Tuesday, October 03, 2006

Orkut

ப்ளாக் எழுதுவதை விட வேற வெட்டியான வேலை எதுவும் இருக்கா என்ற எனது நீண்டநாளைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டது. “Orkut” என்ற வலைத்தளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன என்று பார்த்ததில்லை. தற்போதைய மெம்பர்கள் யாராவது அழைப்பு அனுப்பித்தால் தான் சேரமுடியும் என்று சொன்னவுடன் ஆர்வம் அதிகரித்துவிட்டது. கையிலவிழுந்து கால்லவிழுந்து கடைசியில் நம்ம வெட்டிபயல் அழைப்பு அனுப்பி, சேர்ந்துவிட்டேன். சரி என்னாடான்னு போய் பார்த்தா...மஹாவெட்டி...பைசாக்கு பிரோஜனம் இல்லை. இப்படியும் பொழுதைப் போக்கமுடியுமா என்று கேவலமாக இருந்தது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்குமே என்று நானும் ஜோதியில் ஐய்கியமாகியாச்சு. வெட்டி ஆட்டத்தில் நானெல்லாம் ஜுஜுபி. அவ்வளவு வெட்டிகள் அங்கு இருக்கிறார்கள், ஆஹா நாம கொஞ்சம் பரவாயில்ல போலன்னு சந்தோஷமாக இருந்தது. கொஞ்சம் நோண்டி பார்த்ததில் நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் சிலர் தென்பட்டனர்.

நம்ம கமெண்ட்ஸ் பொட்டி மாதிரி அங்க ஸ்கிராப் புக் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஆனா எந்த மூதேவி கண்டுபிடித்தானோ.தெரியவில்லை..அந்த விளையாட்டில் ஒருவர் நம் ஸ்கிராப் புக்கில் கேள்வி கேட்டால் நாம் இங்கேயே பதில் சொல்லக்கூடாதாம். அவருடைய ஸ்கிராப் புத்தகத்தில் பதில் சொல்லவேண்டுமாம். இது தெரியாமல் இவங்களெல்லாம் என்ன லூஸா...சம்பந்தமே இல்லாமல் பேசிக்கிறாங்களேன்னு சிலருடைய ஸ்கிராப் புத்தகத்தைப் பார்த்து திரு திருவென முழித்துக்கொண்டிருக்கும் போது வெட்டிப்பயல் திரும்பவும் உதவிக்கு வந்து ஐய்யப்பாட்டை அகற்றினார். ஹூம் இதனால் சுவாரசியமான அரட்டைகளை எல்லாம் பக்கத்தில் போனில் பேசுபவரிடம் ஒட்டு கேட்பது போல் ஒருபக்கமாகத் தான் கேட்கமுடிகிறது. அந்தப் பக்கம் என்ன பதில் சொன்னர்கள் என்பதைப் பார்க்க அங்கு போக வேண்டி இருக்கிறது. அடப் போங்கப்பா…பண்றதே வெட்டி வேலை இதுல என்ன ப்ரொடோகால்? தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க, ஸ்கிராப் புத்தகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

நிற்க. இருக்கிற வெட்டிவேலைகள் போதாதென்று சென்ற வாரம் வேட்டையாடு விளையாடு பார்த்தேன்.கவுத்திட்டாங்க. "காக்க காக்க" ரீமேக்கை கேவலமாகச் செய்திருக்கிறார்கள். இந்த இழவ பார்கறதுக்கு ஒரிஜினல் டி.வி.டிக்காக காத்திருந்தேன். கோலங்கள் விளம்பர இடைவேளையில் பார்தால் போதுமானதாக இருந்திருக்கும். இதை விட ஜி.சி.டி மாணவர்களே பட்டையைக் கிளப்பி இருப்பர்கள். பிரேமலதா அக்கா புண்யத்தில் ஏழு திகில் படங்கள் வேறு பார்த்தேன். "The Forgotten " படம் கிடைத்தால் பாருங்கள். எனக்கு மிக மிக பிடித்தது. வித்யாசமான கதைக் களம், எதிர்பாராத முடிவு. அருமையாக எடுதிருக்கிறார்கள். கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.

