Tuesday, March 27, 2007

டிஷ்வாஷர்

"பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்கானும் மினுமினுக்க ஏ1 க்ளீனிங் பவுடர்" என்று மழைக் காலத்தில் ச்சூச்சாவை அடக்கி வைத்துக்கொண்டு டாய்லெட்டுக்கு ஓடுகிற அவசர கதியில் ரேடியோவில் ஒரு மாமாவும் மாமியும் பாட்டு பாடுவார்கள். இது தான் எனக்கு நியாபகம் இருக்கும் முதல் பாத்திரம் கழுவும் பவுடர் விளம்பரம். அப்புறம் டீ.வி. வந்ததற்கு அப்புறம் இந்தப் பக்கம் ஒரு அம்மணி நான் பால்கோவா கிண்டுகிறேன் என்று தீய்ச்ச சட்டி மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பார். அந்தப் பக்கம் இன்னொரு அம்மணி புத்தம் புதிய தட்டை சோப்பு நுரையில் நிறைத்து அதை லேசாக தடவிக் கொடுத்து தண்ணீரில் காட்டி நோகாமல் நொங்கெடுத்துக் கொண்டிருப்பார். பின்னணிக் குரலில் ஒரு கெய்தான் அங்கிள் நீங்களும் இத மாதிரி ஒரு புதுப் பாத்திரத்தை வாங்கி இந்த ப்ராண்ட் வாஷிங் பவுடரை உபயோகித்தால் இதே மாதிரி பளபளவென்று வரும் என்று பீலாவுட்டுக் கொண்டிருப்பார்.

இதுக்கெல்லாம் எங்க தெரு மாமிகள் அசந்ததே கிடையாது. எனக்குத் தெரிந்து சமீப காலம் வரை ரயில் மார்க் புண்ணாக்கு பொடியில், கோலிக்காய் சைஸ் புளி உருண்டையை போட்டு தேங்காய் சவுரியை வைத்து காட்டுகிற காட்டில் தான் பாத்திரங்கள் பளபளத்திருக்கின்றன. தெருவில் முக்கால் வாசி வீட்டில் இதே டெக்னிக் தான். இருந்தாலும் பாத்திர பளபளப்பு முக்கியமான விஷயம். நாளும் கிழமையுமாய் ஏதாவது திண்பண்டங்கள் கொடுக்கல் வாங்கல் இருக்குமாகையால் இது பெரிய மானப் பிரச்சனை. லேசாக டல்லடித்தால்..."ஏண்டியம்மா...பாத்திரம்னா பாரு பாருன்னு முகம் பார்க்கிற மாதிரி சுண்டி இழுக்க வேண்டாமோ இப்படியா டல்லடிச்சுண்டு இருக்கும்..?" என்று தொங்கவிட்டு தோரணம் கட்டிவிடுவார்கள்.

மாமிகளின் இந்தப் போட்டி மனப்பான்மையை கரெக்ட்டாய் பிடித்து பொழப்பு நடத்தியது காஸ் மெக்கானிக் கைலாசம் ஒருவன் தான். பத்தாவது ஃபெயிலாகி மேலே படிக்காமல் கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி பாயாக இருந்தவன், கொஞ்ச நாளில் காஸ் அடுப்பை கழட்டி அழுக்கை துடைத்து ஓவராயில் செய்கிற மெக்கானிக் கைலாசமாகிவிட்டார். அடுப்பை கழட்டி மாட்டுகிறதில் கொஞ்சம் எக்ஸ்பீரயன்ஸ் போட்டுவிட்டு நமக்கு நாமே திட்டத்தில் மெக்கானிக் கைலாசம் இஞ்சினியர் கைலாசமாகி, நாங்களெல்லாம் தலையிட்டு அப்புறம் திரும்பவும் மெக்கானிக் கைலாசமானார்.

