சைக்காலஜிக்கல் திரில்லர்/ ட்ராமா என்பது கொஞ்சம் ட்ரிக்கியான ஜானர். சில விஷயங்களை ரொம்பவே ஜீரணிக்க முடியாத அளவுக்கு ராவாக காட்டுவார்கள். அத்தோடு நேர்கோடு புரிதல் இல்லமல் பார்ப்பவரை குழப்பும் ஒரு ஸ்க்ரீன் ப்ளே இருக்கும். அதனாலே இந்த மாதிரி ஜானர் படங்கள் அனேகமாய் ஜனரஞ்சகமாக இருக்காது. ஆளவந்தான் படத்தில் கமல் இந்த விஷயத்தை இலாவகமாக கையாண்டிருப்பார் ஆனால் அந்த படத்தில் நிறைய காம்ப்ரமைஸும் இருக்கும்.
சமீபத்தில் வந்த ப்ளாக் ஸ்வான் ட்ரைலர் பார்த்த போதே வசீகரமாய் இருந்தது. அத்தோடு படத்தின் கையாளப் பட்டிருந்த பாலே நடன பிண்ணனியும் ஒரு வரிக் கதையும் பயங்கர ஆர்வத்தை தூண்டியது. படம் துளியும் ஏமாற்றவில்லை. உச்ச ஸ்தாயியில் ஜன்னி வந்த மாதிரி நடுங்கிக் கொண்டு பாடும் ஓபராவிற்க்கும் எனக்கும் ரொம்ப தூரம். அதே போல் பாலே நடனத்தின் அருகாமையையும் அண்டியதில்லை. இந்த படத்தில் பாலே பற்றி டெக்னிகலாய் தாக்கியிருப்பார்களோ என்று ஒரு பீதி இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து பத்து நிமிஷத்திலேயே இது இந்தோளமா, யமன் கல்யாணியா என்று ராகம் பற்றி தெரியாமலே அனுபவிக்க முடியும் கச்சேரி என்று பிடித்துப் போய்விடுகிறது.
படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் அனுபவத்திற்கு பாதகமில்லை என்பதால் சில விஷயங்களை விவரித்திருக்கிறேன். கதை பற்றி தெரிய விருப்பமில்லாதவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வது சொஸ்தம்.
ஒரு வரிக் கதையாக சொல்ல வேண்டும் என்றால் நியூயார்க்கில் இருக்கும் ஒரு கம்பெனியின் பாலே நடன ஷோவுக்கு கதாநாயகி பாத்திரத்திற்கு படத்தின் நாயகி முயற்சித்து வெற்றி பெறுகிறார். நல்லதையும் கெட்டததையும் ட்யூயல் பெர்சனாலிட்டியாய் பிரதிபலிக்க வேண்டிய ஒரு பாலே பாத்திரம். இதில் நல்லதை பிரதிபலிக்கும் வொயிட் ஸ்வானின் முகபாவம், அங்க மற்றும் நடன அசைவுகளும் பாவங்கள் சுளுவில் வர, தன்னுடைய மன இறுக்கம், கூச்சம், பாலியல் ரீதியான இறுக்கங்கள் காரணமாக கெட்டதை பிரதிபலிக்க வேண்டிய ப்ளாக் ஸ்வானின் பாத்திரததை செய்ய திணறுகிறார் நாயகி. இதற்கு நடுவில் அவருடைய அம்மாவின் கட்டுப்பாடு வேறு. கருத்தரித்ததின் காரணமாக தன்னுடைய பாலே கனவுகளை மூட்டை கட்டி வைத்த தாயின் பாலே தாகம் மகளின் மீது கட்டுப்பாடுகளாய் விடிகிறது. இதற்கு நடுவில் பளாக் ஸ்வான் பகுதியை சரிவர செய்ய முடியாததினால் வாய்ப்பு பறி போய்விடும் அபாயம். இவ்வளவும் சேர்ந்து அவருக்கே எதிரியாய் மனபிறழ்தலாய் மாறுகிறது.
