Sunday, August 02, 2009

சுவாரஸ்ய பதிவர்கள்

முதலில் இந்த விருது பட்டர்ப்ளை அவார்ட் என்று ஒரு வருடத்திற்கு (போன வருஷம் தானே?) முன் ஒரு ரவுண்டு வந்தது. அப்போது Boo மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவரிடமிருந்தும் இதைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. (இருவரும் என்னை மன்னிக்கவும்...சாரி அப்போது என்னால் அதை தொடரமுடியவில்லை) இந்த முறை இன்ட்ரெஸ்டிங் ப்ளாக் என்ற வேர்ஷனில் ராப், வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரிடமிருந்து விருது பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. விருதை வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. விதிமுறைப்படி நானும் எனக்குப் பிடிக்கும் சில ப்ளாக்குகளுக்கு இதைக் குடுக்கவேண்டும்.

அதற்க்கு முன்னால் இதை ஒரு அட்டகாசமான சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டும் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கே நான் எழுதுவதை பாராட்டி ஈமெயிலிலும், பின்னூட்டத்திலும் மிக சிரமம் மேற்கொண்டு நீங்கள் எல்லாரும் நிறைய ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை. இது என் மனதில் நீண்ட நாளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது செய்யவேண்டாம் என்ற நோக்கத்தோடு நான் செய்யவில்லை. ஆனால் தற்போது சில நாட்களாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ப்ளாக்குகளுக்குப் போய் பின்னூட்டம் போட முயற்சித்து வருகிறேன். முதலில் இந்த விருதுக்கு முற்றிலும் புதிய ப்ளாக்குகளாய் அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது கொஞ்ச காலமாய் ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியவில்லை. (செந்தழல் ரவி இந்த அவார்ட்டையே ஏதோ தமிழ் ப்ளாக் உலகில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையை தீர்பதற்குத் தான் ஆரம்பித்தார் என்று படித்தேன்...என்ன பிரச்சினை என்று கூட தெரியாத அளவில் தான் நான் ப்ளாக் படிக்கும் லட்சணம்). தற்போதைய தமிழ் ப்ளாக் இருக்கும் எண்ணிக்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை கதையாகி இந்தத் பதிவு ரொம்ப லேட்டாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். அத்தோடு இந்த விருது சுற்றி வரும் வேகத்தைப் பார்த்தால் நான் குடுப்பதற்க்குள் ஆட்டமே முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தெரிந்த, படித்த பிடித்த சில பதிவர்களையே நானும் லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.

சுவாரஸ்சியம் என்பது தனிப்பட்ட விருபத்தைச் சார்ந்தது. என்னைப் பொறுத்த வரையில் போட்டிருக்கும் பதிவு போரடிக்காமல் கடைசி மட்டும் படிக்க வைத்து சில சமயங்களில் பின்னூட்டத்தையும் படிக்க வைக்கும் பதிவுகள் இந்த வகையில் சார்ந்தது. இதில் தொடர்ச்சியாய் நிறைய பதிவர்கள் லெவல் காட்டி வருகிறார்கள். எனக்கு முகம் தெரிந்த நட்பு வட்டத்தை இந்த விருதுகளிலிருந்து எடுத்துவிட்டேன். கீழே இருப்பவர்கள் போக இன்னமும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் போட்டால் இது ஒரு மெகா சீரியல் நீள பதிவாக ஆகிவிடும் என்பதால் சுருக்கியுள்ளேன். விடுபட்டவர்கள் தவறாக நினையாதீர்கள்.

(சுட்டிகளின் ஆங்கில அகர வரிசைப் படி)

ஆசிப் அண்ணாச்சி - இவருடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது நவீன பின் தத்துவமாய் சொன்ன காக்கா வடையை சுட்ட கதை. இவருடைய பதிவுகளில் எங்க திருநெல்வேலி தமிழில் இருக்கும் நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும்.