கைலாசம் காஸ் அடுப்பை கழட்டி மாட்டுகிற வேலையை வெறுமென செய்யமாட்டார். "மாமி என்ன தான் சொல்லுங்க...இந்த தெருவிலேயே உங்க வீட்டுல மட்டும் தான் எவெர்சில்வர் அடுப்பு எவர்சில்வரா பள பளன்னு இருக்கு..மத்த வீடுகள்ல்ல சொன்னாத் தான் எவர்சில்வர்ன்னு தெரியுது...மத்தபடி ஈயத்துல செஞ்சா மாதிரித்தேன் இருக்கு"ன்னு கொளுத்திப் போட்டுவிடுவார். அவ்வளவு தான் அந்த விட்டு மாமிக்கு பாத்திரம் தேய்ப்பதில் எம்.டெக் பட்டம் வாங்கியது மாதிரி அப்பிடியே அள்ளிக்கொண்டு போய்விடும்.

"கேஸ் மெக்கானிக் கைலாசமே சொல்லிட்டான்..எங்காத்துல பளபளக்கிறது மாதிரி யாராத்துலயும் இல்லையாம்" என்று கைலாசம் கொடுத்த எம்.டெக் பட்டத்துக்கு பப்ளிசிட்டி கொடுத்துவிடுவார். மற்ற மாமிகளுக்கு உடனே Peer Pressure அதிகரித்துவிடும். உடனே அடுப்பில் எண்ணைய வெண்ணைய கொட்டி கைலாசம் விசிட்டுக்கு ஏற்பாடாகிவிடும். இப்படியாக பத்தாவது ஃபெயிலான "நடமாடும் பல்கலைக்கழகம்" கேஸ் மெக்கானிக் கைலாச வள்ளல், பாத்திரம் தேய்பதில் எம்.டெக் பட்டத்தை மாமிகளுக்கு சுழல் முறையில் வழங்கி கல்லாவில் காசு பார்த்துவிடுவார்.

சென்னையில் இருந்த போது ஸ்காட்ச் ப்ரைட் என்று தேய்பதற்கு ஒரு ஸ்கரப்பர் வந்தது. வந்த புதிதில் சன் டீவியில் அவன் விடுகிற பீலாவில் வீட்டில் தங்கமணி மயங்கி "சூப்பரா இருக்காம்...இப்போ போய் வாங்கிட்டு வாங்ன்னா வாங்கிட்டு வாங்களேன்"ன்னு இதயம் நல்லெண்ணை மாதிரி விரட்டிவிட்டார். கடைக்குப் போய் விலையைக் கேட்டால் தலையைச் சுற்றியது. இந்த தொத்தல் ஸ்கரப்பருக்கு போய் எவனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா என்று வீட்டுக்கு வந்து வழக்கம் போல ஸ்டாக் இல்லையாம் என்று சொல்லிவிட்டேன். எவ்வளவு நாள் தான் தாக்குபிடிப்பது..."என்ன பெரிய ஸ்காட்ச் பிரைட்.பிச்சாத்து ..இதுக்கு போய் எந்த இளிச்சவாயனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா . எல்லாம் நாம தேய்க்கிறதுல தான் இருக்கு இங்க கொண்டா இப்படி, இப்படி கர கரன்னு தேய்ச்சா எப்படி பளபளன்னு இருக்கு பாருன்னு ஒரு டெமோ காட்ட.."ஆஹா நீங்க சொன்னது கரெக்ட்டுத் தாங்க சூப்பரா இருக்கு இதுக்கு போய் எவனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா அதுவும் நீங்க இருக்கும் போது... நீங்களே இனிமே டெய்லி இதே மாதிரி கர கரன்னு தேய்ச்சு பளபளன்னு ஆக்கி வைச்சிருங்க"ன்னு டெக்னிக் பேக் ஃபய்ராகி விட்டது. அப்புறம் "நீ சொன்னது கரெக்ட்டு தான்மா..இப்போ தான் இத ஸ்காட்ஸ் ப்ரைட் பத்தி பேப்பர்ல படிச்சேன் சூப்பராத்தேன் இருக்கு ...இதுல லேசுல தேயாத நைலான் பைபர் இருக்காம் பிசுக்கெல்லாம் நல்லா போகுமாம் அதுனால தான் இவ்வளவு விலையாம். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை..நாயகன் மாமா சொல்லி இருக்கார்" என்று ஏகப்பட்ட கதை விட்டு தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இங்கே லண்டன் வந்தும் நமக்கு நாமே திட்டம் தான் இவ்வளவு நாளாக ஓடிக் கொண்டிருந்தது. போன வருடம் கொழுக்கட்டை பண்ணுகிறேன் பேர்வழி என்று அடுப்பில் தண்ணீர் வைக்காமல் கொழுக்கட்டையை வைத்துவிட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டேன். நம்ம நேரம் அடுப்பில் கொழுக்கட்டை கரிக்கட்டையாகி புகைந்து அடுக்களை எல்லாம் ஒரே புகைமயமாக்கிவிட்டது. "ஓட்டப்பம் தானே வீட்டைச் சுடும்ன்னு பட்டினத்தார் சொன்னார்...கொழுக்கட்டையெல்லாம் சொல்ல்வில்லையேன்னு பட்டினத்தார் மீது பழி போட்டுப் பார்த்தேன், ம்ஹூம் வீட்டில் மீரா ஜாஸ்மின் மீதிருந்த துவேஷம் எல்லாம் அன்று என் தலையில் தான் விடிந்தது.

