி இருக்கு?

Usha said...

as usual, solla vandadai azhaga sirikka vechu solli irukkenga. Amam manaivi, kuzhandaigaloda pathaa enna pochu - naan ennavo palaana padamakkumnu nenaichuten.
kadiaseela patha kadalikum, thalaigaanikkum poati varama pathukadaan ithanai munnerpaada? hehe....

Unknown said...

hi dubukku! I'm very happy indeed to see a good tamil blog here! I've been searching for one for sometime now! :)

expertdabbler said...

>>கொறிப்பதற்க்கு மசாலா கடலையோ, நேத்திரங்காய் சிப்ஸோ

padam parkara side dish madhiri therilaye vera edhukko 'side dish' madhiri irukkey :)

(i am not sure abt the nendhram chips part though)

Anonymous said...

Shyamalan-oda matha padangalai (6th Sense, The Signs) compare pannumbodhu enakku konjam emaatram thaan.

P.S. - Kekkaradhu thaan kekkureenga: "Unnal Mudiyum Thambi" padathai remake panna sollunga (En thalaivar King Kong remake seiyara madhiri!) adhula (I mean "unnal mudiyum thambi", not "King Kong" :P )ungalukku hero chance kelunga.

Anonymous said...

Annathey inglibis padam review, Anjelica Ambalnnu engeyo poreenga ippo :)

Known Stranger said...

i enjoyed the way you described how to watch this movie. I appreciated your efforts to use the proper grammatic tamil.. i enjoyed your tamil. you tried to be very casual still holding the prose tamil of books. hmm felt like reading the articals of S. Ramakrishnan who is a well known casual short story writer

Dubukku said...

Bhooma - danks for dropping by. Yes agree the movie is not a scary one. I liked the way it was finished.

Balaji - hehe summa thaan. Pongal party update yahoo groups la vandhirukkume. Uma and Deepa are organising. They have kept the programs details secret and want it a surprise for all of us.

Usha - palaana padam laam ileenga. Thalagani potti mattum illa remote control lerndhu ellathukkume..naan padam konjam serious a parpen. :)

Vikram - danks for dropping by and the comments. Glad that you enjoyed here.

Dubukku said...

PK - neenga thanni a sollreenganu nenaikaren. Naan thanni lam adikka matten. Nalla pullaiya kedukatheengappa..:)

Krithika - Sings pidichutha? 6th Sense I liked a lot but not signs parkum pothu romba expectation irundhathunala irukalam.
Correction PJ unga thalaivar illa Namma thalaivar. Unnal mudiyum thambi dream project :P

Uma - amaakaa..ellam following your footsteps thaan :P

Known Stranger - danks for dropping by and the compliments. S.Ramakrishnan romba padichathillai but have heard of him a lot.

[ 'b u s p a s s' ] said...

//மங்கலாக வெளிச்சம் ; சோபாவில் தலைக்கு ரெண்டு, காலுக்கு ரெண்டு தலையணை வைத்துக் கொண்டு;கொறிப்பதற்க்கு மசாலா கடலையோ, நேத்திரங்காய் சிப்ஸோ வைத்துக்கொண்டு//

ட்ரெய்லர் போட்டு முடிக்கிறத்துக்குள்ளார நான் தூங்கிடுவேன்...அடுத்த நாள் டோஸ் விழும்..லைட், டிவி எல்லாம் off பன்னாததுக்கு...

Anonymous said...

Dubukks sir, en blogla ungalukku oru rasigar manram uruvaagittu irukkunnu ungalukku sollittu polaamnuttu me come here.

Anonymous said...

டுபாக்கு சார்

உங்க ப்ளாகை படிச்சிட்டே ஒரு படம் பாத்த த்ரில் இருக்கு போங்க

ப்ளாக் கலக்கல்.

அப்படியே நம்ம ப்ளாகையும் படிச்சிட்டு உங்க எண்ணைத்தை தெரிவிங்களேன்

ஒரு சின்ன முன்னோட்டம்
My blog Gudia, a Muslim girl and Ramdev ji, a Hindu male !! is on how the society defines the "weak" and who becomes the underdog !

நட்புடன்

விநாயக்
Gudia, a Muslim girl and Ramdev ji, a Hindu male !!

Usha said...

Dubukku, I see that you have been nominated under the category best Tamil blogs of the year in The Indibloggies poll - 2005 edition.
http://www.indibloggies.org/blog/ (enter the voting area)
I am writing this for your readers to visit the site and vote for you.
I have already done. All the best. You deserve it!!!

Anonymous said...

me too! atb 4 the award!

Harish said...

Saw this movie when it was released in chennai...
At the end of the movie there was a silence...and it was a sielnce of admiration...of getting outbeaten by the director.
It ended with an applause which was a sign of acceptance of defeat to a one-trick pony. This man Shyamalan knows how to make a movie with just one climax as a base.

Dubukku said...

buspass - நான் சினிமாவெல்லாம் சின்சியராப் பார்ப்பேன். வேலை பண்ணும் போது தான் தூங்குவேன் :P

WA - Many thanks for gathering that support for me. Neenga thaan Ko.Pa.Cha :)

Vinayak - Guidya's story was very shocking hmmm

Usha - Many thanks for your vote.
I have also posted about it today :)

Sundaresan - many thanks for the vote :)

Harish - danks for dropping by. Yes I agree Shyamalan knows how to make a movie with a climax as base. It defntly is his strong point. Chennai la applause a ... kalakarangale makkal.

Post a Comment

Related Posts