Wednesday, February 27, 2008

ரயில் ஸ்னேகங்கள்

இருபத்தி ஐந்தாம் பக்கம் வந்தும் அந்த புஸ்தகம் போரடித்துக்கொண்டிருந்தது. அதற்கு மேலும் அதைப் புரட்ட மனதில்லாமல் ட்ரெயினில் பராக்க பார்க்க ஆரம்பித்தேன். அண்டர்கிரவுண்ட் டெரெயினில் வெளியே ஒன்றும் தெரியாது என்பதால் கம்பார்ட்மென்ட்டில் இருப்பவர்களைத் தான் பாராக்கபார்க்கவேண்டும். "இந்த வெள்ளக்காரர்களுக்கு மட்டும் பொது இடத்தில் கஷ்கத்தில் சொறியவே செய்யாதா...எப்படி சமாளிக்கிறார்கள்" என்பது போன்ற அறிவுஜீவித்தனங்கள் இந்த நேரங்களில் தான் சில சமயம் பிரகாசிக்கும். இன்ன பிற நேரங்களில் நம்ம நேரத்துக்கு ஒரு வெள்ளக்கார குத்துவிளக்கு நின்று கொண்டிருக்கும் பக்கத்திலேயே இடுப்பை வளைத்துக்கொண்டு ஒருத்தன் குத்துவிளக்குக்கு பாலீஷ் போட்டு துடைத்துக் கொண்டிருப்பான். நடு நடுவே கே.டி.குஞ்சுமோன் பட ப்ஸ்ஸ்டாப்பில் நிற்பது மாதிரி முத்தம் குடுத்துக்கொள்வார்கள். நான் கிழக்கையும் மேற்கையும் திரும்பி யாராவது நான் பார்ப்பதைப் பார்க்கிறார்களா என்று சுத்தி முத்தி பார்த்து மீண்டும் குத்துவிளக்கு பாலீஷ் சர்வீஸை சூப்பர்வைஸ் செய்ய ஆரம்பிப்பதற்க்குள் மூக்கில் வேர்த்த மாதிரி பாலிஷ்காரன் குத்துவிளக்கை இழுத்துக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கிப் போய்விடுவான். நான் முன்னாடி நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது இருந்த வெள்ளைக்கார மாமா மட்டும் இன்னமும் இறங்கிப் போகாமல் குத்துக்கல்லாய் அப்பிடியே இருப்பார். இந்த இழவை யார் பார்ப்பது என்று நான் கண்ணை மூடிக் கொண்டு பில்லா நயன் தாரா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்துவிடுவேன்.

"ஏய் நேத்திக்கு ட்ராபல்கர் ஸ்கொயர் போயிருந்தேன் சூப்பரா இருந்தது" - திடீரென ஒலித்த அந்த சம்பாஷனை நிஷ்டையில் இருந்த என் தியானத்தைக் கலைத்தது. பில்லா சீனை பாஸ் செய்துவிட்டு கண்ணைத் இடுக்கி ஓட்டைக் கண் விட்டுப் பார்த்ததில் இரண்டு அம்மணிகள் என் சீட்டுக்கு முன்னாடி அமர்ந்திருந்தது தெரிந்தது. போட்டிருந்த சென்னை பாரிஸ் கார்னர் தொள தொளா லெதர் ஜாககெட் அனுமானத்தில் அனேகமாய் சூப்பராய் இருந்தது என்று சொன்ன அம்மணி போன வாரம் தான் முதன் முறையாய் இங்கிலாந்துக்கு வந்திருக்க வேண்டும். கூட இருந்த அம்மணி எம் அன்ட் எஸ் போட்டுக்கு கொண்டு உள்ளூர் எக்ஸ்பீரியன்ஸ் காட்டியிருந்தார்.