மேலும் நிற்க. எனது சேவையை பாராட்டி (நான் இங்கே ரொம்ப கிழிக்கிறேன்னு வாசிக்கவும்) வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் "அட்லாஸ் வாலிபர்" கவுரவத்தை அளித்து அக்டோபர் மாதம் என்னை அங்கு எழுதச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு எனது படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களைப் படிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

(இனிமே உட்கார்ந்துக்கலாம்)

68 comments:

நாமக்கல் சிபி said...

கம்யூனிட்டீஸ் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே :-)

அதுவும் வெட்டியா இருக்கவங்களுக்காகத்தான்...

ஆர்குட்ல இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா? யார் யார் யாருக்கு பிரெண்ட்ஸா இருக்காங்கனு பாக்கலாம் ;) அப்படியே என்ன பேசிக்கிறாங்கனும் பாக்கலாம்...

நம்ம பசங்க வழியறது இருக்கே!!! ஐயோ சாமி ஆள விடுங்கடானு இருக்கும் ;)

வடுவூர் குமார் said...

நானும் பாலாஜி மூலம் தான் சேர்ந்தேன்.
பல ஈ புக்குகள் இலவசமாக கிடைக்கும் வழிகள் தெரிந்தது.இங்கு சிங்கையில் உள்ள சில நண்பர்கள் தென்பட்டார்கள்.
அவ்வளவுதான்.

கடல்கணேசன் said...

உங்கள் பக்கத்தில் நான் கமெண்ட் எழுதவில்லையே தவிர நான் உங்களின் ரசிகன் (நிஜம்.. நீங்கள் தாமிரபரணியை ரசிக்கச் சென்றிருந்த நேரம் நான் உங்கள் பக்கங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். டுபுக்குவின் எழுத்தை அறிமுகப்படுத்தியதற்கு மதுராவிற்கு- அவர்கள் பதிவின் வழியாகத்தான் உங்கள் லிங்க் கிடைத்தது - தனிப்பட்ட முறையில் முன்பு ஒருமுறை நன்றி சொல்லி கடிதம் எழுதியிருக்கிறேன் ).

'கற்றது கடலளவு'க்கு தேசிபண்டிட் இணைப்பு தந்ததற்கு நன்றி.

Anonymous said...

ha ha...adhey dhaanga...irukkardhuleye maha vetti na adhu orkut dhaan... :) but irundhaalum pazhaiya nanbargaloda thodarbu kedaikkudhu....adhu mattum dhaan nalla vishayam...

seri seri naanum orkutla irukken.. :))

sooberah ezhudhareenga...romba naalave unga padhivugala padikardhundu... :) ippo dhaan comment pannaren...

chandru said...

Mr dubukku..

ungaloda wrtiting style super...naa sirichitu erukae enga..enada indialaendhu varavanga ellam loosa appadindramadhiri paakaranga..and vavasangamla memberaanadhuku paaratukkal.

orkut vibaram kalaikattudhu..endha oru vettiyai dhan nan pannalai..;-)

கைப்புள்ள said...

//(இனிமே உட்கார்ந்துக்கலாம்)//

தலைவரே!
இந்த மாதிரி எழுதறீங்க பாருங்க. அங்கே தாங்க நீங்க நிக்கறீங்க :) எப்படி தான் இப்படி எல்லாம் எழுதறீங்களோ? ரொம்ப ரசிச்சேன் இந்த சிலேடையை.

ஆர்குட் என்கிற போதையை மட்டும் வெகுநாளாகத் தவிர்த்து வருகிறேன். ஏற்கனவே ரெண்டு பேரு invite அனுப்பிட்டு சேருடா சேருடான்னு டார்ச்சர் குடுத்துட்டு இருக்கானுங்க. எங்க ஆஃபீசுலயும் பசங்க ஆர்குட்லேயே பழியாக் கெடக்கறதைப் பாத்துட்டு ப்ளாக் addiction ஒன்னு போதும்னு ஆர்குட்டை avoid பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க வேற சொல்லிட்டீங்களா...இனிமே நோ சான்ஸ்.
:)

kuttichuvaru said...

