Friday, February 02, 2007
Raincoat
மு.கு - என்னைப் போல் படம் பார்க்கும் முன் சினிமா விமர்சனங்களைப் படிக்காதவர்கள் கவனத்துக்கு...இந்தப் பதிவில் லேசாக கதையை சொல்லி இருக்கிறேன்.
மப்பும் மந்தாரமுமாய் வானம், வெளியே நல்ல குளிர், தலை போகிற வேலை ஒன்றும் இல்லாமல், பொழுதும் போகாமல் சோம்பேரித்தனாய் இருக்கும் மத்தியான வேளை- எனக்கு ரொம்ப பிடிக்கும். சூடா மிளகாய் பஜ்ஜியும் ஒரு மசாலா டீயும் கிடைத்தால் பஞ்சத்தில் அடிப்பட்டவன் மாதிரி ஒரே அமுக்காய் அமுக்காமல், பாலு மஹேந்திரா படத்தில் வருவது மாதிரி மெதுவாக சுவைத்து தின்று விட்டு, "தூ...இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்ற பார்வையெல்லாம் கண்டு கொள்ளாமல் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுக்கையிலே கிடப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி சுகமான மதியத்தில் பார்த்தது தான் "ரெயின்கோட்".
குழந்தைகளுக்கு அறிவை வளர்க்க லைப்ரரியில் ஃப்ரீயாக ரெண்டு டி.வி.டி எடுத்துக் கொள்ள கார்டு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் அறிவுப் பசி ரொம்ப அதிகம் என்பதால் முக்கால்வாசி நாள் குழந்தைகள் செக்க்ஷன் டிவிடி எல்லாம் காலியாகத் தான் இருக்கும். பெரியவர்கள் செக்க்ஷனில் யூ, மற்றும் பி.ஜி ரேட்டிங் டி.வி.டிகளையும் இந்தக் கார்டில் எடுத்துக் கொள்ளலாம். சும்மாக் குடுத்தா விட்ருவோமா? நோண்டிப் பார்த்ததில் மாட்டியது தான் ரெயின்கோட். நம்ம கிஸான் ரகுதாத்தா ஹிந்தியை வைத்துக் கொண்டு வழக்கமாக ரொம்ப அல்லாட மாட்டேன். அட்டைப் படத்தில் ஐஷ்வர்யா ராயைப் பார்த்தவுடன் கொஞ்சம் பதறலாய்த் தான் இருந்தது. கல்யாணமான புதிதில் "தாள்" படத்தில் ஐஷ்வர்யா ராய் உண்ர்ச்சி பூர்வமாக ஆடிக்கொண்டிருந்த ஒரு பாட்டை தங்கமணி துணி தோய்த்துக் கொண்டிருக்கும் போது ரீப்பேள் செய்து பார்த்து கையும் களவுமாய் மாட்டிக் கொண்டேன். "ஹிந்திக்காரன் என்னமா பாட்டெழுதியிருக்கான்...ப்யார்..கலம் கஹான் ஹை..? கலம் மேஜ் பர் ஹை....இஷ்க்...அப்படியே தத்துவார்த்தமான வரிகள்..இந்த வரிகளுக்காகவே எத்தனை தடவை வேணுமானாலும் பார்க்கலாம்..."ன்னு சமாளித்துப் பார்த்தேன் எடுபடவில்லை...தங்கமணி துணிக்கு பதிலாக என்னை தோய்த்து எடுத்து ஆடியோ கேசட் வாங்கி தந்து பாட்டை ட்ரான்ஸ்லேட் பண்ண அசைன்மெண்ட் குடுத்துவிட்டார். அன்றைக்கு தங்கமணி தலைமையில் நானும் ஐஷ்வர்யா ராய் எதிர்ப்பு சங்கத்தில் சேர்ந்தது தான்...அப்புறம் ஹூம்... வீட்டில் ஐஷ்வர்யா ராய் படத்துக்கு தடா. இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும் என்று அட்டைப் படத்தில் தெரிந்தது. பழைய சம்பவத்திற்கு பிறகு நிறையவே நாளாகிவிட்டதால், ரிஸ்க் எடுக்கலாம் என்ற தெம்பு வேறு. தெகிரியமாய் எடுத்துவிட்டேன்.
