Saturday, February 05, 2011

புதுப் பெண்டாட்டி

டிவிட்டர் ஜோதியில் நானும் ஐய்க்கியமாகியாச்சு. மோகம் எத்தனை நாள் என்று இனிமேல் தான் பார்க்கனும். இது வரை டிவீட்டியதில் சில

  • தூக்குறேன்டா...கரைச்சல் குடுக்கிற எல்லாரையும் ஒருதன் ஒருதனா ஸ்கெட்சு போட்டு தூக்குறேன்டா # Wife Passed Driving Test
  • கத்ரீனா வீட்டில் ஐ.டி. ரெய்டு. ஆமா ஊரக் கொள்ளையடிக்கிறவன விட்ருங்க எல்லோர் மனசையும் கொள்ளையடிக்கிறவங்கள பிடிங்க #வழிசல் தொண்டன்
  • சர்ச் ஹாலில் சாய் பஜன் - மீல்ஸ் ப்ரொவைடட் #ப்ளாகில் அரைத்த மாவு
  • "திவ்யா ஐ லவ் யூ" நம்மூர் பஸ்ஸுல மட்டும் தான் கிறுக்குவாங்கன்னு நினைச்சேன். இங்கே லண்டனிலும் கூட கிறுக்குகிறார்கள் "Emma 14 is pregnant"
  • Got to say usabilty and search function sucks in Twitter. இல்ல பெண்கள் டிவீட்டுவதே இல்லீங்கிறீங்களா? :P
  •   
  • இனி ஓர் உயிரையும் இழக்கவிட மாட்டோம்: நிரூபமா ராவ் நம்பிக்கை - 'ம'னாவையும் 'உ'னாவையும் கன்ப்யூஸ் பண்ணியிருப்பாங்களோ? #TNfisherman
  •  அரசியல் பண்ணுறத நிப்பாட்டுங்கடா. எங்க ஊர் அண்ணாச்சிய கூட்டிட்டு வந்திருந்தா இதுக்குள்ள பஞ்சாயத்து முடிஞ்சி தீர்ப்பாகியிருக்கும் #tnfisherman
  •  

27 comments:

Porkodi (பொற்கொடி) said...

oru pondatiku apramum ivlo dhairiyama?

பத்மநாபன் said...

ஆரம்பமே அசத்தல் ..மோகம் ரொம்ப நாள் நீடிக்கும் ..

டிவிட்டு ஐடியாவை சரியா பிடிச்சிட்டிங்க....

Porkodi (பொற்கொடி) said...

இந்த மாதிரி அங்க போட்டதையே கம்பைல் பண்ணி இங்க போட்டு எல்லாம் தேத்த கூடாது, ஒழுங்கு மரியாதையா இன்னொரு புது பதிவு போடவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்..

பத்மநாபன் said...

எழுத்துபிழைகள்.. ட்விட்டுன்னு தெரியதறதுக்காகவே விட்டிருக்கிங்க போல...

பத்மநாபன் said...

வடைப்பிரியயை கொடியை மிந்த முடிய மாட்டிங்குதே....

Porkodi (பொற்கொடி) said...

ஹஹஹ. பத்துஜி, யாரு கிட்ட? :P

Philosophy Prabhakaran said...

// தூக்குறேன்டா...கரைச்சல் குடுக்கிற எல்லாரையும் ஒருதன் ஒருதனா ஸ்கெட்சு போட்டு தூக்குறேன்டா # Wife Passed Driving Test //

உங்களுடைய இந்த ட்வீட்டை நான் ரசித்து, எனது பதிவின் ட்விட்டரில் ரசித்தவை பகுதியில் இணைப்பதற்காக எடுத்து வைத்திருந்தேன்... அதற்குள் நீங்களே பதிவில் போட்டுவிட்டீர்கள்...

தெய்வசுகந்தி said...

nice!!

எல் கே said...

இப்பலாம் இதுதான் பேசன் நிறையை பேருக்கு, ட்விட்டை தூக்கி கூகிள் பஸ்ஸில் போட வேண்டியது ,அப்புறம் அதை எடுத்து பதிவில் போட வேண்டியது,. அந்தப் பதிவு லிங்கை ட்விட்டில் போட வேண்டியதுன்னு ஒரு வட்டம் போடறாங்க ..


வீட்ல அண்ணி ரொம்ப அப்பாவியோ ??

மனம் திறந்து... (மதி) said...

//அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் அருவா #டிவிட்டர் அகெள்ண்ட் க்ரியேட்டட்//...நீங்க ரெஜிஸ்டர் பண்ண உடனே ட்விட்டர் தந்த "confirmation message" சூப்பராவும், புத்திசாலித்தனமாவும் இருக்கே!!!!! Advanced, artificial intelligence based OS?

மனம் திறந்து... (மதி) said...

// http://twitter.com/BloggerDubukku//..."Brand"ஐ மெய்ண்டைன் பண்றீங்க பாருங்க! இது...இது தான் சூப்பர்!

மோகன் குமார் said...

//கத்ரீனா வீட்டில் ஐ.டி. ரெய்டு. ஆமா ஊரக் கொள்ளையடிக்கிறவன விட்ருங்க எல்லோர் மனசையும் கொள்ளையடிக்கிறவங்கள பிடிங்க #வழிசல் தொண்டன்//

:))

சி.பி.செந்தில்குமார் said...

>>>"திவ்யா ஐ லவ் யூ" நம்மூர் பஸ்ஸுல மட்டும் தான் கிறுக்குவாங்கன்னு நினைச்சேன். இங்கே லண்டனிலும் கூட கிறுக்குகிறார்கள் "Emma 14 is pregnant"

haa haa kalakkal

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அரசியல் பண்ணுறத நிப்பாட்டுங்கடா. எங்க ஊர் அண்ணாச்சிய கூட்டிட்டு வந்திருந்தா இதுக்குள்ள பஞ்சாயத்து முடிஞ்சி தீர்ப்பாகியிருக்கும் #tnfisherman
//
சூப்பர் கலக்குறிங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆரம்பிச்சிட்டீங்களா அங்க எழுதியதை இங்கே காப்பி செய்வதை ..அதானே, டிவிட்டை ஆரம்பித்தவுடன் எல்லாரும் செய்வதை எப்படி செய்யாமல் விடலாம்...

இலவசம் said...

அண்ணே,

முதலில் ட்விட்டரில் இந்த மாதிரி முழ நீளப் பெயர் எல்லாம் கூடாது. 140 எழுத்தில் நூத்திமுப்பத்துஎட்டேகால் எழுத்துகளை உம்ம பெயரே எடுத்துக்கிட்டா அப்புறம் மேட்டர் எங்க வரும்? நாலைஞ்சு எழுத்துகளில் வர மாதிரி ஹேண்டிலை மாத்தும்.

ஐய்க்கியம் - இப்படி எல்லாம் எழுதிதான் பாரதியாரின் கனவை நனவாக்கணும்ன்னு அவசியம் இல்லை (தமிழினிமெல்லச்சாகும்)

RVS said...

அங்கேயும் ரவுசா...
ட்விட்டரில் பருந்தா? (இப்படி இருக்கணும் டவிட்டு) ;-);-)

அப்பாவி தங்கமணி said...

இது duplicate கூட இல்ல triplicane ... ச்சே... triplicate .... ஒரு வாட்டி FBல, அப்புறம் ட்விட்டர்ல, இப்ப இங்க.... ரெம்ப அநியாயம்... தலைவர் ரசிகர் இப்படி செய்யலாமா? ஐயகோ.... :)
(எனக்கு ட்விட்டர்ல அக்கௌன்ட் இல்லீங்கோ... இருக்கற ஈமெயில் செக் பண்ணவே ஆபீஸ் டைம் பத்தலை...:)))

மனம் திறந்து... (மதி) said...

அவரே ஒத்துக்கிட்டாரே! Blogலே அரைத்த மாவு, FBலே இட்லி, Twitterலே தோசை, மீண்டும் இங்கே ஊத்தப்பம்...சரி...சரி...புளிப்பைக் குறைக்க "ஆனியன்" ஊத்தப்பம்னு வேணா வச்சுக்கோங்க! ஊத்தப்பம் விரும்பி ஆர்டர் பண்றவங்க எவ்ளோ பேர் இருக்காங்களே...:)))

Paavai said...

announce pannitteenga illa.. podhum, ennai madiri pazhamaivadigallukkaga seekrama adhutha BLOG post podunga .. twitterkkellam ennala vara mudiyathunnu thazhmaiyudan sollikkaren ..:):)

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாரதி என்ன தமிழினி மெல்லச்சாகும்னா கனவு கண்டார்.. :(

\\மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான்//

யாரோ சொன்னதை நடத்திடாதீர்கள் என்றுதானே கேட்டுக்கொண்டார்?

Poetry said...

Nallave irukku! Aanalum unga blogil ulla muzhu neela hasyam romba nalla irukku:)

Subhashini said...

