Monday, March 09, 2009

ஹாலிடே - குறும்படம்

ரொம்ப நாளாய் ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்த இரண்டாவது குறும்படம் ஹாலிடே உங்கள் பார்வைக்கு. முதல் குறும்படதின் அதே உதறலுடன் உங்கள் கிழிச்சுலு தொங்கப்போடலுவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாய் லண்டன் ஃபிலிம் அக்காடமியில் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகும், எடிட்டிங்கின் போதும் இந்த படதில் சில குறைகள் தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் இடம் பொருள் ஏவல் வைத்துப் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. இதையே வேறு முறையில் சொல்லலாம் என்று இப்போது தோன்றினாலும் அதையெல்லம் பின்னொரு நாளுக்கு பின் தள்ளி இப்போது உங்கள் பார்வைக்கு. ஆனால் அதற்கு முன்

இடம்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தாலாவது ஏதாவது லாஜிக் இருக்கும், ஆனால் கமர்கட்டு வாங்கப்போய் கழுதை வாங்கி வந்தால்? வாழ்த்து சொல்லப் போன இடத்தில் மண்டபம் பிடித்து அங்கேயே உடனேயே கல்யாணம் செய்துகொண்ட கதையாய் ஹாலிடேக்கு போன இடத்தில் மனதுக்குப் பிடித்துப் போய் குறும்படம்.

பொருள்

கதை திரைக் கதை எல்லாம் ரூம் போட்டு யோசிக்க டைம் இல்லாமல் டாய்லெட்டில் கூட பத்து நிமிஷம் தியானம் செய்து மிச்சத்தை களத்திலேயே மானே தேனே பொன்மானே போட்டு எடுத்தது. கையில் ஒரு டப்பா கேமிராவும் 60 வாட்ஸ் பல்பும் போடறதுக்கு ஒரு ப்ளாகும் இருந்தா மனசுல பெரிய டைரடக்கர்ன்னு நினைப்பான்னு திட்டாதீர்கள் நிறைய எனக்கு நானே கேட்டாகிவிட்டது.

ஏவல்

பள்ளிக்கூடத்துல ஆபிஸுலன்னு எவ்வளவு நடிச்சிருப்போம் எல்லாம் அத மாதிரி தான்..நீங்க சும்ம போட்டோக்கு போஸ் குடுக்கிற மாதிரி நின்னா போதும் மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்னு அரி அரின்னு அரிச்சதில் இவன் கொசுக்கடி தாங்கலைடான்னு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு புண்யாத்மாக்களுக்கு கோடானு கோடி நன்றி. இவர்கள் ப்ரொபஷனல் நடிகர்கள் இல்லையென்றாலும் வந்த இடத்தில் உடம்புக்கு முடியாத போதும் நான் என்னமோ கோடியைக் கொட்டி எடுக்கிற மாதிரி சின்சியராய் முடித்துகுடுத்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி.

சரி சரி இதுக்கு மேலே அப்புறம் நீங்க தம்மடிக்க போய்விடுவீர்கள் என்பதால் இத்தோடு முடிச்சிக்கிறேன்...பார்த்துட்டு என்ன பழிவாங்குறத வாங்குங்க ....ஐ ஆம் தி வெயிட்டிங் :)

யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது. புல் ஸ்க்ரீனில் பெரிதுபடுத்திப் பார்த்தால் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன.



யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=7cl_soBE8IM

55 comments:

CVR said...

மன்னிக்கனும் அண்ணாச்சி!! ஆனா நம்ம சிற்றறிவுக்கு ஒன்னியும் எட்டல :-(

SurveySan said...

அட்ரா சக்க, அட்ரா சக்க.

சென்ற கு.படத்தை விட, இது ஜூப்பரா வந்திருக்கு.

ஆரம்ப காமெரா ஆங்கிள்கள் சூப்பர்.

பின்னணியும் சூப்பர்.

ப்ளாட்டும் சூப்பர்.

நடுவில் எடிட்டிங் குறைகள் மாதிரி தெரிந்தது, ப்ளாட் புரிந்ததும், குறையா தெரியல.

பின்னணி இசையில் சூறாவளியப் போட்டு, மரங்கள் ஆடாமல் அசங்காமல் நின்றது, வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய பிழை.

இன்னும் சில விஷயம் சொல்லலாம். மத்தவங்க எல்லாம் ஆடி முடிச்சப்பரம் வந்து சொல்றேன்.

மொத்தத்தில், வெரி குட் இம்ப்ரூவ்மெண்ட்.
யூ ஆர் கெட்டிங் தேர்! :)

SurveySan said...
This comment has been removed by the author.
SurveySan said...
This comment has been removed by the author.
SurveySan said...

//யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது.//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரீல? :)

Anonymous said...

Sorry to say this. But I second CVR. Academy ellaam poei romba padichittinga poala. Door - alavukku itha rasikkala. sadharana rasigarkalukku aana padam illa-yo ennavo. Thevai - Oru optional Konar notes , Puriyaathavanga padichikka.

ILA (a) இளா said...

Sub-title போட்டிருந்தா கொஞ்சம் தெளிவா புடிஞ்சிருக்கும். ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. ஆனா Logic கொஞ்சம் உதைக்குதுங்க.. பெரும்பாலும் இந்தியாவுல நடக்குற பிரச்சினையத்தான் கையில எடுத்திருக்கீங்க. வசனம் இருக்கிற எடத்துல இறைச்சல் வேற,1live recording கொஞ்சம் கஷ்டமான வேலைதானுங்க..

Unknown said...

அந்தம்மா கதவைத் திறந்துட்டு உள்ளே வரும்போது, அல்ரெடி பொண்ணு உள்ளார இருக்கேன்னு நினைச்சேன்....

ஆனா, கடைசி ஷாட்ல அந்த குட்டிப் பொண்ணு fade out ஆகி அந்த ஜோடி மட்டும் உட்கார்ந்திருந்தா மக்களுக்கு நல்லா புரிஞ்சிருக்குமோ? (Cute smile, அந்த பாப்பாவுக்கு).

நிறைய இடங்களில் டயலாக் சரியா கேக்கலை. For e.g., "So what's up with the TV?"-க்கு அந்தம்மா சொல்ற பதில் (3:07+) சரியாப் புரியலை. ஆரம்பத்தில இழுத்தாப் போலிருந்தது; சர்வேசன் சுட்டிய பிழையும் உறுத்துது. Actors கொஞ்சம் conscious ஆக இருந்தாற் போலிருந்தது. முதல்ல கொஞ்சம் எடிட்/கட் பண்ணி இருந்திருக்கலாம். அவ்ளோதான் எனக்குத் தோணினது.

வாழ்த்துகள்.

Sridhar V said...

வாழ்த்துகள் அண்ணாச்சி. மனோஜ் ஷியாமளன் பாதிப்புல எடுத்திருக்கீங்கப் போல. முதல்ல எனக்கும் CVR மாதிரி ஒண்ணுமே புரியல. கெ.பி. அக்கா வந்து விளக்கிட்டுப் போனப்புறம்தான் கொஞ்சமா புரிஞ்சுச்சு. முதல்ல ஏன் புரியலன்னு யோசிச்சப்ப...

- 4 நிமிஷ படத்துல 1.5 நிமிஷம் கார்ல போயிட்டே இருக்காங்க. நல்ல இயற்கை காட்சிகள் கிடைக்குதுங்குறதுக்காக வலிய திணிச்சாப்புல... பாக்குறவங்க என்ன படம் இதுன்னு புரியாமலே பாதி படம் ஓடிடுது

- காட்சியிலேர்ந்து காட்சி மாறுவது abrupt-ஆ தெரியுது. நான் கூட ஏதோ பவர் கட் ஆயிடுச்சோன்னு யோசிச்சேன். ஹிஹி.... நமக்கு அவ்வளவா டெக்னிகல் மேட்டர்லாம் தெரியாது.

- வசனங்கள் சரியாப் புரியல. அதுவும் முக்கியமா ராஜ், ஸ்மித்தோட என்ன பேசுறார்னு சரியாவே கேட்கல.

- கெஸ்ட் ஹவுஸ்ல சில காட்சிகள்ல சேர்த்து 4 நிமிஷத்தை இன்னமும் பயனுள்ளதா கொடுத்திருக்கலாம்.

- ஒருவேளை இப்படித்தான் டாக்குமெண்டரி எடுக்கனுமோ என்னமோ? :))

Anonymous said...

ஞாயிற்றுக்கிழமை மதியம் டிடி-ல படம் பார்த்த effect இருக்கு. ஒன்னுமே புரியல. ஆடியோ பாதி இடத்துல சரியா கேட்கவில்லை.

எதற்கும் இன்னொரு தபா பார்த்துவிட்டு வரேன்.

-அரசு

Anonymous said...

டுபுக்கு படம் சூப்பர், போன படத்திலிருந்து நல்ல முன்னேற்றம். ஏன் முடிவு புரியலைன்னு சில பேர் சொல்றாங்கன்னு தெரியலை...கடைசி டயலாக நல்லா கேட்டா கண்டிப்பா புரியுதே? லேப்டாப் ஸ்பீக்கர்ல தான் கொஞ்சம் சத்தம் கம்மியா இருக்கு...மெயின் ஸ்பீக்கர்ல போட்டு கேட்ட அப்புறம் கரெக்டா இருந்தது.

