Wednesday, June 02, 2010

டைம் மேனேஜ்மென்ட்

கொஞ்சம் தொழில் முறை நிமித்தமாக பல்வேறு வேலைகள் மென்னியைப் பிடித்துவிட்டது. "எப்படீங்க வேலைக்கும் போய்வந்துகிட்டு அத்தோட இந்த சினிமா குறும்படம்ன்னு எதையுமே எடுக்காம எல்லாத்தையும் எடுத்த மாதிரி ஃபிலிம் காட்டிக்கிட்டு ...இதுல குடும்பம், குழந்தை குட்டின்னு எப்படீங்க எல்லாத்தையும் மேனேஜ் பண்றீங்க..?"ன்னு ஒரு நண்பர் சமீபத்தில் ரொம்பவே நெஞ்சை நக்கிக்கொண்டிருந்தார்.

"யோவ் குடும்பமும் குழந்தைகளும் மட்டும் தான்யா...குட்டியெல்லாம் (இதுவரைக்கும்) கிடையாது...நீ பாட்டுக்கு தேர இழுத்து தெருவில விட்டுடாதய்யா... எல்லாம் டைம் மேனேஜ்மென்ட் மகிமை..இன்னிக்கு டைம் மேனேஜ்மென்ட் தான் எல்லாமே....அந்த டெக்னிக்க மட்டும் கரெக்ட்டா கத்துக்கிட்டோம்ன்னு வை...அப்புறம் சில பெரிய மனுஷங்க மாதிரி நாமளும் அதைப் பத்தி நாலு புஸ்தகம் எழுதலாம்...அப்புறம் மல்டி டாஸ்கிங்க்லாம் சும்மா இடது கையால அசால்ட்டா பண்ணலாம்ன்னு எடுத்து விட்டேன். நண்பர் கொஞ்சம் அப்ராணி, முதல் பந்திலேயே ஹாட்ரிக்.

ஷேக்ஸ்பியர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா...."Better three hours too soon, than one minute too late". அதாவது ஒரு நிமிஷம் லேட்டா போறதுன்னு ஆயிட்டா மக்கா மசுரே போச்சு, மூனு மணி நேரமே லேட்டா போகலாம்..சட்டத்துல இடமிருக்குன்னு. நமக்கு ஒரு நாளைக்கு முடிக்க வேண்டிய காரியங்கள் ஏகப்பட்டது இருக்கும் அதை நினைத்தாலே மலைப்பாக இருக்கும். இந்த அயற்சியே ஒரு வேலையும் செய்யவிடாது. இதற்கு டைம் மேனேஜ்மென்ட்டில் தீர்வு இருக்கிறது. முதலில் எல்லா வேலைகளையும் மனதில் ப்ளான் பண்ணவேண்டும். வெறும்ன ப்ளான் பண்ணினா போதாது. ஒரு நாப்பது பக்க டைரியில உயில் எழுதற மாதிரி ரெண்டு பக்கமும் டீட்டெயில்டா எழுதி வைக்கனும். கான்பரன்ஸ் கால் பண்றதுலேர்ந்து கக்கூஸ் கால் கழுவறவரைக்கும் எல்லாத்தையும் நேரம் நிமிஷம்ன்னு காலண்டர் போடனும். ஒன்னு ரெண்டுன்னு அவ்வையார் மாதிரி வரிசைப் படுத்தி எல்லா டாஸ்க்குக்கும் ப்ரியாரிட்டி அசைன் பண்ணனும்.

இது எல்லாத்தையும் விட டைம் மேனேஜ்மென்ட்டில் முக்கியமான் ஒன்னு மேலே சொன்ன படி டைரியில் டெய்லி காலண்டர் போட்டா மட்டும் பத்தாது, அதை நாலு பேர் கண்ணுல படற மாதிரி, ஸ்ட்ராடிஜிக்கான ஒரு இடத்துல பெப்பரப்பேன்னு திறந்துவைச்சிருக்கனும். நோட்டு காத்துல மூடிடக்கூடாதுன்னு ஒரு பால்பாயிண்ட் பேனாவ நடுவில சொருகி அண்டக் குடுக்கனும். பக்கத்துலயே ஒரு ஏ4 பேப்பர ரெண்டா மடிச்சு, உள்ள தாயக்கட்டை வரைஞ்சு பொழுது போகாத போது யாரும் பார்க்கமுடியாத மாதிரி நாடில பேனாவ தட்டி யோசிச்சு யோசிச்சு விளையாடனும்.

