முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6
"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.
"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"
"....?"
"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"
பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?
சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.
கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.
ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.
அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.
அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.
Sunday, March 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
naan dhan firstu...
//என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன்//
:))))))))))))))
//ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.///
அட...! அந்த இன்னாருக்கு எந்த இன்னார் வந்து வாச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எங்களுக்கே ஒரு ஆர்வம் வந்திருச்சே...! :)
//ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.///
அட...! அந்த இன்னாருக்கு எந்த இன்னார் வந்து வாச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எங்களுக்கே ஒரு ஆர்வம் வந்திருச்சே...! :)
dubukku sir..bayangara comedy ponga!!kalakiteenga
this wht we are expecting from u..write atleast one post each month..
வழக்கம் போல சிப்பு சிப்பா.... :)))
இன்னாரோட இன்னார் யாருன்னு இன்னார் சொன்னாரா?
பெருசா ஸ்டார்ட் பண்ணி பஷ்ட்டு கியர் போட்டு தூக்கி, ரெண்டாம் கியர்ல வேகமெடுத்து மூனாவதுக்கு தாவும் போது இன்னார் நியாபகம் வந்து கப்புனு இஞ்சினை ஆஃப் பண்ணின மாதிரி இருக்கே இந்த பதிவு.
அது, அந்த பயம் இருந்தா சரி. :)))
// என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன் // thala, really enjoyed this line .. ROFTL..
PS: Naanum ithe thames nathi karaiyila thaan kuppai kottikittu irukkaen. Vangalen, summer vara poguthu, Hyde park poi oru kaapiya poduvom.. Note : Summer - Hyde Park will lead to another jolli thirintha kaalam :)
//வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும்// another LoL :)
ஆட்டோ மக்கார் பண்ணுதுன்னு சொல்லி சாவுகிராக்கி சவாரிய கழட்டிவிடுற ஆட்டோக்காரன் மாதிரி நல்லா ஆரம்பிச்சு டக்குனு முடிச்சுடீங்க? ஏதேனும் உள்குத்தா?
பரவாயில்லை படம் எடுக்குறேன்னு படம் போடாம இந்த மாசம் இந்த பதிவாவது எழுதினீங்களே. ஆனால் ஜொள்ளித்திரிந்த காலம் வர வர மாமியார் ஆகிறது.
படம் எடுத்து முடிச்சுடீங்களா? உங்க டைரக்ஷனுக்கு என் வாழ்த்துக்கள்!!
அப்பாலிகா சார் நீங்க வேற ஒரு பதிவின் கமெண்டுல நான் சந்தன பார்டியா, எதாவது மாடியதானு கேட்டிருந்தீங்க அதை இனிக்கு தான் பார்த்தேன்.
அம்மாஞ்சாமீ நானும் சந்தனம் வெக்கிற ஆளுதான், சென்னப்பட்டணம் வந்ததுல இருந்து சந்தனம் வெச்சு வெச்சு நெத்தில மட்டும் ஒரு குட்டி ஏரியா டவ் சோப்புக்கு வர மாடல் கலருக்கு மாரிச்சே தவிர வேற எந்த கலரும் வாழ்க்கைல வரல.
'ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்' இந்த ரேஞ்சுல லெவல் காட்டிக்கிட்டுதான் இருக்கோம். பார்போம்... ;-)
Dubukku.. Good post ma.. keep it up
Srini
Sharjah
¾Ä ¸Äì¸ø
«ýÒ¼ý
¸¡÷ò¾¢ì
தல கலக்கல்
அன்புடன்
கார்த்திக்
ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஏமாற்றாமல் trade mark sense of humour உடன் ஒரு பதிவு!கலக்கல் Sir
//பெருசா ஸ்டார்ட் பண்ணி பஷ்ட்டு கியர் போட்டு தூக்கி, ரெண்டாம் கியர்ல வேகமெடுத்து மூனாவதுக்கு தாவும் போது இன்னார் நியாபகம் வந்து கப்புனு இஞ்சினை ஆஃப் பண்ணின மாதிரி இருக்கே இந்த பதிவு.//
ரிப்பீட்டு...
:))))
தல,
பதிவு நல்லா இருக்கு. ஆனா ஏதோ ஒன்னு குறைச்சலா தெரியுது....
:))
hello dubukku u post was very super comedy ha ....
http://limation.blogspot.com
அண்ணா, ரொம்ப மொக்கையா இருக்கு.கட்டாயத்தின் அல்லது கடமையின் பேரில் எழுதுவது போல் உள்ளது. தவிர்க்கவும்.