கதாநாயகி நடாலி போர்ட்மேன் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். லட்டு மாதிரி ஒரு சான்ஸ். கிடைத்த சான்ஸை துளி கூட வேஸ்ட் செய்யாமல் அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பு நம்மை மெய்மறந்து போகச் செய்கின்றது அந்த அளவிற்கு படம் நெடுக இவரின் ஆக்கிரமிப்பு. தன் அம்மாவை அவர் எதிர்க்கும் இடமாகட்டும், பாலியல் ரீதியாய் அவர் தனது சுய கட்டுப்பாடை உடைக்க முடியாமல் அவதிப் படும் இடமாகட்டும் அவ்வளவு கனகச்சிதமாய் நடித்திருக்கிறார். இந்த வருட ஆஸ்கர் இவருக்குத் தான் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சிறந்த நடிகைக்கான பாஃப்டா அவார்ட் அல்ரெடி அவருக்கு கிடைத்தாயிற்று.
இயக்குனர் டாரன் அர்னோஃவ்க்ஸ்கி. இந்த மாதிரி ஒரு மனரீதியான போராட்டத்தை மிக அழகாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லுவது மிகக் கடினம். மனப் போராட்டத்தை சுவாரசியம் சிறிதும் குறையாமல் கதையில் நகர்த்தியிருக்கிறார். . பல இடங்களில் இவர் காட்சியமைப்புகளிலேயே பல விஷயங்களை நம்மையுமறியாமல் மனதில் புகுத்தியுள்ளார். உதாரணமாக வொயிட் ஸ்வான் பகுதியில் இருக்கும் காட்சியமைப்பும், ப்ளாக் ஸ்வான் அமைப்பில் இருக்கும் காட்சியமைப்பும் நம்மையே அறியாமல் நல்லதையும் கெட்டதையும் மனதில் புகுத்தும். அந்த காட்சியமைபுகளில் உபயோகப்படுத்தியிருக்கும் வண்ணங்கள், கேமிரா கோணங்கள், கலர் க்ரேடிங்குகள் அனைத்தும் காட்சியில் சொல்ல வந்ததை சொல்லாமல் நம்மை உணரச்செய்யும்.
கேமிரா இரண்டு இடங்களில் என்னை அசத்தியது. கதாநாயகி தோழியுடன் அம்மாவை மீறி பப்புக்கு சென்று குடித்துவிட்டு போதையின் உச்சத்தில் புதிதாய் அறிமுகமாகும் நபருடன் ஈடுபட்டு , தீடீரென்று அவரின் உள்ளுணர்வு அவரை உசுப்பி சுயநினைவுக்கு வருவதை மிக அற்புதமாய் காட்சிப் படுத்தியிருப்பார். அதே போல் க்ளமாக்ஸில் அவர் ப்ளாக் ஸ்வானாக மாறும் காட்சியையும் மிக அற்புதமாய் காட்டியிருப்பார். படம் முடியும் போது கைத்தட்டுமளவிற்கு நம்மை ஒன்றிப் போகச்செய்வதில் சினிமேட்டோகிராபி மிக முக்கிய பங்களித்ததாய் நான் உணர்ந்தேன்.
டாரன் அர்னோஃவ்க்ஸ்கியின் முந்தைய படங்களில் "Pi" மட்டுமே பார்த்திருக்கிறேன். ப்ளாக் ஸ்வான் இவரின "Requiem for a Dream" படத்தை பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
நிற்க இந்தப் படம் குழந்தைகளுடன் போவதற்கு எதுவானது அல்ல. பாலியல் உணர்வை தூண்டாத் பல பாலியல் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அத்தோடு ரத்தத்தைப் பார்த்தாலே உறைந்து போகக்கூடியவர்களுக்கும் இந்தப் படம் கொஞ்சம் ஷாக்கிங்காய் இருக்கலாம். இவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு எந்த விதமான தொந்தரவோ நச்சரிப்போ இல்லாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். சினிமாவை ரசித்துப் பார்க்கும் ஓவ்வொரு ரசிகருக்கும் இந்த படம் ஹைலி ரெக்கமெண்டட்.