// அடப் போங்கப்பா…பண்றதே வெட்டி வேலை இதுல என்ன ப்ரொடோகால்? தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க, ஸ்கிராப் புத்தகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.//

arumai vaathyaare.... vazhakkam pola kalakkitteenga!!!

EarthlyTraveler said...

"அட்லாஸ் வாலிபர்"appdeena?I came through VPVSdhan indru.Asusual sema comedya ezhudhurukkenga.yenga orkut kuzhamibittu irukkumbodhu unga thangamani onnum sollalaya?
Nellai sandhippu sondha bandham sandhippaga nadandhadhu kooda nalladhan irukku.pottu kuzhapina unga arumai Ambiya summa vitteengala?--SKM

JVC said...

dubukku, adhu enna GCT-ya vambukku izhukkareenga?

Premalatha said...

The forgotten is not my favourite. It is a common masala in Hollywood movies. I liked the tech part of the movie though. very talented.

Syam said...

//தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க//

என்ன சொல்றது வாய் அடச்சு போச்சு போங்க...

உக்காந்தாச்சு :-)

Kumari said...

// அடப் போங்கப்பா…பண்றதே வெட்டி வேலை இதுல என்ன ப்ரொடோகால்? தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க, ஸ்கிராப் புத்தகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.//

Sonna, ippadi nachunu sollanum :)
Btw, naanum ungalai friend-a add panni irukkum. Pliss to accept:)

I was able to find a few of my school/college friends whom i lost touch with in the past years, which is the only reason i like orkut. Otherwise it's a complete waste of time :D
Esp when strange men want to "do fraanship" with u and never accept a NO for an answer :(

Syam said...

@SKM,

//"அட்லாஸ் வாலிபர்"appdeena//

அப்படின்னா ஒரு மாசம் பூராம் சலிக்காம உலகத்துல எந்த மூலைல இருந்து ஆப்பு வந்தாலும் சலிக்காம வாங்குபவர்னு அர்த்தம் :-)

Udhayakumar said...

//இதை விட ஜி.சி.டி மாணவர்களே பட்டையைக் கிளப்பி இருப்பர்கள்.//

என்ன மேட்டர்? யாரை கலாய்க்கறீங்கன்னு சொல்லிட்டு கலாய்ங்க... Orkut-ல GCT கம்யூனிட்டி பார்த்தீங்களா? போய் ஒரு சவுண்ட் உட்டா போதும், நீங்க மூசிக் விடும் வரை விட மாட்டோம்...

ambi said...

he hee, ROTFL :)

அந்த மஹாபாக்யம் எல்லாம் இந்தா தாசனுக்கு வாய்க்கலை. எல்லா புண்ணிய சைட்டும்(வெப்சைட்ட சொன்னேன்) Blocked.
ம்ம்ம்ஹும்ம்ம். பல்லு இருகறவன் பக்கோடா திங்கறான். பிரியா விடுங்க அண்ணா!

Porkodi (பொற்கொடி) said...

ambi, images.orkut.com ponga varum nu nenakren :)

syam, atlas valibar ku adan vilakamna, mudhal la ninga illa serndurkanum anga? ;)

பொன்ஸ்~~Poorna said...

ஆர்குட் ஒரு பக்கா வெட்டி வேலை.. நல்ல வேளை எங்க ஆபிஸில் ஆர்குட்டை ப்ளாக்கி(block)ட்டாங்க.. அதனால எனக்கெல்லாம் ப்ளாக்(blog) தான் ஆர்குட், forwards எல்லாமும்..

//இது தெரியாமல் இவங்களெல்லாம் என்ன லூஸா...சம்பந்தமே இல்லாமல் பேசிக்கிறாங்களேன்னு சிலருடைய ஸ்கிராப் புத்தகத்தைப் பார்த்து திரு திருவென முழித்துக்கொண்டிருக்கும் போது //
இது ரொம்ப ரொம்ப உண்மை.. முதல் நாலு நாள் நானும் இதே மாதிரி முழித்தேன்.. நாலு நண்பர்களின் ரம்பத்துக்கு (scrap-ஐ எப்படித் தமிழ்ப்படுத்தி இருக்கேன் பாத்தீங்களா.. ;) ) என் புத்தகத்திலயே பதில் சொல்லி அப்புறம் அஞ்சாவதா வந்த நண்பன் அங்கங்க போய் சொல்லுன்னு சொல்லிக் கொடுத்தான்.