"நாமளும் டேக்ஸ் கட்றோம், குழந்தைகளுக்குன்னு ஃப்ரீயா ஒரு டிவிடி கிடைக்கிறதா..எப்போ போனாலும் காலியாவே இருக்கு...கேள்வி கேக்க மாட்டோம் நாம இளிச்சவாயன்னு நினைச்சுண்டு இருக்கான்... இந்த அநியாயத்த சும்மா விடலாமா...அதான் கட்ற காசுக்கு ரெண்டு டிவிடியை குடுறான்னு என்ன படம்ன்னு கூட பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு எடுத்து வந்துட்டேன் " போட்ட பீடிகையிலேயே தங்கமணி உஷாராகிவிட்டார். இந்தப் படம் ரொம்ப நல்லாருக்காம்...எங்கியோ படிச்சேன் அப்பிடி இப்படின்னு ஒப்பேத்தி..ரெண்டு பேருமாய் சேர்ந்து பார்த்தோம்.
ஒரு வரிக் கதை. ஆனால் எடுத்த விதம் அருமையாக இருக்கிறது. மெகா சீரியல் மாதிரி நாலைந்து கதா பத்திரங்கள் தான். படத்தின் பெரும்பகுதி ஒரு அறையில் தான். ஸ்கிரீன் ப்ளே படத்தின் மிகப் பெரிய பலம். அஜய் தேவ்கனும் ஐஷ்வர்யாவும் ஒரு காலத்தில் காதலித்திருக்கிறார்கள் . அவர்கள் காதலையும், ஏன் பிரிந்தார்கள் என்பதையும் வலுவில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். கதையின் மையக் கரு அதில்லையென்பதால் தப்பித்தது. ஐஷ்வர்யா எதோ ஒரு கபோதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு ஏழ்மையில் கஷ்டப் படுகிறார். அஜய் தேவ்கன் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார். கல்கத்தாவுக்கு பொழப்பை கவனிக்க வந்த இடத்தில், அதை விட்டு விட்டு கொட்டுகிற மழையில் அஜய் ஐஷ்வர்யாவை சந்திக்க்க அவர் வீட்டுக்கு வருகிறார். ஐஸ்ஸின் கல்யாணத்திற்கு பிறகு இருவரும் முதன் முறையாக சந்திக்கின்றனர். இருவரும் அடுத்தவர் மனது கஷ்டப் படக்கூடாது என்பதற்காக பகட்டாய் இருப்பதாய் காட்டிக் கொள்கிறார்கள். படத்தின் மையக் கரு இந்த சந்திப்பு. பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக அடுத்தவரின் ஏழ்மையை அவர்கள் அறியாமல் அறிந்து கொள்கிறார்கள். தங்கள் ஏழ்மையைக் காட்டிக் கொள்ளாமல், ஒருவருகொருவர் தெரியாமல் உதவி செய்கிறார்கள். கவித்துவமான எதார்த்தமான முடிவு. (கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா அபத்தமெல்லாம் இல்லை....)
ஐஷ்வர்யாராய் படம் நெடுக வடகிந்திய பாணியில் புடவை கட்டிக்கொண்டு வீட்டுப் பெண்மணியாய் வளையவருகிறார். பாந்தமாய் இருக்கிறது. அஜய்தேவ்கன்..நன்றாக நடித்திருக்கிறார். பாத்ரூமில் அழும் போது குழாயைத் திறந்துவிட்டுக் கொள்ளவேண்டும் என்று நண்பனின் மனைவி டிப்ஸ் கொடுப்பது, எல்லா பெண்களுமே கல்யாணம் முடிந்து வரும் போது அழுவது பெற்றோரை விட்டு பிரிவதனால் மட்டும் தானா என்று அஜய் சூசகமய் கேட்பது, என்று படத்தில் நிறைய இடங்கள் நச்சென்று இருக்கிறது. நண்பனின் மனைவியாக வரும் கதாபாத்திரம் அழகாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது.