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி
dubukku sir,
post nalla irundudu aana officela ezudineengla??naduvula boss phone vandha madhiri edho gappunnu mudichitteenga.first wordllerndhu last word varaikkum sirikka vaikkum ungal post indha thadavai,ennavo missing.....lastlla konjam avasarama ezhidina maadhiri oru feeling....
nivi.
தங்கமணி அக்கா இனிமே அத்திம்பேர் எழுதும்போது பின்னால நின்னு பாக்காதீங்க இப்ப பாருங்க எப்பிடி ஆரம்பிச்சு எப்பிடி முடிச்சிட்டாரு
ஹலோ நான் அவங்ககிட்ட சொல்லீட்டேன் அவங்க பாக்கமாடாங்க நீங்க பயபடாம எழுத வந்த விசயத்த முழுசா எழுதுங்க
எனக்கு ஒரு உண்மை தெரியனும் சாமி
//அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு//
கல்யாணத்திற்கு அப்புறம் இந்த ஐடியா திருப்பி தோனவே இல்லையா?
-அரசு
Hello dubukku,
I stumbled upon your blog when I was browing sometime back. I casually read couple of articles and I have become a big fan of your writing. Right now I am browsing your archives and reading all the posts one by one.
I am born and brought up in Chennai but I lived for 4 years in Kallidai (3rd std to 6th std in AVRmV Matriculation). Right now I am in the US.
Your writing reminds me very much of the way I used to talk with my close friends. mainaa Kamal dialogues. kalakareenga. I would like to know u better. I will send u an email sometime.
எப்படி இருந்த டுபுக்கு இப்படி ஆயிட்டாரே... என்ன ஆச்சு டுபுக்கு-க்கு... யாரோ பில்லி சூனியம் வச்சிட்டாங்க போல... மொக்கை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு... பழைய காமெடியே காணும்... ஏதோ கடமைக்கு எழுதிராப்ல இருக்கு... யாராவது பதில் மந்திரம் போட்டு பழைய டுபுக்கு-வை வரவச்சு குடுங்கப்பா....
சூப்பர், கலக்கிட்டிங்க.
உங்க வாழ்க்கையிலையும் ஒரு இன்னார் இருந்தாரா. அதும் இந்த மாதிரி அலுவலகங்களில், ரயிலில், கல்லூரிகளில், டூர் போகம் இடங்களில், கல்யாண வீடுகளில் இந்த மாதிரி இன்னர்களின் தொந்தரவு பொறுக்காது.
நம் காதுகளில் புகை வரும்.
குப்பன்_யாஹூ
good humour in all your posts..
Keep posting..
ஹ்ம்ம்.. இப்பதான் தெரியுது.. "எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்னு!". இந்திகாரன் இங்கிலீஷ்காரன்னு இப்படி உசுபேத்தி உசுபேத்தியே கடைசீல என்ன ஓம் சிடி'யோட ஊர் ஊரா அலைய வச்சிடிங்களே ...
- இன்னார் (எ) குலசாமி
இன்னா டுபுக்கு
க்ழுத தேஞ்சு கட்டெறும்பா ஆனாப்பல வர வர உங்க சிந்தனையும் எழுத்தும் ரொம்ப போரடிக்கிறது. திரும்ப திரும்ப அரச்ச மாவயே அரைக்காம புதுசா ஏதாவது சிந்திச்சு எழுதுங்க அப்பு!
அண்ணே...
கலக்கல்... இத மேல வெய்யுங்க (Keep it up)
:-)
//என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன்.//
Dubukkareh,
Above line was damn good...
Puthaandu vaazthukal.
Aani
கதிர் - அப்போ கப்பு உங்களுக்குத் தான்னு சொல்றீங்க :))
ஆயில்யன் - :)) ஆமாங்க எனக்கும் இன்னமும் அந்த ஆர்வம் அடங்கவே இல்லை
அனானி1 - வாங்க மிக்க நன்றி. ஒரு புனை பெயராவது போட்டுக்க கூடாதா?