ஆர்க்குட்டில் பழைய பிளேடை எல்லாம் இப்போ தான் அழித்தேன். இனிமேல் புது பிளேடு ரம்பங்களை ஊக்குவிக்காமல் இருப்பது என்று முடிவு..

ஆமாம்.. நீங்க தமிழ் பதிவர்களுக்கு கம்யூனிட்டி தொடங்கி தமிழ்கூறு நல்லுலகத்துக்குச் செய்த சேவையைச் சொல்லவே இல்லை? :)

Deekshanya said...

Totally agree with you.Orkut mathiri oru vetti velai ulagathulayay kidayathu. Itha therinju namma office networkla antha site-a block panitanga :) actually that was a brilliant move! Enna, officela >95% athula than polutha otitu irunthanga! Worst part of it is, this adding as a friend, namaku pudikathavangala "deny his/her invite" panrathuku tharma sangadama irukum...coz they will get a message "your invite has been denied by.." I registered few months back , but then stopped within few days. got enuff of nonsense..

Anonymous said...

hello,vettaiyadu vilaiyadu nala elliya....ange engeyavthu kaiyar eruntha matikanga....orkutku epo thane neenga puthusa,vanga vatnhu jyothila aikyamyidunga

Appu said...

ungalukku yarum adhula crush option pathi sollaliya
visaringa, adhu ungalukku romba udahviya irukkum
p.s
veetla udha vizhunda nan poruppu illa

Syam said...

//syam, atlas valibar ku adan vilakamna, mudhal la ninga illa serndurkanum anga? ;)//

@பொற்கொடி, அதுக்கு நான் ரொம்ப ஜூனியர்...கியூல பழம் தின்னு கொட்டை போட்ட நம்ம டுபுக்கு அண்ணா மாதிரி நிறைய பேர் இருக்காங்க...அதுபோக எனக்கு எல்லாம் ஆப்பு வாங்கினா உடம்புக்கு ஒத்துக்காது ஜலதோசம் பிடிச்சுடும்் :-)

Anonymous said...

Dubukku anna,Ungaloda blogsa padhichu paarthen.Romba nalla erundadhu.Especially from Jan '05 onwards.Andha Nakkal + Vazhiyal =Superna.One more thing.Ungaloda Jolli thirindhadoru kaalam series padhicha Sujaathavoda thaakam theriyaradhu("rendu varushangal munnadi visharichadil eruvarum kalyanam seidhu kondu sandosamai erukirargal enru kelvipatten-ava ava kanavan manaiviyoda!"-Part 07-Sep '05)Good one..Avardhan onga inspirationa illa idellam aduva varadha? ;o) Meendum Sandhipom-Sugan

aparnaa said...

its great and funny asusual!! yup what u say about orkut is 200% true .. its also true that we get ikkiyam in that jothi no matter how much we kindal adichufy it ;-)
the main thrill in that is reading other's scrap books ..i do a good job of reading my sister's scrapbook and pootu kuduthufy to my mom about what messages she get ;-) etho nammallana sevai!!

Premalatha said...

where is your orkut profile? I want to see.

Anonymous said...

Dear Dubukku,

Good to see your tamil message published on October 3, 06.

How can I join in 'Okut'; pl. tell me. I cannot say 'vetti velai', but I am also trying to serve the time! I mean do service to the time!

bharatheeyan from choolaimedu.

Unknown said...

ahaa...neengalum vetti orkut-la join panniteengala??

Unknown said...

vizhundhu vizhundhu sirichchen Dubukku Saar..

:)

The forgotten-a seekiram tamizhla jayam ravi ille surya vikram-nnu evanayavadhu vachchu eduppaanga. appo poi paaththukkaren

:)

Dubukku said...