Boo - ஆங்கிலப் பதிவர். இவர் பதிவுகளில் இருக்கும் உயிரோட்டம் அலாதியானது. ரெண்டு சுட்டிகளின் அம்மாவாய் பதியும் பதிவுகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மிக ரசிக்கும் படியாக இருக்கும். இவர் என்னைப் பற்றி முன்பு எழுதியிருப்பதால் நான் மேலும் சொல்லுவதெல்லாம் பதில் மரியாதை செய்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

பிரபு கார்த்திக் - இவர் ஆங்கிலப் பதிவர். சீரியசான பல மேட்டர்களை இவர் எழுதும் பாணி எனக்கு மிக பிடிக்கும். இவருடைய ஹீ ஹீ பதிவுகள் மிக ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஏனோ தற்போது அந்த மாதிரி பதிவுகள் இவரிமிருந்து கொஞ்சம் குறைந்துவிட்டது. நிறைய எழுதுங்க சார் (இத யார் சொல்றதுன்னு வெவஸ்தை இல்லையான்னு நீங்க சொல்றது கேட்கிறது...இருந்தாலும் சொல்லுவோம்ல :))

ஜொள்ளுப்பேட்டை - ஜொள்ளிங்க்ஸின் அத்தாரிட்டியே அண்ணாச்சி தான். ரசிக்கும் படி அழகாக எழுதுவார். என்ன..பதிவுகளில் படங்கள் காரணமாக ஆபிஸில் இவருடைய ப்ளாகை தெகிரியமாய் ஒப்பன் பண்ணமுடியாது...மினிமைஸ் பண்ணி படங்களை கவனமாய் பார்த்த பின் ஒப்பன் செய்துவருகிறேன்.

குந்தவை - இவரின் பதிவுகளில் துள்ளல் நடையில் இழையோடும் நகைச்சுவை கலக்கலாய் இருக்கும். ரங்கமணி கலாய்க்கும் சங்கத்தில் போர்டு மெம்பராய் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளில் கலாய்த்து வருகிறார்.

குசும்பன் - சொல்லவே வேண்டாம்...இவரின் டைமிங் மற்றும் குசும்புகள் கலக்கல் ரகம். மிக ரசிக்கும் பதிவர்களில் ஒருவர். அரசியலிருந்து அன்றாட நிகழ்வுகள் வரை பதியும் அனைத்திலும் நையாண்டி சூப்பராய் இருக்கும்.

நவீன் - எனக்கும் கவிதைக்கும் ரொம்பவே தூரம். விதிவிலக்காய் இவரின் கவிதைகள் மட்டும் படித்துவருகிறேன். எதோ ஒரு பதிவை படித்துவிட்டு தொடர்ந்து படித்துவருகிறேன். பயமுறுத்தாத புரியும் தமிழில் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதிவருகிறார். கவிதைக்கு ஏத்த படங்கள் எங்கிருந்து தான் பிடிக்கிறாரோ மனுஷன். இவர் ப்ளாக் படித்த பின் தான் என்க்கு ஒரு ஞானோதயம் வந்தது. காதல் கவிதைகளுக்கு போடும் படியாக சினிமா தவிர்த்த இந்திய புகைப்படங்களே அவ்வளவாக இல்லவே இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் என்னம்மோ பினாத்திக் கொண்டு வறட்சியாய் ஆக்கிவிட்டோமோ? இப்ப புரியுது தலைவர் குஞ்சுமோன் ஏன் பஸ்ஸ்டாப் சீனில் கூட வெள்ளைக்காரனை வைத்து படம் பிடித்தார் என்று ஹூம்

உருப்படாதது - நாரயணின் எழுத்து நடை வசீகரமானது. புதுப்பேட்டை சினிமா சமயத்தில் நார்த் மெட்ராஸ் நிழலுலகம் பற்றி இவர் எழுதிய பதிவுகள் அட்டகாசமானவை. புதுப்பேட்டை சினிமாவை விட அவை மிக சுவாரஸ்யமாக இருந்ததாக எனக்குப் பட்டது.