நானும் வந்து ஒரு கும்பிடு போட்டுட்டு போய்க்கிறேன் பா. நீ ட்விட்டர் லையும் கலக்கு தலை
அன்புடன்
சுபா

Dubukku said...

பொற்கொடி - ஹி ஹி தெகிரியம் ரத்ததுல ஊறி இருக்கு :) ஏங்க ஒரு பதிவு தாங்க திரும்ப அம்மபாட்டுக்கு வந்துடுவேன் :)

பத்மநாபன் - அப்பீடீங்கிறீங்க??...:))) உங்க வாக்கு பலிக்கட்டும் :P அண்ணாச்சி...எழுத்துப் பிழை - :)) நீங்க வேற..என்ன பிழைன்னு அப்படியே சொல்லியிருக்கலாம்ல...

பிலாசபி - அடடா..தெரிஞ்சிருந்தா போட்டிருக்க மாட்டேன்...இருந்தாலும் என்ன நீங்களும் இணைக்கனும்னா இணைச்சிக்கோங்க

தெய்வசுகந்தி - முதல் பின்னூட்டம்ன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி ஹை

எல்.கே - நான் பாருஙக் நல்ல பிள்ளை. நாலாம் பிறையிலேயே நிப்பாட்டிட்டேன். இத அஙக் இணைக்கல :)) உங்க தொடர் பதிவுகள் கணக்கு பாக்கியிருக்கு முழுசா படிக்கணும்ன்னு ரொம்ப நாள் பெண்டிங் சீக்கிரம் பேக்லாக்க முடிக்கிறேன்

மதி - ஆமா அதான் எனக்கும் ஆச்சரியம் :P ப்ராண்டு - டுபுக்குன்னு தான் எடுக்கலாம்ன்னு பார்த்தேன் வடை போச்சு

மோகன்குமார் - உணமைதானுங்களே :))

செந்தில்குமார் - மிக்க நன்றி

சதீஷ்குமார் - மிக்க நன்றி ஹை

முத்துலெட்ச்சுமி - யெக்கா ஏதோ ஒரு தரம்...இனிமே பண்ணமாட்டேன் நான் க்யாரண்ட்டி :P

இலவசம் - அண்ணாச்சி நீங்க தான் ட்விட்டர்ல தாதா ஒத்துக்குறேன் அதுக்காக இப்படி சின்னப்பிள்ளைய மிரட்டப்பிடாது. நீங்க ப்ளாக்கு வந்தப்போ நாங்க இப்படியா மிரட்டினோம் :P. மெல்ல் சாகடிக்கிறதுல்லாம் நம்ம பாலிசிலயே கிடையாது இன்ஸ்டன்ட் டெத் தான் :)))

ஆர்வியெஸ் - அண்ணே ரவுசெல்லாம் பெரிய வார்த்தை நான் சின்னப் புள்ளை கத்துக்கிறேன் உங்க கிட்டேர்ந்து :)

அப்பாவி - சரி சரி சில பேர் பேஸ்புக்குல கமெண்ட்ல மற்றும் இன்டைரக்ட்டா இத்தாலி இத்தாலின்னு ப்ரமோட் பண்ணுறாங்களே அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க :P

பாவை - ஹா ஹா வந்துடறேங்க...டிவிட்டர்லாம் ஆகாது எனக்கு வளவளன்னு பேசாட்டா பேசின மாதிரியே இல்ல :P

இராஜராஜேஸ்வரி - வாங்க முதல் பின்னூட்டம்ன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி ஹை

முத்துலெட்ச்சுமி - பாருங்கக்கா...ஆள் இல்லைன்னு இலவசம் ரொம்பத் தான் சின்னப்புள்ளைய மிரட்டுறாரு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


பொயட்ரீ - மிக்க நன்றி ஹீ ஹீ ப்ளாக் இல்லாமல் என்னால இருக்க முடியாதுங்கோவ் :))

சுபாஷினி - பெரியவங்க நீங்க கும்பிடு போடலாம...நான்ந் தேன் கும்பிடு.

The Believer said...

I like the last two..sooper...btw naama rendu perum distance friend..distance relative maari :)

Anonymous said...

அட டுபுக்கு. கொன்னுட்டியே கொழந்த, TNfisherman ராவுக்கு சொல்றது சூப்பர். அந்த அம்மாவும் sm கிருஷ்ணாவும் படிச்சாங்கன்ன உங்களுக்கு எதிரா ஒரு பிரஸ் மீட்டையே நடத்திருவாங்க

Post a Comment

Related Posts