Wednesday, February 13, 2008

வாழ்க்கை கல்வி - 3

For previous Parts --> Part 1      Part 2

நம்ம ரேஞ்சுக்கு அந்த சமயத்தில் தமிழ் புத்தகங்கள் தான் கிடைத்தது. முதலில் இந்த மாதிரி புஸ்தகம் படித்த போது சிரிப்பு தாங்கமுடியமாட்டாமல் வந்தது. அதில் வரும் வர்ணனைகளும் டயலாக்குகளும் செம காமெடியாக இருக்கும். க்ரூப் ஸ்டடியில் மற்றவர்கள் சீரியசாக (இந்த புஸ்தகங்கள) படித்துக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் கெக்க பிக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தோமேயானால், கபாலத்தை பிளந்து கைலாசத்தை காட்டிவிடுவார்கள், இன்ஸ்டன்ட் மோக்க்ஷம் தான். தமிழ் புஸ்தகங்களில் பாதிக்கு மேல் இங்கே நான் எழுதுவது மாதிரி நம்பமுடியாமல் இருக்கும். உதட்டை மடித்து கடித்துக் கொண்டு ஊரிலிருக்கும் எல்லோருக்கும் இருபத்திநாலு மணிநேரமும் இதான் ஜோலி என்பது போல் சித்தரித்திருப்பார்கள். மாமா, மச்சான், மதினி, கொளுந்தியா என்ற குடும்ப இணக்கங்கள் தவிர ஹெட்மாஸ்டர், பிச்சைக்காரி, வேலைக்காரி என்று வெரைட்டியும் காட்டியிருப்பார்கள். சினிமா கிசுகிசுக்கள் தூக்கி சாப்பிடும். "வி"ன்னா நடிகருக்கு மஞ்சள் கலர் ரொம்ப பிடிக்கும் அந்தக் கலரில் தான் உள்ளாடை அணிவார் என்பதை படித்து ரொம்ப நேரம் சிரித்திருக்கிறேன்.

கல்லூரி காலத்தில் இந்த மாதிரி புஸ்தகங்கள் படிப்பதற்கெல்லாம் ரொம்ப மெனெக்கடவேண்டாம். ஹாஸ்டல் பக்கம் போனால் போதும். மூலையில் தூசி படிந்திருக்கும் பெட்டியிலோ..மேலே லாஃப்டிலோ மூட்டை மூடையாக மலிந்து கிடக்கும். பொதுவாக அரட்டை அடிப்பதற்குத்தான் போவோம் என்பதால் குறைந்தது பத்துப் பன்னிரெண்டுபேராகத் தான் போவோம். குஷி கூரையைப் பிய்த்துக் கொண்டு போய்விட்டால் ரெண்டு மூனு பேர் இந்த் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு என்னம்மோ ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகம் மாதிரி டயலாக்குகளை உணர்ச்சிபிரவாகத்தோடு பேசி நடித்துக் காட்டுவார்கள். மற்றவர்கள் எல்லாரும் "சூப்பர்டா..."ன்னு விழுந்து விழுந்து சிரித்துவிட்டு நைசாக வீட்டுப்பாடத்திற்கு ஒரு புஸ்தகத்தை லவட்டி வந்துவிடுவோம்.