ஐஷ்வர்யா ராயை வைத்துக்கொண்டு ஒரு பாரின் பாட்டு கூட இல்லை,லொட லொடவென்று பேசுவது பிரச்சனை இல்லை, ஐஷவர்யாவிடம் நடிப்பைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, படம் நன்றாக இருந்தால் போதும் என்றால் பாருங்கள்- பிடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
அப்படிபோடு,
முதல் பின்னுட்டம் என்னுது, இந்த படம் கொஞ்சம் பார்த்தேன், என்னமோ cont பண்ணமுடியவில்லை (ஒரு வெலை ரகு தாத்தா hindi கத்துகொண்டுரு ந் தால் புரியும் பொல)
அடுத்த முறை, subtitle வெச்சு பார்கிறேன்.
I am the kind who reads reviews. And I did read many for this one too. But yours is really good. The same good old humour as always. :) But have not seen Raincoat yet. (makes me go back in time too much--to HCL days :)
p.s.: nee Aish-na, anga edhum kedaiyadha.. oru Kapil Dev mari. Irundha, adhai, capitalize panna vendiyadhu dhane.
ரொம்பத்தான் ஆளே மாறிப் போயிட்டீரு போல. நம்ம வம்சம் என்ன? நம்ம பரம்பரை என்ன? ஹிந்திப் படமெல்லாம் பாக்கற ஆளுங்களாய்யா நாம? எல்லாம்....ஹூம் உம்மைச் சொல்லிக் குத்தமில்ல!!
ஐஸ்வர்யா ராயை திரையில் பார்ப்பதற்கே தங்கமணி இவ்வளவு தடா போடுகிறார் என்றால் உங்கள் குசும்பு புரிகிறது டுகுக்கு
looks like thangamani assignment did not stop with one,correcta kadai purinchu akku vera aani veraya vimarsanam panniteengale :)-
வழக்கம் போல க்ளாஸ் பதிவு தலைவா!
//தங்கமணி துணிக்கு பதிலாக என்னை தோய்த்து எடுத்து ஆடியோ கேசட் வாங்கி தந்து பாட்டை ட்ரான்ஸ்லேட் பண்ண அசைன்மெண்ட் குடுத்துவிட்டார்//
படத்துலேயே எனக்கு புடிச்ச சீன் இது தான். ஒரே சிரிப்ஸ் ஆஃப் இண்டியா தான் போங்க.
ரெயின்கோட் பாத்துட்டு உங்களைத் துவைக்கலைன்னு நெனக்கிறேன். அதான் தைரியமா போஸ்ட் எல்லாம் போட்டுருக்கீங்க போலிருக்கு?
:)
washing machine ellam epdi irundhudhu?? ippolam adhukulla pottu thaane ungla thuvaichu iruppanga :)
மசாலா இல்லாத நல்ல படம் இது.
நானும் பாத்துட்டன்.
கஷ்டத்தில் இருந்தும், ஒருவருக்கொருவர் உதவி பண்ணிக் கொள்வது, கவித்துவம்.
படத்தின் விமர்சனத்தை விட்டுதள்ளுங்கள். உங்கள் எழுத்துநடை, பதிவின் கருவை பற்றி கூட சிந்திக்கவைக்காமல் உங்களை பாராட்டுவதிலேயே மூளையை turn செய்துவிடுகின்றது. சூப்பர்.