இப்போ விட்டில் ஏகப்பட்ட (உண்மையான) ஆணி புடுங்குவதால் டிஷ்வாஷரும் வாங்கி மாட்டிவிட்டோம். பிச்சாத்து பாத்திரம் தேய்கிறதுக்கு ஒரு மிஷின். ரயில் மார்க்க் புண்ணாக்கு பொடியெல்லாம் ஒத்துக்காதாம்..அதுக்கு கடையில போய் கேட்டால் டூ இன் ஒன், திரீ இன் ஒன்...என்று பைவ் இன் ஒன் வரை மாத்திரை விக்கிறார்கள். என்ன டூ இன் ஒன்னுன்னா பாட்டு பாடிகிட்டே பாத்திரம் தேய்க்குமான்னு அங்கதம் ட்ரை பண்ணி பார்த்தேன், "நீயெல்லாம் டிஷ்வாஷர் வாங்கிட்டியா விளங்கினாப்ப்ல தான்"னு லுக்கு தான் கிடைத்தது. இது போக சால்ட், ரின்சிங் லிக்விட்ன்னு ஆயிரெத்தெட்டு வாங்கி கடைசில பாத்திரம் தேய்கிறதுக்கு பில்லைப் பார்த்தா பிச்சை பாத்திரம் தான் மிஞ்சும் போல தெரிந்தது. ஹும் இந்த விலைக்கு பாத்திரம் தேய்கிறதுக்கு அழகா ஒரு வெள்ளக்காரிய வேலைக்குப் போட்டிருக்கலாம்.