Prabu Raja said...

hayyo..
Bayama irukku..
Never expected the story will end like this.
Was thinking what story you're gonna tell within the last 30 seconds.
But seriously scared when I watched for the first time.

அறிவிலி said...

கதை புரியற வரைக்கும், குறைகள் நெறைய தெரிஞ்சுது. ஆனா.. புரிஞ்சப்புறம், பிரமாதம்னு தோணுது.

புரிவதற்கு வசனம் தான் தடை

Girl of Destiny said...

Nice concept... But audio was scratchy.
Maybe we would've understood sooner with subtitles!

To be frank, Door had a better reach!

Bart said...

A pretty good attempt. Audio could've been better. No major flaws except that time focussed on the main point was disproportionate to the time spent on mood setting..
On the way -->
கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் - "உங்கள்" டுபுக்கு

Unknown said...

Pretty impressive. Very well done.

Mahesh said...

சாரே... கலக்கியல்லே... வளர நன்னாயிட்டு உண்டு... கொள்ளாம் !! பின்னே... ஞான் இவிடெ உண்டு... ஓர்மிச்சா மதி !!

Kavitha said...

I started watching it with lots of expectation :) - Lesson No: 1, Never approach anything with any expectation. Sir, your cinematography is really awesome.

Anonymous said...

Hi Dubukku..

Reading your blog for a long time, but first time posting my views..
Till date all your postings are outstanding, but...

inda video oru 'thrusti'..

Srini
Sharjah

Anonymous said...

வணக்கம் நான் தஞ்சை ஜெமினி இன்னா சாரே இப்டி பண்ணிட்ட. சப்டைட்டில் போட்ருந்தா
நல்லா புரிஞ்சிருக்கும் போல. டயலாக மட்டும் தனியா தமிழ்ல இங்க போட்டீங்கன்னா நல்லா இருக்கும். அப்புறம் காமரா காமெரா ஆங்கிள்கள் சூப்பர். டி வீ பாக்கிற seenla viewers சாட் கும் டீவீ shotkkum லைடிங் match ஆகலையே. ஆரம்ப காட்சிகள் தான் நீளமா இருக்கு. மத்தபடி படம் சூப்பர் இல்ல ok தான். i think door is d best

Anonymous said...

saw the movie yesterday but couldnt comment. but after seeing the comments here I think I shud.
I think ppl have big expectations on your shortfilms, bcos of ur blog standards. But despite your outlining they got carried over by this and forgot the fact that it was shot with no planning and is just ur 2nd film. Dont get demotivated, i wud say just for a 2nd film its damn good and a big improvement. keep going!
-Raj

Anonymous said...

hi ranga

i cant read tamil so i never have read your blog, but just saw the film and it was cool! great attempt and i must say the 'actors' were pretty convincing too! the twist at the end was good.

very well done!
keep it up :-)

ச.சங்கர் said...

பின்னூட்டமெல்லாம் படிச்சப்புறம் படம் புரியுது.பேச்சு கொஞ்சம் குழப்பமா இருக்குறதுனால இருக்கலாம்...

அப்ப அந்தக் குழந்தை யாரு?????நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதியை.

வாழ்த்துக்கள்.

Unknown said...

தல மெய்யாலுமே நல்லா இருந்துச்சு..ஆனா மொத தபா பக்கா சொல்லோ மண்டைல இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியையும் பிசிக்கலமானு இருந்துச்சு.. இன்னடா நம்ம தல படத்துல எதுனா மெசேஜ் இருக்குமே இதுல ஒன்னும் இல்லையேன்னு பாத்தேன்.. தல படம் எடுக்கறதுன்னு முடிவு .பண்ணிடீங்க . தாய் மொழி தமிழ்ல வசனம் இருந்திருந்தா இன்னும் மேருகேரிருக்கும். மத்தபடி கேமரா எல்லாம் ஸ்ரீராம் கணக்கா இருந்துச்சு.. கார்ல மஞ்ச போர்டு பாத்தமாதிரி இருக்கு.. டூரிஸ்ட் வண்டியா?? cheverlot கார் தானே அது.. மொத்ததுல..எல்லாம் நன்றாகவே இருந்தது தமிழ் மொழி மட்டும் மிஸ்ஸிங்!! கடைசி காட்சில தான் கதையே புரிஞ்சுது..நல்லா சிந்தனை.. பேசாம உங்க கணினி வாழ்கைய விட்டுபோட்டு கோடம்பாக்கத்துல செட்டில் ஆயிடலாம் ல நேத்து வந்தவனுங்க எல்லாம் சீன் போடறானுங்க உங்கள அறியனைல ஏத்தி அழகு பாக்கவேண்டியதுக்க் நாங்க guarentee!! என்ன சொல்றீங்க தல.. வரீங்களா??? வாழ்க வளமுடன்

Unknown said...

