Monday, February 27, 2006

கீபோர்ட்

சின்ன வயதிலிருந்தே மிருதங்கம், ட்ரம்ஸ்க்கு அடுத்தபடியாக கீபோர்டின் மேல் எனக்கு ஒரு மோகம் உண்டு. சென்னையில் ராம்கோ சிஸ்டம்ஸில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கே ஒரு மியூசிக் ட்ரூப் உருவாக்கினோம். எல்க்டிரானிக் ட்ரம்ஸுக்குப் பதிலாக கீபோர்டிலேயே ட்ரம்ஸ் வாசித்தேன். இப்படி ஆபிஸ் விழா ஒன்றில் நான் வாசித்த போது என் மனைவியும் வந்திருந்தார். கல்யாணமான புதிதாகையால் அந்தப் பாட்டில் முக்காலேவாசி சைட் முயூசிக் நான் வாசித்த கீபோர்டிலிருந்து தான் வந்தது என்று அன்று நான் புருடா விட்டது எனக்கே வினையாக வரும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. லண்டன் வந்தலிருந்தே நான்கு வருடங்களாக கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆசை. "உங்களுக்குத் தான் நல்லா வாசிக்கத் தெரியுமே...வாங்குங்கோளேன்...குழந்தைகளுக்கும் கத்துக் குடுக்கலாம்" என்று மேலிடத்துப் பிரஷர் அடிக்கடி வரும். "ஹூம் வாங்கிருலாம்...ஆனா நம்ம லெவலுக்கு நல்ல கீபோர்டா பார்த்துத் தான் வாங்கனும்" இப்பிடி அப்பிடி என்று தள்ளிப்போட்டு ஒரு நாள் வாங்கியே விட்டேன். வந்ததுக்கப்புறம் தான் மனைவிக்குத் தெரிந்தது, நமீதாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரிந்த அளவுக்குத் தான் எனக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியுமென்று.

"என்னம்மோ அன்னிக்கு நான் தான் வாசிச்சேன்னு சொன்னேள்?"

"அது வாசிச்சு ஐந்து வருடங்கள் ஆச்சே...டச் விட்டுப் போச்சு இப்போ..."

"உணமையச் சொல்லுங்கோ உங்களுக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியுமா இல்லையா?"

"வாசிக்கத் தெரியும்னா...தமிழ், ஆங்கிலம், ஹீந்தி மூனு பாஷையிலயும் கீபோர்ட்ன்னு எழுதி வைச்சா வாசிப்பேன்"

அப்புறம் என் கீபோர்ட் ரெண்டாவது மகளுக்கு சாப்பாடு குடுக்க ரொம்ப உபயோகப் பட்டது. "இப்போ சாப்பிடப் போறியா இல்ல அப்பாவ கீபோர்ட் வாசிக்கச் சொல்லவா" என்றால் பயந்து ரெண்டே நிமிஷத்தில் சாப்பிட்டுவிடுவாள். சரி மனைவிக்குத் தான் எல்லாம் தான் தெரிஞ்சு தொல்லைச்சாச்சேன்னு கீபோர்ட் க்ளாசில் சேர்ந்தேன். அங்கே என் மூத்த மகளுடைய க்ளாசில் படிக்கும் ஐந்து வயது பெண் என் க்ளாஸ்மேட். பாடங்களில் எனக்கு சீனியர். சினிமாவில் வருவது மாதிரி நாலு நாளில் பட்டயைக் கிளப்பிவிடலாமென்று பார்த்தால் வாத்தியார் "சி, டி " என்று ஏ.பி.சிடி சொல்லிக்குடுத்துக் கொண்டிருந்தார். இதில் சி. மேஜர் சி. மைனர் என்று ஒன்றுமே மண்டைக்குள் ஏறவில்லை. இந்த லட்சணத்தில் நான் ஏ.பி.சிடி. படித்து எப்போ டிகிரி வாங்குவதென்று கடைசியில் இந்த வாத்தியாருக்கு "ஒட்டகத்த கட்டிக்கோ.." வாசிக்க சொல்லித் தரத் தெரியவில்லை என்று க்ளாசை நிப்பாட்டிவிட்டேன்.