சரி வாங்கினது தான் வாங்கியாச்சு...சட்டு புட்டுன்னு பாத்திரத்த தேய்ச்சுக் கொடுக்குதா? பாத்திரத்த அதுல போடறதுக்கு முன்னாடி ஒரு தரம் கழுவனுமாம். ரொம்ப லட்சணம் தான் இந்த் இழவுக்குத் தான் இம்புட்டு பைசாவான்னு நொந்து கொண்டே அடுக்கி வைக்க நம்மூர் இலுப்புச் சட்டியெல்லாம் அவ்வளவு தோதாக வைக்கமுடியவில்லை. நீ அந்தப் பக்கம் நகரு நமக்கு கம்ப்யூட்டர்ல நிறைய கட் அன்ட் பேஸ்ட் அனுபவம் இருக்குன்னு சாஃப்டுவேர் பிரதாபத்தையெல்லாம் காட்டி தங்கமணியை அந்தாண்ட போகச் சொல்லி எல்லாவற்றையும் அடுக்கி வைத்து சுவிட்சைப் போட்டு சிவனேன்னு தேவுடு காத்தோம். எல்லாம் முடிஞ்சு திறந்து பார்த்தா நான் நிமிர்த்தி வைத்திருந்த இரண்டு இலுப்புச்சட்டியில் கரி அப்பிடியே இருக்க சோப்பு வெந்நீரை நிரப்பி வைத்திருந்தது. என்னாங்கடா டிஷ்வாஷருக்கு பதிலா வெந்நீர் போடற மிஷின அனுப்பிட்டானான்னு நான் குழம்ப தங்கமணி வந்து தலையில் ரெண்டு போட்டு பாத்திரங்களை கவுத்தி வைக்கனும்ன்னு உரைக்கச் சொல்ல...இப்போ சிலபஸ மாதியிருப்பானுகன்னு சமாளிக்க வழக்கம் போல அதுவும் ஊத்திக்சிச்சு.

இப்போல்லாம் "என்ன தான் சொல்லு நீ தேய்க்கிறமாதிரி இந்த மிஷின் தேய்க்கமாட்டேங்குது"ன்னு காஸ் மெக்கானிக் கைலாசம் டெக்னிக்தான் அடிக்கடி ஓடுது வீட்டுல.

40 comments:

Anonymous said...

:))

இலவசக்கொத்தனார் said...

வியர்டு பதிவு போடுன்னா அதை விட்டுட்டு நீ பத்த்ர தேய்க்கிற லக்ஷணத்தை த்ப்பு தப்பா வேற எழுதி வெச்சு இருக்கே. உன்னை.. நற நற...

இலவசக்கொத்தனார் said...

என்ன தப்புன்னு சொல்லலையே. மொத வரியே தப்பு.

//"பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்கானும் மினுமினுக்க ஏ.எம் க்ளீனிங் பவுடர்" //

அது ஏ எம் இல்லை ஏ1.

Anonymous said...

அடுப்புதும் பையனுக்கு blog எதற்க்கு?

Anonymous said...

:-))

கார்த்திக்,
சிங்கை.

துளசி கோபால் said...

டிஷ் ட்ராயரா வாங்கி இருந்தா ரெண்டுலேயும் ஒவ்வொண்ணை, (அட இந்த இலுப்பைச்
சட்டியைத்தான் சொன்னேன் )வைக்கலாமுல்லே?:-)))

SurveySan said...

//பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்கானும் மினுமினுக்க ஏ.எம் க்ளீனிங் பவுடர்//

A1 இல்ல?

இந்த ஸ்க்ராட்ச் ப்ரைட்ல என்னதான் இருக்கோ. இங்கேருந்து கொண்டு போர வாட்சு, பர்ப்யூம், எம்.பி.3 ப்ளேயர விட, அந்த பச்ச பஞ்சுக்குத்தான் டிமேண்ட் ஜாஸ்தி.
எல்லா மாமீஸுக்கும் ரெண்டு ஷீட் கொடுத்தா, ரொம்ப சந்தோஷமாயிடுவாங்க :)

Syam said...

ROTFL....தல வூட்டுல பாத்திரம் கழுவவிட்டுடாங்க அப்படிங்கறத இவ்வளவு காமெடியா சொல்ல உங்களால தான் முடியும் :-)

Syam said...

உங்க archive links எதுவுமே வேலை செய்யல...

Paavai said...

adhu per thengai savuyriyaa. naan thengai naarnu thaan kelvipattrukken.. nalla post.. dish washer vaanga vendamnu solreenga

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

//"பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்கானும் மினுமினுக்க ஏ.எம் க்ளீனிங் பவுடர்.. இல்ல.. அது ஏ1.னு தான் நினைக்கிறேன்.

