முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2
'ஹேவ் எ ஹாப்பி பீரியட்" என்று மாதவிடாய்க்கு டீ.வி அட்வர்ட்டைசன்மென்ட்டில் பெண்கள் வாழ்த்துச் சொல்லிக்குமளவு முன்னேறாத ஒரு கால கட்டத்தில் நான் சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெச்சர் அன்ட் மேனேஜ்மென்ட் என்று கொஞ்சம் கவுரதையாக இருக்கும் ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, எங்கே படிக்கிறீங்க தம்பி கேள்விக்கு, நௌன்னை பலவிதமாக கூறலாம் என்ற பாலபாடத்தில், ஐ.ஐ.டி என்று என்.ஐ.ஐ.டியில் 'என்'னை சைலண்டாக்கிவிடுவேன்.
அம்பாசமுத்திரம் சிட்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மாதிரியான கிராமப்புற கலாச்சாரம் கொஞ்சம் புதிது. சென்னையின் தலமை அலுவலகத்தில் மூன்று மாடிக் கட்டிடத்தில் நுனி நாக்க்கு இங்லிபீஸில் புடவையை இப்படியும் கட்டலாம் என்று அறியவைத்த கவுன்சிலர், உன்னை மாதிரி அறிவாளியைப் பார்த்ததில்லை என்று அம்பத்தியையாயிரம் ரூபாயை பொங்கல் வைத்துவிட்டார். பீஸ் கட்டும் போதே தெரிந்துவிட்டது, புடவையை முன் ஆபிஸில் இருக்கும் கவுன்சிலர்கள் மட்டும் தான் கட்டுவார்கள் என்று.
பெண்களுக்கு எப்படியோ தெரியாது, ஆண்களுக்கு வாழ்வில் குறைந்தது மூன்று தருணங்களில் வாழ்க்கையைப் பற்றிய கவலை வரும். ப்ள்ஸ் டூ ரிசல்ட் வருவதற்கு முந்தைய நாள், காலேஜ் பேர்வல் பார்ட்டி முடிந்த அடுத்த நாள் இரவு, முதல் இன்டர்வியூ ஊத்திக் கொண்ட மாலை. எனக்கு மனைவி ரெடி பாண்டியராஜன் மாதிரி காலேஜ் முடித்த காலக்கட்டத்தில் கல்யாணம் வேறு தோராயமாக நிச்சயமாகி விட்டிருந்தது என்பதால் கவலை கிறித்துமஸ், நியூ இயர் பொங்கல் சேல் மாதிரி எக்ஸ்டெண்ட் ஆகிவிட்டது. நிச்சயமானதில் அடியேன் கைங்கர்யம் நிறைய இருந்தாலும், அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார்.
முதல் நாள் க்ளாசுக்கு போனால் கே.டி.குஞ்சுமோன் செட்டுக்குள் நுழைந்தது மாதிரி இருந்தது. வெள்ளக்கார துரையோடு பேத்திகளும் பேரன்களும் ஏகத்துக்கு நுனிநாக்கில் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொட்டாம்பட்டி ரயிலு எத்தனை மணிக்கு வரும்ன்னு கேட்டுவிட்டு ஓரமாய் உட்கார்ந்துகொண்டேன். திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துகொண்டிருந்த போது அம்மாபட்டிக்கு அட்ரெஸ் கேட்டுவிட்டு இன்னொரு சக 'சிட்டி'சன் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ஆஹா புடவையாத்தா உனக்கும் பொங்கல் வெச்சிட்டாளான்னு குசலம் விசாரித்துக்கொண்டதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன், அம்மாபட்டி சிட்டிசனுக்கு அதுவும் தெரியவில்லை. வாத்தியார் மானிட்டர் பத்தி தெரியுமான்னு கேட்டால் "ஏழாவது படிக்கும் போது ஒரு தரம் இருந்திருக்கேன்" என்று சொதப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் அவன் மண்டையில் தட்டி..."அண்ணா அது ஸ்கூல் மானிட்டர் இல்லைல்ங்கண்ணா...இது கேப்டன் படத்துல தீவிரவியாதி எங்க குண்டு வைத்திருக்கிறார் எத்தனை மணிக்கு வெடிக்கும்ன்னு கோடு போட்டு காண்பிக்குமே டி.வி பொட்டி...அது" என்று வாத்தியார் புரியவைத்தார்.