நிர்மல்- பொசுக்குன்னு முடிச்சிட்டாங்கன்னு எனக்கும் தோணிச்சு...ஆனாலும் என்னம்மோ படம் ரொம்ப பிடிச்சிது. எதிர்பாராத முடிவுங்கிறதால ஒரு வேளை இருக்கலாம் :)

வெட்டிப்பயல் -
//நம்ம பசங்க வழியறது இருக்கே!!! ஐயோ சாமி ஆள விடுங்கடானு இருக்கும் ;)//

-ஹீ ஹீ அதான் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு...ஆனா வழியறத கண்டுபிடிக்கிறதுக்கு நாலைஞ்சு பேரோட ஸ்கிராப் பக்கம் போக வேண்டி இருக்கு அதான் கடியா இருக்கு. :)


வடுவூர் குமார் - ஈ புக்குகள் பற்றி ஆமாம் பார்த்தேன். சொந்த ஊருக்கு கம்யூனிட்டி இருக்கு. அதில சேர்ந்து பல்பு வாங்கிட்டு இருக்கேன். :)

Dubukku said...

கடல்கணேசன் - மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. என் பாக்கியம் :)

golmaalgopal - romba danks. inime thaan pazhaiya friends yaravathu irukangalanu parkanum. unga id sollunga add pannikaren :)

Chandru - romba danksga. orkut mattum yen vittu vechirukeenga..vandhu jothila aikiyamahidunga :)

கைப்புள்ள -ஆமாங்க ஆர்குட்டும் ப்ளாக் மாதிரி அடிமைப்படுத்தும் பழக்கம் தான்னு நினைக்கிறேன். நான் இன்னும் அவ்வளவு தூரம் போகலை.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி ஆனா இந்த புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனான்னு தெரியலை.
//அங்கே தாங்க நீங்க நிக்கறீங்க :) // - நீங்க அதையே எவ்வளவு சூப்பரா உபயோகப் படுத்தி இருக்கீங்க :)

Dubukku said...

kuttichuvaru - danks vathiyaare. your commets are encouraging.

sandai-kozhi - danks. Orkut romba parkalangrathala innum veetla prechanai aahala...innum konja naal kalichu than result theriyum :) Ambiya nalla gavanicchen illa oorla :)

JVC - yenga innoru tharam padichu parunga...GCTya vambukku izhukaleenga...avangala compliment panninenga..Gowthama vida nalla padam edupanganu solli irukken

Premalatha - I liked the way they maintained the final knot as a surprise. yeah Tech part was very good.

Syam - அப்போ நீங்களும் பாதிக்கப்பட்டவர்ன்னு சொல்லுங்க :))

Dubukku said...

Kumari - danks mam.Unga nicknamelam therinjidichu.:)

//Esp when strange men want to "do fraanship" with u and never accept a NO for an answer//
:)))) nice one.

Syam - இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்கீங்க...ஒரு வார்த்தை முன்னாடி சொல்லியிருக்கலாம்ல...கொஞ்சம் உஷாராகிருப்பேன்.

Ambi - hehe unna pathi unmai therinjiducha unga aabisla? freeya thaan vidanum vera vazhi? :))

பொற்கொடி - அவன (அம்பிய )திருந்த விடுங்க...:))

பொன்ஸ்- எங்க ஆபிஸிலயும் ப்ளாக் பண்ணிட்டாங்கன்னா பரவாயில்லைன்னு தோனுது. ஆனா இப்போ ரெண்டு மூனு வாரமா பயங்கர வேலை ஆபிஸில். பெண்டு நிமிருது. அதுனால அந்தப் பக்கம் ரொம்ப வருவதே இல்லை :)

Dubukku said...

Deekshanya - nalla velai innum avlavu addict ahala. neenga solrathu correctnga...ponnungalukku indha maathiri prechanailam vera irukkum.

Anonymous - yenga en mela avalavu kovama? kayaru eduthu maatikka solreenga? Nanum kamal rasigan thaan but I didn't like this movie at all. Its the same stuff like "Kaka Kaka" - is what I felt. Again its purely my personal opinion.

Dubukku said...

