Tuesday, September 19, 2006

மலையாளக் கரையோரம்

எங்க ஊருக்கு மிகப் பக்கத்திலிருந்தும் இந்த முறை தான் கேரளாவில் காலடி எடுத்துவைத்தேன். சும்மா சொல்லக் கூடாது...நாகர்கோவிலைத் தொடும் போதே வித்தியாசத்தை உணர முடிகிறது. நாகர்கோவிலில் காற்று அள்ளுகிறது. கேரளா பச்சை பசேலென்று ஜிலு ஜிலுவென்று அழகாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் இளநி பத்து ரூபாய்க்கு தான் விற்கிறார்கள். பெண்களெல்லாம் அப்போது தான் குளித்த மாதிரி முடியை மழைப் பின்னல் போட்டுக் கொண்டு நெற்றியில் சந்தன தீற்றலுடன் ப்ரெஷ்ஷாக இருக்கிறார்கள். கேரள மக்கள் ரொம்ப கறாராக இருக்கிறார்கள். பேரமெல்லாம் ரொம்ப பேசமுடிவதில்லை. ஆனால் சென்டிமென்டுக்கு மடிகிறார்கள். ஏர்போர்ட்டில் நான் தின்று கொண்டிருந்த வாழைப்பழத்தை அவசரமாக வாயில் ஒதுக்கிக் கொண்டு பேசியதில் மலையாளி என்று நினைத்துக்கொண்டு கொண்டு சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்த்த மலையாளப் படங்களில் டயாலாக் ஞானம் ரொம்ப இல்லாததால் எல்லாத்துக்கும் முன்னாடியோ பின்னாடியோ ஒரு ஓ பொட்டுக் கொண்டு அஃறினையில் பேசி "கோப்பியோ", "சாயாவோ", "ஓ பத்து ரூபாயோ" "இங்கன வரும்", "அங்கன போகும்" என்று மலையாளி மாதிரி ஆக்ட் கொடுத்தது கொலையாளி லுக்கில் போய் முடிந்தது.
இருந்தாலும் மாமியார் வீட்டு ரசப் பொடி ஏர்போர்ட்டில் மாட்டிக்கொண்ட போது இந்த அரகுறை மலையாளமும் கைகொடுக்கவில்லை. டக்கென்று தங்கமணி முழுகாம இருக்கிறார், மூன்று மாதம், இது பிரசவ லேகியப் பொடி என்று சரடு விட்டது வொர்க் அவுட் ஆகியது. "எந்தப் பொண்ட்டாட்டிய்யா பிரசவம்?" என்று சந்தேகப்படாமல் "எனக்கே இந்த விஷயம் இப்போத் தான் தெரியும்" என்று தங்கமணியும் சமத்தாக முகத்தை வைத்துக் கொண்டு கூட சேர்ந்து ஆக்ட் விட்டதில் ரசப் பொடி தப்பித்து நேற்று கூட வீட்டில் தக்காளி ரசம் பிரமாதமாக வந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நிறையவே மாறிவிட்டது. எங்க ஊரில் எல்லாரும் வீட்டை இடித்து புதுமாதிரியாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் நக்கலுக்கு குறைச்சலே இல்லை. உள்ளாடை கடையில் "பத்து பனியன் ஜட்டி குடுப்பா" என்றால் "என்ன சார் துபாயா அமெரிக்காவா " என்று கேட்கிறார்கள். "ஏன் உள்ளூர்ல ஒருதனும் போடறதில்லையா..பனியன் ஜட்டியெல்லாம் எக்ஸ்போர்ட்டுக்கு ஒதுக்கிட்டு எல்லாரும் லங்கோட்டுக்கு மாறிட்டாங்களா?"ன்னு பதிலுக்கு கேட்டால் " நாஙகளெல்லாம் ரெண்ட வாங்கி ரொட்டேஷன்ல விடுவோம்...ஜட்டி விக்கிற விலைக்கு உங்கள மாதிரி பத்து இருபதுன்னு ஹோல்சேல்ல வாங்க மாட்டோம்" என்று அங்காலய்த்தார் விற்பனையாளர். சரிதான் இவன் தங்கமணிக்கு மேல இருப்பான் போல இவன் கிட்ட வாயக் குடுத்து வாங்கிக்கொள்ளக்கூடாது என்று சத்தம் போடாமல் வாங்கி வந்துவிட்டேன்.

