Sunday, May 19, 2013

டும் டும் டும்

மனிதனின் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் பழக இண்டர்நெட் கனெக்‌ஷனில் மூன்றாவது கொஞ்ச நாள் முன்பு  நொண்டியடிக்க ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட் இல்லாவிட்டால் கக்கா கூட போகமுடியாது என்பதை கம்பரிலிருந்து திப்பிலி சித்தர் வரை எல்லாரும் ஏற்கனவே ஏகத்துக்கு பாடிவிட்டதால் அவை அப்பாலிக்கா. இந்த இண்டர்நெட் கனெக்‌ஷன் தொல்லை பாச்சிலரிலர் குடும்பஸ்தர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை என்றாலும் இந்த இம்சை வரமால் இருக்க வயரில் மச்சம் இருக்கவேண்டும் போல. நான்கு ஆண்டுகள் முன்னால் இந்த பிரச்சினை
வந்த போது டெல்லியில் இருந்து ஒரு குயில் பேசியது. நானாச்சு சார் என்று பொறுப்பாய் அப்டேட் மட்டுமாவது கொடுத்தது. இந்த தரம் புனாவில் இருந்து ஜீ போலியே என்று ஒரு குரங்கு பேசியது. அதற்கப்புறம் ஒவ்வொரு முறையும் நாய்டா, புனா, கொல்கத்தா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு எங்காவது கனெக்‌ஷன் போகும். நான் பிறந்து வளர்ந்த கதையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டு விட்டு கடைசியில் இங்கேர்ந்து பார்க்கும் போது எல்லாம் கரெக்ட்டா தான் வேலை செய்யுது என்று ஒரே பல்லவி பாடுவார்கள். ஒரு முறை இன்ஜினியர் வந்து ஆமா லைன்ல ஏதோ பிரச்சினை இருக்கு நான் போய் ஸ்க்ரூ ட்ரைவர எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனவர் தான் ஆளே காணோம். திரும்பவும் கொல்கத்தாவிற்கு போன் போட்டால் இங்கேர்ந்து பார்த்தா என்று ஆரம்பிப்பார்கள். ஸப்பா டேய் எல்லாமே அங்கேர்ந்தே பார்த்தா...இப்போ நான் என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்கேன்னு சொல்லு பார்போம் என்றால் இங்க மீனாட்சி சுந்தரம்ன்னு யாருமில்லையே சார் என்று வைத்துவிடுவார்கள். நம்மாளுங்களுக்கு நம்மாட்களைப் பார்த்தால் ஒரு இளக்காரம், ஒரு அலட்சியம். அப்படியெல்லாம் இருக்காது என்று உள்மனது அப்பப்போ சொன்னாலும் இதுவரை எனக்கேற்பட்ட போன் அனுபவஙக்ள் எல்லாமே அதற்கு மாறாகத் தான் இருக்கின்றன. இப்போது லைனையே வேறு சர்விஸ் ப்ரொவைடருக்கு மாற்றி விட்டேன். ஸ்பீட் சும்மா அதிரடியாய் பறக்கிறது. (உங்க வயத்தெரிச்சலுக்காக - 79MB download 18mb upload :))) )


இண்டர்நெட் கனெக்‌ஷன் மக்கர் பண்ணும் போதெல்லாம் எழுதி புக்கர் ப்ரைஸ் வாங்குமளவிற்கு புதுசு புதுசாய் எழுதுவதற்கு ஏதாவது தோன்றும். அதனால் தான் எழுதவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போ லைன் சரியாகிய பிறகு தான் புரிகிறது பிரச்சினை லைனில் இல்லை என்று. அடிக்கடி எழுதவேண்டும்...டும் டும் டும்.... ஆமென்.

அறுகத்தெரியாதவனின் ஆயிரத்தொன்னாவது அறுவாள் --> https://www.facebook.com/DubukkuTheThinkTank

15 comments:

Unknown said...

Romba nala kalichu unga post. Nalla irunthathu

துளசி கோபால் said...



அதுக்குள்ளேயா அறுபதுன்னு நினைச்சு அசந்துபோனேன்! எல்லாம் தலைப்பு செஞ்சவேலை:-)

அமுதா கிருஷ்ணா said...

அதுக்குள்ளேயா அறுபதுன்னு நினைச்சு அசந்துபோனேன்! எல்லாம் தலைப்பு செஞ்சவேலை:-)

இது சூப்பர்..

Unknown said...

அப்பாடா ஒரு வழியா ஒரு போஸ்ட் போட்டுட்டீங்க. அடிக்கடி வந்து பாத்து கண்ணே பூத்து போச்சு :-) சூப்பர் போஸ்ட் (துளசி கோபால் கமெண்டும் ! ) உங்கள் பாணியில். அதெப்படி வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இப்படி எழுதறீங்க ? பாராட்டுகள்.

Lakshmi

Unknown said...

அப்பாடா ஒரு வழியா ஒரு போஸ்ட் போட்டுட்டீங்க. அடிக்கடி வந்து பாத்து கண்ணே பூத்து போச்சு :-) சூப்பர் போஸ்ட் (துளசி கோபால் கமெண்டும் ! ) உங்கள் பாணியில். அதெப்படி வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இப்படி எழுதறீங்க ? பாராட்டுகள்.