"பாருங்கோ உங்க பெண்ணே...சாப்பாடு போது தட்டி தட்டி இப்போ கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறாள்" என்று மனுஷன் தன்மானத்துக்கு அப்போ அப்போ சவால் வரும். ஒரு நாள் ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ராத்திரி முழுதும் உட்கார்ந்து என்னம்மோ ட்ரை பண்ணி ஒரு ம்யூசிக் கம்போஸ் செய்து அதை தீபாவளிப் பார்டியில் ரிலீஸும் செய்தாச்சு. இதை இத்தனை நாளாக இந்த ப்ளாகில் போட்டு உங்கள் நக்கலையும் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும் என்று ஆசை. இதோ கீழே இருக்கும் லிக்ங்கில் க்ளிக் செய்தால் என்னுடைய கீபோர்ட் சேட்டை கிடைக்கும். இதில் வரும் எல்லா வாத்தியஙளையும் நான் நான் நான்னே வாசிச்சு 5 ட்ராக் ரெக்கார்டிங்கில் மிக்ஸ் செய்திருக்கிறேன். (இந்த விஷயம் உண்மை). நேராக கீபோர்டிலிருந்து டவுண்லோட் செய்யமுடியாமல் மைக்கில் ரெக்கார்ட் செய்திருக்கிறேன் அதனால் கொஞ்சம் இரைச்சல் இருக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள். கேட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க.ப்ளீஸ்... திட்டுவதாய் இருந்தாலும் பரவாயில்லை...ரொம்ப காறித் துப்புவதாக இருந்தால் இங்கு ஆபிஸில் ஒருத்தருடைய இ-மெயில் தருகிறேன் :)

டுபுக்குவின் இசைவெள்ளத்தில் நனைய...
(இரண்டரை எம்.பி. இருப்பதால் லோட் ஆக கொஞ்சம் நேரம் பிடிக்கலாம்)

26 comments:

Anonymous said...

Idhu naan carnatic music kathunda kadhaiyalla irukku. Paadhi classes cartoon timings-oda clash aagudhunu miss panninen. Meedhi, "Enakku naalaikku exam-nu" miss panninen. :) Aaga motham ippo Sangeetham-na gyana soonyam thaan.

மணியன் said...

நானும் ஒழுங்கா சாப்பிட்டுவிடுகிறேன் :)
ஆரம்பநிலைதான் என்றால் கொள்ளாம்.

ambi said...

Ahaaa, kaipulla! "innumaada unna entha Ooru nambuthu" rangekku ungaa kadhai erukkee!

Usha said...

aha!! aramba music, asin surya voda motor cycle le oru duet mount road le. Apram paadile policekaaran pudichu station ku march pannindu ponadukku music second half.. sari daane?
Hehhe. Not bad at all. Kekumbadiyave irukku!!

வானம்பாடி said...

// நமீதாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரிந்த அளவுக்குத் தான் எனக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியுமென்று. //

:))

Yours Truly said...

Enakku kooda keyboard kathukkaNumnu romba naaL aasai.*Sigh* Ippdi nyaabaga paduthiteengaLe. C-major/minor ellam konjam maNdaya pichukkra madhiri irundhaalum shall go and search for a keyboard instructor in my area sometime this week :)

Donno y, but indha post paatha udane me remembered a joke where Senthil plays Nalam dhaanaa in thavil for Koundamani :))

Anonymous said...

I think it's not bad... really. More practice yea?

Anonymous said...

Nanbha... ARR mathiri rathiri ellam irrunthu seithen nnu sonna.. aanaa ARR mahtiri engaa irrunthu copy adichee nnu sollavee illa !!!!

Jokes apart... nalla vee irrunthathu....

இராமச்சந்திரன் said...

தல...உண்மைய சொல்லுங்க...இங்க "கமென்ட்-ல" இருக்கறவங்களுக்கு முன்னாடியே நாந்தான அந்த கானத்த கேட்ட மொத ஆள் ?