When is the next project.. why dont u dip in Kollywood with Meera or Sneha..??

Anonymous said...

Nanbha,

Mothalla oru varthai Kurumpadatha pathi ‘SUPERAPPU’.

For a second short film the story and direction is very good. You need to buy a good editing software so that the scene changes are seamless. Not to worry with the BGM at the moment but if you could get the dialogues clear it would have made a major impact to the movie this again comes with the editing software if I am right.

To be precise as a director you have won making the audience wonder what you are trying to get at. Also clever thinking of playing the cartoon in the TV to keep the audience wondering what it’s all about as nothing is out of place until the phone call.

I am sure the course you have enrolled in will shape your thinking even more. A pat in the back of this short film and All the very best for the future ones.

Get a good HD camera to improve picture quality and some camcorders come with the hot shoe option which can be used for additional flash or microphone. Not that you may not be aware of this but my just my 2p worth.

Anonymous said...

modhalla paartha podhu sariya puriyala.appuram purindhadhu.enakku ennavo mudhal padam allavu idhu illai.anyway dubukku sir,edison maadhiri experiment seinju,seinju orunaal ungalai ulagam parattum.so you are perfectionist in process....good luck friend, for the next effort.
nivi.

Anonymous said...

Padam dubukku maathiri irunthathu

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

DOOR Than ok·illa ennaku puriyalaya?-isthripottii

Anonymous said...

அப்படியே Oscar Award க்காக acadamy committeeக்கு உடனடியா apply பண்ணறதுதானே! ஒரு எழவும் புரியாத படம்னு எதனாச்சும் categoryயில Award கிடைச்சாலும் கிடைக்கலாம். 'நல்லா வந்துட்டாங்கய்யா படம் எடுக்கறேன்னு'

Anonymous said...

இன்னொரு கொசுக்கடி. :)

http://mykitchenpitch.wordpress.com/2009/03/13/oh-butterfly/

இலவசக்கொத்தனார் said...

முதல் படம் அளவு இல்லை. ஒலித்தரம் அதிகமா இருந்தா நல்லா இருந்திருக்குமோ என்னவோ...

SurveySan said...

? let me know when you respond to the comments :)

normal blogger SLA is 24 hrs.

Anonymous said...

Brilliant shortfilm ! Dont get carried away by the others discouring comments. Keep it up !

Anonymous said...

i could hear the audio clearly only when i connected my laptop to an amp.
once i got the audio, i was able to understand the plot.. romba nerama ennada indha kulandha kitta paesavae mattaengrangale nnu ninaichaen.
+ves
Nalla Plot
Nice camera work
Scotland sollave vendaam.
London pilim institute effect theriyuthu.
-ves
Audio quality
English (particularly the slang is not widely understood).
nadigargal thamizh thaane ??

Unknown said...

It took time to understand. I shared it with my friends. It is a clever work. I wikied Massacre of Glencoe to understand the depth of tour homework.

Good Job.

Kathirvel
Chennai(Bloggers meet-June-08)

Anonymous said...

You have created something that lives up to the reputation of highlands are haunted !!

A scottish kid in that environment would have been a give away, so the use of indian kid is quite clever !!

Next time you plan to show scottish spirits, do visit us in Glasgow. Let me know how I can send my contact details to you.

Dubukku said...

பிடித்ததோ பிடிக்கவில்லையோ நேரமொதுக்கி சிரமம் பார்க்காமல் இங்கு கமெண்டியவர்கள் அனைவருக்கும் உண்மையாவே நெஞ்சாரா நன்றி சொல்லிக்கொள்கிறேன்..


சிவியார் - ஒரு வேளை ஆடியோவா இருக்குமோ? ப்ரொபஷனல் எக்க்யூப்மெண்ட் ஒன்னும் உபயோகப்படுத்தாமல் லைவ் ஆடியோ கொஞ்சம் ரொம்பவே மோசமாக பதிந்திருந்தது.

சர்வேசன் - வாங்க சர்வேசன். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. பின்னணி நான் நினைக்கிறது மாதிரி கிடைக்காததால் நானே மீசிக் போட்டுட்டேன் :))) அந்த சூறாவளி முக்கிமா படம் எந்த வகையானது என்பதை முதல்லயே கோடிட்டு காட்டுவதற்காக போட்டேன். மிக்க நன்றி உங்க ஊக்கமான பாராட்டுக்கு :)) யூ டியூப் பற்றி சொன்னது சில இடத்தில் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன அதைத் தான்...

