Tuesday, November 29, 2005

லவ் டுடே

அஷ்வினுக்கு ரொம்பவே எரிச்சலாக இருந்தது. ஒரு வாரமாக அவனுக்கும் திவ்யாவுக்கும் சண்டை. கொஞ்ச நாளாகவே ஒத்துப் போகவில்லை என்றாலும் நேற்று ரொம்பவே ஆகிவிட்டது.

"எல்லாம் அப்பாவைச் சொல்லனும் அவரால் தான் இப்பிடி அவசரப்பட்டு திவ்யாவை கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இல்லாவிட்டால் ப்ரீத்தியிடம் பேசிப் பார்த்திருக்கலாம் " அவனுக்கு நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது. திவ்யாவுக்கு ரொம்ப பிடிவாதம் இருக்கிறது கூடவே திமிர் வேற...என்ன வேணா செய்யட்டும். ஆபிஸ் விஷயமாக என்று சொல்லி ஒருவாரம் வேறு மாகாணத்திற்கு வந்திருக்கிறான். ஹோட்டலில் வந்ததிலிருந்தே இதே நினைப்பாக இருந்தான்.

"நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்...பிடிச்சுதுன்னா நீ யூ.எஸ். திரும்பி போகறதுக்குள்ள கல்யாணம்"

அப்பாவின் பிடிவாதம் அவனுக்குப் புதிதல்ல என்றாலும் கல்யாண விஷயத்தில் இவ்வளவு அவசரப்படுத்தியது ரொம்பவே கோபம் அவனுக்கு.

கேரியர் கூரியர் என்று என்னல்லாமோ காரணம் சொன்னாலும் உண்மையான காரணம்...புதிதாக அப்போது தான் இன்டெர்னெட் சேட்டில் பிரண்டாகியிருக்கும் ப்ரீத்தி. இப்போது தான் நன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் ஒத்துப் போகின்றன...பார்ததில்லையே தவிர ரொம்ப அழகாக இருப்பாள் என்று சொல்லியிருக்கிறாள். அவனுக்கு அவளை ரொம்ப பிடித்திருந்தது. ப்ரீத்தியிடம் இன்னும் சொல்லவில்லை ஆனாலும் மறைமுகமாக சொல்லிவைத்திருக்கிறான். அவளும் கோபிக்கவில்லை. அடிக்கடி சேட் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

அவளை நேரில் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊருக்கு வந்த நேரத்தில் அப்பா இப்பிடி குண்டைப் போடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அப்பாவிடம் இன்டெர்நெட் சாட் என்று சொல்வதற்கெல்லாம் தைரியம் வரவில்லை. சரவண பவனில் டிபன் சாப்பிடுவதற்குப் பதிலா இங்க போய் சாப்பிட்டுவிட்டு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லவிட்டு வந்தால் போச்சு என்று தான் ஒத்துக்கொண்டான். ஆனால் திவ்யாவைப் பெண் பார்த்த போது அவள் அழகில் திணறிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும். நோ சொல்ல முடியவில்லை. தனியாக பேசிய போதும் மணிரத்னம் படத்தில் வருவது போல திக்கித் திக்கித் தான் பேசினான்.

"பிடிச்சிருக்காடா இல்ல அப்பாவுக்காக சொல்லறியா?" தாம் தூம்ன குத்தித்த பையனா இப்பிடி உடனே ஒத்துக்கொண்டான் - அம்மாவால் நம்பவே முடியவில்லை.

கல்யாணம் ஆகி யூஸ் கூட்டி வந்து ஹாலிவுட்டை சுத்திக் காட்டி, நயாக்ரா போய் போட்டோ எடுத்துக் கொண்டு, வெங்கடாசலபதி கோவிலில் வேஷ்டி கட்டிக் கொண்டு அர்சனை வைத்து, வால் மார்ட்டில் எப்பிடி புளி பருப்பு வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து, டெலிபோன் கார்டு தந்திரங்கள் கற்றுக்கொடுத்து மோகம் முப்பது நாளுக்குப் பதிலாக அவர்களுக்குள் நாற்பத்தைந்து நாள் நீடித்தது.

திவ்யாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. பார்த்து பார்த்து சொல்லிக்குடுத்த அஷ்வினா இப்பிடி திடீரென்று மாறிவிட்டான். மாறிவிட்டானா இல்லை குணமே இது தான? எவ்வளவு நானும் பார்த்துப் பார்த்து செய்திருப்பேன்? முடியாமல் தோசையும் தக்காளிச் சட்னியும் செய்து குடுத்துவிட்டு ஆபிஸில் லிஸி முதற்கொண்டு எத்தனை பேருக்கு பிடித்தது? ராஜனுடைய அம்மா கூட கேள்விப்பட்டு கோவிலில் வைத்து "யூ.எஸில் தோசையெல்லாம் செய்கிறாளே உன் பெண்டாட்டி" என்று பாரட்டவில்லையா...ஆபிஸ் வேலையென்று சும்மா சொல்லிவிட்டு போகிறான். என்னை பிரிந்திருக்கவேண்டும் என்பது தான் அவன் நோக்கம். தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் போகட்டும் ஒரு வாரம் தொலையட்டும். பார்க்காமல் இருந்தால் தான் பெண்டாட்டி அருமை தெரியும்.