இந்த்க் காலக்கட்டத்தில் வழவழ பேப்பரில் முழுப் பக்கத்தில் வரும் வடநாட்டு, வெளிநாட்டு இலக்கியங்களெல்லாம் எட்டாக்கனி. "மெட்ராஸில் எங்க மாமா பையன் காட்டினான்டா கற்பூரம் ஏத்தி கண்ணுல ஒத்திகலாம் ஒவ்வொண்ணும் அவ்வளவு குவாலிட்டியா இருக்கு"ன்னு நானும் கச்சேரிக்குப் போனேன்னு சும்மானாச்சுக்கும் ஜம்பத்தோடு சரி ஒருத்தனும் பார்த்தே இல்லை. இதுவே இந்த பாடு என்றால் முழு நீல வண்ணப் படங்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். கிங்பெல் ஒருதரம் அவர்கள் வீட்டில் எல்லாரும் வெளியூருக்குப் போயிருந்தார்கள் என்று "டேய் இன்னிக்கி சாமி படம் பார்க்கலாமா ஆளுக்கு ஒரு ரூபா போட்டா போதும் இருபது இருபத்தி அஞ்சி பசங்க தேறினா போதும் குஜால்சா பார்க்கலாம்ன்னு" கல்லாபெட்டியை தேத்த ஆரம்பித்துவிட்டான். எனக்கு இந்த விஷயத்தை கேட்ட உடனேயே உண்மையான ஜுரம் வந்துவிட்டது. உத்தமனாக நடிக்கவில்லை உண்மையாக சொல்கிறேன். அந்த சமயத்தில் இதெல்லாம் ஊரில் ரொம்ப பெரிய விஷயம். மாட்டினால் வேற வினையே வேண்டாம். வீட்டிலிருந்து நாலு எட்டில் வந்துவிடுகிற இடத்தில் இந்தமாதிரி பக்திபடமெல்லாம் பார்க்க நெஞ்சில் மஞ்சாசோறு இல்லை. என்னம்மோ சொல்லி இதெல்லாம் எனக்கு ஆகாதுப்பான்னு நல்லவேளை வந்துவிட்டேன். கிங்பெல் சாமி படம் போடப் போகிறான் என்று ஊரெல்லாம் பசங்க நெட்வொர்க்கில் தெரிந்துவிட்டது. ராத்திரி பத்துமணிக்கு கிங்பெல் வீட்டுவாசலில் ஏக கூட்டம்...தோராயமாக ஒரு ஐம்பது பசங்கள் குமிந்துவிட்டார்கள். கிங்பெல் படமெல்லாம் இல்லை என்று சொல்லியும் ஒருத்தனும் நகருகிற வழியாய் இல்லை. கிங்பெல் வேறு வழியில்லாமல் ப்ளானை கேன்சல் செய்துவிட்டான். அடுத்த நாள் மாமாவிடம் சீனாதானா மாமா ஏகமாய் புலம்பிக்கொண்டிருந்தார். "கேட்டீரா ஓய்...சங்கண்ணா புள்ளை நேத்திக்கு ஆதுலயே அம்மணகுண்ஸ் படம் ஷோ காட்டறான்...ஊரோட தேரோட காலிப் பயல்கள் கூட்டம்...கேட்டா ரஜினி படம்ங்கிறான்...ஏன் விளக்குவைச்சோடனே போட்டா ரஜினி வரமாட்டாரா? ராத்திரி பதினோரு மணிக்கு என்ன ரஜினி படம் வேண்டியிருக்குன்னேன்??... சங்கண்ணா வரட்டும் வைச்சுக்கிறேன் பஞ்சாயத்த.." - எனக்கு அப்பாடா தப்பித்தோம் என்று இருநதது.

ஒரே ஒருதரம் என் பேஷன் குருவுடன் மெடிக்கல் காலேஜ் நண்பர்கள் ரூமிற்கு திருநெல்வேலிக்கு போயிருந்தேன். ஊருக்கு கிளம்புவதற்கு நேரமாகிவிட்டதால் ஐந்தே நிமிடங்கள் அங்கே இருந்தோம். அங்கே பசங்கள் ரூமில் யாரோ ரிப்பேர் செய்துகொண்டிருந்தது போல் ஒரு வீடியோ ப்ளேயர் ஸ்க்ரூவெல்லாம் கழட்டி கிடந்தது. விசாரித்ததில் அன்றைக்கு ரூமில் பக்தி பட ரிலீஸ். அந்த ஏரியாவில் பசங்கள் ஜாஸ்தி என்பதால் பக்தி பட புழக்கம் ஜாஸ்தி. போலிஸ் மாமூல் வேட்டைக்கு கரெண்ட்டை ஆஃப் செய்துவிட்டு கிள்ம்பிவருவார்கள் என்பதால் கரெண்ட் போனாலும் கேசட்டை உடனே வெளியே எடுப்பதற்கு தோதாக அப்பிடி கழட்டி வைத்திருந்தார்கள் என்று தகவல் சொன்னார்கள். நான் அதுவரை பக்தி படம் பார்ததில்லை என்பதால் கூட வந்த பேஷன் குருவுக்கு ஐந்து நிமிடமானாலும் பரவாயில்லை எனக்கு பக்தி சாம்ராஜ்ஜியத்தை அறிமுகம் செய்துவிடவேண்டும் என்று ஒரே ஆவல். அப்பிடியே அவனும் பார்த்துவிடலாம் என்று படத்தை பாஸ்ட் பார்வர்டில் ஓட விட்டான்.