ஆனால் சிட்டிசன் படு தெகிரியமாய் இருந்தார். கொள்ளக்கூட்ட மொட்டை மாதிரி எல்லாரையும் பாஸ் பாஸ்ன்னு தெம்பாய் கூப்பிட்டார்." கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல.."ன்னு எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.
க்ளாஸ் ஒருவாரம் ஓடியிருக்கும், எங்களாலே நம்பவே முடியவில்லை...ஒரு வடநாட்டு கிளி ஒன்று எங்கள் சிட்டிசன் வரிசையில் வந்து அமர்ந்தது. வடநாட்டு கிளி என்றால் இந்த வடகத்திய ஹீரோக்கள்லாம் கல்யாணம் நிச்சயமான பொண்ணுக்கு ரூட் விடுவார்களே சினிமாவில் அந்த அழகு. ஒரு வேளை நாமளும் கொஞ்சம் பெர்ச்னாலிட்டியாகத் தான் இருக்கோமோ என்று எங்களுக்கே டவுட் வந்துவிட்டது. வாயைத் திறந்தால் ஊத்திக்குமே என்று கொஞ்ச நாள் ஹலோ ஹலோ என்று ஓடியது. இந்த சமயத்தில் தியரி எல்லாம் முடிஞ்சாச்சு இனிமேலிருந்து ப்ராக்டிகல்ஸ் என்று இரண்டு பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்று குடுத்துவிட்டார்கள். வடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் விதி - காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுன்னு அம்மாப் பட்டி சிட்டிசன் "பாஸ் நானும் நீயும் ஒரு செட்" என்று ஒட்டிக் கொண்டான். ஆமா பெரிய செட்டு ஷேவிங் செட்டுன்னு கவுண்டமணி கடுப்பில் "டேய் ஒழுங்கா படிச்சு காம்பஸ்ஸுல வேலைய தேத்தப் பாருடா"ன்னு ரெண்டு ஓசி அட்வைஸ் குடுத்தேன்.
ஆனால் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களே அது நிஜமாகி தனியாக இருந்த வடநாட்டு கிளியின் கம்ப்யூட்டர் ஏதோ காரணத்தால் பூட் ஆகவில்லை. அதனால் வடநாட்டு கிளி எங்களுடன் வந்து உட்கார்ந்து கொண்டது. முதல் லேப்பில் கீப்போர்ட் பழக வேண்டும் என்று சின்னத்தனமாக ஏதோ ப்ரோக்கிராம் ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு எழுத்தாக மானிட்டரின் மேல் மூலையிலிருந்து விழ ஆரம்பிக்கும் அது கீழே விழுவதற்க்குள் அந்த எழுத்தை கீபோர்ட்டில் அழுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் வெல்டன் சொல்லும். இது தான் பயிற்சி. க்ளாசில் என்னையும் அம்மாபட்டி சிட்டிசனையும் தவிர யாரும் இந்த ப்ரோக்கிராமை மதிக்கவே இல்லை. வேறேதோ செய்து லெவல் காட்டிக்கொண்டிருந்தார்கள். "பாஸ் இப்ப என் டர்ன்...நான் உங்கள விட ஒரு செகென்ட் முன்னாடியே பிடிச்சிருவேன் பாருங்க"ன்னு சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மப்பில் கிளி இம்பெரெஸாகிப் பார்த்துகொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.
ஆனாலும் ஒன்று சொல்ல்வேண்டும் கிளி ரொம்ப நல்ல பெண். எங்கள் கெக்கெபிக்கேதனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாய் பழகினாள். "நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருதர் மேல அதுக்கு ஒரு இது பாஸ்"ன்னு அம்மாபட்டிக்கு ஒரே கிளுகிளுப்பு...சரி சரி எனக்கும் தான். இதற்கு நடுவில் ஒரு மினி ப்ராஜெக்ட் என்று குடுத்து டீம் பிரித்தார்கள். மவுண்ட் ரோட்டில் இருந்த கம்ப்யூட்டர் ட்ரோமில் போய் நாமே முனைந்து செய்யவேண்டும். ஒரு மினி ப்ராஜெக்ட்டுக்கு மூன்று டீம். ஒரு டீமிற்கு இரண்டு பேர் என்று ஆக மொத்தம் ஆறு பேர். அப்போது தான் ரெமோ எங்கள் கூட்டத்தில் வந்து ஐய்க்கியமானான். ரெமோ என்றால் அதே ரெமோ. ஏதோ சுமாரான ஸ்டையிலொடு இருந்தாலும் பெண்கள் கூட்டத்தின் நடுவில் தான் இருப்பான். அவன் பெண்களோடு இல்லாமல் பார்ப்பதற்க்கான வாய்ப்பு...மல்லிகா ஷெராவத் பதினெட்டு முழப் புடவையை தழைய தழைய கட்டிக்கொண்டு வருவதற்கான ப்ராபபிலிட்டி தான்.
ரெமோவுடன் அவன் நண்பிகள் இரண்டு பேரும் என்று எங்கள் டீம் மூன்று மூன்று என்று சம சகிதமாகிவிட்டது. எல்லோருக்கும் ப்ரோக்கிராமில் சந்தேகம் வந்தால் எங்களுக்கு கீபோர்ர்டில் சந்தேகம் வரும் என்று அம்மாபட்டியும் நானுமாயிருந்த ஷேவிங் செட் கலைக்கப்பட்டு, கிளியும் நானும், அம்மாபட்டியும் இன்னொரு பெண்ணும், ரெமோவும் அவன் நண்பியும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
Monday, September 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
யப்பா ராசா இதெல்லாம் தங்கமணி கிட்ட அப்ரூவல் வாங்கிக்கிட்டுத்தானே போடற?! அப்படித்தான் செஞ்சி இருப்ப. இருந்தாலும் ஒரு கன்பர்மேஷனுக்குத்தான். அம்மாப்பட்டிக்காரன் பேரு என்ன?
அப்பாடா... இதுக்குத்தானெ இவ்வளவு நாள் வெய்ட்டிங்... நல்லா சூடு புடிச்சு வேகமா போகுது..... அய்யா...அப்பிடி..அப்பிடியே மெய்ன்டைன் பண்ணிக்க...
அப்பால...நம்ம கடைப்பக்கம் வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்... டைம் கெடக்க சொல்லோ வா நைனா...
ஹைய்யோ ஹைய்யோ.....
எதைச் சொல்ல? எதை விட....?
சூப்பர்:-))))))
\\அம்பாசமுத்திரம் சிட்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மாதிரியான கிராமப்புற கலாச்சாரம் கொஞ்சம் புதிது\\
அடடா..அப்புறம்.. :)
\\நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன், அம்மாபட்டி சிட்டிசனுக்கு அதுவும் தெரியவில்லை. வாத்தியார் மானிட்டர் பத்தி தெரியுமான்னு கேட்டால் "ஏழாவது படிக்கும் போது ஒரு தரம் இருந்திருக்கேன்" என்று சொதப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் அவன் மண்டையில் தட்டி..."அண்ணா அது ஸ்கூல் மானிட்டர் இல்லைல்ங்கண்ணா...இது கேப்டன் படத்துல தீவிரவியாதி எங்க குண்டு வைத்திருக்கிறார் எத்தனை மணிக்கு வெடிக்கும்ன்னு கோடு போட்டு காண்பிக்குமே டி.வி பொட்டி...அது" என்று வாத்தியார் புரியவைத்தார்.
\\
ஹா ஹா ஹா ரசிச்சு சிரிச்சேன்.. :))
எப்பவும் போல கலக்குங்க அண்ணாச்சி
அண்ணாச்சி,
எங்கேயோ கொண்டு போயிட்டிங்க போங்க. இந்த கீபோர்ட்ல லெவல் காட்டறதெல்லாம் சான்ஸே இல்லை போங்க :-))
எங்க ப்ராஜெக்டுல யாரும் சிக்கல. ஆனா viva voci-க்கு வந்தது ஒரு வடநாட்டுக் கிளிதான். அப்ப பெரிய லெவல்ல லெவல் காட்டினோம். அது ஒரு கனாக்காலம் போங்க. :-))
//கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல//
:))))))))))))))))))))
//இலவசக்கொத்தனார் said...
யப்பா ராசா இதெல்லாம் தங்கமணி கிட்ட அப்ரூவல் வாங்கிக்கிட்டுத்தானே போடற?! அப்படித்தான் செஞ்சி இருப்ப. இருந்தாலும் ஒரு கன்பர்மேஷனுக்குத்தான். அம்மாப்பட்டிக்காரன் பேரு என்ன?
//
ஆமாங்க அப்ரூவல் வாங்கியாச்சுல்ல! இல்லாட்டி அப்ப நடந்ததுக்கு இப்ப வாங்கி கட்டிக்கப்போறீங்க! :))
பை தி வே கொத்ஸ் சொல்றதை பார்த்தா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொல்ற மாதிரியே இருக்கே!
கொத்ஸ் உண்மையா இது?????
கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல namakkunu ippdi varanunga parungaவடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். adada wastea poche. ama veetla nalla understandingla pokutho?good one. ippdiye continue pannunga.-isthri potti
கொஞ்ச நாள் கழித்து வந்தால், மூணு போஸ்டா? மூணும் கலக்கல். Full form-ல இருக்கிற மாதிரி தெரியுது. Awesome.... Keep Going...
-அரசு
Entire post is rocking.Keep going,
ஹா ஹா ஹா, கலக்கலோ கலக்கல். மனைவி ரெடி பாண்டியராஜன் காமடிய டைமிங்கா நியாபகப்படுத்திட்டீங்க :):):) நான்கூட இன்னிவரைக்கும் ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி பெரிய விஞ்ஞானியாகனும்னு ஆசைப்பட்டேன், முடியல :):):)
//எங்கே படிக்கிறீங்க தம்பி கேள்விக்கு, நௌன்னை பலவிதமாக கூறலாம் என்ற பாலபாடத்தில், ஐ.ஐ.டி என்று என்.ஐ.ஐ.டியில் 'என்'னை சைலண்டாக்கிவிடுவேன்.//
எப்படி ங்க இப்படியெல்லாம் யோசிக்கறீங்க..... :)))))))
//அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார். //
மாமா வோட ஆசைய நிறைவேத்துனீங்களா ன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.சீக்கிரம் சொல்லுங்க.......
//'ஹேவ் எ ஹாப்பி பீரியட்" என்று மாதவிடாய்க்கு டீ.வி அட்வர்ட்டைசன்மென்ட்டில் பெண்கள் வாழ்த்துச் சொல்லிக்குமளவு முன்னேறாத ஒரு கால கட்டத்தில்//
வேறு உதாரணம் சொல்லி இருக்கலாமோ ன்னு தோனுது.
Kathir.
இப்பொதான் டேக் ஆஃபாகி அசத்தலா பொயிட்டிருக்கு.
//அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார்//
கண்டிப்பா சரோஜ் நாராயணசுவாமி குரல் கேட்ருக்குமே. :-))))))
//ஒவ்வொரு எழுத்தாக மானிட்டரின் மேல் மூலையிலிருந்து விழ ஆரம்பிக்கும் அது கீழே விழுவதற்க்குள் அந்த எழுத்தை கீபோர்ட்டில் அழுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் வெல்டன் சொல்லும். இது தான் பயிற்சி. க்ளாசில் என்னையும் அம்மாபட்டி சிட்டிசனையும் தவிர யாரும் இந்த ப்ரோக்கிராமை மதிக்கவே இல்லை. வேறேதோ செய்து லெவல் காட்டிக்கொண்டிருந்தார்கள். "பாஸ் இப்ப என் டர்ன்...நான் உங்கள விட ஒரு செகென்ட் முன்னாடியே பிடிச்சிருவேன் பாருங்க"ன்னு சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.//
சூப்பர்:-)))))))))
கலக்குங்க அண்ணாச்சி......
Indha postukku comment podaama ponaa yeppadi. Awesome Thalaiva keep going...
Keep Rocking...
-Arun.
கலக்குங்க டுபுக்கு... ஆனா திடீர்னு IITக்கு போயிட்டீங்க, 'கொலு' சேகர் என்னார்னு சொல்லவேயில்ல.. :)
ippidiyellam aagum nu therinju thane naangallam tirunelveliliye computer point le ainooru ruvaayku "C" padichom...
Enoda ariva mechi "Raja..nee pesama gaurava studenta ayko...certificate post le anuparom...computer soodardhu matum than micham..poituvappo" nu anupchuta angayum...
Hmm..ipo enada na adhe dandanakkava US la vandhu vikka vendirku..
Ummachi than kaapaathanum
great work.romba enjoy panni padichen.(siriiithen).thangamani onnum kandukardhilla polirukku.illana veetila tom and jerrry kadha illa ayirkanum.thangamani muraipukkellam ippa payapadarthilla polirukku!!!!!
carry on,keep going sir......
nivi.
"ellam pondattiku payantha pasanga"-namma koudamani stylelil padinga(padam maranthu pochu)-isthripotti
கலக்கல் வழக்கம் போல.
சென்னை பஸ் ரயில் பைக் கதையும் சேர்த்து எழுதுங்க சார். இன்னும் சுவாரஸ்யம் இருக்கும்.
குப்பன்_யாஹூ
//அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார். //
ஹிஹி, சிரிப்பை அடக்க முடியலை என்னால, நாங்களும் அந்த ரேடியோ செய்தியை அப்பப்ப கேட்டுட்டு இருந்தோம். :p
Kelappals of India... Nalla varuvenga thambi, Na Unka kitta irunthu innum neraiya ethirpakkara!
Hi Dubukku
I am long time silent fan of your blog. Couldn't be silent after the latest 3posts. Simply awesome.
Officela personal vishyathilnala depresseda irudhadhu ungaloda latest blogs padichi bayangara siripu.
super you should compile a book of all your experiences
hilarious post .. i wonder if other languages have this kind of humor .. pudavai kattina pongal ... aani pudungarathu etc.. and you have mastered the art of humurous writing ... nagaichuvai mannan enra patta peyar alikkapadugirathu .. venumna vechukonga illana vitrunga .. :)
hilarious post .. i wonder if other languages have this kind of humor .. pudavai kattina pongal ... aani pudungarathu etc.. and you have mastered the art of humurous writing ... nagaichuvai mannan enra patta peyar alikkapadugirathu .. venumna vechukonga illana vitrunga .. :)
hilarious post .. i wonder if other languages have this kind of humor .. pudavai kattina pongal ... aani pudungarathu etc.. and you have mastered the art of humurous writing ... nagaichuvai mannan enra patta peyar alikkapadugirathu .. venumna vechukonga illana vitrunga .. :)
\\ நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன் \\
ஆபீஸ்-ல பயங்கர கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல???? தொடர்ந்து மூணு போஸ்ட் போட்டுட்டீங்க... எல்லாமே அசத்தல்... கலக்கிட்டீங்க...
அண்ணே கலக்கிட்டீங்க! ஒரு விரல் டைப்பிங்கில் கம்ப்யூட்டரை மண்டியிடச் செய்யும் போதே இவ்வளவு ஜொள்ஸா?!
ஹி.. ஹி..! நாங்களும் விக்ரம் கதையை குமுதத்தில் தொடர்கதையா படிச்சும், வந்த சந்தேகங்களை படம் வந்த பிறகு பார்த்து க்ளியர் பண்ணிகிட்டும், கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துகிட்டவங்கதான்!! இந்த லட்சணத்துல, நம்ம schoolmates வேற பிற்காலத்தில் CPU என்றும் BOX என்றும் விளிக்கப்படும் வஸ்துதான் மானிட்டர் என்று நம்மகிட்டயே ரீல் ஓட்டினார்கள். டேய், விக்ரம் கதையை கரைச்சு குடிச்ச எங்கிட்டயே சவாலான்னு வூடு கட்டி அடிச்சும் ஒன்னும் வேலை ஆகலை. அப்புறம் தண்ணீ தெளிச்சு விட்டுட்டேன். பிற்காலத்தில் இவனுகளெல்லாம் பெரிய கம்ப்யூட்டர் மேதைகளாகிவிட்டார்கள் என்பது பிட் செய்தி!!
"வடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன்.
thala full form la poitrukinga keep it up. by thanjai gemini
Too Gud.
Kalakiteenga poonga...
keep Rocking as always ...
- Raji
கலக்கிட்டீங்க டுபுக்கு!
நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதினாலும், பட்டணம் போடி போல காரம், மணம், குணம் குறையாமல் எழுதறீங்க. Keep it up.
நானும் சங்கீதமும் (Feb25, 2004) முதல் ஜொள்ளித் திரிந்த காலம் - 2.3 வரை எல்லா பதிவுகளையும் இரண்டு நாட்களில் படித்து விட்டேன், மிக அருமை. புதிய பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.
DUBUKKUJI MAAN THANJAI GEMINI. POST PADICHEN ORU TIME ILLA PALAMURAI PADICHEN PURIYAAMA ILLA OVVORU TIME PADIKKUM POTHUM PUTHUSA PADIKKIRAPPLAYE IRUKKUTHU. NALLQA SIRICHEN THANKS 2 THIS GOOD POST. கிளியும் நானும், அம்மாபட்டியும் இன்னொரு பெண்ணும், ரெமோவும் அவன் நண்பியும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது NU THEERPPU SOLLI NAMMA NAATAMAAVEY MINJITEENGA.
First time here. Ippadi oru blog-i thaan romba naatkallaaga thedikondirundaen. Chumma kalakkareenga! Blogrolling you :)
romba supera irunthuthu ! adutha bagathukkaga 15 days a waiting .. ;)
ரசித்துப் படித்தேன்
romba super-a irukku... good humour. also i read ur blog abt death(saavu). sirichi, sirichi kanla thanni vanthurichi ponga... i enjoy reading...
inniku enna date? enna achu post.idhu sari illaye-isthri potti
anna neenga entha varusham entha batch... enakku oru party weighta pongal vachaango!... but I have had one funny experience first day of my machine room..Ran away from the room while I was sincerely working on copy command on the DOS prompt screen saver popped up I ran away from the MR.
I have set ur blog as Home page..everyday new post varum varum-nu parthu parthu yemandhu poitten..Pls dont disappoint us..
கொத்ஸ் - ஹீ ஹீ அதெல்லாம் ஆல் இந்தியா பெர்மிட் வாங்கி வைச்சிருக்கோம்ல :)) அம்மாபட்டிய உங்களுக்கு தெரியாது அவனுக்கு மதுரை பக்கம்.
மகேஷ் - ட்ரை பண்றேங்கன்னா...ஓ கண்டிப்பா வரேன். நீங்களும் அடிக்கடி கண்டுக்கோங்க தல.
துளசி - யெக்கோவ்...வாங்க ரொம்ப டேங்கஸ் உங்க பாராட்டுக்கு (பாராட்டு தானே?)
ரம்யா - வாங்க மேடம். நன்றி ஹை உங்க பாராட்டுக்கு.
ஸ்ரீதர் - ஆமாங்க கொஞ்ச நஞ்ச லெவலா காட்டியிருக்கோம் :))) டேங்க்ஸ் ஹை
ஆயில்யன் - உண்மையிலேயே அதெல்லாம் சொல்லித் தருவாங்கன்னு நினைச்சோம்ங்க...ஏமாத்திட்டாங்க. :)) கொத்ஸ் சொல்றத பார்த்தா எனக்கும் அப்பிடித் தான் தோனுது :)))
இஸ்திரி பொட்டி - ஆமாங்க நம்ம ஹிஸ்டரில அத மாதிரி நிறைய ஊத்தல்ஸ் இருக்கு :)) ஆமா வீட்டுல ஆல் இந்தியா பெர்மிட் வாங்கியிருக்கேன்
அரசு - வாங்க டேங்க்ஸ்...பாருங்க நீங்க கண்ணப் போட்டு அடுத்த போஸ்டுக்கு மூனு வாரமகிடிச்சு :))
அம்பி - ரொம்ப நன்னி
ராப் - நீங்க அரவிந்த்சாமியா??...இடிக்குதே :))) இப்பவும் வீட்டுல பாண்டியராஜன் மாதிரி தான் முழிப்பேன் :)
கதிர் - அந்த உதாரணம் நெருடலா இருக்கா என்ன? திரும்ப படித்துப் பார்த்தேன் எனக்கு ரொம்ப வித்தியாசமாய் படவில்லை...பட் பாயிண்ட் நோட்டட் டேங்க்ஸ். ஆல் இந்தியா ...ஏங்க கிளறறீங்க...ஆனா ரொம்ப நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணினேன் :))
வள்ளி நாயகம் - ஆமாங்க அந்த டயலாக் வரும்போதெல்லாம் சரோஜ் நாரயண்ஸ்வாமி தான் நியாபகத்துக்கு வருவார் :)) என்ன ஒரு கம்பீரமான குரல் இல்ல?...உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி
அருண் - மிக்க நன்றி தலைவா..அடிக்கடி வாங்க
நாடோடி - அந்த டார்ட்டாய்ஸ் அவ்வளவு தான்...கொலு சேகர் ரொம்ப நாளாச்சு பார்த்து. ஆனா அதே மாதிரி படம் காட்டிக்கிட்டிருப்பார்ன்னு கண்டிப்பா நம்பிக்கையிருக்கு :))
அஷ்வின் - கௌரவ ஸ்டூடண்ட்...ஹீ ஹீ சூப்பர். அத சொல்லுங்க நம்பள வெள்ளக்காரன் நம்புறானே...என்ன்னத சொல்ல் :)))
நிவி - வாங்க. ஆமாங்க தங்கமணி இதெல்லாம் சொல்லித் திருந்தற கேஸ் இல்லைன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க :)) உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
இச்திரி பொட்டி - :))))))))))))) ஆமாங்க...சுத்திமுத்தி பார்த்துட்டு தான் நானும் சொல்றேங்க :))
குப்பன் - வாங்க சார். ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு... கண்டிப்பா முயற்சிக்க்கிறேன்
அம்பி - டேய் இங்க நல்லாத்தான் சிரிக்கிற ஆனா கரெக்ட்டா சமயம் பார்த்து அண்ணனும் தம்பியும் போட்டுக்குடுத்திடறீங்க :))))
கார்த்தி - ரொம்ப டேங்கஸ் சார்...நான் வில்லனா இருந்த்துட்டே அப்புறம் ஹீரோவா ஆகுறேன் சார் :)))
கீதா - ரொம்ப டேங்க்ஸ்...ஹீ ஹீ போன்ல சொன்ன மாதிரி வீட்டுல மட்டும் போட்டுக்குடுத்திடாதீங்க
பாவை - ரொம்ப டேங்கஸ் மேடம் நீங்க குடுத்து நான் வாங்காமலா...தன்யனானேன் ரொம்ப ஊக்கமா இருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ்..மூனு தரம் வேற குடுத்திருக்கீங்க :))
வீரா - பார்தீங்களா கண்ணு போட்டு இப்ப பாருங்க மூனு வாரம் ஆகிடிச்சு :))) மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு
செயின் ஜெயபால் - :)))) வாங்க ஜெயபால் அண்ணே, நீங்க விக்ரம் காலேஜ் தானே...ஹீ ஹீ நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்...நம்பள நம்பி கம்ப்யூட்டர் மேதகளாகிட்டாங்க....
தஞ்சை ஜெமினி - வாங்க சார் நன்றி ஹை
ராஜி - வாங்க ரொம்ப டேங்க்ஸ் மேடம் உங்க பாராட்டுக்கு...முயற்சிக்கிறேன்
தமிழ் ஜங்சன் - தகவலுக்கு மிக்க நன்றி
டிடிடி - நன்றி ஹை...பட்டணம் பொடி டயலாக் நியாபகப்படுத்திட்டீங்க :))
கார்த்திகேயன் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. அடுத்த பதிவு கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இதோ இன்று போட்டுவிடுவேன்.
ஜெமினி - வாங்க மீண்டும் படித்து கமெண்ட்டு போட்டதற்கு நன்றி. உங்க பாராட்டு ஊக்கமாக இருக்கிறது.
ஆர்ஜீ - வாங்க ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு. அடிக்கடி வாங்க
அனந்தா - கிருஷ்ணன் - ரொம்ப நன்றி. சாரி அடுத்த பதிவு ரொம்ப லேட்டாகிவிட்டது. மன்னிக்கவும்.
சங்கர் - வாங்க மிக்க நன்றி
உத்ரா - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.
இஸ்திரி பொட்டி - மன்னிச்சிக்கோங்க தல...கொஞ்சம் லேட்டாகிவிட்டது...ஆபீஸ்ல சொன்னா கேட்டாத் தானே...ராவடி பசங்க... :P
வினோ - நான் 95. ஹீ ஹீ அத மாதிரி நிறைய நடந்திருக்கு எனக்கு வேலைக்கு வந்த அப்புறம். :))
லங்கினி - மேடம் மன்னிச்சிக்கோங்க...கொஞ்சம் லேட்டாகிடிச்சு...இதோ அடுத்த பதிவ போட்டுக்கிட்டே இருக்கேன். உங்க ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. கடமைப்பட்டுள்ளேன்.
அண்ணே, அரவிந்தசாமி அதுல ஒரு பெத்த விஞ்ஞானியா வருவாரில்லையா:):):) , அதைச் சொன்னேன். எங்க வீட்ல நான் இவரை கண்ணாலம் கட்னதே அந்தக் காரணத்தாலதன்னு, இன்னி வரைக்கும் கலாய்ப்பாங்க, அவ்வ்வ்வ்..............
//
சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மப்பில் கிளி இம்பெரெஸாகிப் பார்த்துகொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.
//
haa haa
sema kalakkal
நண்பரே, புடவையாத்தா பொங்கல் வைக்கிற வேலை பல வருடமா நடக்குதா?
அடங்கொய்யாலே, நான்தான் 1998-ல, முதல்ல மாட்டுன எலி-ன்னு நினைச்சேன். எனக்கு முன்னோர்கள் நிறைய இருக்காங்களா?
சரி...சரி.. பழைய அடிய பத்தி பேசி இப்ப என்ன பண்றது? விடுங்க..விடுங்க..
ஆனா தொடர்ந்து ஜொள்ளுங்க... நிறுத்திராதீங்க....
லக்ஷ்மணன், துபாய்.
Post a Comment