அனானி2 - வாங்க. கண்டிப்பா முயற்சி செய்கிறேன். இந்த வாரம் கண்டிப்பா உங்களுக்கு ஒரு அதிர்ச்சி குடுப்பேன் :))))
மகேஷ் - :) இல்லீங்கோவ்...நானும் ரொம்ப ஆர்வமாய் இருக்கேன்
அம்பி - வாய்யா ராசா வைச்சாச்சா ஆப்பு திருப்தியா? நல்லா இருடே
ட்ராவலிங் சோல்ட்ஜர் - வாங்க நீங்களும் இங்கயா...ஓ கண்டிப்பா போடலாமே...r_ramn at yahoo dot comkku முடிந்த போது ஒரு ஈமெயில் தட்டுங்க
வாழவந்தான் - ஓ அப்படி இருக்கா...இனிமே கவனமாய் இருக்கேன். வாழ்த்துக்கு நன்றி. ஆஹா சந்தன பாண்டியா நீங்க....ஆனா சும்மா சொல்லக்கூடாது நீங்களெல்லாம் வாயில விரல வச்சா கடிப்பீங்களான்னு சந்தேகம் வர்ற மாதிரி ஒரு அப்பாவி லுக்கு குடுப்பீங்களே....அடேங்கப்பா...:))))))) முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீனி - நன்றி ஹை. ஷேக்க கேட்டதாய் சொல்லவும்.
கார்த்தி - அன்புடன் நன்றி ஹை.
ஐகேன் அவென்யூ - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு,
கதிர் - ரிப்பீட்டா டெம்பிளேட் பின்னூட்ட பார்ட்டியா நீங்க :)))) குறைச்சலாவா..அடுத்த தரம் கவனமா கொள்கிறேன்.
லிமிடேஷன் - வாங்க மிக்க நன்றி உங்க ஊக்கமான கமெண்டுக்கு
கார்த்திகேயன் - மனதில் பட்டதை சொன்னதிற்க்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன காரணமும் இருக்கலாம். அதை விட மனசு ஃபிரீயாய் இல்லை...சில அன்றாட வேலை அழுத்ததின் காரணமாகவும் இருக்கலாம்.
நிவி - ஆபிஸில் ப்ளாக் படிக்க கூட ஓபன் கூட பண்ண முடியாது. ரொம்ப நாளாகிவிட்டதே என்று ப்ரஷர் காரணமாய் இருக்கலாம். அடுத்த தரம் கண்டிப்பாக கவனம் கொள்கிறேன். மிக்க நன்றி,
தஞை ஜெமினி - ஹீ ஹீ அது இல்லை காரணம் டைம் பிரஷர் என்று நினைக்கிறேன். அதை விட மனது ஃபிரீயாய் இல்லை அது தான் முக்கிய காரணம்.
அரசு - என்ன கேட்டீங்க?....இங்க சிக்னல் சரியா கிடைக்கல ஹலோ.... :)))))
ராம்ஸ் - வாங்க...அட நீங்க எந்த வருஷம்? நானும் அதே அதே பள்ளி தான் :))) முடிந்த போது மெயில் தட்டுங்கள்.
வீரா- கரெக்ட்டு தான் மனசு கொஞ்சம் ஃப்ரீயா இல்லை. பல்வேறு குழப்பங்கள் அது எழுத்தில் தெரிகிறதுன்னு நினைக்கிறேன். இனிமே டைம் ப்ரஷரில் எழுதுவதில்லை என்று கவனம் கொள்கிறேன். மிக்க நன்றி.
குப்பன் - நன்றி. எப்படி இருகீங்க...ஆமாங்க...அதே அதே..இவங்களால நிறைய பேர் பாதிக்கப் பட்டு இருப்பாங்க போல இருக்கு.
மஹா - வாங்க மிக்க நன்றி.
இன்னார் - ஹா ஹா....:)))))))))))))
கெக்கபிக்கே - மிக்க நன்றி உங்க ஹானஸ்ட் பின்னூட்டதுக்கு...கவனத்தில் வைத்து முயற்சி செய்கிறேன்....
ஸ்ரீராம் - வாங்க நன்றி...முயற்சி செய்கிறேன்..
தமிழினி - தகவலுக்கு மிக்க நன்றி.
ஆனி - வாங்க...எஅப்படி இருக்கீங்க.... பார்த்து பேசி ரொம்ப நாளாச்சு ...மிக்க நன்றி..
//
ஆனா சும்மா சொல்லக்கூடாது நீங்களெல்லாம் வாயில விரல வச்சா கடிப்பீங்களான்னு சந்தேகம் வர்ற மாதிரி ஒரு அப்பாவி லுக்கு குடுப்பீங்களே....அடேங்கப்பா...:))))))) முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//
அதெல்லாம் தொழில் ரகசியம் சாரே!
வாழ்த்துக்களுக்கு நன்றி
//டெம்பிளேட் பின்னூட்ட பார்ட்டியா நீங்க :)))//
இல்ல தல,
நான் சொல்ல வந்ததை எனக்கு முன்னாடி ஒருத்தர் சொல்லியிருந்ததால் தான் ரிப்பீட்டு போட்டேன்........
:))
Post a Comment