லண்டன் அண்டர்கிரவுண்டில் தமிழ் சம்பாஷனைகள் அவ்வளவு ஆச்சரியமான விஷயம் கிடையாது. கூட்டமான சென்ட்ரல் லைனில் "ங்கொய்யால இந்த வெள்ளக்காரன் குளிச்சி எத்தன நாளாச்சோ தெரியல கப்பு தாங்க முடியல...மச்சி லிவர்பூல் ஸ்ட்ரீட்ல இறங்கி அடுத்த ட்ரெயின் பிடிக்கலாமா ப்ளீஸ்", "வரும் போது டெஸ்கோல பிரெட் வாங்கிட்டு வந்திருடா..கதிர் இன்னும் ஆபிஸில தான் இருக்கான் இன்னும் பிராப்ளம் சால்வ் ஆகலை" - வாழ்வியல் பிரச்சனைகள் சகஜமாய் காதில் விழும் என்றாலும் இந்த மாதிரி இரண்டு அம்மணிகள் பேசிக் கேட்கும் பாக்யம் வாய்த்ததில்லை.

எனக்கு அடுத்தவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது பிடிக்காது என்பதாலும், அதுவும் பெண்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது அறவே பிடிக்காது என்பதாலும் காதைத் தீட்டிக் கொண்டு அவர்கள் பேசுவது அதுவாக எதாவது காதில் விழுந்தால் விழட்டும் என்று சிவனே என்று இருந்தேன்.

ஆனால் என்னளவுக்கு அந்தப் பெண்களுக்கு பொறுப்பு காணாது. என்னடா ஒரு மனுஷன் பில்லா நயன் தாராவை பாஸ் செய்துவிட்டு சிவனே என்று இருக்கானே என்று எண்ணாமல் புதிதாய் வந்த அம்மணி பக்கிங்ஹாம் பேலஸ் போனேன், பிக்காடிலி ஸ்கொயருக்குப் போனேன், மொட்டை மாடிக்குப் போனேன்னு எடுத்துவிட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் டெஸ்கோவிலேயே இப்போ நம்மூர் மளிகை சாமான் விற்க ஆரம்பித்துவிட்டார்கள், கூட படித்த காயத்ரிக்கும் சேகருக்கும் கல்யாணமாகிவிட்டது கலயாணத்துக்கு எல்லா ஃபிரண்ட்சும் வந்தார்கள் என்று வள வளவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சரி தான் இந்த பேச்சைக் கேட்பதற்கா நான் நயன் தாரா ஸ்லோகம் சொல்லாமல் மண்டையக் கவுத்தி தூங்கிற மாதிரி நடிக்கிறேன்னு வெறுத்த சமயம் "அப்புறம் என்னடி உங்காள பத்தி பேச்சே எடுக்க மாட்டேங்கிற..?"ன்னு எம் அன்ட் எஸ் அம்மணி கரெக்டாக மேட்டருக்கு வந்தார். என்ன இருந்தாலும் உள்ளூர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கல்லவா.நான் இன்னும் கொஞ்சம் மண்டையக் கவுத்தி நல்ல சவுகரியமாய் வைத்துக் கொண்டு மீண்டும் அதுவாக காதில் விழுவதைக் கேட்க ஆரம்பித்தேன்.

"அதயேன்டி கேக்குற..மெட்ராஸுக்கு வந்த முதல் வருஷம் ஃபுல்லா நாங்க பார்த்துக்கவே இல்லை"

"அடிப்பாவி...பார்த்துக்கவே இல்லையா..காலேஜ் படிக்கும் போது அப்பிடி மாங்கு மாங்குன்னு ரெண்டு பேரும் லவ்ஸ் விட்டீங்க .?.மேட்சிங்கா ட்ரெஸ் போடறதென்ன ஜோடியா எல்லா இடத்துக்கும் சுத்தினதென்ன...காலேஜ்ல எத்தன பேர் கடுப்ப கிளப்பியிருப்பீங்க...ஒரே கம்பெனில வேற காம்பெஸ்ல செலெக்ட் ஆனிங்களேடி..."

"இல்லடி வேலை ஜாயின் பண்றதுக்கு முன்னாடி எங்களுக்குள்ள மிஸண்டர்ஸ்டாண்டிங் ஆகிடிச்சு"

"ஏண்டி என்னாச்சு..?" உள்ளூர் அம்மணி கரெக்ட்டாய் கொக்கி போட்டு கன்டினியுட்டி மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருந்தார்.