Zeno - Crushaaa??? theriyathee?? eda koodama irundha veetla enna crush panniduvaanga (hehe athenna crush konjam vevarama sollunga :P )

Syam - நல்லா உஷாரா இருங்கைய்யா...எங்கள மாதிரி இ.வ.மாட்டிக்கட்டும் :))))

Anonymous - romba danksga. Nanum Sujatha rasigan. Avodara neraya stories padichirukken...so oru velai avaroda thakam theriyalam But naan enakku therinju engernthum copy adikala...naana thaan ezhutharen :)

Appu - danks. yes reading others scrap book is interesting. But innum neraya arambikkala. Haiyaiyoo...unga sis paavamga...ithu thaan sondha bandhatha involve panna koodathu or atleast id solla koodathu :)

Dubukku said...

Premaltha - unga aathukararoda scrap bookla inniku comment vitrukken parunga :)

Bharatheeyan - danks. You need invite from an existing member to join Orkut. If you are very interested let me know your id I will send an invite :)

Bala - aamanga...Atha mattum yen baaki veipomenu...summa join panni vechirukken. :)) neengalum irukeenglaa?

Sundar - danks sir (indha sir lam vendame...summa dubukkune koopidunga )
haiyooo sollatheenga...indha themela masala serthu kulukku dance pottu imagine pannave kanraviya irukku :)

Anonymous said...

திரும்ப திரும்ப நிற்க சொன்னால் நல்லா இல்ல, ஆமா, சொல்லி புட்டோம்...

வழ்துக்கள் டுபுக்காரே, you deserve the "அட்லாஸ் வாலிபர்" title ;)

shree said...

ahaa..intha mathiri oru blog post'a naan parthathe illa..unmaiya appadiye.. punnakuu maathiri puttu puttu vaikuringalae..pullarikuthu..

dubuku naan ungalla link panikuren ..

Guru Prasath said...

தெரியுமா? இப்போ உங்கள் ஏஞ்சலினா அம்பாள் புனேயில். பார்க்க http://in.rediff.com/movies/2006/oct/09look1.htm

Jeevan said...

Thala naanum atha vetti offiela thaan puthusa velaikku sarthirukkan. mudincha ennaium searthukonga enn Email - jeevan.grp@gmail.com.

itho poiketta irukan, unga Post'a padikka atlast valipar. ungala romba naala en bloggu pakkma kanum, busy'a:)

Anonymous said...

Hi

Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.

You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.

I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.

C Ramesh

Syam said...

//நல்லா உஷாரா இருங்கைய்யா...எங்கள மாதிரி இ.வ.மாட்டிக்கட்டும்//

அப்படி எல்லாம் சொல்லபடாது...உங்களுக்கு எல்லாம் இடியே விழுந்தாலும் தாங்கு உடம்பு..இந்த ஆப்பு எல்லாம் என்ன பன்னும் :-)

இராமச்சந்திரன் said...

"இதனால் சுவாரசியமான அரட்டைகளை எல்லாம் பக்கத்தில் போனில் பேசுபவரிடம் ஒட்டு கேட்பது போல் ஒருபக்கமாகத் தான் கேட்கமுடிகிறது" - அருமையான உவமை... உங்க புகழ் திக்கெட்டும் அடிக்கல் நாட்டுகிறது என்பதற்கு இந்த "அட்லாஸ் வாலிபர்(?) சங்கம்" இன்னொரு படிக்கல்.

(எழுதலை, வெக்கலை...வந்து பின்னூட்டம் லாம் விட்டுட்டு அப்படியே கழண்ட்டுகிட்டீங்களே ..இது நியாயமா?)

Anonymous said...

டுபுக்கு, எப்படி, இப்படி ஒரு கலக்கல் எப்பவுமே! ஆளாளுக்கு பிச்சி எடுத்துக்கிட்டு இருந்தாங்க ஆஃபீஸ்ல, வந்து உங்க ப்லாக்கப் படிச்சித்தான் விமோச்சனமே வந்துது - சிரி சிரின்னு சிரிச்சு, சந்தோஷமாக்கிருச்சு! :) ... நிறைய வரிகள் அப்புறமா நடக்கும்போதெல்லாம் ஞாபகம் வந்து, தனியா லிமாவுல பைத்தியம் மாதிரி ரோட்டுல சிரிச்சிக்கிட்டு போக வைக்குது! :) தலைவா, நீங்க நீங்கதான் தலைவா.

Anonymous said...

have you noticed that you started your blog exactly three years ago on oct 3 2003.continue u'r good work

dubukudisciple said...

Hello dubuku!!!
I have started a blog today becos of your influence... Konjam visit pannitu sollunga
Ungal adiyen eppadi ezhuthu irukennu.. Konjam ungaluku therinjavangalukum sollunga!!!

Balaji S Rajan said...

Dubukku,

I enjoyed your write up about Orkut. So atlast you have been recognised and admitted in Valibar sangama... Hmmmmmmmm be careful.

Looks like your fans list is increasing...

Karthikeyan said...

தீபாவளி வாழ்த்துக்கள்

Jeevan said...

WISH YOU AND YOUR FAMILY A HAPPY DIWALI:)

Anonymous said...

Adutha blog ezhudura maari ideavae illaiya?...romba bore adikudhuba!

- Nagesh

Anonymous said...

Wish you and your family a happy deepvali.

ambi said...

hello annachi!

adutha postu poda mudiyuma? mudiyaatha? :D
kuzhanthai(he hee, me only) daily vanthu paathutu emaanthu porathu!
:(

Anonymous said...

hai Dubukku,

Any body from GCT -Coimbatore?

Anonymous said...

அண்ணே, என்னாச்சு? ரொம்ப நாளா உங்க ப்ளாக் காலியாவே இருக்கு?என்ன இருந்தாலும் வ.வா.சங்கம் ஒரு மாசம்தான்.அதுக்காக இதை மறந்துடாதீங்க.. நான் தினமும் உன்க பிளாக் வந்தி பாக்கறேன்.. எதையும் கானோம்..சீக்கரம் வாங்க.

Anonymous said...

ஹாய் டுபுக்கு, பாத்தீங்களா..நாங்கலெல்லாம் உங்க விசிரிங்களும் பாச மலர்கலும் தான். இப்போ உங்களுக்கு ஒரு டிசைப்பிள்.. அப்பறம் குஷ்பு மாதிரி கோவில் etc etc .....எல்லாம் ஆரம்பிச்சிடும்.அப்பறம் நீங்க எங்கயோ போகப்போறீங்க..(விவேக் சொன்ன மாதிரி, ஆனா வேற அர்த்தத்தில்) "// எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"// னு புலம்ப போறீங்க...

Anonymous said...

ஹாய் டுபுக்கு, பாத்தீங்களா..நாங்கலெல்லாம் உங்க விசிரிங்களும் பாச மலர்கலும் தான். இப்போ உங்களுக்கு ஒரு டிசைப்பிள்.. அப்பறம் குஷ்பு மாதிரி கோவில் etc etc .....எல்லாம் ஆரம்பிச்சிடும்.அப்பறம் நீங்க எங்கயோ போகப்போறீங்க..(விவேக் சொன்ன மாதிரி, ஆனா வேற அர்த்தத்தில்) "// எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"// னு புலம்ப போறீங்க...

Sundari said...

orkut than vetti velai inu partha..inum oru similar kodumai "Gazaag" start agi irukku (Naan member agetean)
Enimel than orkut kum edhukum enna difference inu kandu pidikanum..
adha vida namakku vera enna velai irukku sollungaa

Anonymous said...

Hi Dubbuku nanbareh,

Enna ippadiyeh Commentsliya almost 5 blog entry ezhudina rangeku iruku (56comments), atleast every fortnight aavadhu ezhudhunga... Ethanai peru paarunga (ennaiyum serthu) unga blog vandhu paarthu emandhu poroam...Paarthu edhavadhu thayavu kaatunga....
Prakash

Anonymous said...

idhellaam konjam kooda nallaa illai, Sir...sollitten...ongala idlyvadai-la rank-laam koduthu gouravappaduthi irukkaanga...neenga ipdi silent-aa irundhaa enna artham? eppo adutha post???????

இராமச்சந்திரன் said...

ஹலோ டுபுக்கு சார்...

உங்க இந்த ப்ளாக் போஸ்டிங்கே...ஸிம்பாலிக்கா உங்க நெலமைய சொல்றாப்ல இருக்கு.