அப்பறம் இந்த போஸ்ட் நிஜமாவெ ரொம்ப நல்லாயிருக்கு.

நாட்டாம சரியா தான் சொல்லொயிருக்கீங்க..
// தல வூட்டுல பாத்திரம் கழுவவிட்டுடாங்க அப்படிங்கறத இவ்வளவு காமெடியா சொல்ல உங்களால தான் முடியும் :-)
ரொம்ப நாளைக்கப்பரம் ஒரு நல்ல போஸ்ட்.

Usha said...

summava sonnanga "pattadaan theriyum !@##$nukku" nnu.
So apdi ipdi machinai vangi vechuttu meduva thirumba onnu rendu pathrmdaane A1 cleaning powder e podumnu nelamai ayidumnu nenaikaren.
Viraivil anda post ai edirparkum,
rasigai

B o o said...

உங்களால மட்டும் தான் இப்படியெல்லான் எழுத முடியும்! :) சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!
எனக்கும் ஏ1ன்னு தான் நியாபகம்.
But I think dishwashers rule! The machines I mean! ;)

Unknown said...

Syam ungalukku vishayme theriyadha???

Thalayoda pazhaya post la oru photo onnu keedhu.. thala perumaya mama rangeukku pattaya pottukinu.. ulaga nanmaikkaga dhyanam pandradhaa oray alambal maya thaan...

aana andha photava utthu paatha theriyum thalaivairoda background la Sun music Gujili onnu compering pannitrukkum... mothathula paatha adhu thala andha kiliya nenachukittu irukkara maadhiri irukkum...Idha thangamani Akka (no mami as requested by Dubuks) photo eduthadha maamave sonnaru.

Vandavaalam thandavalaam yeradhkku munnadi azhichidalaam thookittar polrarukku!!

Yov dubukku!! meyyalumey nee mama madhiri thaam ba irukka photola..aana un sindhanai ellam andha gujiliyanda irukkardha eppadiyo photo edhutha andha akkavukku JJ....

ippo therdha syam archives vela seyyadha ragasiyam

Syam said...

//ippo therdha syam archives vela seyyadha ragasiyam//

@Ramachandran,

oh athu thaan matter ah...andha post enaku nalla nyaabagam iruku...T Akka adi polandhutaangannu sollunga :-)

சீனு said...

ennamoooo pooongappa

sriram said...

Idan Moolam Blog makkal anaivarukkum solradu ennana...
a. Dubukku Veetla Dishwasher vaangi irukkanga, ellarum oru dhadavai jora Kaithattunga, mudinja SUN TVla flash news poda sollunga.
b.Dubukku veetla sirthan patthiram theikkirathu, Aani Pudungurathu etc etc (Yaarum inimel avarai enna pudungure enru kettka mudiathu)
c. Sir Kamal madiri try panni irukkaru (wondering what: Comedy show shortly after a very serioius note)Dont worry Man, it has really come out very well, this posting is like Simran- wondering again, lemme explain- Stuff Kammy But Super Presentation, Simran rasigargal ellam arambingappa, naan kuninjikkaren.
d. It is great to see another post so quick, was it coincidental or Bostonla entertainment illaingra ennoda requestoda responsa?
Sriram.

dubukudisciple said...

guruve!!
as usual ROTFL post.
oru Dishwasher veetla vanginatha ida vida sirapa yarume vilambara padutha mudiyathu..ippadi vaarathuku oru tharamavathu blog podunga..
seri aani pudungineengale(nijama aani thaan) eppadinu oru blog podarthu.. naangalum veetla try pannuvom illa.

ambi said...

ROTFL :)
as usual rocking post. already naan thaan inga paathram kazhuvaren. inime adhuve nirantharam aayidum polirukke!

patha vechiye dubukku! :)

Anonymous said...

ROTFL!
Rocking!
Super thala!
Kalakittiye thalaivaa!
epdi ungalaala mattum ipdi ezhudha mudiyudhu?
indha post padichaa mattum illa, nenachaale paravasama irukkey!

