Sunday, March 05, 2006

நன்றி

ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். குழம்பி குழம்பி இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன். இந்த ப்ளாக்கிற்கு மங்களம் பாடப்போகிறேன். எனது எழுதும் ஆர்வத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கட்டும் என்று ஆத்மதிருப்திக்கு ஆரம்பித்து, உங்களில் சில பேரை சிரிக்க வைக்க முடிந்தது என்ற திருப்தி இருக்கிறது. எதாவது கிறுக்கி இருக்கிறேனா என்று நிறைய பேர் ரெகுலராக வந்து பார்க்கிறீர்கள். ரொம்ப நன்றி. உங்களிடம் திடீரென்று சொல்லி அதிர்ச்சி தர விரும்பவில்லை அது உங்கள் ஆதரவிற்கு நான் செய்யும் மரியாதையும் அல்ல. Alma மேட்டர் பாதியில் நிற்கிறது. அதை என்ன செய்ய என்று குழப்பமாக இருக்கிறது. உங்களில் சில பேருக்கு இந்த முடிவு ஏமாற்றமாகவோ வருத்தமாகவோ(??!!) இருக்கலாம்...இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

வலையுலக ட்ரெண்டின் படி இழுத்து மூடப்போகிறேன் என்று நான் சொல்லுவது "பப்ளிசிட்டி ஸ்டண்டா" என்று நீங்கள் சந்தேகப் படலாம். இதை அவசரமாக எழுதுகிறேன் என்பதால் எனது முடிவின் காரணங்களை விபரமாக தனிப் பதிவில் எழுத முயற்சிக்கிறேன். வேலை நிமித்தமாக வெளியே செல்கிறேன் என்பதால் செவ்வாய்கிழமை பதிய முயற்சிக்கிறேன். ஆனால் உங்கள் வலைப் பதிவுகளையும், இங்கே வரும் பின்னூடங்களையும் வழக்கம் போல் படித்துக் கொண்டிருப்பேன். தேசிபண்டிட்டில் வழக்கம் போல் உங்கள் பதிவுகளை அடையாளம் காட்டும் பணியில் இருப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் ஒரு முறை - இது வரை நீங்கள் கொடுத்து வந்த பேராதரவிற்கு நன்றி.

24 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இப்போ இப்படி? சில விஷயங்களெல்லாம் எழுதாதீங்க, தங்கமணி படிச்சா விவகாரம்ன்னு சொன்னா கேட்டீங்களா? இப்போ எங்க போய் நிக்குதுபாருங்க. :)

சுத்தமா நிறுத்தாதீங்க. முடிஞ்சம் போது எழுதுங்க.

[ 'b u s p a s s' ] said...

வருத்தமாக உள்ளது. உங்கள் பதிவு frequency'ஐ வேண்டுமானால் குறைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை மாதம் இரு முறை என்று.

இல்லையேல், பின்னூட்ட கலைதனை வளர்ப்போம்.

புதிதாக நீங்கள் எழுதவில்லை என்றாலும் கூட, பழைய பதிவுகளை மீண்டும் படித்து மகிழ்வேன்.

அன்புடன்.

பத்மா அர்விந்த் said...

தமிழ்மணம் வரும் முன்னே நான் தேடிப்படித்த சில பதிவுகளில் ஒன்று. இயல்பான நகைச்சுவையாக எழுதுவது எளிதாக வருகிறது உங்கள் பதிவை படித்தால் தெரியும். நல் வாழ்த்துக்கள்

Premalatha said...

உலகம் என்னச்சுத்தி இல்லன்னாலும் இந்த முடிவிற்கு வருவதற்கு நான் உருவாக்கிய குழப்பங்கள் எவ்வகையிலேனும் காரணமாக இருக்குமானால், மனதார மன்னிப்புக்கேட்கிறேன்.

you have a great sense of humour. you make people laugh; you make them forget their problems and laugh. that is a great service to the mankind. do not stop doing that.

I am sure you know I have been reading your posts atleast twice everyday.

Thanks for giving me that tea and lunch break every day.

neighbour said...

yeenga ippadi????....

vadai kadaikalaineenu kobamaa enaaa!!!..

unga bloga padichu thaan naan tamila elutha nambikaiyooda aarmbichaan..

pudhiya kadaimaigalai seppana seidu mudiyungall..

Thangamani said...

இயல்பான நகைச்சுவையுடனான எழுத்து. நான் தொடர்ந்து வாசித்து வந்தேன். நன்றி. முடிந்த போது தொடருங்கள்!