எழுதி வைச்ச டாஸ்கில் ஒரு டாஸ்க் இன்றைக்கு டாஸ்க் லிஸ்டில் ஒரு டிக்காவது போடனும்ன்னு எழுதி வேண்டும். அதை பூர்த்தி செய்கிற மாதிரி அந்த டாஸ்க்கு நேரா ஒரு டிக்கு போட வேண்டும்.  "செய் அல்லது செத்து மடி"ங்கிற மாதிரியான டைம் மேனேஜ்மென்ட் வாசங்களை ப்ளோ அப் செய்து வீட்டு ரூமில ஆணி பொத்தல் இருக்கிற இடத்துலெல்லாம் மறைக்கிற மாதிரி ஒட்டனும்.

அன்னிக்கு நாலு மணி ஆனவுடனே எப்படியும் எழுதிவைச்சதுல ஒரு வேலையும் செஞ்சிருக்க மாட்டோம், அதனால அடுத்த நாள் தேதி போட்டு முந்தின நாள் டாஸ்க் எல்லாத்தையும் காப்பி பண்ணி அலெகேட் பண்ணனும். ஒரு வேளை டாஸ்க் லிஸ்ட் நீளமாயிருந்தா முத நாள் தேதியிட்ட இடத்துல அத அடிச்சிட்டு அடுத்த நாள் தேதி போட்டுக்கனும்.

எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான மேட்டர்...நீங்க விடற அல்ப்பரய பார்த்துட்டு யாராவது ஒரு விக்கெட் நீங்க பந்து போடறதுக்கு முன்னாடியே உங்க கிட்ட வந்து "எப்படீங்க இதெல்லாம்..."ன்னு கேட்கும் அப்போ நீங்களும் ரெண்டாவது பத்தியிலேர்ந்து அதுக்கு தெளிவா ஆரம்பிக்கனும்.

அன்புடையீர்,
நிற்க. நிகழும் விக்ருதி ஆண்டில் ஏப்ரல் பதினெட்டாம் திகதியிலிருந்து ஜூன் ஒன்றாம் திகதி வரையில் எனக்கு ப்ளாக்கில் கண்டம், பின்னூட்டம் பக்கம் கூட போகக் கூடாது என்று ஆஸ்தான ஜோதிடர் கூறிவிட்ட படியால் மட்டுமே இங்கு வரவில்லை. மற்றபடி ப்ளாக் எழுதுவது தான் எனது அன்றாட டாஸ்க் லிஸ்ட்டில் டாப்பிலிருக்கிறது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

The time you enjoy wasting is not wasted time.
- Bertrand Russell

38 comments:

Mahesh said...

me the first !!! மத்ததெல்லாம் அப்பாலிக்கா....

Unknown said...

சின்ன வாத்தியாரே...நான் தான் முதல்ல....

பத்மநாபன் said...

//மற்றபடி ப்ளாக் எழுதுவது தான் எனது அன்றாட டாஸ்க் லிஸ்ட்டில் டாப்பிலிருக்கிறது// இதுக்கு மட்டும் நன்றி சொல்லிட்டு ...அப்புறம் வ்ருகிறேன்.

பத்மநாபன் said...

//"யோவ் குடும்பமும் குழந்தைகளும் மட்டும் தான்யா...குட்டியெல்லாம் (இதுவரைக்கும்) கிடையாது //தங்கமணிடுபுக் அவர்கள் கட்டிவைக்க வடக்கயிறு தயார் செய்து வைத்து விட்டார்கள்...

பிளானிங் அலப்பறை அட்டகாசம்.. இந்த அலப்பறையை இங்க வெள்ளகாரனுங்க செய்வானுங்க ..நான் எப்படியா இப்படின்னு உசுப்பு ஏத்தறது உண்டு .குஷி ஆய்டுவாங்க.. .என்னை பொறுத்தவரை நான் போடற பிளான் எல்லாம் வடிவேல் சொல்ற ப்லா ..ன் மாதிரி ஆகிவிடும்

வாத்தியார் டைரி குறிப்புகள் எழுதுவது பற்றி எழுதிய கட்டுரை ஒன்று ஞாபகம் வந்தது ...முதல் நாளில் அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக குறைந்து .....ஆறாம் நாளில் '' இன்று அடை நன்றாக இருந்தது '' வரி மட்டும் மிஞ்சும் அப்புறம் அந்த வருஷ டைரி காலியாகவே இருக்கும் ....என்று சொல்லிருப்பார்...