நானும் கேஸியோ-அவுட்லெட் மால்-ல (ஷிகாகோ) போய் ஒன்னு வாங்கினேன். ஆனா கரீக்டா வீட க்ளீன் பண்ணும் போது அதையும் நல்ல க்ளீன் பண்ணுவேன்.

என் பொண்ணு சாப்பாடுக்கும் அது தான் யூஸ் ஆகுது. நான் வாசிச்சு இல்ல. என் பொண்ண அது பக்கத்துல விட்டா தட்டி தட்டி ரிஸர்ச் பண்ணும் போது இல்லாள் சாப்பாடு ஊட்டி முடிச்சுருவா...

இந்த சி மைனர், மேஜர், மிடில் எல்லாம் என்ன ? அதுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

இலவசக்கொத்தனார் said...

யோவ் டுபுக்கு,

http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html

இங்க போய் நமக்கு ஒரு ஓட்டு போடும். ரோஜா அணி. புரியுதா?

Anonymous said...

Nalla keethuBa(danks ellam solra paavum,athaan), meyyalumey nee thaan vaaschikiniya?
'naan' 'naan' 'naane' -nu naanooru dhaba(4 'hunrid' times?) naakesu kanakka
veyra koovurae (periii 'simpini', perimiya solla vantaaru)...anyho 'accept'ba.
nee vaaschadhavey keetum,aana 'nestime' supura kuththu paatta poduba.vartaa......?

[ahaahm, mic-lo record pannathula than Kwolity korinji pochi pola,
illeena A.R.R-a beat panni, ootu pinnadi (ungoodu thaanba)keera 'broadway'-la kooptaango,
japan-lo jackiechan kooptaango-nu solva maari keethu ]

capriciously_me said...

umtk-nu sollittu suthanumna foto poda koodaadhu...adhe maadiri, nalla vaasippennu scene vidaradhunna indha maadiri edhayo thattittu meesicnu poda koodaadhu...:P

Anonymous said...

HaHa Capri sooper, ipdi otta theriyaadhe rendu naalaa ennatha ezhudhalaamnu me thinking. Sooper comment :))

Udhayakumar said...

டுபுக்கு,

மைக்தான் கொஞ்சம் சரியில்லைன்னு நினைக்கறேன். நீங்க நல்லா வாசிக்கறீங்க!!!!

Anonymous said...

Uma - nenaichen yerkanave oru payalum naan ezhuthinennu sonna namba matten..ithula ithu veraya....naan naan naanee thanga vaasichathu :)

Krithika - ada neengalavathu kettu comment pannuveenganu parthen. Keteengala? illa kettutu no comments nu sollama sollreengala?

Maniyan - என்னங்க ஒருத்தரும் என் மீசிக்க கேக்க மாட்டீங்கிறீங்க hmmmmm

Ambi - you too Brutus?

Sudharsan - :))

Yours Truly - ohh neengaluma? I think you will get used to that. Yeah inga veetulayum adha solli ottuvanga :)

Dubukku said...

Usha - enakku nambikkai irundhuthu neengalavathu nalla irukkunu solluveenganu...chichuvetion ellam solli asatheteenga danks

Sri - ada ennaga neenga nameetha mattera correcta kekareenga appiyellam onnum illeenga...
Naan eppollam ippidiyo appolam appidi thaan ;)

the Woman - haaaa danks danks danks download panni kettu comment adichirukeengale danks

the One - va nanbha vaa...danks Nee mattum than nalla irukkunu solli irukka nanba :) ellarum paravallanu than sonnanga..you made my day :)

Ramachandran - இல்லீங்க...உங்களுக்கு முன்னாடி ஒருதங்க கேட்டிருக்காங்க :)

>>இந்த சி மைனர், மேஜர், மிடில் எல்லாம் என்ன ? அதுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

இதெல்லாம் நம்மள மாதிரி இசைஞானிகளெல்லாம் கிளம்பிறக் கூடாதுன்னு எதிர் நாட்டு சதி பாஸ்...அடக்குமுறை :)

Kothanar - ஓட்டு போட்டாச்சுங்கோவ்...எனக்குத் தான் ஓட்டு விழமாட்டேங்குது ஹூம்

Dubukku said...