Anonymous said...

enna thalaiva? vaiko maadhiri kavutheetenga???
thelivaana kaaranam sollavittal 'mangalaththai' yetru kolla mudiyaathu...
here after only lunch in lunch break :-(
subbu,

Anonymous said...

its sad to hear you closing this blog.i wanted to ask you something. can i have your email or something? please.

Mookku Sundar said...

யோவ் என்னாய்யா இது.

நீங்களுமா..??

யதார்த்தமா, எந்த அறிவிஜீவி ஜல்லியடியும் இல்லாம, நம்ம பக்கத்து வூட்டு அம்பி எழுதறது மாதிரி எழுதிக்கிட்டு இருந்தியே ராசா,, என்னாச்சு உனக்கு..??

போனா போது..இந்தப் பதிவை ட்ராஃப் மோட்ல வெச்சுட்டு தொடர்ந்து எழுதும். அவ்வளவுதான் சொல்லுவேன்.

-மூக்கு

Anonymous said...

I started reading your blog only a couple of months back and love it. You have a great talent. If you really like writing, then nothing should stop you from doing it. But if its enevitable, then what can I say? Thank you for so many good laughs and hoping you ll change your mind. For once, I wish it is just a publicity stunt! (not like you need any though!) Good luck. *Checkind the calendar to see if its already April and you are fooling us. But no. No such luck* :(

Udhayakumar said...

டுபுக்கு சார், உங்க ஃபிளாக் பார்த்த பிறகுதான் எனக்கும் எழுத வேண்டும் என்று தோண்றியது. அப்பப்போ வந்து எழுதிட்டு போங்க, ஆன மங்களம் மட்டும் பாடிடாதீங்க!!!

Anonymous said...

Dear Dubukku,

Though it will be difficult to be away from your blog site for me, I respect your wish to discontinue this blog due to some reasons. It is a request - continue to write (it gives "autograph" feelings for most of us) whenever you find time at a lesser frequency (I sincerely hope, as you write the frequencey will become more).

All the best for your new assignment.

Venkat

Anonymous said...

Sigh. Your blog is the only tamil blog I read. Even though I don't understand some words, overall I'll be able to tell what you wrote. And now you're leaving... *BIG SIGH* How am I going to improve on my tamil? :P

Anyways, all the best in whatever you do.

Take care.

Have fun.

ps: Gonna miss reading you.

Paavai said...

Hope you reconsider your decision and continue to write.

Usha said...

aiyo, enna dubukku. ippadi kallai thooki podareenga. come on, keep entertaining us - if not at the same frequency at least every once in a way. In any case, even if you stop the blog please do not stop writing. You have a great talent which needs to be kept alive.
All the best.

யாத்ரீகன் said...

பலருக்கு அறிமுகமானபின் வலைபதிவதில் சிறிது சிரமந்தான்... இத்தகைய வகையில் மனஸ்தாபங்கள் ஏதும் ஏற்பட்டு இந்த முடிவு இருக்காதென நம்புகின்றேன்...

என்ற வலைதளத்தில் படித்து இரசித்த ஒன்று.. இப்போ நியாபகம் வந்தது..

"அனானிமஸாக வலைதளம் தொடங்கினேன், நிறைய பேர் வந்து படித்தனர், விவாதித்தோம், சந்தித்தோம், இப்பொழுது இதே பெயரில் எழுத இயலவில்லை, அதனால் பழைய வலைத்தளத்தை மூடிவிட்டு, திரும்ப அனானிமஸாக புது வலைத்தளம் தொடங்கிவிட்டேன்...."

எல்லோரும் ரிக்வெஸ்ட் பண்ணதுதான்.... Free-ya விடு Free-ya விடு மாமூ ப்ளாக்குக்கு யாரு கியாரண்டி...

நேரம் கிடைக்கும் போது, மனது ஒத்துழைக்கும் போது.. பதியுங்கள்...!!!
(அட இனியாவது குழந்தைகள பார்த்துக்குவாருனு உங்க தங்கமணி சொல்றது கேட்குற மாதிரி இருக்கே.. :-) Juz Kidding...

Kumari said...

Aiyoooooooooo
* Andha kaalathu b&w padathula heroine kathirikitte odra mathiri imagine pannikonga*

Aanalaum too much dubukku Sir. Eppavachu vena ezhuthunga. Oradiya MangaLam paada vendam. please, please, pretty please :)

Naan venumna, unga once-a-month post ellathukkum, once-an-hour comment pandren :P

ThangaL mudivai maru paruseelanai seyyumbadi thazhmayudan kettu koLgiRen :)

Anonymous said...

annaaaaaaaaaaaaa
* Indha kaalathu colour gramathu padathula thangaaachi kathirikitte odra mathiri imagine pannikonga*

enna vittutu poga ungalukku eppadi anna manasu vadhadhu
ippadi emathittengale...