அவளுக்கு தாந்தான் எல்லாம் என்ற நினைப்பு. ஏர்போர்டில் இறங்கியதிலிருந்து பெக்க பெக்கவென முழித்துக் கொண்டிருந்தவளுக்கு எவ்வளவு சொல்லி குடுத்திருப்போம்? கார் ஓட்ட சொல்லிக்கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன்? ஊரில் இல்லாத தோசையும் தக்காளிச் சட்னியும்...அம்மா இதை விட எவ்வளவு அருமையாகச் செய்வாள். ப்ரீத்தி கூட நல்ல சமைபாள் என்று சொல்லி இருக்கிறாளே அஷ்வினால் ப்ரீத்தியின் நினைவுகளை உதறமுடியவில்லை. எவ்வளவு நல்ல தோழியாக அனுசரனையாக இருந்தாள்.
"ஹாய் ப்ரீத்தி, நாந்தான், என்னடா இவ்வளவு நாள் ஆளக் காணோம் திடீரென்று மெயில் பண்ணறானேன்னு நினைகாத..நடுவில் என் வாழ்வில் நிறைய நிகழ்வுகள். எனக்கு திடிரென்று கல்யாணம் ஆகிவிட்டது. உடனே கங்கராட்ஸ் சொல்லாதே...கல்யாண வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி அவ்வளவு நல்ல போகல. கொஞ்சம் வருத்தமா இருக்கு உன்ன மிஸ் பண்ணிட்டேனோன்னு...என்ன செய்ய என் மனைவிக்கும் எனக்கும்..." ப்ரீத்திக்கு மெயில் அனுப்பிய பிறகு தான் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

"....இருந்தாலும் கவலப்படாதே...எல்லாருக்கும் நினைச்ச மாதிரியா வாழ்க்கை அமையுது...நான் மேலே சொன்ன வழிமுறைகளை முயற்சி செஞ்சு பார்..நான் போன மெயிலில் சொன்ன மாதிரி என் வாழ்கைய பார்க்கும் போது உன் வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை என்று தான் தோன்றுகிறது. உன் வாழ்க்கை நல்ல படியா அமைய என் வாழ்த்துக்கள்" - கண்ணீரைத் துடைத்த படி பதிலை எழுதி முடித்தாள் ப்ரீத்தியாகிய திவ்யா தருணாகிய அஷ்வினுக்கு.

26 comments:

Maya said...

என்ன Mr டுபுக்கு..
மொத்ததில் பல இடத்தில் படித்த அரைச்ச மாவையே அரைச்சியிருக்கீங்க...

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

துளசி கோபால் said...

டுபுக்கு,

//...பார்ததில்லையே தவிர ரொம்ப அழகாக இருப்பாள் என்று சொல்லியிருக்கிறாள். //

இந்த வரி கதையைக் 'காட்டி'க் குடுத்துருச்சு.

krishjapan said...

Revatys, Mithr My friend, acted by shobana. .... just copy of this story is that movie. U can file a case on her.

Krishna said...

sutta kathaiyaanaalum suvaiyaaga sonneergal

Usha said...

Objective ah innotharoda problem nu nenachu paarkum podu sulabama nammal advice panna mudiyudu. Naame anda situation le irukkum podu anda clarity poidradu polirukku. Nithyakkum ashwinukkum tarun matrum preeti yudaya problems ai purinjukka mudiyudu adaye avanga vaazhkayle apply panna mudiyalai.
Remote friendship is more comfortable because it is devoid of the small irritations of day to day reality. same players, same situations - onnu idealistic innonu reality.difference azhaga solli irukkenga.

Premalatha said...

"orrai roja" padikkalaiyaa?, "mitr my friend"-laam paakkalaiyaa?

yaaravathu kandippaa itha solluvaanga.. athaan naane sollitten.

:)

Dubukku said...

மாயா - ஓ ஏற்கனவே நிறைய பேர் அரைச்சுட்டாங்களா? நான் அதை படிக்காததுனால இட்லி உப்புமா பண்ண ட்ரை பண்ணி இருக்கேன். ஏதோ சின்னப் பையன் பொறுத்துக்கோங்க... உங்க கருத்தைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. இனிமே கவனமா இருக்கேன் :)

Tulsi - ஆஆஆஆஆ....சரி இருக்கட்டும் இன்னொருதரம் பார்த்துக்கறேன்.

Raj - என்னம்மோங்க..இதெல்லாம் ட்ரை பண்ணனும்னு கொஞ்சம் ஆசை...முயற்சி பண்ணியிருக்கேன்...

Dubukku said...