பக்தி படத்தை முதன் முறையாக அதுவும் பாஸ்ட் பார்வெர்டில் பார்த்த போது எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. கூட இருந்த மற்ற பசங்களும் விழுந்து விழுந்து சிரிக்க...ஐந்தே நிமிடங்களில் ஞான உபதேசம் பெற்று ஊருக்கு கிளம்பினேன். அதற்கப்புறம் ரொம்ப்ப்ப்ப நாள் வேலைக்கு சேரும் வரை பக்தி பட சான்ஸே கிடைக்கவில்லை.

மேட்டர், மேற்படி என்று பலவிதத்திலும் வழங்கப்பட்டு வந்த இந்த விஷயம் நான் வேலைக்கு சேர்ந்த இடத்தில் "கஜா" என்று நாமகரணம் சூட்டப்பட்டு...டெக்ஸ்ட் கஜா, கஜா படம், கஜா மூவீஸ் என்று பல்வேறு அவதாரங்களில் கம்யூட்டர்களில் வலம் வந்து கொண்டிருந்தது. நான் வேலைக்கு சேர்ந்த டிப்பார்ட்மென்ட் காலேஜ் மாதிரி மிக ஜாலியாக இருக்கும். பசங்கள் எல்லாரும் சம வயதினர் என்பதால் கூத்துக்கு குறைவே இருக்காது. இந்த மாதிரி கஜா படங்கள் கம்யூட்டரில் ஓடும் போது யாராவது வந்துவிட்டால் உடனே மாற்றுவதற்கு ஒருத்தர் கஜா ஆப்ரேட்டர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். நான் வேலைக்கு சேரும் முன்னரே மாமா "வேலைக்குப் போற இடத்தில் பொறுப்பெல்லாம் கேட்டு வாங்கி தெரிஞ்சிக்கோ" என்று அட்வைஸ் செய்திருந்ததாலும், நான் சர்வரில் வேறு உட்கார்ந்து கொண்டிருந்ததாலும், சர்வரில் போட்டால் தான் பாஸ்டாக வரும் என்ற டெக்னிக்கல் ஸ்பெசிவிகேஷனினாலும் ட்ரெய்னீ கஜா ஆப்ரேட்டர் பொறுப்பு கூடிய சீக்கிரமே வந்தது. ஆனால் முதல் முறையே சத்திய சோதனையாக யாரோ வந்துவிட எனக்கு செல்வி சீரியல் லதா மாதிரி நெஞ்செல்லாம் ஒரே படபடவென்று வந்து பயத்தில் கையும் காலும் அப்பிடியே ஸ்தம்பித்து நின்று விட்டது. அப்புறம் கூட இருந்த சூப்பர்வைசர் கஜா ஆப்ரேட்டர் பொறுப்பெடுத்துக்கொண்டு நிலமையை அநாயசமாக சமாளித்துவிட்டார்.

இருந்தாலும் டிப்பார்ட்மென்டில் ஒரு சீனியர் சித்தப்பு என்னுடன் உட்கார்ந்து புரோகிராமை டீபக் செய்துகொண்டிருக்கும் போது எவனோ ஒரு கஜா கா தோஸ்த் அனுப்பிய "பிகினி சீரீஸ்" இமெயில் வந்து விட அவர் "என்னப்பா பிகினி சீரிஸ்லாம் வருது"ன்னு கேட்க...நான் முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டு பிகினினா என்னவென்றே தெரியாத மாதிரி கேட்க்...அவர் பேஜாராகிவிட நான் திரும்ப திரும்ப சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்ன்னு அடித்த கூத்துக்கள் மறக்க முடியாதவை.

இந்த மாதிரி விஷயத்தில் ஒருதரம் புஷ்பா தங்கத்துரை புஸ்தகத்துடன் மாட்டிக் கொண்ட போது "டேய் இதெல்லாம் படிக்கறது சரி வயசுக் கோளாறு ஆனா இதெல்லாம் தெரிஞ்சிக்கறதோட நிப்பாட்டிக்கோங்க...அதான் நல்லது" என்று கிங்பெல் அக்கா குடுத்த புத்திமதி எனக்கு மறக்கவே இல்லை. உதவியாகவும் இருந்தது. எனவே பக்த கோடிகளில்...வயசுப் பசங்கள் அல்லது பெண்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் இந்த அட்வைஸையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்...உங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

(அப்பாடா மெசேஜ் சொல்லி முடிச்சாச்சு :)) )

- முற்றும்

22 comments:

ILA (a) இளா said...

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, கடேசியா சொன்ன கருத்தத் தவிர

Anonymous said...

I could not be the first to comment. Let me read the post now.
:-)
Arun.

இலவசக்கொத்தனார் said...

தங்கமணி வந்துட்டாங்களா? அவசர அவசரமா முடிச்சா மாதிரி இருக்கே...

Anonymous said...

enna thadalnu mudichitinga.naanga sami padam pakka poi kadaisila palabishekam(jai shankar padam)parthom.ippavum tvla palabishekam potta thangamani marakkamal kari thupiduvanga.
-isthri potti

Chakra said...

கஜா கா தோஸ்த் அடிச்ச கூத்தெல்லாம் சும்மாவா.

>முதலில் இந்த மாதிரி புஸ்தகம் படித்த போது சிரிப்பு தாங்கமுடியமாட்டாமல் வந்தது.


- என்ன கண்றாவி இது. என்ன ஜோக் புக்கா படிக்கரே?

techscrapebook said...

just now stumbled upon your blog ,writing blog on your mother tongue has come good for you and can you tell me what are things needed to write blogs in Tamil

hope dr Tamil kudi thangi don't come and protest before your house for not writing blogs in clean Tamil

you can send the details to gvsrinivasan@gmail.com

Anonymous said...

அக்னி நட்சத்திரம் காமெடி சீன் (ஜனகராஜ் வி.கே.ராமசாமி அடிச்ச கூத்து தான்!) முதல் தரம் பாத்தப்போ எப்படி இருந்ததோ அவ்வளோ வேடிக்கையா இருந்தது. ஆனா கடைசில மெசேஜ் எல்லாம் குடுத்து பயங்கர ஆதரவு தேடிக்கிடீங்க!

>>>அவசர அவசரமா முடிச்சா மாதிரி இருக்கே...

Exactly!

Anonymous said...

/* உதட்டை மடித்து கடித்துக் கொண்டு ஊரிலிருக்கும் எல்லோருக்கும் இருபத்திநாலு மணிநேரமும் இதான் ஜோலி என்பது போல் சித்தரித்திருப்பார்கள். மாமா, மச்சான், மதினி, கொளுந்தியா என்ற குடும்ப இணக்கங்கள் தவிர ஹெட்மாஸ்டர், பிச்சைக்காரி, வேலைக்காரி என்று வெரைட்டியும் காட்டியிருப்பார்கள் */

முழு புஸ்தகத்தையும் மூணே வரில சொல்லிட்ட தல.... கலக்கல்ஸ் (ச்ச....அ.கு படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸை தனியா போட்டு ஒரு நாலு போஸ்ட் தேத்துவீஙகன்னு பாத்தா...இப்படி இடைச்செருகல் பண்ணி முடிச்சுட்டீங்களே...). அடுத்து என்ன ? கர்மம் முடிஞ்சுது.. யோகமா ? ஞானமா ?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

=))

Anonymous said...