Lakshmi

Anonymous said...

kal thondri mann thondruvatharku munnalendhe unga posts ellam padichundu irundhalum, this is my first padhivu. Edhu padichalum, attention deficit disorder irukkara madhiri lines skip pannidhan padippen. Ponniyin selvan ku appuram, unga posts than fulla concentrationoda padikaren. I love the nadai and the language. Expecting more posts from you.

Kavitha said...

Finally! Why so short? Kadugu siruthalum kaaram kurayathunna?

Anonymous said...

:)

Anonymous said...


துளசி கோபால் ...
அதுக்குள்ளேயா அறுபதுன்னு நினைச்சு அசந்துபோனேன்! எல்லாம் தலைப்பு செஞ்சவேலை:-)

இதை வன்மையா கன்டிகிரோம்

எங்க தல என்றும் 16 தான் :)

இவன்
அகில உலக உன்னால் முடியும் தம்பி டுபுக்கு ரசிகர் மன்றம்

karthik

Anonymous said...

ஸ்பீட் சும்மா அதிரடியாய் பறக்கிறது. - 79MB download 18mb upload :))) )
ooho appo ivlo naal low spped than post late anathikku karanam.eppa mudiyala.

Deepa said...

Late aanalum latest ah eluthi kalakiteenga :-)
I too agree with you..namaa makkalukku namma atkalai parthale oru elakaram thaan :-0

Dubukku said...

சிவராமன் - மிக்க நன்றி பாஸு.

துளசி - யெக்கோவ்வ்....ரொம்ப லொள்ளு...அக்காங் :)))))))))

அமுதா - யெக்கோவ் உங்களுக்கும் ரெம்ம்ம்ம்மப லொள்ளு அக்காங் :))))

லக்‌ஷ்மி - மிக்க நன்றிங்க கொஞ்சம் கேப் விழுந்து விட்டதுன்னு அதான் சின்னதா இருந்தாலும் பரவாயில்லைன்னு எழுத முயற்சி செய்யறேன்.

அனானி - நீங்க சொன்ன வார்த்தைகள் அவ்ளோ ஊக்கமா இருந்ததுங்க. .மிக்க நன்றி. அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்.

பொயட்ரி - சரி ரொம்ப பெரிசா பெர்பக்டா எழுதறத விட கொஞ்சம் சின்ன சின்னதாகவாவது எழுதலாம், அப்போ அடிக்கடி எழுதற பழக்கம் வரும்ன்னு நினைக்கிறேன். அதான்.

அனானி - :)))

கார்த்திக் - ஹா ஹா பாஸு உங்க அன்பு அப்பிடியே மெய்சிலிர்க்க வைக்குதுங்க. காதக் குடுங்க வெளில சொல்லிடாதீங்க 19 ஆகிடிச்சு எனக்கு. பட் வெளில 16ன்னு சொல்லிக்கிறேன் :))

அனானி - சரியா பிடிச்சீங்க பாயிண்ட :))))

தீபா - :)) ஆமாங்க அதுவும் இப்போ இந்த வழக்கத்த ரொம்பவே பார்க்கிறேன். :(((

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது போல ஒரு போஸ்ட் எழுதி என் காதில் புகை வர வைப்பது எதற்கு?

இன்னும் தமிழகத்தின் கடைக் கோடி நடுவாந்திர ஊர்களில் பிஎஸ்என்எல் தவிர வேறு சேவையாளர்கள் இல்லாத நிலையில், இவர்கள் செய்யும் அழும்பு சொல்ல முடியவில்லை.

நமக்கு நெட் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டை நமது இடத்திற்கு வந்து ஆராயாமல் இருந்த இடத்திலிருந்தே எல்லாம் சரியா இருக்கு சார் என்று சொல்ல இந்த நாதாரிகளால் மட்டுமே முடியும்..

இரண்டு மாத அல்லாடலுக்குப் பிறகு அலுவலகத்திற்குப் போய் கூடுதல் பொறியாளர்-அடிஷனல் இன்ஜினீயர்-ஐப் பார்த்து அழுது விட்டு வரலாம் என்று போனால் மே மாத வெயிலில் 17 டிகிரியில் ஏசியை செட் செய்து வைத்துக் கொண்டு எல்லோரும் கூடிக் கதையடிக்கிறான்கள்..அதே பழைய பல்லவி...

எனக்கு வந்த ஆத்திரத்தில் இந்தியன் தாத்தா அவதாரம் எடுக்கலாம் என்று நினைத்தேன்;ஆனால் வர்மக்கலை தெரியாததால், கொஞ்சம் வந்து பாருங்க சார்..என்று பம்மி விட்டு வர மட்டுமே முடிந்தது.

இதற்காகவாவது ஏதாவது கேரள நாயரைப் பிடித்து வர்மக் கலை கற்றுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

யோவ்..பழைய கமெண்டிற்கெல்லாம் பதில் போடுவது வழக்கம் இல்லையா?
10 நாளைக்கப்புறம் கமெண்ட் வந்தால் மயில் வரும் வண்ணம் செட்டப்பை மாற்றும்..

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/10/blog-post_5.html?showComment=1380987582845#c7291770155566061232

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts