ஒரு தன்னிலை விளக்கம் இங்கே குடுத்துவிடுகிறேன். எனக்கு படமெடுக்கும் அனுபவம் பூஜ்ஜியத்துக்குப் பக்கம். நான் தமிழ், இந்தி, ஆங்கிலம், தேர்ந்தெடுத்த தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களை மட்டுமே பார்ப்பேன் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் என்னுடைய டேஸ்ட் ரொம்ப ரொம்ப சராசரியானது தான். எனக்கு ஆர்ட் ஃப்லிம்ஸ் என்பதை விட திரைக்கதையில் சித்து வேலை காட்டி மயக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும். பார்வையாளர்களைக் கட்டிப் போட திரைக்கதை தான் அஸ்திவாரம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். கதை சொல்லும் யுக்தி ரொம்ப முக்கியம். தம் அடிப்பதற்க்கோ கைக்கடிகாரத்தை பார்ப்பதற்க்கோ பார்வையாளர்களுக்கு திரைக்கதை சந்தர்ப்பமே அளிக்கக்கூடாது. அவர்களை படத்தோடு ஒன்றிப்போக வைக்கவேண்டும். நீங்கள் நல்ல படம் என்று நினைக்கும் எந்த படமும் இந்த கிரைட்டீரியாவில் சோடை போகாது.
இது போக சிலபடங்களில் டைரக்டரின் அறிவுஜீவித்தனம் படத்திற்கு மேலும் மெருகூட்டும். இந்த மாதிரிப் படங்கள் இந்தக் காரணத்துக்காக எனக்கு வெகுநாள் மனதில் நிற்கும். மனோஜ் ஷ்யாமளனின் சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் தி வில்லேஜ், தி ரிங்க், விருமாண்டி, காக்க காக்க(சில இடங்கள்) போன்றவை எனக்கு உடனே மனதில் தோன்றும் உதாரணங்கள். ஸ்கிரீன் ப்ளே வித்தை தெரிந்தால் நமக்கு தெரிந்த ஒரு சாதாரண கதையைக் கூட ப்ளாகில் பின்னிப் பெடலெடுக்கலாம். நான் மிகச் சிறந்த பதிவுகள் என்று நினைக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. ஆசிப் அண்ணாச்சி வித்தை காட்டியிருப்பார் படித்துப் பாருங்கள்.
வலுவான திரைக்கதைக்கு தமிழில் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு தங்கர் பச்சானின் திரைக்கதை பிடிக்கும், சமீபத்தில் வந்த ஒன்பது ரூபாய் நோட்டு பிடித்தது. இதுபோக கல்லூரி, அஞ்சாதே, பிடிச்சிருக்கு எல்லா படங்களிலும் கட்டிப்போட வைக்கும் திரைக்கதை அமைப்பு.
இதைத் தாண்டி சினிமாவையே வாழ்ந்து கொண்டிருப்பவரக்ள் ஈடுபாடுடன் எடுக்கும் படங்களைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இன்றளவுக்கும் சினிமா யுனிவர்சிட்டியாக இருப்பது "லார்ட் ஆப் த ரிங்க்ஸ்". இந்தப் படத்தை இதுவரை எத்தனை தடவை பார்த்திருக்கிறேன் என்ற கணக்க்கு வைத்துக்கொள்ளவில்லை ஆனால் ஓவ்வொரு தடவை பார்க்கும்போதும் பீட்டர் ஜாக்ஸனின் ஈடுபாடு படத்தில் ப்ரேமுக்கு ப்ரேம் தெரியும், மெய்சிலிர்க்க வைக்கும். சாண்டில்யனின் "கடல் புறா"வை துளியும் சுவாரசியம் குறையாமல் எடுக்க பீட்டர் ஜாக்ஸனினால் மட்டும் தான் முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இத்துனை ஈடுபாடு கொண்டவர்கள் வேறு யாரையும் நான் இன்று வரை கேள்விப்பட்டதில்லை.