நம்ம யோகம், எல்லாம் வாங்கி முடித்த அடுத்த நாள் போத்தீஸில் ரெண்டு வைகிங் ஜட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ப்ரீ என்று போட்டிருந்தார்கள். நாம வாங்கின எண்ணிக்கைக்கு டின்னர் செட்டே சேர்த்திருலாமே என்று எனக்கு ஒரே வயத்தெரிச்சல். அவன் பேசின பேச்சுக்கு "பேசாம கலர் மேட்சிங்கா இல்லை" என்று திரும்பக் குடுத்து இத வாங்கிடலாமா என்ற எனது யோசனை என்னமோ தங்கமணிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை தலையிலடித்துக் கொண்டார். ஹூம் சட்டிக்கு சட்டியுமாச்சு..ஜட்டிக்கு ஜட்டியுமாச்சு..என்று டயலாக் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் "இந்த ஆஃபரெல்லாம் ஒரு நாள் முன்னாடி போட மாட்டீர்களா" என்று போத்தீஸ்காரர்களை திட்டிவிட்டு "சட்டி சுட்டதடா...." பாட்டு பாடிக் கொண்டு வந்தேன்.

38 comments:

Anonymous said...

:))))))))

நாமக்கல் சிபி said...

//"பேசாம கலர் மேட்சிங்கா இல்லை" //
சூப்பர்... அதையே சொல்லியிருக்கலாம்

aruna said...

Rotfl

SLN said...

Malayaala Karaiyorum aarambithu engeyoe poitteenga?

SLN

Jinguchakka said...

"நான் பார்த்த மலையாளப் படங்களில் டயாலாக் ஞானம் ரொம்ப இல்லாததால் " - Dialogue avasiyam illAdha malayala padam dhaan paarthu irukeenga pOla! ;-)

kuttichuvaru said...

soober appu!! enakkum malayalam avvlavu varaathu.... namma ellam paarkkara padathula perusaa dialog-um irukkaathu... antha dialog-kku subtitle-um poda mudiyaathu!!

Anonymous said...

Hi...
Today is the first time i am reading your blogs...I should say, you and your writings impressed me a lot. You have really a good humour sense.
I dono how to post my comments in Tamil,please let me know how to do it.

Cheers,
Nagesh

daydreamer said...

Elani la thodangi ulladai la mudichirukeenga.. aamam neenga ippo vasikara foreign countries la indhaa inside dresses ellam kedaikaadhaa??

Anonymous said...

When you mention of the renovations I remember... sometime back... one relative visiting Kallidai for first time mentioned... ennathu aam rail petti mathiri neelama irrukku, avasarama ponnumna (you know where) cycle-illa ponnum pola irruke !! Yes, but now they are brining down the old ones and making it compact & modern... I would say the charm is being lost.

@daydreamer
ennathan foreign jetti irunthalum... namma ooru jetti-ya pola varumaa....

Anonymous said...

என்ன அன்னாச்சி, வர வர உங்களுக்கு விசிரிங்க அதிகமாயிட்டே வராங்க... என்ன விஷயம்..? பாத்துகோங்க.. உடம்பு புன்னாகிடபோகுது..?

Syam said...

எங்கயோ ஆரம்பிச்சு எங்க முடிச்சிருகீங்க...என்ன ஒரு டிவிஸ்டு...அண்ணாச்சி எங்கயோ போய்ட்டீங்க :-)

ambi said...

ha haa. sema comedy. enjoyed. so anna back to formaa?

and i wanted to mention that film, uma madam minthitaanga/ ROTFL :)
he, hee sakthi theatre thaane? :D

Kumari said...

Aiyyo da, muttikum muzhangaalukkum mudichu podrathu epdinu ungaLtta thaanga tution edukkanum :)

Aanalum indha Pothys/RMKV karanga eppavume ipdi thaanga. Muhurtha pattu ellam eduthu mudicha udane, "Pattu pudavai Sale"nu arivichunga. Hmm, namakkum intha sale-kkum agave agathu :(

Konja naal blog ulagathula irunthu othungi, ippo thaan varen. Sirichu sirichu vayiru pun ayiduchu. Enga veetla, Thangamanikku oru Fan club arambichachu!