இதை சொல்லி முடிக்கணும்னு இருந்தேன்....ஆனா மறந்துட்டேன்....தல நீங்க இன்னொரு "கஸ்தூரி ராஜா" (மூணு மணி நேரம் படத்துல 2மணி 59நிமிடம் 57வினாடி சீன் மேட்டரா காட்டிட்டு ...கடைசீல ஒரு 3 செகன்ட் ஊறுகாய் மாதிரி ஒரு மெஸேஜ் சொல்லிட்டீங்க....).

ambi said...

//தங்கமணி வந்துட்டாங்களா? அவசர அவசரமா முடிச்சா மாதிரி இருக்கே...//

Repeatttuuuuu :)))

//மூணு மணி நேரம் படத்துல 2மணி 59நிமிடம் 57வினாடி சீன் மேட்டரா காட்டிட்டு ...கடைசீல ஒரு 3 செகன்ட் ஊறுகாய் மாதிரி ஒரு மெஸேஜ் சொல்லிட்டீங்க....).//

ROTFL on Ram anna comment. :))

Sumathi. said...

ஹாய் டுபுக்ஸ்,

//"கஜா" என்று நாமகரணம் சூட்டப்பட்டு...//

ஆஹா, என்னடா "கஜா கா தோஸ்த்" னு இருக்கேனு நினைச்சேன், இது தானா அது. சூப்பர் போங்கோ....

B o o said...

மூணே போஸ்ட்ல முடிக்கற "மேட்டரா" இது?? ;) Btw, I ve become a big fan of சீனாதானா மாமா. அவர வச்சு ஒரு மினி தொடர் நீங்க எழுதணும்ங்கறது இந்த நேயர் விருப்பம்! :)

ஜொள்ளுப்பாண்டி said...

//பிகினினா என்னவென்றே தெரியாத மாதிரி கேட்க்...அவர் பேஜாராகிவிட நான் திரும்ப திரும்ப சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்ன்னு அடித்த கூத்துக்கள் மறக்க முடியாதவை.//

:)))))))))))))

குருவே சிரிச்சி சிரிச்சு கண்ணுல ஜலம் வந்துடுச்சு போங்க :))))) கஜா ஆப்பரேட்டர் வேலைநெசமாவே ஒரு த்ரில்தான் இல்லை..:)))))))

Kuzhambi said...

Ai.... naanum romba arvma padichitu irunthen, anna ellorum sollura mathri, 3 hour story, innum konjum advice koduthuirukulam...... enna panna, aasai yara vituthu

Anonymous said...

message kodutha mega starrukku rasikar mandram saarpil aaluyura maalai anivithhu gowrravikkirom.mudichittenglennu ilaignnar ani pongi ezhuvatharkul adutha post poda vazhtukkal.vazhakkam pola kallakal.
nivi.

sriram said...

வாய்யா கருத்து கந்தசாமி,
3 போஸ்ட் முழுசா மேட்டர் சமாச்சாரமா போட்டுட்டு கடைசியில் ஒரு வரி கருத்தா?
என்ன பெண்கள் பக்கமிருந்து எதிர்ப்பு வரக்கூடாதுன்னு செட்டப் ஆ? வர வர நீ Good boy image க்கு தினமலர் அந்துமணியுடன் போட்டி போட ஆரம்பித்து விட்டாய்.
நான் பாகம் 1ல் பின்னூட்டம் இட்ட பொழுது சாமி படம் பற்றி கேட்டிருந்தேன், என்னடா பதிலையே காணோமே என்று நினைத்தேன். அது 3ம் போஸ்ட்க்கான சஸ்பென்ஸ் என்று இப்போதுதான் புரிந்தது.
எனக்கும் அவசரம் அவசரமாய் முடித்தது போல தெரிகிறது.
அடுத்த post க்கு ரொம்ப நாள் wait செய்ய முடியாது, ஆமாம் சொல்லிட்டேன்..