மாயா - வாங்க அக்காடமியில் படிப்பது பற்றி சொன்னது ஷோ ஆப் மாதிரி இருக்கிறதோ.ஆனால் அந்த ரீதியில் சொல்லவில்லை. இந்த படம் அங்கு கிளாஸ் ஆரம்பிப்பதற்க்கு முன்னால் எடுத்தது. கோனார் நோட்ஸ் அடுத்த தரம் போட்டுடறேன். நிறைய பேருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்.


இளா - வாங்க. லாஜிக் எந்த இடத்தில் உதைக்கிறதுன்னு சொன்னீங்கன்னா பாடமாக எடுத்துக்கொள்வேன். //இந்தியாவுல நடக்குற பிரச்சினையத்தான் கையில எடுத்திருக்கீங்க// - புரியலைங்களே????

கெக்கே பிக்குணி -விரிவான கமெண்டுக்கு மிக்க நன்றி. பாப்பா எனது இரண்டாவது மகள் :) ஆரம்ப காட்ச்சிகள் இழுத்தது பற்றி ரொம்ப சரி. அந்த காட்சிகளை கட் பண்ண மனம் வரவில்லை அதான் சரி இருக்கட்டும்ன்னு விட்டுட்டேன். அடுத்த் தரம் கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

ஸ்ரீதர் - வாங்க மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு. //நல்ல இயற்கை காட்சிகள் கிடைக்குதுங்குறதுக்காக வலிய திணிச்சாப்புல// - ரொம்ப சரி அதான் உண்மை. அதைத்தவிர தவறுகள் தெரிந்த போது ரொம்பவே லேட்டாகிவிட்டக்டு. அதற்க்குள் நாங்கள் திரும்ப லண்டம் வந்துவிட்டோம். ரீஷூட் பண்ண வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதான் மனமில்லாவிட்டாலும் சில
காட்ச்சிகளையும் சவுண்டையும் திருத்த முடியாமல் போய்விட்டது.

அரசு - வாங்க. உன்கள் ஆர்வத்தை தூண்டும் வகைல் இல்லாமல் இருப்பது பற்றி வருந்துகிறேன். அடுத்த படம் தேறுமா பார்ப்பொம் :)

அனானி - சவுண் பர்றி நீங்கள் சொன்னது ரொம்ப சரி. இதற்க்குமேல் ஒரிஜினல் ட்ராக்கை அதிகப் படுத்தினால் பிசிறடித்தது. கம்ப்யூட்டரில் அம்ப்ளிஃபையர் இருந்தால் தெளிவாக இருக்கிறது. இங்கே வீட்டிலும் நல்லா கேட்கிறது அதனால் தான் எனக்கு இந்த பிரச்ச்னை ரொம்ப தெரியாமல் நழுவிவிட்டது.

பிரபு ராஜா - மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.நக்கல் விடுகிறீர்களா? அல்லது உண்மையாய் பயமாய் இருந்ததா?

அறிவிலி - உண்மை தான் ப்ளானிங்கும் பிரப்பரேஷனும் இல்லாதது மிகப் பெரிய குறை. நண்பர்கள் இந்த சூழ்நிலையில் ரொம்பவே அட்ஜெஸ்ட் செய்து நடித்துக் கொடுத்தார்கள். அவர்களும் ப்ரொபஷனல்களோ அனுபவஸ்தர்களோ இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

கேர்ல் ஆஃப் டெஸ்டினி - மிக்க நன்றி. ஆடியோவினால் இருக்கலாம். டோர் கொஞ்சம் நேரான சொல்லுமுறையில் எடுத்திருந்தேன். அதே மாதிரி இல்லமல் இருக்கட்டுமே என்று முயற்சித்தது தான் இது.

Dubukku said...

Bart - //time focussed on the main point was disproportionate to the time spent on mood setting//- ரொம்ப சரி. முற்றிலும் உண்மை. மேலே சொன்ன மாதிரி சில காட்சிகள் வெட்ட மனமில்லாமல் சேர்த்தது. மிக்க நன்றி


ராஜ் - மிக்க நன்றி வந்து ஊக்குவித்தற்க்கு.

மகேஷ் - வாங்க மிக்க நன்றி. கண்டிப்பா...:))) சேடா மஹேஷ் சாருக்கு ஒரு சாயா ப்ளீஸ்...