*actualla ninechu parkum podhu vijayakumari pachai vilakku cinemala azhara madhiri oru feeling varudhu*

seriously write once in a while
i am hoping that like most bitten by the blog bug u can never stop writing once u start.
so i think and hope that we will see u again in some other avadharam

vanakkam
vaazhga nalamudan

thangaachi

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

டுபுக்கு, உங்கள் விரிவான பதிவில் வைக்கப் போகும் காரணங்களை எதிர்பார்க்கிறேன். உங்கள் முடிவை மதிக்கிறேன். இருந்தும், பிறகு முடிந்த போது எழுத நினைத்தால் தயங்காமல் தொடருங்கள்.

Dubukku said...

இலவசக்கொத்தனார் - ஹீ ஹீ டேங்க்ஸ் தங்கமணியெல்லாம் ஒன்னும் சொல்லலீங்க...அவங்க ஊக்கிவிக்கத் தான் செய்றாங்க

buspass - ஹைய்யோ...மன்னிசிருங்க...நான் சும்மா டமாசு பண்ணிணேன்...இந்தப் பதிவ பாருங்க

தேன் துளி பத்மா - மிக்க நன்றி. மன்னிசுக்கோங்க நான் விளையாடிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிப்பீங்க தானே?

Premalatha -ஹைய்யோ....நீங்க என்னங்க மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு...அய்யோ நான் சும்மா டமாசு பண்ணினேன்... If I have embarassed you I am sorry.
But you made my day I liked your compliments espcly "service to mankind" :)

Dubukku said...

neighbour - puthiya kadamai puthu site thaan. thodarandhu vaanga vaanga vandhikittee irunga..


Thangamani - எப்பிடி இருகீங்கய்யா...ரொம்ப நாளாச்சே உங்கள பார்த்து. சும்ம ஒரு டமாசு ட்ரை பண்ணினேன்...தப்பா எடுத்துக்காதீங்க

subbu - danks.puthu siteku vandhu aatharavu thaanga thalaiva...

Guru - I am sorry. but i am just shifting :) my email is r_ramn at yahoo dot com

Mookku sundar - "எந்த அறிவிஜீவி ஜல்லியடியும் இல்லாம" - அப்பிடீன்னா?...ஏதோ நம்ம ரேன்ஞ்சுக்கு டமாசு ட்ரை பண்ணிணேன்...பேக் ஃபைர் ஆயிடிச்சு :(

DRaj - hehe yes danks for the compliments :)

Boo - Hehe April is for ordinary fools and March is for clever fools isn't? :P

Dubukku said...

Udhayakumar - அப்போ அப்போவா...தொடர்ந்து வருவேன் வருவேன் வந்துகிட்டே இருப்பேன் :)

Venkat - New assignmente itself is new blog site :) danks for the encouraging comments. keep visiting

the woman - no no not that early. :)
I am very glad that I have cultivated some tamil reading habbit in you. hehe :)

SayMee - danks very much for the encouraging words. As you can see my update I am just going to continue :) sorry if I had disapointed you :)

Paavai - no no pls. I will continue writing. I can't reconsider :P

Usha - ada avlo seekram enna packup panna parkareenga..naan pona thaane thirumba varathukku :P

Dubukku said...

யாத்ரீகன் - உங்கள் தொடர்ந்த ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி...நான் இப்போதைக்குப் ப்ளாகை விட்டு போகிற மாதிரி இல்லை :P

Kumari - danks. "once-an-hour comment pandren" - romba danks. indha maathiri thaan oru commitmenta ethir paarthikkitu irundhen. keep your promise(in the new site) :P

thangachi - aiyooo thangachi ippidi black& white and colour padathulellam scene solli enna packup pannreengale...

hehe will stay. Looking fwd for your continued support in the new site :)

செல்வராஜ் - என்னுடைய இந்த சேட்டையைப் பார்த்து கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன். பெரிய மனசு பண்ணுங்கய்யா...

Anonymous said...

இந்த ஒரு போஸ்ட் போட்டே போஸ்ட் போடாம டிமிக்கி கொடுத்திட்டு இருந்தவங்களையெல்லாம் போஸ்ட் போட வச்சிட்டார்...
வெவரமான ஆள் தான்!!

Post a Comment

Related Posts