Thursday, September 15, 2005

கவிதெ!

சமீபத்திய திரையிசைப் பாடல்களில் ரசித்த வரிகள்.

"உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்.." - ரெண்டக்கா பாட்டு.அந்நியன்


வித்தியாசமான சிந்தனை. அருமையான வரிகள். நினைச்சுப் பார்க்கவே அருமையாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் வரும் வரி தான் புரியவேஇல்லை. அதென்ன "உன்னை தேக்கடியில் யானையாக நினைச்சேன்" யானைதானா இல்லை டமீலில் பாடியதின் விளைவா? இல்லை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அதென்ன தேக்கடி யானை? எனக்கு விக்ரமைப் பார்த்த போது ஹிப்பி வைத்துக்கொண்ட வாழைக்காய் பஜ்ஜி மாதிரி தான் தெரிந்தார்.

கதவில்லா கழிவறைக்கு பக்கெட்டு காவல் - மச்சி
ஆச்சான்னு அடுத்த ஆளு உடனே தாவல்


- புறாக் கூண்டு போல பாட்டு, காதல்

:)))) பெண்கள் ஹாஸ்டலில் எப்பிடியோ தெரியாது ஆனால் எல்லா ஆண்கள் ஹாஸ்டல், டார்ம், மேன்சன் என்று எல்லா இடங்களிலும் நடக்கும் அன்றாட நிகழ்வு தான். அதுவும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது வரை உள்ள மீடியம் மாமாக்களுடன் இருந்துவிட்டால் போதும் தொல்லை தாங்க முடியாது. உள்ள போய் உலக விஷயங்களைப் பற்றி சிந்திக்க விட மாட்டார்கள், ஆச்சா ஆச்சான்னு அரித்துப் புடுங்கிவிடுவார்கள். (நமக்கு கற்பனை பிறப்பதே இங்கு தான்..உள்ள போனா சிந்தனா சிற்பியாகிவிடுவோம்ல). வரிகள் பாட்டில் அருமையாக சுருதி சேர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Related Posts