Guru - danks baa..meiyalume naan thaanba vasichurukken nambunga samiyov :)

Capri /Witchy - meesic certification training edutha maadhiri comment viturukeenga...ethoo vayasana aathaakalellam solreenga ketukaren :) etho periya manasu pannunga aatha's

Udhayakumar - ரொம்ப நன்றிங்க...ஆமாங்க ப்ளே பண்ணி மைக்ல ரெக்கார்ட் செய்தேன். டைரக்டா கீபோர்ட்லேர்ந்து என்னம்மோ டவுண்லோட் மக்கர் பண்ணுது

Anonymous said...

Poornima - lovely days those were in Ramco. hehe naan keyboard vasikarathu ...did you listen to the clip I have posted in this post?

Mirudhangam vaasikarathukkum idhukkum sambanthamee irukathu :)
(not that mirudhangam vasikarathu is sooper :P)

capriciously_me said...

nalla kalaiya rasikarathukku no meesic certification required...adhe maadiri thattaradha adaiyaalam kandu pidikarathukku subbudu thevai illai :P

Anonymous said...

Aiyo, naan solla marandhadhu ivvlo effect create pannumnu nenaikkalai. Promise. Ketten, nalla thaan vasichirukkenga. En ungalukku ivvlo thanadakkamo theriyalai :) (I don't know how to sound convincing. But genuinely, it was good)

Anonymous said...

Something else I forgot to mention - neenga dhigil padathukku music podalam.

Kumari said...

I liked the initial start and the way it progressed. Aana kadaisi 15 secs konjam horror movie effect kuduthidichu :)

Sindhu Bhairavi Sulochana mathiri gyanasuniyam illai nalum, enakku avlo sangeetha gyanam kidaiyathu. Etho en chinna arivukku thoninadhu. Kova padatheenga :)

Yours Truly said...

Dubukku aNNaachi...sooper. Arumaya vaasikkareenga. Base pitch-la aarambichu drums+flute-nu progress paNNi irukeenga paarunga..besh besh!! Swarasthaanam ellaam perfect-aa irundhudhu

Swaram kaNdu pidikka try paNNinen...but not sure..

Sa sa ri...Sa sa sa ri
Sa ri ga ma pa ma ga ri ni sa

Correct-aa?? IvvLo paesi irukkene, jodaa kedayaadhaa??? :D

Anonymous said...

CM, did you mention the word 'Kalai' :O

Anonymous said...

Krithika - danks danks...inga parunga rendu per (wichy/CM) ottranga...avangalluku bathil adi kudukamnumna I want some support and was counting on you hehe :)
(andha rendavathu comment thaniya email la solli irukalam)

Kumari - romba danksga. I also felt the same but raathiri fulla utkarndhu vaasichitu thiruppu rerecord panna sombala irundhathathu adhan appidiye vittuten. Kovamlam padamattenga I think capri/witchy ku bathil sonnatha parthu nenaikareenga. Those two have some scores to settle and have a hidden agenda..adhan avanga ottikitu irukanga and me too :)

YoursTruly- haaaa idha idha idhathan ethir parthen. ennaga neenga mudhallaye indha commenta vitrundha inga rendu pera semaya kalasi iruppene...better late than never danks. swaram kiram laam keekareenga ennakku juram varuthu..:) swaramlam theriyathunga ithellam appidiye varathu thaan :P (read it in Mich.madhana kamarajan style)
yaarupa anga joda kuduppa YT ku


Capri- yes naan thaatha thaan seiyaren...naan soobera vaasikarennu sollaliye :P
adha inga neraya per sollitanga haha NTPK :))

Witchy - Yen Capri kalaiya patthi pesa koodatha? :))) :P

Anonymous said...

Dhigil padamna enna mosama? You know, it's not easy doing a BGM for such films. Andha suspense effectum maintain pannanum, adhe samayathula, romba kaadhu kizhiyara maadhiriyum irukka koodathu.

Post a Comment

Related Posts