"ஒரே இடத்துல வேலை கிடச்சா இந்தப் பிரச்ச்னையெல்லாம் வரும் யாரோ ஏதோ சொல்லி மனசக் கலைச்சிட்டாங்க..ஈ.கோ வந்திரிச்சி ரெண்டு பேருக்கும்..."

"ஏன்டி உங்களுக்குள்ள அன்டர்ஸ்டான்டிங்கே இல்லையா...அது இல்லாமலா...அப்பிடி சுத்தினீங்க."

"அத விடுடி என்னம்மோ அப்பிடி ஆகிடிச்சு...அப்புறம் அவங்க வீட்டுல கொஞ்சம் பிரச்சனை.கல்யாணத்துக்கு வேற பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.கேள்விப் பட்டதும் எனக்கு மனசு கேக்கலை நான் போய் சமாதானம் பண்ணி அப்புறம் சேர்ந்துட்டோம்.."

என்னடா மெகா சீரியல் மாதிரி போய்க் கொண்டிருக்கிறதுன்னு எனக்கு கொஞ்சம் சப்புன்னு இருந்தது. இவங்க காராசாரமா பசங்க மாதிரி பேசமாட்டாங்களா...டிஸ்ட்ரிக்ட் லைன் வேற இன்னிக்கு பிரச்சனையே இல்லாம கரெக்டாய் போய்கொண்டிருக்கிறதே இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துவிடுமே என்று நான் நினைக்க ஆரம்பித்தபோது எம் அன்ட் எஸ் அம்மணி கரெக்டாய் பாயிண்ட்டைப் பிடித்தாள்.

"ஹூம்...நம்ம காலேஜ் டேஸ்ஸ மறக்கவே முடியாதுடி...அதுவும் ஃபைனல் இயர்ல எல்லாரும் எஜூகேஷனல் டூர்ன்னு ஒரு கூத்து அடிச்சோமே...அதுலயும் நீங்க ரெண்டு பேரும் என்னா கூத்தடிச்சீங்க"

"அடிப்பாவி அதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும் நாங்க யாருக்கும் தெரியாதுன்ல நினைச்சிக்கிட்டு இருக்கோம்" - அவளுக்கு அவர்களது ரகசியம் வெளியே தெரிந்த படபடப்பில் தன்னையறியாமல் யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றி முற்றும் பார்த்தாள்.

நான் அரவிந்தசாமி கலர் என்பதால் என்னை வெள்ளைகாரனென்று நினைத்திருப்பாள் போலும் (இல்லை இந்த விஷயம் அரவிந்தசாமிக்கு தெரியாது) சரி சரி நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாள் போலும், சம்பாஷனை தொடர்ந்தது.

"நீங்க தான் ஒருத்தருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க ...உங்க கூத்து ப்ரொபசரை தவிர எல்லாருக்கும் தெரியும்"

"அடிப்பாவி.."

இதெல்லாம் அப்புறம் வைச்சிக்கோங்க முதல்ல என்ன கூத்தடிச்சாங்கன்னு ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்தி விவரமா சொல்லுங்கம்மான்னு கூவ எனக்கு வாய் துடித்தது.

"அடிப்பாவியா... அத நாங்க சொல்லனும்...நீங்க ரெண்டு பேரும் யாருமில்லைன்னு நினைச்சிக்கிட்டு..அந்த டார்ம் பர்ஸ்ட் ப்ளோர் ரூமில ஒதுங்கின போதே எல்லாருக்கும் செம டவுட்..நான் ரேகா,ஸ்வேதா எல்லாரும் ஒளிஞ்சு நின்னு ஜன்னல் வழியா பார்த்தோம்.."