Vidya said...

I liked your reply to the kadaikkaran. Hmm... and as for malayalam, thevaiya.. indha olaral. Adhu en dhan indha husband material ellamey ippadi malayalam pesanumnu ishtathukku olarreengalo. Adi vaangame vandhadhey periya vishayam. :) First time comment pannaren... Super Man! Enjoyed reading all your previous ones too. Will reply as and when I find time. Ippo dhan nodi - sorry 'nondi' - pakka arambichirukken.

Anonymous said...

Dubukku,
Looks like you are back in form. I was in the feeling that you had lost your touch of humor in your earlier posts. But this is.... ultimate.... cant stop laughing....

Anonymous said...

Encouraged by your blog, I am planning to start my own blog in Tamil. Can you tell the tools you use to write in Tamil please.
Also suggest some name other than "Dubakuru"

[ 'b u s p a s s' ] said...

:)

எந்தா சாரே..கம்பளீட்'டாயிட்டு நாடு பிடிச்சி போயோ?

திருவனநந்தபுரத்திலே குட்டிகள் பத்தியும் [.................] பின்னே திருநெல்வேலியிலே ஜட்டிகள் பத்தியும், நிங்கட ப்ளோக்... சிம்பளி ஒன்னாங் க்ளாஸ்..

கைப்புள்ள said...

ஐயோ...சான்ஸே இல்ல!!! இன்னொரு டுபுக்கு இனிமே பொறந்தா தான் உண்டு.
:)))

Porkodi (பொற்கொடி) said...

அடடடா.. மிடில்க்ளாஸ் மாதவனா நீங்க? :)

எல்லாரும் சொன்ன மாதிரி மொட்டை தலை முழங்கால் முடிச்சு இனி உங்க ஜூனியர் டுபுக்குகள் செஞ்சா தான் உண்டு ;)

Deekshanya said...

Too good..

Anonymous said...

Annathai summa alungula ellathuleyum allikiriye. Eppadipa ippadi? Konjam poramaiya irukkuthu.

Namma ooru alu ippadi kalakkurannu neneikum pothu udampellam pullarichi pokuthu po.

Officele bore adicha dubukku & nellaikirukkan blog than thirumba thirumba padikiren. Nellai kirukkan than ippadi innoru peru vachi elithittarunnu nenechitatheenga. Namakku avara konjam theriyum. Namma thosthu than. Nammala mudinjathu hit count increase panni vidalamennu than.

Good work keep it up.

Ananthoo said...

kalakitta annathey..appoappo intha maathiri pinni engal manasai allum dubuksukku 'jay'..
aamam keralalenthu y suddenly to jatti? enakku oru unmai therinjaganum:-)

Boston Bala said...

:)))

Anonymous said...

dubukku,
chancey illa..semma supppper. still can't stop laughing!!! inime yevanavathu poda dubukku nu sonna, perumaiya nenaipen :))

Chenthil said...

I would have met you last week, if not for Chakra :-).

Jeevan said...

Naanum kelvipattu irukurean, Nagarkovila naala katru vangalamnu.

Jattikulaam kudava ilavasam tharanga! Jatti kadaikaranukku kuda ungala parthaa nakkala pochu. Eppadi poguthu life Dubukku?

Prasanna Parameswaran said...

ithanai peru naan sollavendiyadhu ellathiyum sollittaanga! adhanala naan otharavu vangikkaren! nallarundhu dubukku padhivu, our fast food kadaikulla nozhanju ellathyum nootamk vittutu thirumbi vandha feeling! nalla ezhudareenga! :)

Dubukku said...

anony - :)) (peyara podunga..ilaatta naane pottukarennu inga sollikitu irukaanga :) )

வெட்டிப்பயல் - உதை வாங்கிறதுக்கு நல்ல வழி சொல்லுறீங்க...என்ன கோவம் என் மேல :))

delphine - danks for dropping by and your compliments :)

aruna - :) danks

SLN - enna pannarathu...manasula irukaratha solli thane aahanum :)

Dubukku said...