குறும் படங்களோ, முழுப் படங்களோ எதுவாகிலும் எடுப்பதற்கு ப்ரொபஷனல் கேமிரா வேண்டும், மற்றபடி பெரிய பெரிய உபகரணங்கள் வேண்டும் என்ற என் எண்ணத்தை அன்றைக்கு என்னை வைத்து குறும் படமெடுத்த அம்மணி உடைத்தெறிந்தார். குறும்படங்களை பொறுத்த வரை உங்கள் க்ரியேட்டிவிட்டி தான் முக்கியம் மற்றபடி உபகரணங்கள் எல்லாம் பெரிய பொருட்டே இல்லை என்ற பால பாடத்தை போதித்தார். மொபைல் ஃபோன் கேமிராவில் கூட சில வெள்ளைக்காரர்கள் பிஸ்து காட்டியிருக்கிறார்கள் என்ற அவர் சொன்ன போது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
சரி முதலில் ஒரு குறும் படம் மாதிரி ஒன்னு எடுக்கலாம் என்று கிளம்பிவிட்டேன். நான் ஹெல்ப் பண்ணட்டுமான்னு என் இரண்டு பெண்களும் குஷியாகிவிட்டார்கள். தங்கமணி "இதெல்லாம் படமெடுத்து தேறின மாதிரி தான்" என்று உஷாராக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு என்று கையை விரித்துவிட்டார். "சீக்கிரம் சாப்பாடு போடும்மா...முடிச்சிட்டு டைரக்டருக்கு ஸ்டோரி டிஸ்கஷன் இருக்கு..." அலம்பலெல்லாம் முதல் கொஞ்ச நாட்கள் வொர்க் அவுட் ஆயிற்று. ஆனால் எதைப் பற்றி எடுப்பது என்று மண்டை காய்ந்துவிட்டது. பாட்டு கேட்டால் கிரியேட்டிவிட்டி கூடுமென்று பெட்ரூமில் கதவைச் சாத்திக் கொண்டு பாட்டை ஓடவிட்டதில் தூக்கம் சொக்கியதே தவிர கிரியேட்டிவிட்டி கிணத்தில் போட்ட கல்லாக இருந்தது. மூனு மணிக்கு டீயும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டால் கிரியேட்டிவிட்டி களை கட்டும் என்று தங்கமணியை தாஜா கட்டி ஒரு தரம் ஓடியது. இருந்தாலும் க்ரியேட்டிவிட்டி கிலோ என்ன விலை என்று பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது.
சரி இன்டர்நெட்டை மேய்ந்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று மேய்ந்ததில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் நடிக்கும் போது முத்தா குடுக்க ரொம்ப கூச்சப் படுகிறார் என்று கதாநாயகியே இழுத்துபிடித்து முத்தா குடுத்து டேக்கை ஓக்கே செய்தார் என்று நண்பன் அனுப்பிய துணுக்கில் பிலிம் டெக்னாலஜி பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த கிசு கிசு படிக்கிறதுக்கெல்லாம் மிளகாய் பஜ்ஜி போட்டு கட்டுப்படியாகாது என்று தங்கமணி வெளியிலிருந்து குடுத்த ஆதரவையும் வாபஸ் வாங்கிவிட்டார்.
சரி நமக்கு இந்த படம் எடுக்கிறதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது "என்னய்யா படம் எடுத்திருக்கான் வெங்காயம்"ன்னு திரைவிமர்சனத்துக்கே போய்விடலாமா என்று கூட யோசித்தேன். தங்கமணி வேறு சிரிப்பான சிரிப்பாய் சிரித்து பிரஷரை ஏத்திக் கொண்டிருந்தார்.
சரி இதுக்குமேல ஆகாது என்று ஏனோதானோ என்று படப்பிடிப்பு ஆரம்பமானது.
-தொடரும்
Tuesday, March 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
Eppavum pola kalakal post.
- Vijay
//என்னய்யா படம் எடுத்திருக்கான் வெங்காயம்"ன்னு //
உள்குத்து ஒண்ணும் இல்லையே!! :))
எண்ணத்தை அன்றைக்கு என்னை வைத்து குறும் படமெடுத்த அம்மணி உடைத்தெறிந்தார். குறும்படங்களை பொறுத்த வரை உங்கள் க்ரியேட்டிவிட்டி தான் முக்கியம் மற்றபடி உபகரணங்கள் எல்லாம் பெரிய பொருட்டே இல்லை என்ற பால பாடத்தை போதித்தார்.//
இந்த அம்மணி உங்க தங்க அம்மணி தானே:))
ம்ம். சீக்கிரம் எடுங்க சார்.
ஹைய்யோ...:-))))))))
டுபுக்ஸ்,
உம்ம ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது ஓய்! என்னைக்கு இருந்தாலும் நாந்தேன் உம்ம ஆஸ்தான போட்டோகிராபரு என்பதனை நாளைய வரலாறு மறந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு பதிவுசெய்து கொள்கிறேன்.