வெட்டிப்பயல் - ஐ.டி கம்பெனிகளில் அன்னாரின் பதிவுகள் மிகப் பிரபலம். சுவாரஸ்மாய் எழுதுவதில் விற்பன்னர். இவரும் எனக்கு இந்த விருது குடுத்து பாராட்டி இருப்பதால் மேலும் எழுதினால் பதில் மரியாதை ஆகிவிடும். ஆகவே அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.

14 comments:

சிங்கக்குட்டி said...

இது எனக்கு ரொம்ப தூரமான பதிவு இருந்தாலும் விருதுக்கு வாழ்த்துக்கள் டுபுக்கு மற்றும் ஆசிப் அண்ணாச்சி,பிரபு கார்த்திக்,ஜொள்ளுப்பேட்டை,குந்தவை,குசும்பன்,நவீன்,உருப்படாதது,வெட்டிப்பயல்.
கலக்குங்க .....

குப்பன்.யாஹூ said...

nice, nice selection by u.,I too join with u to wish them

குப்பன்.யாஹூ said...

When u get time visit this blog, Tamil grammer is taught in simple way and interesting Tamil articles.

http://www.sekalpana.com/2009/07/blog-post_31.html

Porkodi (பொற்கொடி) said...

என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமானு தெரில.. முன்னெல்லாம் கமெண்ட் போட்டுருக்கேன்.. அப்புறம் சாப்பாடு இடைவேளை நேரத்துல எல்லாம் வந்து படிச்சுட்டு மட்டும் இருக்கேன்.. :) நல்ல நல்ல ப்ளாக் எல்லாம் பார்த்து அவார்டு குடுத்துருக்கீங்க, சரி அம்பி கடையை ஏலத்துல எடுக்கலையா? தம்பியானாலும் ரொம்ப நியாயமா தான் அவார்டு குடுப்பீங்களாமே? :P

இன்னொரு விஷயம் எனக்கு சொல்லியே ஆகணும்.. நீங்க நல்லா எழுதறீங்க, எல்லாருக்கும் பிடிச்சுருக்கு, பாராட்டறாங்க. அதுக்கு மேல இன்னும் அடிக்கடி பதிவு போடணும்னு கண்டிஷன் போடறதுக்கு எல்லாம் எங்க யாருக்கும் உரிமை கிடையாது.. அதை பாத்து நீங்க கில்டியா ஃபீல் பண்ணுறது இன்னும் மோசம். எந்த எழுத்தாளருக்குமே (அது சுஜாதாவோ இல்லை கடைக்குட்டி ப்ளாக்கரோ) அவங்களுக்கு மூட் இருக்கும் போது ப்ரெஷர் இன்றி எழுதினால் தானே பெஸ்ட் வெளில வரும்? நீங்க ஒவ்வொரு பதிவுலயும் "எல்லோரும் விரும்பி கேட்டும் அடிக்கடி பதிவு போடாதவன்"ங்கற தொனியை படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு!

அடிக்கடி பதிவு போடுங்க பாஸூ.. :)

வெட்டிப்பயல் said...

தலைவா,
நவீனுக்கே ரெண்டு கொடுத்துட்டீங்களா??? சூப்பர் :)

நமக்கு கொடுத்ததுக்கும் வளர நன்னி :)

sriram said...

ஹாய் ரங்கா
இந்த விருது தோஷம் உங்களையும் பிடிச்சுகிச்சா?
பிரபு கார்த்திக்குக்கு நீங்க குடுத்த அட்வைஸ் படிச்சு நான் என்ன சொல்வேன்னு தெரிஞ்சு அதையே bracket ல போட்டுட்டா சும்மா விடுவோமா, "இதை யார் சொல்றதுன்னு ஒரு விவஸ்தை இல்ல - அடிக்கடி எழுதுப்பா இல்லையின்னா மறந்து போய்டும்"
பொற்கொடி - அட நீங்க வேற, இந்த ஆளுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒறைக்காது, திரும்ப திரும்ப வந்து - "நீங்கல்லாம் எழுத சொல்லி கேக்கறது ரொம்ப guilty யா இருக்கு, free mind வேணும்" இதே தேஞ்சிப்போன டேப்பை ஓடறதே பொழப்பா போச்சு, இதுல நீங்க வேற இந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி பேசறீங்க.