ACE !! said...

எப்பவும் போல சூப்பர் தான்.. ROTFL...

ஒரு விஷயம் மறந்துட்டேனே.. நேத்து தான் மெக்கானிக் கைலாசத்தை பாத்தேன்.. இந்த கதைய சொன்னோடனே அவர் டெக்னிக்க உப்யோகபடுத்த ராயல்டி வாங்கி தர சொன்னார்.. இந்திய ரூபாய் இல்லனா பரவா இல்ல, பவுண்ட்லயே கொடுங்கோ... :)) :))

Anonymous said...

தனிமடல்

தேசிபண்டிட்டில் என்னுடைய பதிவை இணைத்தமைக்கு நன்றி டுபுக்கு...!!!

செந்தழல் ரவி

Deekshanya said...

Ethu poga poga KBhagyaraj mathiri, ladies sentimentala thakaringa.. Kalakunga ponga. ellam thangamanikay velicham!! Super post thala!

Munimma said...

dubukks, intha mathiri 10 paisa samacharam ellam summa london eye kanakka perisu padutha, athuvum bayangara humor oda, unaala than mudiyum.

kalyanam ethukku kattikaraanga, intha mathiri edupidi velai seyya thaan. purincha oLi mayam thaan. house to house stairs woNLy.

Ms Congeniality said...

ROTFL!!!
Naanum inga neriyaa veetla indha dishwasher paathuten..enakum ongaluku vandha doubt dhaan..adhula podarathuku munnaadi paathratha oru dharava alambanum naa pinna andha machine edhuku nu..tooo much :D

மங்கை said...

தங்கமணி கிட்டே இந்த பதிவு படிக்க சொல்லுங்க..சந்தோஷப்படுவாங்க.. ஏன்னா...எங்களுக்கெல்லாம் ரங்கமணிக புலம்பறதுதும்.. ஆனந்தக் கண்ணீர் விடறதும் பார்குறதுக்கு, சால சந்தோஷம்..:-)))

Anonymous said...

என்ன தல... எங்காத்துல மாமி என்னை காலி பண்றதுக்காக பதிவு போட்டா மாதிரி இருக்கு. மாமனார் காஸ்ட்லியான டிஷ் வாஷர் எனக்கு கொடுத்தார். ஆனா ரன்னிங் காஸ்ட் ஜாஸ்தியா இருக்கு. கட்டுப்படி ஆகல. அதான் நிஜமான டிஷ் வாஷர் வாங்கலாமான்னு யோசிக்கிறேன்.இல்ல நாளைக்கே கர்ரீஸ்-ல போய் வாங்கிடறேன். (அங்க பாருங்கோ.....தங்கமணி ஆத்துக்காரர் என்ன சமர்த்தா பாத்திரம் தேய்க்க மெஷின் வாங்கிப் போட்டுட்டார்....நீங்களும் இருக்கேளே...! )

Anonymous said...

Ithukku thaan, Bachelor vazhkai yae best.....
ponoma...hotella sappitoma..hospital poi oosi potoma... office ponomanu irunthiralam....
(Naanga (Bachelors)dish wash pannrathukku sompaeri(sandai) pattu samayal panrathaiyae niruthittom...)

kalidasan
Nellai

Sulakshana said...

nalla post.. ellar vetlayum idhe soga kadhai dhan pola irukku... enna enga veetla naan rendu naal thappu thappaa adukku try panninadhula ennavar romba feel panni avare senjuduvar... naan chumma pakkuthula ninnu vedikkai paakaradhoda sari.....

Guru Prasath said...

Munimma:

"house to house stairs woNLy" அப்பிடின்னா, வீட்டுக்கு வீ்டு மாடிப்படி.., வாசப்படியாகாது.

ஆமா வாசப்படின்னா இங்கிலீசுல என்ன? ஒருவேளை stairs தானோ?

