Sunday, November 11, 2012

இனிய தீபாவளி வாழ்த்துகள்

நூறு ரூபாய்க்கு பெரிய பை நிறைய வெடி வாங்குவது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்த காலத்தில், ஐம்பது ரூபாயிலிருந்து வீட்டில் பேரத்தை ஆரம்பித்து நாற்பது ரூபாய்க்கு படிந்து, சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "யார்ட்டயும் சொல்லாத கூடக் கொஞ்சம் வெடி வாங்கிக்கோ" என்று அம்மாவும் மாமியும் ஆளுக்குத் தரும் இருபது ரூபாயாயையும் சேர்த்து மொத்தம் என்பது ரூபாய்க்கு வெடி வாங்கி, பக்கத்து வீட்டு லெஷ்மி வெடி குப்பையையும் நைஸாக சேர்த்துப் போட்டு "இந்த தரம் மொத்தம் நூறு ருபாய்க்கு வாங்கினேன்டா" என்று உதார் விட்டு வெடிக்கும் பிஜிலியும் சீனி சரமும், ரெட் ஃபோர்ட் யானை சரமும், நாக் அவுட்டும் இன்ன பிறவும் அன்று குடுத்த சந்தோஷத்தை இன்று ஏக விலை குடுத்து வாங்கும் சீன பேன்ஸி அயிட்டங்கள் எனக்குத் தருவதில்லை. அடுத்த நாள் தெருவையே பெருக்கி குமிந்திருக்கும் குப்பையில் ஒரு பிஜிலி வெடி மருந்தைத் தூவி, இரண்டு வெடிக்காத ராக்கெட்டையும் கலந்து கொளுத்தி, விளையும் மாயாஜாலக் காட்சியை - எங்கே வெடித்து விடுமோ என்று பயத்துடன் தூரத்திலிருந்து பார்க்கும் அந்த திரில்க்கு முன் இந்த சீன வெடிகள் கால் தூசு பெறமாட்டா.இருந்தாலும் இவற்றை வெடிக்கும் மகள்களின் முகத்தில் மத்தாப்பாய் மலரும் சந்தோஷத்திற்காகவாவது ஊரில் கொண்டாடி நிஜ தீபாவளியைக் காட்ட வேண்டும்.

இனிய தீபாவளி வாழ்த்துகள்

14 comments:

சேலம் தேவா said...

தீபாவளி வாழ்த்துகள்..!!

sethu said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்

Subhashini said...

Iniya Deepavali nal vaazthukkal thalai

அமுதா கிருஷ்ணா said...

தீவாளி வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :)

Sanyaasi said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள். நீங்கள் சொன்னதனைத்தும் உண்மையே :)

பி.கு: கமெண்ட் பகுதியை கொஞ்சம் நறுக்கி சுருக்கி களையெடுக்க வேண்டும் போலிருக்கிறதே :)

Nat Sriram said...

தீபாவளி வாழ்த்துக்கள் சார் :)

Mahesh said...

ரொம்ப..... .ர்ர்ர்ர்ர்ரொம்ப நாளைக்கப்பறமா ப்ளாக் பக்கம் வந்தேன்.... தீபாவளி வாழ்த்துகள் !!!

இனிமேதான் எல்லாம் படிக்கணும்... வீட்ல எல்லாரையும் விசாரித்தாக சொல்லவும். சின்னப் பொண்ணுக்கு என்னை ஞாபகம் இருக்குமோ?

Unknown said...

Hope u had wonderful and safe diwali this year. Ooru pakkam vandhuttu pogalaamla.

Madhu Ramanujam said...

ஹ்ம்ம்... லேட் தீபாவளி வாழ்த்துக்கள்.
பி.கு: உங்களுக்கு இந்த சீன சரக்கு சந்தோஷமாவது இருக்கு. எங்க ஊர்ல அதுக்கும் சுலபமான வழி இல்லை சாமியோவ். அதனால எங்க போரையும் சொல்லி நீங்க சந்தோஷப்படுங்க.

xxx said...

good blog.... Watch comedy on http://tamilcomedy.info

Raji Akka said...

Appa!etthani naalaikkappuram ungal blog padicchathu!! meendum deepavali kondaadiyathai pol irukku. Piragu, meesai vishayamaum padicchen- Canadavil november muzhuvathum meesai vaccha ambilaigalukku prize ellam koduthaale- kelvipadavaillaiya? Adutha Movemberukku ready ayidungo!!
Putthandu vaazthukkal!! adikadi ezuthungo!!

Dubukku said...

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

மகேஷ் - :) மிக்க நன்றி அங்கேயும் வீட்டுல விசாரித்ததாக சொல்லவும்.

மது - ஆமாங்க அந்த சந்தோஷம் இங்கே இருக்கு. அதுக்கென்ன உங்களுக்கும் சேர்த்தே கொண்டாடியாச்சு

ராஜி அக்கா - உங்க ஐ.டியே சூப்பாரா இருக்கு :) ஆமாம் இங்கேயும் மொவம்பர் வந்தது :)))

Post a Comment

Related Posts