இந்த படத்தை பாருங்க! http://www.imdb.com/title/tt0209144/.
உச்சி சிலிர்த்து மயிரெல்லாம் நட்டுக்கும்! அம்புட்டு சூப்பரான திரைக்கதை. இதைத்தான் நம்மாளுக கஜினியாக மிகச்சிறப்பா உல்டா செஞ்ஜாய்ங்க...
இதை நீர் இன்னிக்கே பார்த்து இந்த வாரத்துக்குள் இதன் திரைக்கதையை சிலாகித்து ஒரு பதிவு போடக்கடவது! :)
nalla analysis.thangamani madam,bajjiyil ethana vagai undo adhellam pannikodunga.thirai(udha )cha kadha vandhe agganum.thane thiraikadai ezuthiya thanai thalaivan vazhga!!!!!!naanga gosham poda rediya irukkom sir!!!!!!!!jokes apart,creative genius indiavila kooda niraya per irukkanga,indha field romba perisu ,endaro mahanu bavulu !!!
all the best.mount roadla unga nahathukku 70adila cutout vaikirom.:)))
- isthri potti
//
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் நடிக்கும் போது முத்தா குடுக்க ரொம்ப கூச்சப் படுகிறார் என்று கதாநாயகியே இழுத்துபிடித்து முத்தா குடுத்து டேக்கை ஓக்கே செய்தார் என்று நண்பன் அனுப்பிய துணுக்கில் பிலிம் டெக்னாலஜி பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.
//
Cool.
இது மாதிரி நிறைய தெரிஞ்சிக்கங்க!! அப்பதான் கோலிவுட் பக்கம் கால் வைக்க முடியும்!!
aama ninga padam edutheingala illaiya?
//சாண்டில்யனின் "கடல் புறா"வை துளியும் சுவாரசியம் குறையாமல் எடுக்க பீட்டர் ஜாக்ஸனினால் மட்டும் தான் முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்//
ஏன்...
பரமக்குடித் தமிழனால் முடியும் என்று ஏன் நம்ப மாட்டேங்கறீங்க?
மருதநாயகத்துக்கு அடுத்து கடல்புறா-ன்னு உங்க இயக்குனர் டிஸ்கஸனில் சொல்லைலையா அண்ணாத்த? :-))
Hmm So story discussion start ayidichu pola..good job dubukks..enna madiri padam edukka poreenga action(generalah ketten pa..unga vettu kadai illa) or comedy ( cha cha personal life ellam kekkala !!)
மற்றுமொரு PJ விசிறியா?
அப்புறம், இப்படி திரைக்கதையெல்லாம் புட்டு புட்டு வக்கிறாரே.. இம்புட்டு தெறமைய வச்சுகிட்டு ஏன் சான்ஸ் இல்லாம இருக்காருனு யோசிச்சுட்டே வந்த போது போட்டிரே ஒரு பிட்ட.. பிலிம் டெக்னாலஜி படிக்க உம்மளோட சோர்ஸ்னு.. வாழ்க!
புதுவருஷத்துக்கு சொன்னதோட நிக்காம, சீக்கிரமே ஒரு படத்துல ஆஞ்சலீனாவோட 'தெறம' காட்ட/பார்க்க வாழ்த்துகள்!