Anonymous said...

appada! ivvalo sirichi romba naal aachu!!! ondraphull!

Dubukku said...

அனானி- முதல் போணிக்கு நன்றி :)

கொத்ஸ் - எப்பா உங்க பிரஷர் தாங்கமுடியல சாமி..தோ போட்டுர்றேன். அட ஆமாம் ஏ1 இல்ல..திருத்திடறேன்.

அனானி2 - அடுப்ப போய் எதுக்கு ஊதறீங்க? அணைஞ்சுடாது?? :P

கார்த்திக் - :)) நன்றி ஹை. நீங்க தான் அந்த ரசிகர் மன்றம் பேர்ல உசுப்பேத்தினதா? :))

துளசி - அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கெ...எல்லாம் வாங்கி முடிச்சதுக்கப்புறம் சொல்லுங்க :))

சர்வேசன் - இத வாங்கிட்டு போய் ஏமாத்துறீங்களா? ஆனா இதுதான் ஊர்லயே கிடைக்குதே இப்போ? :)

ஸ்யாம் - வாய்யா நாட்டாமை. நன்றி ஹை. என்ன எழவோ தெரியல ஆர்க்கவைஸ் எல்லாம் போஸ்ட்டுக்குள்ளேர்ந்து க்ளிக்கினா வொர்க் ஆக மாடேஙுது...முத பக்கத்துலேர்ந்து க்ளிக்கினா மட்டும் தான் வொர்க் ஆகுது. போஸ்டுக்குள்ளேர்ந்து க்ளிக்கினா லிங்குல எக்ஸ்ட்ராவா வருஷமும்/மாசம் போடுக்குது அதனல தான் வொர்க் ஆகமாடேங்குது. எப்படி சரி பண்ணன்னு தெரியலை. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பூ

பாவை - ஹீ ஹீ நாங்க அப்பிடிதான் சொல்லுவோம் :)

Dubukku said...

Sumathi - நன்றி ஹை . ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல போஸ்ட்டுன்னு உள்குத்து வைக்கிறீங்க :))

உஷா - ஆமாங்க இப்போல்லாம் ரெண்டு பாத்திரம் தானே இதுக்குன்னு டிஷ்வாஷர் போடமுடியுமான்னு தோணிடுது :)

Boo - ரொம்ப ஏத்துறீங்க :)) நன்றி ஹை. Correct தேய்ச்சா சரியா தான் தேய்க்குது....நான் சும்மா நக்கல்வுட்டேன் :))

ராமசந்திரன் - யோவ் நல்லா கதை கட்டுறீங்கய்யா...ஆர்கைவ்ஸ்லாம் டெக்னிக்கல் பிரச்சனைனால வொர்க் ஆகலைய்யா...அடேங்கப்பா....அதுக்கு ஒரு பெரிய மெகா சீரியலே பொட்டுட்டீங்களே...வூட்டுல பிரச்சனை உண்டு பண்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா :))

ஸ்யாம் - நல்லா சிந்து பாடுய்யா...நல்லா இருங்க ரெண்டு பேரும் :))

சீனு - போஸ்டு பிடிக்கலைன்னு நினைக்கறேன் ? :)

Sriram - நீங்க வைச்சது தான் ஆப்பு. உங்க கமெண்ட பார்த்துட்டு உண்மயிலேயே நீங்க எதாவது பாத்திரம் தேய்கிறீங்களா..என்னம்மோ பாத்திரம் தேய்க்கிறதுல டாக்ட்டர் பட்டம் வாங்கின மாதிரி எதுக்கு இந்த அலம்பல்ன்னு பின்னி பெடெலெடுத்துட்டாங்க :))
அந்த கமல் டெக்னிக் மேட்டர இன்னொருத்தரும் முன்னாடி சொல்லியிருக்காங்க...நீங்களெல்லாம் என்னம்மோ ரொம்ப என்ன உசுப்பேத்திறீங்க நன்றி ஹை.