BTW, thanks for the long (long distance) call...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

hehehe sriram, naan endrum thalaivarin adi podi thaan. ;-) ellam iniku support panna nalaiku namaku oru supporting role avadhu kudupar avar padathula nu oru nambikkai thaan!

ஜொள்ளுப்பாண்டி said...

வணக்கம் தல... :)) நானும் ரொம்பநாளா எழுதாட்டியும் ஞாபகம் வச்சுகிட்டதுக்கு ரொம்ப டாங்கீஸ்...:))

அட நம்ம ப்ளாக் ஓபன் பண்ணறதுக்கு முன்ன சுத்தியும் பார்த்துட்டுதான் ஓபன் பண்ணவேண்டியிருக்கா..? அவ்ளோ கவிர்ச்சியாவா இருக்கு படம் எல்லாம்..?? ;))))))

பாசகி said...

அண்ணா நானும் உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன், கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கோங்க... நீங்களும் கண்டிப்பா தொடரணும் :)

Dubukku said...

சிங்கக்குட்டி - வாங்க வந்ததோட நிக்காம பின்னூட்டம் போட்டு வாழ்த்து சொன்னீங்க பாருங்க...அங்க நிக்கிறீங்க நீங்க...(உண்மையிலேயே தான் சொல்றேங்க) உங்களிடம் இதை கற்றுக்கொள்கிறேன்.

குப்பன் - அந்த சுட்டிக்கு மிக்க நன்றி தல. பார்த்தேன். லெவல் காட்டுறாங்க

பொற்கொடி - எக்கோவ்...வாங்க எப்படி இருக்கீங்க...திரும்ப கடைய ஆரம்பிச்சிட்டீங்க போல..தோ வந்துருவோம். அம்பி -...தெரிந்த முகங்கள் மற்றும் சுற்றத்தை தவிர்த்திருக்கேன். நீங்க நல்லா கிண்டி விட்டு இப்ப பாருங்க ஸ்ரீராம் துப்பறார். திருப்தியா மேடம்.

வெட்டிப்பயல் - ஆமாங்க அவர் கவிதெ எனக்கு பிடிக்கும். இருக்கட்டும் இருக்கட்டும் சேட்டா

ஸ்ரீராம் - வாங்க சார். திருப்தியா..சான்ஸ் கிடைச்சா விடமாட்டீங்களே...:))

பொற்கொடி - வெவரம் தான் நீங்க...ஆமா உங்களுக்கு படியேறத் தெரியுமா? :))

ஜொள்ளுப்பாண்டி - வாங்க தல என் பாக்கியம் தல. ஐய்யைய்யோ ரொம்பலாம் இம்சையா இல்லை..நீங்க வேற அப்புறம் படம் பொடறத நிப்பாட்டிட போறீங்க :P

பாசகி - ஆஹா மிக்க நன்றி தல. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தல.

shubakutty said...

I am from madurai enjoy yr blog right from the begining. sunday evenings are ideal time to read and laugh yr blog. like you much.

prabukarthik said...

சத்தியமா எதிர்பார்க்கவில்லை...உங்க கிட்ட இருந்து Special mention கிடைக்கும்னு...

Truly honored dubbuku annathey!

மிக்க நன்றி!

சிங்கக் குட்டி,

மிக்க நன்றி!

balutanjore said...

i am not able to follow this blog

kindly help

balasubramanian

Anonymous said...

ரெம்ப தாமதமா பதில் எழுதுறேன்னு கோச்சுக்காதீங்க.
:) என்னுடைய பதிவை ரசித்து எழுதியமைக்கு நன்றிங்கோ.

Post a Comment

Related Posts