இது என்னைபோன்று தினமும் இங்கு வந்து எட்டி பார்த்து ஏமாந்து போகும் நண்பர்களுக்கு - நம்ம டுபுக்கார் அடுத்த 7 நாட்களுக்குள் இன்னொரு போஸ்ட் போடாவிட்டால், அடுத்த போஸ்ட்க்கு பின்னூட்டம் போடாமல் Boycott செய்வோம்.

என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

Anonymous said...

டுபுக்கு,

'மேட்டர்' அவ்வளவுதானா? டுபுக்குன்னு ...ஹி ஹி.. டக்குன்னு எல்லோரும் சொல்ல மாதிரி முடிச்சுட்டேங்களே!

எனிவே குட் ஃபன்... என்ஜாய்டு வெரி மச்...

-அரசு

Anonymous said...

i have seen your web page its interesting and informative.
I really like the content you provide in the web page.
But you can do more with your web page spice up your page, don't stop providing the simple page you can provide more features like forums, polls, CMS,contact forms and many more features.
Convert your blog "yourname.blogspot.com" to www.yourname.com completely free.
free Blog services provide only simple blogs but we can provide free website for you where you can provide multiple services or features rather than only simple blog.
Become proud owner of the own site and have your presence in the cyber space.
we provide you free website+ free web hosting + list of your choice of scripts like(blog scripts,CMS scripts, forums scripts and may scripts) all the above services are absolutely free.
The list of services we provide are

1. Complete free services no hidden cost
2. Free websites like www.YourName.com
3. Multiple free websites also provided
4. Free webspace of1000 Mb / 1 Gb
5. Unlimited email ids for your website like (info@yoursite.com, contact@yoursite.com)
6. PHP 4.x
7. MYSQL (Unlimited databases)
8. Unlimited Bandwidth
9. Hundreds of Free scripts to install in your website (like Blog scripts, Forum scripts and many CMS scripts)
10. We install extra scripts on request
11. Hundreds of free templates to select
12. Technical support by email

Please visit our website for more details www.HyperWebEnable.com and www.HyperWebEnable.com/freewebsite.php

Please contact us for more information.


Sincerely,

HyperWebEnable team
info@HyperWebEnable.com

Veera said...

// நான் வேலைக்கு சேரும் முன்னரே மாமா "வேலைக்குப் போற இடத்தில் பொறுப்பெல்லாம் கேட்டு வாங்கி தெரிஞ்சிக்கோ" என்று அட்வைஸ் செய்திருந்ததாலும்//

அடப்பாவி மக்கா... உங்க மாமா என்ன எண்ணத்தில சொன்னாரு.. நீங்க என்ன பண்ணி இருக்கீங்க... இன்னும் எழுதுவீங்கன்னு நினைச்சேன்.. பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க... அங்க தங்கமணிகிட்ட அடி வாங்குற சத்தம் இங்கே கேக்குது :-)...

Ananthoo said...

dubuks!
ippadi ellarum easya kandupidikara maathiri mudichuttu ippo thiru thirunnu muzhikireengaley!hmmm..
irunthalam that "poruppellam kettu vaangikko.." is the best..second best is that 'madrasla paathen' uthaar! that used to dominate most udance in our schools too ranging from cricket in TV to vazhavazha paper prints:-)

Dubukku said...