திரைக்கதையின் ஜாலங்கள் தெரிந்தால் பின்னி பெடல் எடுக்கலாம் - ரொம்ப கரக்ட். இதுக்கு தமிழ் சினிமாவில் பாக்யராஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஷ்யாமளானின் ஆறாவது அறிவு, உலகை பொரட்டி எடுத்த படம். இப்படத்தில் கதை என்பதை விட, திரைக்கதையில் ரீலை ஓட்டி இருக்கும் திறன், அனியாய சாதனை. இதன் இன்ஸ்பிரேஷனில் என்னோட சில கதைகள் . முடிந்தால் படிக்கவும் :-)
http://kittu-mama-solraan.blogspot.com/2007/03/help-me-please.html
http://kittu-mama-solraan.blogspot.com/2006/10/case-closed.html
http://kittu-mama-solraan.blogspot.com/2006/10/wake-me-up.html
http://kittu-mama-solraan.blogspot.com/2006/12/aggitated-crows.html
//
மொபைல் ஃபோன் கேமிராவில் கூட சில வெள்ளைக்காரர்கள் பிஸ்து காட்டியிருக்கிறார்கள் என்ற அவர் சொன்ன போது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
//
எனக்கும் கொஞ்ச தெம்பாத்தான் இருக்கு இத கேட்டா :-)
//
சீக்கிரம் சாப்பாடு போடும்மா...முடிச்சிட்டு டைரக்டருக்கு ஸ்டோரி டிஸ்கஷன் இருக்கு..." அலம்பலெல்லாம் முதல் கொஞ்ச நாட்கள் வொர்க் அவுட் ஆயிற்று
//
haaaaaaaa. செம காமடி :-)
//
இந்த கிசு கிசு படிக்கிறதுக்கெல்லாம் மிளகாய் பஜ்ஜி போட்டு கட்டுப்படியாகாது என்று தங்கமணி வெளியிலிருந்து குடுத்த ஆதரவையும் வாபஸ் வாங்கிவிட்டார்//
இது ultimate
//
சரி இதுக்குமேல ஆகாது என்று ஏனோதானோ என்று படப்பிடிப்பு ஆரம்பமானது.//
அப்படி போடுங்க டுபுக்கு. சீக்கிரம் கதைக்காக வேய்ட்டீஸ் நான்
நீங்க எடுக்க போறது குறும்படமா இல்லை குறும்பான படமா ???
சீக்கிரம் படத்தை எடுத்து அதோட கதையை இங்கே பதியவும்
/* "என்னய்யா படம் எடுத்திருக்கான் வெங்காயம்"ன்னு திரைவிமர்சனத்துக்கே போய்விடலாமா என்று கூட யோசித்தேன். */ - நாமெல்லாம் புலவர் ஆகாவிட்டாலும் ....கண்டிப்பாய் குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர் ஆவது நிரம்ப சுலபம் (துர்லபம்?)..பின்னூட்டத்தினுடைய தாத்பர்யமே அதுதானே...
இந்த குறும்படம் பற்றி நாமிருவரும் தொலைபேசியில் உரையாடிய பொழுது...தாங்கள் சிறிய மேற்கோள் காட்டியதாக நினைவு. மிகவும் எதிர்பார்க்கிறேன்.
ஹ்ம்ம்... அப்புறம்?
முடிந்தால் உங்க 'குறும்' படத்தை யுட்யூப் போல எங்காவது ப்ரிவியூ பாக்க வழி செய்யுங்க. "என்னய்யா படம் எடுத்திருக்கான் வெங்காயம்" விமர்சனம் பண்ண நிறைய பேர் காத்திட்டு இருக்கோம். :-))
////சாண்டில்யனின் "கடல் புறா"வை துளியும் சுவாரசியம் குறையாமல் எடுக்க பீட்டர் ஜாக்ஸனினால் மட்டும் தான் முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்//
ஏன்...
பரமக்குடித் தமிழனால் முடியும் என்று ஏன் நம்ப மாட்டேங்கறீங்க?
மருதநாயகத்துக்கு அடுத்து கடல்புறா-ன்னு உங்க இயக்குனர் டிஸ்கஸனில் சொல்லைலையா அண்ணாத்த? :-))//
ஏம்ப்பா...பீட்டர் ஜாக்ஸன் எடுத்தா என்ன? அவர் எப்பவும் இங்கே நியூஸியில்தான் லொகேஷன் வச்சுக்குவார். அப்படியே எனக்கும் எதாவது நடிக்கச் சான்ஸ் வாங்கிக்கலாம்னு இருக்கேன்.
இதுலேயும் மாமியார் கேரக்ட்டர் இருக்காதா என்ன? இல்லேன்னாலும் உருவாக்கலாம். கஷ்டமா என்ன?
/* இந்த அம்மணி உங்க தங்க அம்மணி தானே:)) */ - தல.... வல்லிசிம்ஹன் உங்க குடும்பத்துல குண்டு வெக்கராங்க...ஜாக்கிரதை.