பொயட்ரீ - படம் நல்லா இல்லைன்னு நாசூக்கா சொல்லியிருக்கீங்க :)) ஆனா நீங்க சொன்னதும் ஒரு பெரிய பாடம். படம் பற்றி ரொம்ப படம் போடாமல் டக்குன்னு போட்டிருக்கலாம்ன்னு தோனுது இப்போ :))

Srini - மனம் திறந்த வார்த்தைகளுக்கு நன்றி. இது இரண்டாவது படம் தான். நான் சின்னப் பையன் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது இன்னும் ...ஒரு நாள் உங்கள் மனதுக்கு பிடித்த மாதிரி படம் கண்டிப்பாய் எடுப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

தஞ்சை ஜெமினி - வாங்க நன்றி. லைட்டிங் மேட்டர் கரெக்ட்டா பிடிச்சிட்டீங்க...எடிட்டிங் போது தான் அந்த கண்டிநியுட்டி மிஸ்ஸாகியிருப்பதை பார்த்ட்தேன் :)) அதை சமாளிக்க முயற்சித்திருக்கிறேன்..இருந்தாலும் மாட்டிவிட்டது :)


ராஜ் - ரொம்ப பெரிய நன்றி. சூழ்நிலைய கரெக்ட்டா பிடிச்சிட்டீங்க...இந்த மாதிரி ப்ளானிங் இல்லாம ஏதோ கெக்க பிக்கன்னு ட்ரை பண்ணியிருக்கேன்,...:)))

Radhika - I myself wanted to email you on this but you saw this before that - sorru sheer laziness. Many thanks for your encouraging words. Will call you over a weekend as soon as I get over these classes. Hectic with the classes. Cheers

Dubukku said...

சங்கர் - இண்டர்நெட்டுல படம்ங்கிறகு கொஞ்சம் கடி தான். அடுத்த முயற்சி சரியா போகுதான்னு பார்க்கலாம். ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு.

ராமச்சந்திரன் - வாங்க ரொம்ப நன்றி உங்க ஊக்கமான கமெண்டுக்கு. மஞ்ச போர்டு இங்க ஒரு பக்கம் அந்த கலர்ல தான் இருக்கனும் எல்லா கார்லயும். (இன்னொரு பக்கம் வெள்ளைல). கரீக்கட்டு தமிழ்ல வசனம் போட்ரிக்கலாம்..ஆனா இந்த சூழல்ல ஒட்டுமான்னு சந்தேகமா இருந்தது அதான் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் :)) கோலிவுட்...கண்டிப்பா ஆனா இன்னும் நிறைய கத்துக்கிட்டு அப்புறமா. அடுத்த ப்ராஜெக்ட் சின்ன சின்னதா பண்ணிக்கிட்டே இருக்கேன்.

அனானி - நண்பா நீயா? ரொம்ப டேங்க்ஸ்...பின்னூட்டதுக்கு. எடிட்டிங் சாப்ட்வேர்ல பிரச்சனை இல்லை கேமிரா அன்ட் மைக். பிரொபஷனல் மைக் வெச்சிருந்தோம்னா பின்னால் வர்ற நாய்ஸ பில்டர் பண்ணிவிடும். மூனாவது படம் அல்ரெடி படப்பிடிப்பு முடிச்சிட்டேன். ஆனா நாலாவதிலிரிந்து கண்டிப்பா ப்ரோபஷனல் எக்யுப்மெண்ட் தான்னு முடிவெடுத்திருக்கேன் பார்ப்போம். மிக்க நன்றி கமெண்டுக்கு,.


நிவி - படம் பிடிக்காவிட்டாலும் ஊக்கமா கமெண்டியிருக்கிறீர்கள். மெய்யாலுமே ரொம்ப நன்றி உங்களுக்கு.

அனானி - மிக்க நன்றி நண்பரே ...பிடிக்காவிட்டாலும் கமெண்டியதற்க்கு. உங்களை இனி வரும் படங்களைல் கவர முடியுமான்னு பார்க்கிறேன் :)

அனானி - நீங்கள் உண்மையான அக்கறையோடு சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி. ஆனால் எனக்கும் என்னை விளிப்பவர்களுக்கும் உங்கள் கமெண்டு பார்த்து கொஞ்சம் தர்மசங்கடமாய் இருக்குமென்பதால் உங்கள் கமெண்ட்ட்டை நீக்குகிறேன். தயவு செய்து தப்பாய் எடுத்துக்கொள்ளாதிர்ர்கள். புரிந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.

இஸ்திரிபொட்டி - அந்த கடைசி போன் காலை கவனமாய் கேளுங்கள். ராஜ் தங்களுக்கு குழந்தை இல்லை என்கிறார். அப்போ அந்த குழந்தை யாரு? அது தான் கரு.

ஜெயஸ்ரீ - மிக்க நன்றி. என்ன தவம் செய்தனை. கூடிய சீக்கிரம் போட்டுவிடுகிறேன்.

கொத்ஸ் - உமக்கு புதிரெல்லாம் ரொம்ப பிடிக்குமே படம் பிடிக்குமோன்னு நினைத்தேன். சரி நீர் சொன்ன மாதிரி ஒலியால் இருக்குமோ? இனி வரும் படங்களில் முயற்சி செய்கிறேன்.