தாமதமாக வந்தாலும் அடிச்சு குலுங்க வச்சுட்டிங்க ....

Ananya Mahadevan said...

எப்புடி வாஜ்யாரே, இதெல்லாம் ஒரு டாப்பிக்கி, இதுக்கெல்லாம் ஒரு போஷ்டுன்னு போட்டு தேத்துறே? படா ஸோக்காகீதுபா! அக்காங்.. ஜூபரு!

Kavitha said...

Time Management....Eppidi Sir, Uk layum appadithana? Naanga inga US la dhan appadi kuppai kottaromnnu ninaichen!

ராம்ஜி_யாஹூ said...

wonderful as always.

Expecting few more posts in this line, regarding Goal fixing, corporate motto statement, ISO audits, Green belt, 6 sighmaas....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

"Better three hours too soon, than one minute too late". அதாவது ஒரு நிமிஷம் லேட்டா போறதுன்னு ஆயிட்டா மக்கா மசுரே போச்சு, மூனு மணி நேரமே லேட்டா போகலாம்..சட்டத்துல இடமிருக்குன்னு.
//

தெய்வம் சார் நீங்க....இது தெரியாம எவ்வளவு வருஷத்தை வேஸ்ட் பண்ணீட்டேன்..ஹா.ஹா

M.G.ரவிக்குமார்™..., said...

தல,பூக்காரியைப் படிச்சீங்களா?....ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்களே?...

balaji s rajan said...

Thalaiva,

Ungalukku solli kudukanuma! yengada namba phonela oru mani neram mookai podarathai pathi yethavathu kindaladikka poreengannu padichane... nalla kaalam... Super... O... super... Pesum podhu romba serious ah.. pesareenga..athu yeppadi yezhudhum podhu humour vilaayaduthu...

அறிவிலி said...

//Mahesh said...
me the first !!! மத்ததெல்லாம் அப்பாலிக்கா.... //

அய்யோ.. அய்யோ... உங்க ம்யூசிக் டைரெக்டருக்கு சந்தோஷத்த பாருங்களேன்.

:-))))

மாயாவி said...

//...."Better three hours too soon, than one minute too late". அதாவது ஒரு நிமிஷம் லேட்டா போறதுன்னு ஆயிட்டா மக்கா மசுரே போச்சு, மூனு மணி நேரமே லேட்டா போகலாம்..//

அடடா, இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது தெரியாமல் போச்சே!!

Sowmya said...

Hey...time management session poitu vantha effects vechu oru post..bale..Nadakattum..
Peparape nu thiranthu vecha mattum pothathu, ethu senchom seiyala nu tick senchu namma usharaa keeroma nu kooda somberithanam illamalum paathukanumaakum :D

Karuthu kanthasamikku oru O ...

Anonymous said...

people honoured you unnal mudiyum but you are not even able to clean your toilet but your wife dont tell this to your wife. she get get mad at me bcase she is dubukku disciple.

Karthik said...

எல்லாம் ஓகே. இப்படி ஷேக்ஸ்பியரை எல்லாம் கோட் பண்ணி மிரட்டுறதும் ஒரு ஸ்ட்ராடஜி தானா? :))))

Anonymous said...

romba naal kalichu oru post.. wow!! grt!! i was longin for an update in your blog!!

sriram said...

இதுக்கு போஸ்ட் போடாமலே இருந்திருக்கலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ILA (a) இளா said...

//இதுக்கு போஸ்ட் போடாமலே இருந்திருக்கலாம் //
Time Waste பண்ணாம பின்னூட்டம் படிச்சே பின்னூட்டம் போட்டாச்சு

Anonymous said...

The time you enjoy wasting is not wasted time.
- Bertrand Russell - ithuku enn Bertrand Russell. antha asthana jothidar thangamani thane

Ambika Rajesh said...