இளா - :) கருத்து பிடிக்கலையா...அது சின்னப் பசங்களுக்கு சொன்னது....இன்னமும் சின்னப்பையன்னு நினைப்பா? :P

அருண் - அப்புறம் கமெண்ட் போடவேயில்லையே :)

கொத்ஸ் - அப்பிடியா....மேட்டர் விவகாரமானதுங்கிறதால கொஞ்சம் ஜாக்கிரதையா பேலன்ஸ் பண்ணவேண்டியிருந்தது அதனால இருக்கலாம்.

இஸ்திரி பொட்டி - ஹா ஹா...ஜென்மத்துக்கும் நாறடிச்சிட்டு இருப்பாங்கன்னு சொல்லுங்க...இதே மாதிரி எங்க காலேஜ்லயும் பி.ஜில பிரண்ட்ஸெல்லாம் கிளம்பிப் போய்(நான் கிடையாது) மார்னிங் ஷோ வேற படம்ன்னு தெரியாம பார்த்துட்டு காலேஜ்ல வந்து நாறிட்டாங்க :))

சக்ரா - யெஸ் மறக்க முடியுமா...:)) முதல் தரம் தமிழ்ல அந்த மாதிரி படிச்சா சிரிப்பு தான் வரும் :))) அதுவும் டயலாக்ஸ் :)))


ஸ்ரீனீவாசன் - வாங்க..வருகைக்கு நன்றி..மன்னிச்சிக்கோங்க...மெயில் அனுப்பத் தாமதமாகிடிச்சு...இன்னிக்கு அனுப்பறேன்.

கே- வெவகாரமான மேட்டராச்சே பேலன்ஸ் தவறாம எழுதறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தது

இராமச்சந்திரன் - உங்கள மாதிரி (தற்காலிக) தனிக்கட்டையா இருந்தா செஞ்சிருக்கலாம்...யாரு வாங்குறது பொது மாத்து :))

சாமான்யன் சிவா - :))

இராமச்சந்திரன் - கவுத்திட்டீங்களே இப்படி....இந்த நக்கல நல்ல இருநதது :))

அம்பி - மேட்டர் அப்பிடீங்கிறதால இருக்கலாம்.

சுமதி - ஆமா யாரும் கேட்காதது ஆச்சரியமா இருந்தது :0 நன்றி.

பூ - கரெக்டா சொன்னீங்க. ஆமாங்க சீனாதானா மாமா ஒரு சுவாரசியமான கேரக்ட்டர். கண்டிப்பா முயற்சி பண்றேன்.

ஜொள்ளுப்ப்பாண்டி - அண்ணே வாங்க...நீங்களும் ஆப்ரேட்டரா இருந்து மாட்டியிருப்பீங்க போல?? :))

குழம்பி- அட இன்னும் அட்வைஸா இதுக்கே மக்கள்ஸ் வார்றாங்க என்ன...உங்க ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றிங்க

நிவி - வாங்க மேடம்...ஆமா கொந்தளிச்சிட்டாங்க பாருங்க...பேலன்ஸ் தவறாம கொஞ்சம் கஷ்டம் தான் இது :))

ஸ்ரீராம்- அண்ணே அண்ணே ஏதோ கோவம்ன்னு தெரியுது எதா இருந்தாலும் மன்னிச்சிக்கோங்க பேசி தீர்த்துக்கலாம்....ஹீ ஹீ இதுக்காக பாய்காட்லாம் பெரிய வார்த்தைங்கோவ்...சின்னப் பையன் பார்த்து செய்யுங்க :))

அரசு - அச்சில் அவ்வளவு தான் :))) நன்றி ஹை

அனானி - ரொம்ப உபயோகமாக இருக்கு இந்த தகவல் நன்றி.

வீரா - :)) ஆமாங்க இதுல பொதுமாத்து வேற வந்திருமோன்னு பயமா இருந்திச்சி அதான் சுபம்ன்னு பொர்ட்டு பொட்டுட்டேன் :))

அனந்தூ - வாங்க சார் என்ன ரொம்ப நாளா காணோம். உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி

Post a Comment

Related Posts