Jinguchakka - vilakkam kettu sabaila manatha vangrathunu mudivu panniteenga nadathunga :))

kuttichuvaru - haha amamam :))

Nagesh - danks for your compliments. I use http://jaffnalibrary.com/tools/Unicode.htm . This will convert tanglish to unicode tamil. Hope this helps. Cheers.

daydreamer - இந்தூர்காரங்க குறைவா உபயோகப் படுத்தற வஸ்துக்கள் எல்லாம் விலை ஜாஸ்திங்க...அதோட தரம்...நம்மூர அடிச்சிக்க முடியாதுங்க :)

Suresh - ungalukku Kallidaiyaa? namoor pakkama? amanga...I too felt the same . Its more like concrete jungle now really

Dubukku said...

தாரா - அப்படியெல்லம் இல்லீங்க...(ஆனா உடம்பு ஏன் புண்ணாகிடப் போகுது?? புரியலையே..??? )

Syam - டேங்க்ஸ் மனசுல இருக்கரத எல்லாத்தையும் கொட்டிட்டேன் அவ்வளவு தான் :))

Uma - Velaikku pora varaikkum parthathee illeenga. Nalla paiyana irundhen..appuram ada enga sabaila manatha vaangareenga :))
neenga sonna dialogue -hahah yes very funny one :))

Ambi - danks. deii sakthila poi parthu naan pozhaikava?? oorla irundha pothu evalavu nalla paiyannu unakkee theriyum :)

Dubukku said...

Kumari - romba correctnga...indha tharamum appidi thaan aachu. Thangamani romba pullarichu poitanga unga comment parthu :)) danks

Vidya - vaama vaa...neeng oru blog arambichutu enkitta sollama...naan yen sollalanu sandai podareenga :)) naanga ulararoma...veetula sollaren :)

injey - danks. tamil instructions mailla anupichu irukken. Ada blogkku peyarlam suggest panna solreenga :)))

buspass - வாங்க வாங்க என்ன அடிக்கடி காணம போயிடுறீங்க?? நீங்க வேற மலையாளத்துல அடிச்சிட்டீங்க...நானும் திரும்ப பதில் மலையாளத்துல அடிக்கனும்ன்னு பார்க்கறேன்....ஒன்னும் தோனமாட்டேங்குது. சாருக்கு மலையாளம் வருமோ??

Dubukku said...

கைப்புள்ள - நீங்க என்மேல் உள்ள நல்லெண்ணத்துல சொல்றீங்க...ரொம்ப நன்றி. ஆனா அப்படியெல்லாம் இல்லீங்க...:)

பொற்கொடி- ஹீ ஹீ ...அதென்ன மி.கி.மாதவன்? புரியலையே? உங்க நல்லெண்ணத்துக்கு நன்றி

Deekshanya - danks :)

Dubukku said...

Neyer - danks. Neengalum nammoora? danks a lot for your compliments. "Nellaikaran" blog naanum padippen :)

Ananthoo - danks thala. ennanga unglukku enna unmai therinjaganum? Enna velai vithalum Unamaiyileye naan athellam poduvenga :))))

Boston Bala - :)

Anonymous - romba danks. Appidiyee unga peyaraiyum potteengana..sandhoshap paduven. (summa nick name nalum ok than)

Chenthil - Yeah Chakra told me the next day that you guys met. Second time we are missing hmm

Jeevan - Yes Nagerkovil is fantastic. Amaam Jeevan Pothysla offer potirundhanga...enna ippadi solliteenga..Jatti enna vilai vikkuthu theriyuma??

Indianangel - romba danksnga..ellarum sollitalum comment potirukeenga parunga athan periya vishayam. Romba danks.

Anonymous said...

A very good post dubukku filled with humor. Wine mathiri nalluku nal unga comedy sense super aitu varuthu.

Arvind V

யாத்ரீகன் said...

:-))) Hello Dubuks.. Aniyaayathuku Sirika vaikureenga.. Chancey illaba....

Dubukku said...

Uma - aiyooo aiyaiyoooo...ungalukku en mela etho kovam pola irukke...sabaila ippadi konar noteslam pottu manatha vangareengaleee :))

யாத்திரீகன் - ellam unga aasirvatham thaan danks.

Anonymous said...

eppadi konjam kooda spelling mistake illaama ezhudha mudiyudhu? naan konjam try panni kai suttu kittadhu thaan micham :(

Anonymous said...

மிகவும் அருமை...

Post a Comment

Related Posts