DubukkuDisciple - வாங்க சுதா. நன்றி. ஆனி புடுங்கறது கடுப்பாகிடிச்சு ... :))

Ambi - சந்தோஷம். மகிழ்ச்சி. நீ எத்தன தரம் இங்க பத்த வெச்சிருக்க...

Anony - டேய் சக்ரா உன் நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா

ACE - கைலாசம் தான் போனதரம் குடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் பாக்கி தரனும். நீங்க தர்றீங்களா? :))

Ravi - You are welcome :)

Dubukku said...

Deekshanya - ஹீ ஹீ அப்படீங்கிறீங்க??? நன்றி :))

Munimma - நன்றி ஹை. ஆஹா "உன்னால் முடியும் தம்பி" பட்டத்த கரெக்டா உபயோகப் படுத்தியிருக்கீங்க அதுக்கும் ரொம்ப நன்றி :))

Ms.Congeniality - ஆமாங்க அது தான் பெரிய கொடுமை.

மங்கை - அதான் தெரியுமே...இங்க வீட்டுலயும் சால சந்தோஷமுலு தான்.

dagulmama - ஆஹா நீங்க இன்னும் வாங்கலையா இன்னும் என்ன பண்றீங்க...போய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன் (ஆமா நீங்களும் யூ.கேல தான் இருக்கீங்களா?)

Kalidasan - ஏங்க வயத்தெரிச்சல கிளப்புறீங்க...எனக்கெல்லாம் பாச்சிலர் வாழ்க்கையே வாய்க்கலை.

Sulakshana - ஓ இது தான் டெக்னிக்-ஆ தப்பா செய்யிற மாதிரி செஞ்சு வேலை வாங்குறது காட்ச் த பாயிண்ட்.

GuruPrasath - நல்ல கேள்வி. தமிழ் சங்கத்துல சொல்லி தீர்த்துடுவோம் ...ஆயிரம் பொற்காசு தானே?

DesiGirl - வாங்க வாங்க நன்றி ஹை :))

Balaji S Rajan said...

Why all this? If your vessels are not good Madhavan will come home and give some liquid to our ladies. Don't you know that? BTW cylinder man... was humorous. I read the first para and started laughing and took a break to continue reading.

As usual kalakiteenga.

Anonymous said...

illa..naan irelandla irukken.

சேதுக்கரசி said...

//ஹும் இந்த விலைக்கு பாத்திரம் தேய்கிறதுக்கு அழகா ஒரு வெள்ளக்காரிய வேலைக்குப் போட்டிருக்கலாம்.//

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்! :-D

Anonymous said...

நான் கார்ல தனியா போகும் போது என்னோட மூன்று வயது குழந்தை பேசியதை இமிடேட் பண்ணிக்கொண்டே ட்ரைவ் பண்ணுவேன்.இது வியர்டுல சேர்த்தியா?

ஸ்கூல் படிக்கும் போது, பரீட்ச்சை அன்னிக்கு நான் போற வழியில ஒரு சொரி நாயா பாத்துட்டா அன்னிக்கு எக்சாம் பேப்பர் ரொம்ப ஈஸின்னு ஒரு பிதற்றலான நம்பிக்கை...

PPattian said...

இன்னிக்குத்தான் முதல் முதலா உங்க பதிவு பக்கம் வந்தேன். சும்மா சொல்ல கூடாது, போட்டு தாக்குறீங்க.. காமடியை..

ஒரு டிஷ்வாஷரை எடுத்துகிட்டு இவ்வளவு நகைச்சுவையா எழுத முடியுமுன்னு நான் கனவுல கூட நினைக்கல...

Anonymous said...

pottu thakkurinka
naanum ennaikkuthan parthan naala erukku.sivaji padam pathi neenka sonna unmayukku nandri yethukku evvalu pantha /selvavu yendre thoniche.rajini ellayina padam vuthal than
arun

Post a Comment

Related Posts