Dear Dubukku

Priority job,priority patient innu on call mudinjju computera open panni paditha marubadiyum time managemanta
Naan siritha sirippu tension sister alison kku puriyavillai. Yennai oru madhiri look viduthu.On call bleepay vangina vellakkara doctorkkum puriyavillai. Aha vellaikarran yedathil vandhu vellaikaranai thiru thiru mizhikka pannivittaen.
Ambika

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவு... (அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க...)

sriram said...

//ILA(@)இளா said...
//இதுக்கு போஸ்ட் போடாமலே இருந்திருக்கலாம் //
Time Waste பண்ணாம பின்னூட்டம் படிச்சே பின்னூட்டம் போட்டாச்சு//

ஏனுங்க இளா.. டுபுக்கார் ஏற்கனவே என் மேல காண்டுல இருக்காரு, நீங்க வேற ஏங்க எண்ணெய ஊத்தறீங்க? வியாபாரத்தை நான் கெடுக்கறேன்னு என்னய திட்டு வாங்க வைக்கறதுல என்ன சந்தோஷமோ உங்களுக்கு???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

?

Anonymous said...

இது என்ன வச வச என்று ஒரு இடுகை.வழக்கமான டுபுக்கார் பாணி இல்லையே? படிக்கும்போது தன்னிலை மறந்து சிரிக்கும் போது பக்கத்தில் இருப்பவர் இவன் என்ன பயித்தியமா என்று திகைக்க வேண்டாமா?

தக்குடு said...

//வியாபாரத்தை நான் கெடுக்கறேன்னு என்னய திட்டு வாங்க வைக்கறதுல என்ன சந்தோஷமோ உங்களுக்கு???

// பாஸ்டன் நாட்டாமை, உதவிக்கு நான் வேணுன்னா வரட்டுமா??

என்றும் வம்புடன்,
தக்குடு

உண்மைத்தமிழன் said...

ஊருக்குள்ளதான் இருக்கீங்களா..?

Porkodi (பொற்கொடி) said...

நான் லாஸ்டா? (இல்லாம போகக் கடவ..)

//அத்தோட இந்த சினிமா குறும்படம்ன்னு எதையுமே எடுக்காம எல்லாத்தையும் எடுத்த மாதிரி ஃபிலிம் காட்டிக்கிட்டு//

அப்ப படம் முடிஞ்சுருச்சு, ரிலீஸுக்கு ரெடிங்கறீங்க? ப்ரீமியருக்கு என்ன தேதின்னு சொல்லிடுங்க, கேலண்டர்ல ப்ளாக் பண்ணிடுறேன்.. :D

//ஊருக்குள்ளதான் இருக்கீங்களா..? //

உ.த அவர்களே, டுபுக்கார் ஏதாவது ஒரு ஊருக்குள்ள இருந்து தானே ஆவணும்?! ஆமா டுபுக்கு எத்தியோப்பியாவுல இருந்து எப்ப திரும்புனீங்க? :P

balutanjore said...

DEAR DUBUKS
ANDHA POOKKARI PATTHI ONNUM SOLLA MAATTENGARELE.
INDHA TIME MANAGEMENT RECESSION ELLAM THEVAIDHANA

BALASUBRAMANYAN VELLORE

Anonymous said...

dubukku sir,
blog ezhutha time illanu vazhakkam pola sollidunga....naanga othukollvom.adukkaga...time management pathiyellam ezhuthi...vendam naan azhudhuven...
nivi.

சக்திவேல் விரு said...

டுபுக்கு அண்ணே வேலை ஏதும் இல்லாம இருக்கும் போது உங்க இடுகை தான் கொஞ்சம் பொழுது போக உதவும். ஆகையால் தொடருந்து புலாகுங்கள்(blogunkal).

T.R.Harihara Sudhan said...

உங்கள் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக அருமை!! உங்க இடுகை பொழுது போக உதவும். ஆகையால் தொடருந்து புலாகுங்கள்
ரெம்ப
நன்றி டுபுக்காகர்...

உங்கள் வாசகன்
ஹரிஹரசுதன்

சக்திவேல் விரு said...

புலாகுங்கள்---அடடே தமிழுக்கு ஒரு புது வார்த்தை கிடைச்சுடுச்சு...!!! போல!!! இனிமேல் எல்லோரும் புலாகினால் என்ன ????

டுபுக்குதாஸன் said...

டுபுக்கு!

படம்ன்னா இதுதான் படம். நீரும் எடுக்கிறீரே!
http://idlyvadai.blogspot.com/2010/06/blog-post_07.html

வால் பையன் said...