கரெக்டாய் மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பித்த போது நான் இறங்கவேண்டிய ஸ்டாப் அடுத்த ஸ்டாபாகியிருந்தது. சண்டாளப் பாவி ட்ரைவர் இன்னிக்குப் பார்த்து கரெக்டாய் வந்து கவுத்திட்டானே என்று கோபமாய் வந்தது. ஆனாலும் குலதெய்வம் ஏஞ்சி அம்பாள் கைவிடவில்லை. அவர்களும் என் ஸ்டாப்பில் இறங்கி பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

"அதெல்லாம் அறியா வயசுடி..அன்னிக்குத் தான் முதலும் கடைசியும் அதற்கப்புறம் நாங்க தண்ணிய தொடவே இல்லை. செம கசப்புடி எப்படி தான் குடிக்கிறாங்களோ தெரியலை"

என்னாது தனியா ரூமுக்குள்ள போய் வெறும் தண்ணி தான் அடிச்சாங்களா...இந்த கருமத்த ஜன்னல் வழியா வேற பார்த்தாங்களா..இதெல்லாம் 80களில் வந்த சினிமாக்களிலேயே காட்டிட்டாங்களே இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பான்னு எனக்கு சப்புன்னு ஆகிவிட்டது.

"ஹூம் இப்போ ஜீவா கூட டச்சில இருக்கியா"

"டச்ச்ல இருக்கேனா...டெய்லி பேசிக்குவோம் இப்பவும் எங்க ப்ரெண்ட்ஷிப் அப்பிடியே தான் இருக்கு...அவ யூ.எஸ்ல ஆன்சைட் போயிருக்கா...ஜூலைல அவளுக்கு கல்யாணம்..ஊருக்கு போவேன்"

அடத் தூ.."நீங்க ரெண்டு பேரும்"ன்னு எம் அன்ட் எஸ் சொன்னது வெறும் ஃபிரெண்டியா...கருமாந்திரம் இதுக்குத் தான் இவ்வளவு கஷ்டப்படேனா...இதுக்குத் தான் நான் ஒட்டுக் கேட்பதே கிடையாது ஆனாலும் அதுவாக காதில் விழுந்து கஷ்டப்படுத்திவிடுகிறது இதுக்கு ஆம்பிளக் கபோதிங்க பேச்சை ஒட்டுக் கேட்டாலே சில பல மேட்டர் தேறுமே என்று உங்களை மாதிரி நானும் கடுப்பாகிவிட்டேன்.

பி.கு- வழக்கம் போல் நடந்ததை மானே தேனே போட்டு ப்ளாகியிருக்கிறேன்

36 comments:

இலவசக்கொத்தனார் said...

அவங்க ட்ரெஸைப் பத்தி விலாவாரியா எழுதலை. துளசி ரீச்சர் வந்து பெயில் பண்ணிடப் போறாங்க. அப்புறம் வேற மேட்டருக்காக நானும் பெயில் மார்க் போடறேன்.

CVR said...

சர்வேசனின் நச் என்று ஒரு கதைக்கு அனுப்பலாம் போல இருக்கு!! :-P

//அப்புறம் வேற மேட்டருக்காக நானும் பெயில் மார்க் போடறேன///

அது என்ன மேட்டருங்க?? ;)

கப்பி | Kappi said...

:)))

JVC said...
This comment has been removed by the author.
JVC said...

Dubukku,
You not only have Arvind samy's colour but also look like him....
:)

Anonymous said...

வெள்ளைக்கார குத்து விளக்கு பில்ட் அப் கொஞ்சம் ஓவர் ~ சினிமால திடீர்னு ஒரு குத்து பாட்டு வருமே அந்த எபெக்ட் குடுத்த மாதிரி இருக்கு.

அது சரி, இந்த ஒட்டுக்கேக்கற மேட்டர தங்கமணிக்கிட்ட ரிலே பண்ணுவீங்களா? அவங்க ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்?

கோபிநாத் said...

;)))))

INJEY! said...

உண்மைய சொல்லனும்னா, ரொம்ப நாளுக்கு அப்பறம் இண்டிரெஸ்டிங்கான போஸ்ட்டுனா இதுதான்.

சபாஷ்.

Girl of Destiny said...

ஜீவா.. அவங்க ஆளா??
எங்கியோ இடிக்குதே!!! ;-)
நாங்க எல்லாம் 'உன் ஆளு'-னு சொன்னாலே அது ஜோடினு தான் அர்த்தம்! :-)

Sumathi. said...

ஹாய் டுபுக்ஸ்.

//எனக்கு அடுத்தவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது பிடிக்காது என்பதாலும், அதுவும் பெண்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது அறவே பிடிக்காது.//

ஆக மொத்தத்தையும் ஒட்டு கேட்டுட்டீங்க..

//இன்னும் கொஞ்சம் மண்டையக் கவுத்தி நல்ல சவுகரியமாய் வைத்துக் கொண்டு மீண்டும் அதுவாக காதில் விழுவதைக் கேட்க ஆரம்பித்தேன்//

ஓஓஒ ஆஹ இப்படி வேறா...

//இதுக்குத் தான் நான் ஒட்டுக் கேட்பதே கிடையாது .///

ஹா ஹா ஹா ஹாஹா....

எப்பவும் போல படு சூப்பர் ஸ்டைல்.

Ananthoo said...

ஆனா கூட ஏஞ்சி அம்மா கை உட்டா மாதிரி தான் தெரியறது;-)
மேன்மேலும் இப்படி ஒட்டு கேக்காமல் காதில் விழுந்ததை ப்ளாகவும்!

Anonymous said...

:))enna unnalmudiyum thambi aravindh sami aaitara?aravind samiyoda recent photos pathinganna ippadi sollamattinga.full moon iyya jolly.
-isthri potti

Anonymous said...

hi,
Pona vaaram tharcheyala unga blog site parthaen.Unga blogs ellamey arumai.Romba nalla ezhudhureenga.Unga fan aagivittaen.
Vazhukkal!!!!!!

Keep up the good work and continue writing.!!!
Sudha Kamesh

Anonymous said...

/*குத்துவிளக்கு நின்று கொண்டிருக்கும் பக்கத்திலேயே இடுப்பை வளைத்துக்கொண்டு ஒருத்தன் குத்துவிளக்குக்கு பாலீஷ் போட்டு துடைத்துக் கொண்டிருப்பான் */ - நல்ல உவமானம். ரசிச்சேன்...(ஹூம்....பல்லிருக்கு பக்கோடா சாப்பிடறான்).

/* எம் அன்ட் எஸ் போட்டுக்கு கொண்டு */ - இன்னா மீனின்ங்கு நைனா ?

கனகதாரா ஸ்தோத்ரம் கேள்விப்பட்டுருக்கேன்...அதென்ன "நயன் தாரா" ஸ்லோகம் ? ஸிஸ்டர் கிட்ட பேசி உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் "லட்ஷார்ச்சனை" ஏற்பாடு பண்றேன்.

ambi said...

ஹிஹி, ஒட்டு கேக்கற சுகமே சுகம். அது ஆபிஸா, ரயிலா?னு பாகுபாடு கிடையாது. :)))

/* எம் அன்ட் எஸ் போட்டுக்கு கொண்டு */

- இன்னா மீனின்ங்கு இதுக்கு?

இளைய கவி said...

எனக்கும் உங்க கூட Train ல உட்கார்ந்து வேடிக்கை பார்பது போண்ற ஒரு உணர்வு, உங்கள் எழுத்து நடை மிக்க இயல்பாகவே உள்ளது..

என்றும் அன்புடன்
இளையகவி

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல அங்கதமான நடை... அது சரி தேமேனு தானே காதில விழற விஷயத்தையே இந்த பாலிஷ் பண்ணியிருக்கீங்களே.. இன்னும் நீங்களாஅ ஒட்டு கேட்டா.. ரொம்ப ஆவலா இருக்கு சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க.. (நானெல்லாம் அடுத்தவங்க பேசறத ஒட்டே கேக்கறிதில்ல.. இப்படி யாராவது எழுதினா படிக்கிறதுதான்????)

Anonymous said...

//"இந்த வெள்ளக்காரர்களுக்கு மட்டும் பொது இடத்தில் கஷ்கத்தில் சொறியவே செய்யாதா...எப்படி சமாளிக்கிறார்கள்" என்பது போன்ற அறிவுஜீவித்தனங்கள் இந்த நேரங்களில் தான் சில சமயம் பிரகாசிக்கும் //

ரொம்ப சரியா சொன்னிங்க டுபுக்கு நானும் அப்பப்போ அறிவுஜிவின்னு தான் நெனச்சிக்குவேன்...

//கரெக்டாய் மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பித்த போது நான் இறங்கவேண்டிய ஸ்டாப் அடுத்த ஸ்டாபாகியிருந்தது. சண்டாளப் பாவி ட்ரைவர் இன்னிக்குப் பார்த்து கரெக்டாய் வந்து கவுத்திட்டானே என்று கோபமாய் வந்தது. ஆனாலும் குலதெய்வம் ஏஞ்சி அம்பாள் கைவிடவில்லை. அவர்களும் என் ஸ்டாப்பில் இறங்கி பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.//

தலைவா, இங்க மட்டும் நீங்க "தொடரும்..." போட்டீருன்னா... பல பேர் உங்க வீட்டு முன்னால உண்ணாவிரதம் தான்...

-அருண்.
(கஷ்டப்பட்டு தமிழ்-ல நாலு வரி போட்டுட்டேன்)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
என்னாது தனியா ரூமுக்குள்ள போய் வெறும் தண்ணி தான் அடிச்சாங்களா...இந்த கருமத்த ஜன்னல் வழியா வேற பார்த்தாங்களா..இதெல்லாம் 80களில் வந்த சினிமாக்களிலேயே காட்டிட்டாங்களே இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பான்னு எனக்கு சப்புன்னு ஆகிவிட்டது.
==>
அதானே.படிக்கிறவங்களுக்கே அப்படி இருக்கே. நல்லா கதை சொல்றீங்க.

Veera said...

வழக்கம் போல கலக்கிபுட்டீங்க போங்க

எம் அன்ட் எஸ் - அப்படின்னா என்ன?

கிளைமாக்ஸ் வரும்ன்னு பார்த்தா anti கிளைமாக்ஸ் வந்துடிச்சி :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

டுபுக்கு அண்ணே!

சொல்ல மறந்து போச்சு. நா இந்த அளவுக்கு எழுத முடிஞ்சுதுன்னா அதெல்லாம் நீங்க மூணு partடா சொல்லி குடுத்த "வாழ்க்கை கல்வி" லதானுங்கண்ணே!

Anonymous said...

ottu kekirdhula aangalukku ennna annandham,summa sollakoodatu ottu ketta vishayathe vechi 10 20 interesting post dharalama podalam.
appuram adhenna angi ambal ,nayanthara sthothram neenga sollapoi thangamani arvind sami,surya ashtakamnnu aarambicha kochukka koodathu.coreecttaaa???thangamanis sudhandhira katchi vazhga.
nivi.

Anonymous said...

yov.. ivvalavu build up koduthu kadaisila sothappittengale... :-(

Aani Pidunganum said...

Thalaivah,

Appadiyeh nerla nadakaradhu commentry madhiri interestingaah ezhudirundeenga. Superoh super Adhuvum Ambal pathi rombha naaal aaachu neenga solli, Enga area pakkam poye paarunga Ambal Katchi Alithu varam tharuvaal.

Beer adichadhuka ippadi buildup-uuu. Enna kodumada idhu...

காட்டாறு said...

//எனக்கு அடுத்தவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது பிடிக்காது என்பதாலும், அதுவும் பெண்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது அறவே பிடிக்காது என்பதாலும் காதைத் தீட்டிக் கொண்டு அவர்கள் பேசுவது அதுவாக எதாவது காதில் விழுந்தால் விழட்டும் என்று சிவனே என்று இருந்தேன்.
//

எனக்கு கூட ரயிலில் ஒட்டுக் கேட்பது அறவே பிடிக்காது. அதனால வாசிச்சி முடிச்சிட்டேன். ஹா ஹா ஹா

Anonymous said...

i think ...
m&s
women's wear - marks & Spencer

Vg said...

Cha epppadi muduchuteengalay neenga.. Unexpected end....
But really interesting to read the way u have narrated. :)
Keep rocking.. :)

Uma said...

mudhal muraiyaga ungal bloggil,neengal eludhum nadai arputham
meendum varuven
uma

Anonymous said...

ஆம்பிளக் கபோதிங்க பேச்சை ஒட்டுக் கேட்டாலே சில பல மேட்டர் தேறுமே என்று உங்களை மாதிரி நானும் கடுப்பாகிவிட்டேன்.romba correct
-isthri potti thangamani

Anonymous said...

enakku kooda ottu kettuttu ezhutharatha padikkarathu konjam kooda pudikkathungairathala, rendu moonu thadavai padichu edhayum miss pannalayennu confirm pannikitten.

Pala nanbargalukku inda blog-a recommend panniyirukken.

Mahesh

Subbiah69 said...

romba sirichhen padichittu,thanks

Dubukku said...

கொத்ஸ் - யோவ் பின்னாடி உட்கார்ந்திருந்தேன்னு சொல்றேன்ல...வேற மேட்டரா?? இன்னாது அது...எனக்கு எதுவும் தெரியாது வம்புல மாட்டாதிரும்வே

சி.வி.ஆர் - ஆமாங்க இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம போட்டியெல்லாம் முடிஞ்ச அப்புறம் வந்து பேசுறாங்க பாருங்க..:)

கப்பி பய - அடுத்த தரம் உங்களுக்கு ஸ்மைலி கிடையாது எதாவது சொல்லுங்க :))

ஜே.வி.ஸி - ஹா ஹா நேர்ல பார்த்ததால நக்கல் விடுறீங்க பாருங்க நானும் தங்கபஸ்மெல்லாம் சாப்பிட்டு ஒருநாள் ஆகிக் காட்டுறேன் :))

கிருத்திகா - ஹீ ஹீ அந்த குத்துவிளக்கு மேட்டர சாய்ஸ்ல விட்றுங்க. ஓ அதெல்லாம் கரெக்ட்டா தங்கமணி கிட்ட ரிலே பண்ணுவேன்..ரியாக்க்ஷன் வழக்கம் போல காறித் துப்பறது தான் ...பழகிடிச்சு :)

கோபிநாத் - :))

இன்ஞே - அண்ணே வாங்க உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஊக்கமா இருக்கு

கேர்ல் ஆப் டெஸ்டினி - ஆஹா ஏமாத்திட்டாங்களா என்ன?? அடுத்த தரம் பார்க்கும் போது நீங்க சொன்னத கண்டிப்பா உங்க பேர சொல்லி கேக்கிறேன் :)

சுமதி - ரொம்ப நன்றி மேடம். ஆமா ரொம்ப சுவாரசியமா இருந்ததுங்க...

அனந்தூ - ஆமாங்க ஆனா வலிக்காத ஏமாற்றம் அதான் ஏஞ்சி அம்மா மகிமை. :))

இஸ்திரி பொட்டி- ஐய்யையோ திரும்ப படிங்க நான் அரவிந்த் சாமி கலர் தான் சொல்லி இருக்கேன். பெர்ஸ்னாலிட்டு என்னிக்கும்ம்மே உன்னால் முடியும் தம்பி கமல் தான் மாற்றமே கிடையாது :)))))

சுதா காமேஷ் - ரொம்ப நன்றி மேடம் உங்க ஊக்கத்துக்கு. அடிக்கடி வாங்க. உங்களுக்கு இந்த ப்ளாக் பிடித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி

இராமசந்திரன் - //அதென்ன "நயன் தாரா" ஸ்லோகம் ? // நீங்க சொன்ன விளக்கம் தான் உங்களுக்கும் ஹூம்....பல்லிருக்கு பக்கோடா சாப்பிடறான் விடுங்க சாமி பேசி தீர்த்துக்குவோம்

அம்பி - எம் அன்ட் எஸ் - மன்னிக்கவும் இது மார்க்ஸ் அன்ட் ஸ்பென்ஸர் இங்க இருக்கிற துணிக் கடை

இளையகவி - வாங்க உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஊக்கமாய் இருக்கு

கிருத்திகா - வாங்க. ஆமாங்க நானும் அப்பிடித்தான் அதுவா வந்து காதுல விழுந்தது :)) உங்க பாராட்ட்க்கு ரொம்ப நன்றி.

அருண் - முதலில் கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப நன்றி.கையக் குடுங்க உங்களுக்கு இந்த மாதிரி தோனுமா. ஆமா உங்க தங்கமணி ரியாக்க்ஷன் எப்படி இருக்கும் இதே மாதிரி காறித் துப்புவாங்களா?? :))

சாமான்யன் - ஆமாங்க சப்புன்னு ஆகிடிச்சு எனக்கும் :))

வீரா- மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர்ஸ் - இங்கிருக்கிற துணிக்கடை அப்ரியில் போட்டதற்க்கு மன்னிக்கவும். ஆமாங்க சப்புன்னு ஆகிடிச்சு

அனானி - நீங்க எழுதின திருப்பம் ரொம்ப ரசிச்சேன். ஆனால் அந்த சின்ன கோடு தாண்டாமலும் தனிமனித தாக்குதலும் இல்லாமலிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அதனால் தான் உங்கள் கமெண்ட்டை எடுக்கவேண்டியதாகிவிட்டது. உங்களுக்கு என்மேல் என்ன கோவம்?
ஹீ ஹீ நீங்க அப்போ அந்த இலக்கியமெல்லாம் படிச்சதேஇல்லைங்கிறீங்க...நம்பிட்டேன் :))

நிவி - ஆமாங்க அதுவா வந்து விழுகிற அடுத்தவங்க பேச்சு எவ்வளவு சுவாரசியமா இருக்கு :)) ஐய்யைய்யோ நான் அதையெல்லாம் தடுக்கவே இல்லை நீங்களெல்லாம் இன்ன்னா அஷ்டகம் வேணுமினாலும் சொல்லுங்க :)))

அனானி - ஆமாங்க அவங்க சொதப்பிட்டாங்க...உங்க வருத்தத்த அவங்ககிட்ட அடுத்த தரம் பார்க்கும் போது சொல்றேன் :))

ஆனி - ஆமாங்க அம்பாள ரொம்ப நாளா மறந்துட்டேன் :)) எனக்கும் உங்கள மாதிரி சப்புன்னு ஆகிடிச்சுங்க :)) உங்க பேட்டை படம் சூப்பர் :))

கட்டாறு - ஏதேது நம்ம கொளுகையில நிறைய பேர் இருக்காங்க போல:))

அனானி - கரீக்கிட்டா சொன்னீங்க கலக்கிபோட்டீங்க போங்க

விஜி - வாங்க ஆமா எனக்கும் சப்புன்னு ஆகிடிச்சு...உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க

உமா குமார் - கிட்டத் தட்ட இதே பேர்ல இங ஒரு நண்பி கமெண்ட் போடுவாங்க அவங்க தானோன்னு நினைச்சிட்டேன் ரொம்ப நன்றிங்க உங்க பாரட்டுக்கு அடிக்கடி வாங்க


இஸ்திரி பொட்டி தங்கமணி - ஹீ ஹீ உங்களுக்கும் ஒட்டுக் கேக்கிறது பிடிக்காது போல இருக்கே


மகேஷ் - வாங்க வந்து ஒட்டுக்கேட்கப் பிடிக்காதோர் சங்கத்துல ஐக்கியமாகிடுங்க :)) உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க..உங்க பரிந்துரைக்கு மிக்க கடமைப்பட்டுள்ளேன் நன்றி.

சுப்பையா - வாங்க சார் மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

யாத்ரீகன் said...

:-)))))))))))

>>> வெறும் ஃபிரெண்டியா...

avlo kashtapatu... ipdi bulb vaangiteengaley dubuks... aana sema flow-la solirukeenga :-))

Anonymous said...

romba naal kazhichu ippo dhan unga blogs padikkalaam nu aarambichen; interest-a mela mela padikka vekkara madhiri indha first post-e irukku; inime ella pazhaiya post-layum en comment pakkalaam neenga - umakrishna

Anonymous said...

romba naal kazhichu ippo dhan unga blogs padikkalaam nu aarambichen; interest-a mela mela padikka vekkara madhiri indha first post-e irukku; inime ella pazhaiya post-layum en comment pakkalaam neenga - umakrishna

Post a Comment

Related Posts