வூட்ட கவனிக்காம தொடர்ந்து ப்ளாக் எழுதின உங்க தலைல தங்கமணி "ஒரு குட்டு" (Orkut) குட்டி, தற்சமயத்துக்கு எழுத்த "நிப்பாட்டி" (மேலும் நிற்க), வூட்ல "உட்கார" (இனிமே உட்கார்ந்துக்கலாம்) வெச்சுட்டாங்க பாத்தீங்களா.

Anonymous said...

அன்புள்ள டுபுக்குவிற்கு,

நான் உங்களுடைய பிளாக்கை கடந்த ஒரு வாரமாக படித்து வருகிறேன். அருமையாக எழுதுகிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். எல்லொரையும் சிரிக்க வைப்பது சுலபமல்ல, அதிலும் மற்றவரை புண்படுத்தாமல் மற்றும் ரெட்டை அர்த்தங்களில் எழுதாமல், மிகவும் அருமை. இப்பொதெல்லாம் தினமும் ஒரு முறை உங்களுடைய பிளாகை பார்த்துவிட்டு தான் வேலையை தொடங்குவது பழக்கமாகிவிட்டது. நானும் சில காலம் லண்டனில் வேலை பார்த்தேன் Oracle Applications Project Managerஆக 1999ல. இப்பொ எல்லாம் பொதுமென்று துபாயில் அமைதியாக ஒரு இடத்தில் இருக்கிறேன்..ம்ம்ம்ம்.. எவ்வளவு நாள் பார்ப்போம். ஆடின காலும், பாடின வாயும் அப்புறம் IT consultantம் சும்மா ஒரு இடத்துல இருக்க முடியாதே. நான் ஒரு வேளை லண்டன் வந்தால் கண்டிப்பாக சந்திப்போம். அல்லது neengal
துபாய் வந்தாலும் கண்டிப்பாக பார்ப்போம். உங்களை வச்சு, கட்டி மேய்க்கிற தங்கமணி அவர்களை கேட்டதாக சொல்லவும்.

இப்படிக்கு என்றும் அன்புடன்

ராம்

Swamy Srinivasan aka Kittu Mama said...

dubukku,
ungal blog arumai. recentaaga daan ungal blogai paarthaen. piragu rasithaen.
ill keep checking ur blogs.

ungalukku naan ellam oru kathuk kutti daan. irundaalum 2 maadamaaga naanum blog panraen paervazhinu
kittu-mama-solraan.blogspot.com
onru aaramithullaen. ungal karuthu enakku ookaam kodukkum.

adu varai meendum ungal blogai paarkum varayil vidai peruvadhu

kittu mama

Anonymous said...

ஹலோ
நண்பரே, கொஞ்ச நாள் வேலையா பொஇ இருந்தேன்... அதற்குள் வலை உலகத்துல என்னென்னவோ நடந்திடுச்சு...
உங்க எழுத்து எப்படி இவ்வளவு நகைச்சுவையா இருக்கு.. அந்த அர்குட் நானும் சேர முடியுமா... வெட்டி வேலைக்கு நடுவுல டைம் இருந்தா நம்ம சைட்டயும் ஒரு விசிட் விட்றது

Anonymous said...

Hi,

Y no blogs in the recent past?
We r waiting to read ur blogs.
Please write soon.

Anonymous said...

Renga En Blog-la ezulatharatha neruthiteengha. Ungha Blog-la appidiye Nichal adikka oododi vantha enghala Emathathinga Renga... Blogunga ... Blogungha...

Dubukku said...

உங்கள் அனைவரின் பின்னூட்டத்திற்கும், ஊக்கத்துக்கும், விசாரிப்புக்கும் நன்றி.அடுத்த பதிவிலிருந்து வழக்கம் போல தனித் தனியாக பதிலளிக்கிறேன்.

Anonymous said...

hi dubbuku anna sowkiyama? ennachu romba naala alla kaanom.anyway vantha velaiya solidren,intha orkut photos la avangaludaya sontha photo va add panrathuku romba ve dhariyam vennum parakaravanga koncham thunga vendaama eppadiya bayamurutharathu

Madhuram said...

Super post. I feel the same about Twitter now. I think it is more vetti than Orkut.

shobana said...

Dubbuku boss.... how to find u in facebook ??

Anonymous said...

Shobana its - https://www.facebook.com/dubukku

Post a Comment

Related Posts