அட கொக்கு மக்கு வேலு பையா! அது தமிழ்ல ஏற்கெனவே இருக்கற வார்த்தைதான். ஏதோ நெடிலை குறிலாக்கியிருக்கிறார்! அவ்வளவுதான்!

rivas said...

idha thaan time management'nu solraangala..

Dubukku said...

மகேஷ் - அப்பாலிக்கான்னு அப்படியே அப்பீட்டாகிட்டியே நைனா :))

பத்மநாபன் - வாங்க ...வாத்தியார் சொல்றதுக்கு கேட்கனுமா...சும்மா கலாசுவார் இல்லையா. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

அநன்யா - நீங்க பாராட்டுறீங்களா துப்பறீங்களான்னே தெரியலையே மேடம் :)))

பொயட்ரீ - ஹீ உலகமெங்கும் இப்படித்தான்ங்க நடக்குது...:)))

ராம்ஜி - நன்றி ஹை. ஹீ ஹீ இந்த கார்ப்பரேட் மோட்டோ இருக்கே அது செம சூப்பர் காமெடி இல்ல.

பட்டாபட்டி - தெரிந்துகொண்டமைக்கு கரீக்டா உண்டியல்ல காணிக்கையை செலுத்துவிடவும் :P

நேசன் - நீங்க சொன்ன போது ஒன்னுமே புரியலை..அப்புறம் இன்னும் இரண்டு பேர் கீழே கமெண்ட் போட்ட பிறகு தான் நோண்டிப் பார்த்தால் என்னென்னம்மோ நடந்திருக்கிறது என்று தெரிய வந்தது. நான் ப்ளாக் உலக அப்டேட்ல ரொம்ப மக்குங்க...எல்லாம் ஓசை அடங்கின பிறகு இப்போ அதப் பத்தி கருத்து சொல்லாம இருக்கிறது தான் நல்லது இல்லையா

பாலாஜி - ஹீ ஹீ நீங்க இல்ல சார் அது இன்னும் மூனு விக்கெட் விழுந்தது எனக்கு :))) தப்ப எதுவும் எடுத்துக்காதீங்க சும்மா டமாசு டமாசு

அறிவிலி - நானே அவரு அப்படியே அப்பீட்டேன்னு வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கேன் :(((

மாயாவி - நீங்களும் தெரிந்துகொண்டமைக்கு கரீக்டா உண்டியல்ல காணிக்கையை செலுத்துவிடவும் :P

சௌம்யா - வாங்க நன்றி ஆனா கருத்து கந்தசாமி யாருன்னு சொல்லவே இல்லீயே...நீங்க...ப்ளீஸ் அது யாருங்க

அனானி - என்னம்மோ சொல்லவர்றீங்கன்னு தெரியுது ஆனா என்னன்னு தான் புரியலை. ஆனா டுபுக்கு டிசைப்பிள்ங்கிறது என் வலையுக நண்பிங்க..போதுமா

கார்திக் - அது தான் முக்கியமான ஸ்டராட்டிஜிங்க :))

அனானி - மிக்க நன்றி உங்க கமெண்டுக்கு கீழ் கமெண்டையும் சேர்த்துப் படிக்கவும் :))

ஸ்ரீராம் - உங்க என்றும் அன்புக்கும் மிக்க நன்றி.. வாங்க சார்...சொல்றதையெல்லாம் நீங்க சொல்லிட்டு அப்புறம் டுபுக்கார் என்மேல காண்டா இருக்கார்ன்னு ஊர்ல சொல்லிக்கிட்டு திரியறது...கால காட்டுங்க தெய்வமே :))

இளா - உங்க அன்புக்கும் மிக்க நன்றி

அம்பிகா - மிக்க நன்றி ஹீ நீங்களும் இப்படி சொல்லி தான் டைம் வேஸ்ட் பண்ணுவீங்களா :)))

அப்பாவி தங்கமணி - ஏனுங்கோ உங்களுக்கு கோயமுத்தூர்ங்களா??

அனானி - !!

அனானி2 - வச வச இடுகைக்கு மன்னிக்கவும்...நோ சட்டி நோ அகப்பை...வில் ட்ரை அகெய்ன் :)) நிஜமான கரினத்துடன் நீங்கள் இட்ட கமெண்டிற்க்கு உண்மையாகவே கோடி நன்றி.