வீடு கட்டியாச்சு, புகுவிழாவுக்கு சொல்ல விட்டுபோச்சு. மன்னிக்கனும். ஒரு எட்டு வந்துட்டு போறது!!!
guruve!!
super padivu eppodum pola!!!
konjam niraya ezhuthunga!!!
unga adutha padivukaga waiting!!
hope to see u soon!!
//படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...//
தல படம் என்னாச்சு ?????????????
தலைவர்
டுபுக்கு ரசிகர் மன்றம்
சிங்கை
நானும் ஐஸ்வர்யா ராய் படமாச்சேன்னு ஒரு feel good movie'ya expect பண்ணிட்டு பார்த்தா பயங்கர sad movie'ஆ போயிடிச்சி.
ஹ்ம்ம்... rain coat'கு பதிலா pain coat'னு வச்சிருக்கலாம்.
சும்மாவே சோம்பேறித்தனம் அதிகம். அதுலயும் உங்க போஸ்ட் வேற ஓரளவு படத்தை விளக்கி விட்டதா..படம் பாத்த திருப்தி வந்தாச்சு.
இதேமாதிரிதான்...நாமளும் டாக்ஸ் கட்டறோம்னு லோக்கல் லைப்ரரி (at a time 7 DVD - 1 வாரத்துக்கு ஃப்ரீ) போய் எடுத்து பாத்து ரிடர்ன் பண்ண மறந்து போய் ட்யூ டேட் தாண்டி ஒரு DVDக்கு ஒரு நாளைக்கு 1$ வீதம் மொத்தம் 4நாளைக்கு 7DVDக்கு late fee அழுது, கட்டற டேக்ஸ்-ஐயும் தாண்டி போனதால...இப்பலாம் படம் லைப்ரரிலேர்ந்து எடுக்க ரொம்ப யோசிக்கறேன்.
Hindi padama pakarenenga...erunga maruthuvar ayya kita solli laadam kata solren
Enakku mathiyam oru mundru mani velaiel engal Balconey'el ukanthu kathu vanguvathu endral romba pidikkum!! Nice review dubukku.
"என்ன படம்ன்னு கூட பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு எடுத்து வந்துட்டேன்" Ithea childrens liberarya irukarathunala kannai mudikettu eaduthukettu vanthutenga, etha mathiri movies kadaiku poi easaku pesakka ethaiyavathu kannai mudikettu eduthukettu vanthu thangamani ketta uthaivangama irunthaa sari.
heyy dubukku kannaa, summaa solla koodaadhu.... romba nallaavae kettu poyirukkira... unga flow of writing is superb....kalyanathukku munnaala, hindi theriyumnu bandhaa kaatitu ippo avastha padara sangathula ennaiyum sethukunga....good work
ROTFL :) sema flow of writing.
*ahem, Aish kutti padam Guru pakkaliyaa?
@to manni, keep ready with the washing machine.
ஆணி - படத்து அட்டைப்படத்தைப் பார்த்தவுடனே படம் ஸ்லோவா வித்தியாமா இருக்கும்ன்னு எடுத்தேன். எல்லாம் சப்டைட்டில் இருக்குங்கிற தகிரியம் தான்....இல்லாட்டா நன்றி ஹை தான் :)
Vidya - hai danks danks. Yes Mee too miss HCL Lunch days :)...angaiyum irukku...aanaa naan inga aisha vechhu veruppetthurathula madam kadupaiduvaanga :))
கொத்ஸ்- கரிக்ட்டு...எல்லாம் இந்த சப்டைட்டில் வந்த அப்புறம் தான்...கெட்டு (ஹிந்தி)குட்டி சுவரா போயாச்சு...
veerakumar - தடாக்கு அப்போ அப்போ ஸ்டே வாங்கிருவோம்ல :))
Paavai - hehe padatha avvalavu oonri paarthirukken :)
கைப்புள்ள - நன்றி ஹை .