சர்வேசன் - மன்னிச்சிக்கோங்க வார இறுதியில் தான் நேரம் கிடைக்கிறது. இனி அடிக்கடி பதில் போட முயற்சிக்கிறேன்.

ஜிம்ஸ் - மிக்க நன்ற் உங்கள் ஊக்கமான கமெண்டுக்கு. டானிக் குடித்த மாதிரி இருக்கிறது.

ஜெஸ்ட ட்ராவலிங் சோல்ச்ஜர் - நறுக்குன்னு சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி. நீங்க சொன்ன நெகடிவிஸ் ரொம்ப உண்மை. டரைக்டரின் அனுபவம் இல்லமையை காட்டுகிறது. பாடமாய் எடுத்துக்கொண்டிருக்கிறேன். இனி வரும் படங்களில் பார்ப்போம்

கதிர் - வாங்க தல. ஆமாம் அந்த நினைவு இடத்துக்குப் பக்கத்திலும் ஒரு காட்ச்சி எடுத்தோம் லைட்டிங் ரொம்ப இல்லாமல் சரியாக வரவில்லை. அதனால் சேர்க்கவில்லை. மிக்க நன்றி உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்க்கு.


பாஸ்கர்- ஹி ஹீ அங்க போய் தான் இந்த திரில்லர் படம் எடுக்க ஐடியாவே வந்தது, முன்னமே ப்ளானிங் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாய் இருந்திருப்போம். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ஊக்கமாய் இருக்கிறது. நாங்கள் அடுத்த தரம் அந்த பக்கம் வந்தாலோ நீங்கள் லண்டன் வந்தோல்லோ சந்திப்போம். எனது ஈமெயில் r_ramn at yahoo dot com மிக்க நன்றி

Dubukku said...

டகிள் பாட்சா - உங்கள் கமெண்டுக்கு மிக்க நன்றி. இனி வரும் படங்களில் நன்றாக எடுக்கவேண்டும் என்று வெறியை உண்டு பண்ணுகிறது. மிக்க நன்றி.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் - உமக்கு புதிரெல்லாம் ரொம்ப பிடிக்குமே படம் பிடிக்குமோன்னு நினைத்தேன். சரி நீர் சொன்ன மாதிரி ஒலியால் இருக்குமோ? இனி வரும் படங்களில் முயற்சி செய்கிறேன்.//

ஒன் லைன் ஸ்டோரி ஓக்கே, ஆனா எக்ஸிக்யூஷனில் புட்டுக்கிச்சு.

Prabu Raja said...

//பிரபு ராஜா - மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.நக்கல் விடுகிறீர்களா? அல்லது உண்மையாய் பயமாய் இருந்ததா? //

No.. I was serious. First time paakum pothu bayama irunthuchu.

Anonymous said...

It is understood from the phone conversation that the couple don't have any children. Which implies the kid roaming around must be some ghost. But neeti mulakki naalarai nimisham sollura alavukku ithu periya matter illa / or scenes interesting-aa amayala. Ennoada understanding thappunna yaravathu explain pannungappa. Namakku puriyatha aetho onnu irukko-nnu manasu adichikkuthu. Dubukku padaippu aachaa , puriyalanna tholayuthu-nnu vida manasu varala.

Deepa Gowtham's said...

To be honest I couldn't understand when I first watched the film. After reading the comments I again watched the movie, I got a different perspective of the film. 1. The kid is someone closely related, coz the kid entered along with the couple...
2. Even on a holiday or a vacation you are disturbed with phone calls...

Idha thaan director solla varraara illa unmayileye idhu oru pei kadhaiyaa? Confusion continues...

But definitely a good work, Camera angles, especially the shot with the car above the falls is excellent.

The zooming wasn't steady in the first shot when the hill is shown is what I felt. Audio clarity has to be improved. Otherwise its a good job Ram.

Prabu Raja said...

@Deepa Gowtham
Antha kid than pei :-)

Kavitha said...

//படம் நல்லா இல்லைன்னு நாசூக்கா சொல்லியிருக்கீங்க :))//

Sorry...I wrote it because I really could not understand the movie. A friend introduced your blog, instantly I became a fan to your fluid, interesting, vibrant, emotionally intense writing style. I expected a reflection of your writing in the movie - which is wrong, of course.

sri said...

Hey


I liked the suspence till the last moment, the music and the lighting said something is gonna happen.
Didnot expect the kid to be the ghost :)
I think you are very talented please contiue doing it.

I came here through Thulsi mam blogs :)

Anonymous said...