தக்குடு - கமெண்டு போட்டா மட்டும் தான் கும்மி அலொவ்ட் இல்லாட்டா பெனாலிட்டி

உண்மைத்தமிழன் - அண்ணாச்சி ஆமா ஊர்ல தான் இருக்கேன் ஆனா ப்ளாக் பக்கம் தான் வரவே இல்லை. எப்படி இருக்கீங்க

பொற்கொடி - ஹீரோயினி இல்லாம படமா...என்ன விளையாடுறீங்களா...இதோ வந்துகிட்டே இருக்கேன்

பாலு - நேசனுக்கு சொன்ன பதில் டான் உங்களுக்கும் பொருத்தருள்க
நீங்க சொன்ன போது ஒன்னுமே புரியலை..அப்புறம் இன்னும் இரண்டு பேர் கீழே கமெண்ட் போட்ட பிறகு தான் நோண்டிப் பார்த்தால் என்னென்னம்மோ நடந்திருக்கிறது என்று தெரிய வந்தது. நான் ப்ளாக் உலக அப்டேட்ல ரொம்ப மக்குங்க...எல்லாம் ஓசை அடங்கின பிறகு இப்போ அதப் பத்தி கருத்து சொல்லாம இருக்கிறது தான் நல்லது இல்லையா

நிவி - அவ்வளவு கொடுமையாய் இருந்தது என்று சுட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி

வேலுபையன் - நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாய் ப்ளாகுகிறேன்

ஹரிஹரசுதன் - மிக்க நன்றி . வேர்கடலை சுத்தி தரும்பேப்பர் மாதிரி இந்தப் பக்கம் நிறைய பேருக்கு பொழுது போக உதவுவது பற்றி மிக்க பெருமை கொள்கிறேன் (நிஜமாவே)

டுபுக்குதாஸன் - இத நிஜப் பெயர்லயே சொல்லலாம். ஆஹா நான் இது வரைகும் படமெடுத்டேன்னு யாரோ உங்க கிட்ட கதகட்டி விட்டிருக்காங்க...நான் இனிமே தான் எடுக்கனும். ஆனா நீங்க குடுத்த அந்த படம் பார்த்தேன் நல்லா இருந்தது, மிக்க நன்றி.

ரிவாஸ் - ஆமா என்னை மாதிரி நிறைய பேர் இப்படித் தான் தப்பு தப்பாய் சொல்றாங்க

Sowmya Gopal said...

late vandha uyir poidum oorla naan irukken (Germany), inga time management pathi pesavaum maatanga, kekavum maatanga, ana Rajini madhri vara vendiya timela correcta vandhu nammala torture pannuvanga (oru ara manneram extra thoonga vidama !)

இராமச்சந்திரன் said...

கலக்கல் குரு....காமெடி படங்களில் ஸ்ரீதர் முடிச்சு போட்டு தக்க சமயத்தில் அவரே அதை அவிழ்ப்பார்...அதே போல... எதை வைத்து அவருக்கு நீங்க ஸ்நூக்கர்/பில்லியர்ட்ஸ்/பூல் விளையாடுவீங்கன்னு தெரியும் என்று யோசித்தேன்... பின்னர் அதற்க்கு நீங்களே விடை வித்தியாசமாக சொல்லியிருந்தீர்கள்.... /***** நான் பலூன் எடுக்க பயன்படுத்திய குச்சியை தான் மாம க்யூ என்றழைக்கிறார் *****/

இந்த விளையாட்டு பெரிய கம்ப சூத்திரம் ஒன்றும் இல்லை...விதிகள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்...மற்றபடி கேரம்போர்ட் யுக்திதான்...நீங்கள் கேரம் நன்றாக விளையாடுவீர்களானால்...இதை ஒரு மாதத்தில் தவறின்றி விளையாட படித்து விடலாம்.

யூகே - யூ.எஸ்.ஏ அருஞ்சொற்ப்பொருள்
ஒன் பவுண்ட் ஷாப் = ஒன் டாலர் ஷாப்
கார் பூட் சேல் - கராஜ் சேல்

நிற்க்க...சாரி கொஞ்ச மாதமாக டச்சில் இல்லை மன்னிக்கவும்...ஒரு வார இறுதியில் தொலைபேசுகிறேன்.

Post a Comment

Related Posts