விஜய் - ரொம்ப டேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு
கொத்ஸ் - பிரியலையே...இதுல என்ன உள்குத்து...ஐய்யா நான் பச்ச மண்ணுய்யா...விளக்குங்கய்யா
வல்லிசிம்ஹன் - இல்லீங்கோவ் இது வேற அம்மணி
துளசி - டீச்சர் நம்மபாடு உங்களுக்கு சிரிப்பா இருக்கு :))
இளவஞ்சி - ஆஹா என்ன பாக்கியம் செய்தனை. ஆஸ்தான போட்டோகிராபர மறக்கமுடியுமா... அண்ணே திரும்ப இந்தப் பக்கம் வந்தாச்சா? வந்தாச்சுன்னா சி.டிய தட்டி விடறது...இல்லைன்னா இந்தப் படம் எங்கன கிடைக்கும்னு சொன்னா நாங்களும் பார்ப்போம்ல :)) பரிந்துரைக்கு மிக்க நன்றி கண்டிப்பாக பார்க்க ட்ரை பண்ணுகிறேன்.
அனானி - உங்க ரெக்கமென்டேஷனுக்கு மிக்க நன்றி. நீங்க சொல்ற மாதிரி இந்தியால நிறைய திறமை இருக்கு ரொம்ப சரி. மூளைக்கு நம்மளுக்கு குறைச்சலே இல்லை ஆனா இந்த ஏ, பி,சி சென்டருக்கு பண்ற காம்ப்ரமைஸ் அதிகம். காம்ப்ரமைஸ் இல்லாத இத்தனை பெரிய பிரம்மாண்ட தயாரிப்பு எத்தனை இருக்குன்னு சொல்லுங்க. நம்மாளுங்க ஐயிட்டம் சாங்குக்கு அமெரிக்கா போறதுக்கு கொட்றாங்க ஆனா சில விஷயங்களுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறாங்க அட்லீஸ்ட் தமிழ்லயாவது அப்படித்தான் இருக்கு ....நீங்க என்ன நினைக்கிறீங்க?
இஸ்திரி பொட்டி - அடாடா உங்க அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிதுங்க...(உண்மையா தானே சொன்னீங்க இல்ல சும்மா உலோலோலாயிக்கா?)
மங்களூர் சிவா - நம்பளை வைச்சு காமெடி பண்றீங்க :)))))
அனானி - எடுக்காமலையா...இன்னிக்கு படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்.
கே.ஆர்.எஸ் - பரமகுடி தமிழன் நடிக்கிறதுக்கு சொல்லுங்க...நானும் உங்க கட்சி. ஆனா தயாரிப்புக்கு...கொஞ்சம் டவுட்டா இருக்கு...
ரம்யா - ஆஹா சொல்லலை சொல்லலைன்னு நல்லாவே கவுத்திறீங்களே..:)))
இராமநாதன் - செய்வோம்ல :))) ஏஞ்சி அம்மா திரும்பவும் மாசமா இருக்காங்க தெரியுமா...கால்ஷீட் கிடைக்குமான்னு தெரியலை :))
கிட்டு - அண்ணே உங்க கதைகள இன்னிக்குப் படிக்கிறேன். நேத்து இங்க கனெக்க்ஷன் கவுத்திரிச்சு :)) இன்னிக்கு நான் எடுத்த குறும்படத்தை இங்க ப்ளாக்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன் :))
மச்சி - வெறும் குறும் படம் தாங்க..இன்னிக்கு போடறேன்.
இராமச்சந்திரன் - அண்ணே நேத்திக்கே போடனும்னு இருந்தேன்...அதான் சீக்கிரம் தூங்கி பாதிரி ராத்திரி வேலை செய்ய ஆரம்பிச்சா...கவுத்திரிச்சு
ஸ்ரீதர் நாராயணன - தோ இன்னிக்கு ரிலீஸ் பண்ணிடலாம்னு இருக்கேன் :))
துளசி - டீச்சர் லார்ட் ஆப் த ரிங்க்ஸ் மேக்கிங்ல உங்க ஊரப் பார்த்துட்டு அசந்தே போயிட்டேன்...உங்க ஊருக்கு கண்டிப்பா ஒரு நாள் வருவோம்...ஒரு வேளை நான் எடுக்கப் போற் படத்துல சான்ஸ் குடுத்தா நல்ல கவனிப்பீங்களா? :))
டுபுக்ஸ்,
படம் ஓசில இங்கன கிடைக்கும். நல்ல குவாலிடியான ப்ரிண்ட்டு தான். பார்த்துட்டு ஒரு தபா கண்ணத்துல போட்டுக்கங்கப்பு! :)
http://tv-links.cc/movie/memento-.htm
Post a Comment