ஹாய் டுபுக்கு

உங்களுக்கு ஒரு சவால். உங்கள் எழுத்தில் இருக்கும் நகைச்சுவையை ஏன் படத்திலும் வெளிக்கொணரக்கூடாது? ஐந்து நிமிடம் ஓடக்கூடிய ஒரு காமெடி படம் உங்களால் எடுக்க முடியும். try please. slapstic comedy யோ அல்லது dialog உடனோ முயற்சி செய்து பாருங்களேன். All the best !

Anonymous said...

dear i'm a long time reader of your blog. my working hours eats up my time for net surfing. sunday i regularly squeece out some time to read yours ans listen to the songs of singer srinivas. namma ooru than avarum .

Dubukku said...

கொத்ஸ் - சின்னப் புள்ளை தானேங்க....போக போகத் கத்துக்கறேன்

பிரபு ராஜா - ஆஹா அப்படியா...மிஸ்டரி என்ற ரகத்தில் தான் எடுக்க நினைத்தேன்...ஹாரர் ஆகிவிட்டது போல உங்களுக்கு. மிக்க நன்றி.

மாயா - உங்க புரிதல் சரி தான்.
//But neeti mulakki naalarai nimisham sollura alavukku ithu periya matter illa / or scenes interesting-aa amayala.//
- Point taken. அடுத்த தரம் கவனத்தில் கொள்கிறேன். டுபுக்கு படைப்புன்னு பெரிய லெவல்லாம் இல்லீங்க...நான் சின்னக் கத்துக்குட்டி தான் இந்த துறையில் இது என்னுடைய இரண்டாவது குறும்படம் தான். ஆனால் உங்க எதிர்பார்ப்புக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் நீங்கள் ரசிக்கும் படி படமெடுப்பேன் என்று நம்புகிறேன்.

தீபா கவுத்தம் - ரொம்ப நன்றி உங்க ஊக்கமான பின்னூட்டதுக்கு. நீங்க சொன்ன அந்த சூம் பிரச்சனை மிகவும் சரி. எடிட்டிங் போது நானும் உணர்ந்தேன். ப்ரொபஷனல் கேமிரா இல்லையாதலால் சின்ன சூம் பட்டன் அத்தோடு நடுங்க வைக்கும் குளிர் என்பதால் க்ளைவுஸ் போட்டுக்கொண்டிருந்தேன். அதில் தவறாகிவிட்டது. கதை - அந்த குட்டி பெண் அவர்களுடன் வரவில்லை அது ஒரு பேய் என்பது தான்/

பொயட்ரீ - கவலையே படாதீர்கள் நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மீடியாவில் நான் கத்துக்குட்டி இது என்னுடைய இரண்டாவது படம் தான். போகப் போக கத்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன். ப்ளாக் பற்று உங்கள் பாராடுக்கு மிக்க நன்றி.

ஸ்ரிவத்ஸ் - மிக்க நன்றி நண்பரே உங்கள் மிகவும் ஊக்கமான பின்னூட்டதுக்கு. துளசி டீச்சருக்கும் நன்றி சொல்லனும். அடிக்கடி வாங்க.

டகிள் பாட்சா- வாங்க. அட நீங்க வேற நான் இன்னும் கத்துக்குட்டி தாங்க. காமெடி ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் நீங்கள் சொன்னதை கண்டிப்பாக வரும் நாட்களில் முயற்சித்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி.

வனிதா - வாங்க...வாங்க நீங்களும் அம்பையா...சந்தோஷமா இருக்கு. ஐயைய்யோ ஒரு பக்கம் பயமாவும் இருக்கு தெரிஞ்சவங்களா இருந்து...ப்ளாக்ல போட்டதையெல்லாம் படிச்சு மாட்டிக்கப் போறேனோன்னு :)))உங்க பின்னூட்டதுக்கு மிக்க நன்றி. பாடகர் ஸ்ரீனிவாசுக்கும் நம்மூரு தான்ன்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சிக்கிட்டேன். மிக்க நன்றி. அத்தோட நீங்க கே.ஏ.ஏஸ்.சேகர் சார் மகளிடம் "நான் அந்த பதிவில் சும்மா மேற்கோள் காட்டியது புண்படுத்தும் நோக்கத்தோடு இல்லை. அப்படி அவர்கள் உணர்ந்தார்களென்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள். மிக்க நன்றி.

Kavitha said...

Thank you. Good luck. We'll look forward to your evolutionary short films and movies.

Bharath said...

Good Work.... On the technical aspects, definitely better than door but the theme and scenes were much better in the door. The door’s theme instantly touched the heard, which was missing here. Best wishes for your next short film.

தேவகோட்டை ஹக்கீம் said...

tamilil irunthal nalla irunthirukkum. enakku onnume puraiyalai.oruvelai english therichavankalukku mattumthan enral theriyama vanthitten. sorry....

Post a Comment

Related Posts