ஆமா இப்போ கொஞ்சம் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க...
ஐஷ்க்கு நிச்சியமாயாச்சாமே.. :)
பொற்கொடி - ennanga en mela enna ivalavu kovam. idea eduthukku kudukara maathiri irukke :)
SurveySan- அதே அதே சபாபதே...மசாலா இல்லாதது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இந்த படம் கமெர்ஷியலா வெற்றியாச்சான்னு ரொம்ப ஆர்வமா இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க
Abi Appa - ஆஹா ரொம்ப புகழறீங்களே...சாமி....
நீங்க சும்ம வீடு கட்டி அடிக்கிறீங்க போல...மிச்சத்த அங்க பின்னூட்டமா போடறேன் :)
dubukudisciple - ரொம்ப டேங்கஸ். தாயீ கொஞ்ச்ம மன்னிக்கனும். வீட்டுல கட்டட வேலை போயிட்டு இருக்கு..ஒரு ரூம்ல ஒண்டிக் குடித்தனம்.ஆபிஸில பெண்டு நிமிருது...அதான். விடு வேலை முடிஞ்சவுடனே நார்மலா போஸ்ட் போட ஆரம்பிச்சிருவேன். இன்னும் ஒரு நாலு வாரம் ஆகும்.
Anonymous- நல்ல நக்கல்...ஆஹா எல்லாரும் மறந்துட்டாங்க...அப்பிடியே அமுக்கிறலாம்னு பார்ட்தேன்...கரெக்ட்டா நியாபகம் வெச்சி பிடிச்சிட்டீங்களே...உங்க தர்ம ஆடி ஆசைய கெடுப்பானேன்...அடுத்த போஸ்ட்ல போடறேன்..:)).
buspass - ஹா ஹா...இதுக்கு தான் என்ன மாதிரி நடிப்ப எதிர்பார்த்து படத்த பார்க்கனும்ங்கிறது. :p
இராமச்சந்திரன்- இந்த கூத்து ஒரு தரம் இங்கியும் ஆகியிருக்கு. அன்னிக்கு தொனதொனத்ததுல அப்புறம் தேதியே மறக்காது எனக்கு :)
anonymous2 - சரிதான்...நமக்கு எதிரி வீட்டுக்கு வெளிய இல்லைன்னு நினைச்சேன்...தப்பாகிடிச்சே :))
ஜீவன் - நன்றி தல எப்படி இருக்கீங்க? கண்ணை மூடிக்கிட்டு வாங்கினா எசகு பிசகான படமெல்லாம் மாட்டுமா என்ன? இவ்வளவு நாள் தெரியாம போச்சே..அடுத்த தரம் ட்ரை பண்றேன்...:)
dagulmama - danks. Yoow nalla padam paartha kettu poirukennu solreenga? :)) ada neenga enna thangamani maathiri namaba maatengreenga? enakku nallave hindi theriyumnga :P
Ambi - danks. Guru - Innum original printkaga waiting. Washing machine lam ippo pazhakkam ayachu...enna bayam ..." kondu vanganda washing machine - a" :)
Ama Sir ungaloda phonela pesarathukku enakku appointment kidaikuma? ;P
this movie was based on 'the gift of the magi' by O Henry... the twist in the end was, as the original, very good... yes, the friend's wife's character was really superb !! good that u mentioned -
shiva.
பார்க்கிறேன்!
அப்படியே என் புதிய பதிவை தேசிய பண்டிதரில் கவனத்திற்கு கொண்டு வர முடியுமா? பாருங்கள். இது தமிழர் பங்களிப்பை எதிர்பார்த்து உருவாகியிருக்கும் திட்டம். எனவே கவன ஈர்ப்பு தேவை. ஒரு தனிமடல் போட்டால் உங்கள் முகவரி கிடைக்கும். [இதை இனிமேல் அழித்துவிடலாம்]-கண்ணன்
Post a Comment