Krishna - ஐய்யைய்யோ...அப்பிடியா....சத்தியமா அந்த படம் பார்த்ததில்லீங்கோ...இது உணமையிலேயே மனசுல அப்பிடியே தோன்றி எழுதினதுங்கோ....போஸ்ட வேணா தூக்கிரவா? அவங்க கேஸ் போட்டிரப்போறாங்கோ....

Anonymous said...

climax was guessable.. but still the way u write and the words u choose r too good as usual....
subbu,

Dubukku said...

dhanvanth - ஐய்யைய்யோ....ஏற்கனவே என்ன ஒருபயலும் நம்ப மாட்டான். இந்த போஸ்டுக்கப்புறம் எல்லாத்தையும் கோவில்ல யாரோ எழுதிக்கொடுத்து நான் இங்க போடறேன்னு நினைக்கப்போறாங்கோ...டுபுக்கு கண்ட கண்ட படத்தையும் பார்த்தியே மித்ர் பார்த்திருக்கவேண்டாமா...போச்சு போச்சு...ஒன்னா ரெண்டா ஆயிரம் பொற்காசாச்சே...

Usha - habbaaadaa...neengalavathu kathaiya patthi pesirukeenga :) (no offence meant to others) orutharum nammba maatengranga
Exactly thats the point I have tried to convey. I am glad that solla vandhathu konjam solli irukkennnu nenaikaren. romba danks.

Premalatha - "orrai roja" ethu indha sivaji double act padam athuva? adhula indha matter enga varuthu? **scratching my head***

neegalavathu nambunga...naan innum Mitr paarkaleenga...parthirundha itha ippidi ezhuthi irukka mattenga... :)

sokkkaaa sokkkaaaaa

Paavai said...

Narration is very good Dubukku. Mitr padam pakkumbodu there is a face associated with the character, reading la sulabama imagine panna mudiyuthu.

It does happen that similar ideas occur to several people at the same time. Naan adhaiyethaan ninachennu solrathillayaa. Revathyum neengalum ore vishayatha yosichirukeenga avalavuthaan

Premalatha said...

Renga, "Orrai roja" (neelappudavai orrai roja, I think) was a short story came in AV or kumudam atleast ten to fifteen years ago. I don't think they used "internet", but other things are all same. in fact, wife gets to know it was him (they plan to meet, they decide she will wear bblue saree and he will keep one rose in his hand etc.) She sees it is him, she doesn't meet and comes home. when he comes home he sees the blue saree on his bed as she has just changed clothes. so, he comes to know also. I think it was written by Sujatha rengarajan.

Jeevan said...

i have real a story like this some days back in a Newspaper, two people chat, with out seeing there face, one day they decided to see, that all they fight eachother and get diverse.

Very nice story, Intersting Dubukku.:)

daily our story sullunga, nalla poluthu pogum.

Premalatha said...

(neelappudavai orrai roja, I think)
[....]
atleast ten to fifteen years ago.

Balaji S Rajan said...

Frank-eh solla ponal first time onnumey puriyalai. Yennada proof reading pannamma vuttutara Rengannu ninaichu... Karanaam last night orey moochula unga 'Jolluginra Kalathai' jollitane. sorry Jollammal jolitane. Super thalaiva.... Pitchiputeenga.... Hasyam nallavey varudhu...Irundhallum kurai solranenu ninaikatheenga.... Konjam spelling like rendu suzhi 'na' moonu suzhi 'na' mathiri yellam konjam parkavum.... Innikku fresh eh indha kadhaiyai padicha vudaney purinjuthu... Ippa unga stylekku set ayitane... Nera partha niraiya pesalam.... It is going to happen soon. Anyhow...Keep it up.

[ 'b u s p a s s' ] said...

kadhai'la fight, sentiment irukku...

paatu matrum comedy track missing.

but box apees'la collection aayidum.

Anonymous said...

Hi, bloghopped from Draj's.

I read this entry halfway and couldn't continue... am too lazy trying to read the whole of it. But still, just felt like complimenting... it's nice to read tamil blogs. The first paragraph was interesting itself. Your tamil slangs blog really cracked me up. Hehe.

Have fun.

Good day.

Ps: Sorry for not commenting in tamil. I'm not really good at spoken/written tamil.

Anonymous said...

அய்யா, இது என்ன ஜொள்ளி திரிந்த காலத்தோட அடுத்த பாகமா? தானா பார்த்த பெண்ணை அப்பா சொன்ன பொண்ணா அல்வா குடுக்கறீங்களா? கோபிக்காதீங்க. சும்மா தமாசு! :)

சும்மா நச்சுன்னு இருக்கு உங்க எழுத்து. (சரியான ராகத்தில் படிக்கவும். ஹிஹி. புதுசா சன் டீவி போட்டு இருக்கேன். அதான் இப்படி)

Dubukku said...

Subbu - danks thalaiva..to be frank though the story was a very normal one was practising the narration.

Paavai - yes exactly thats the case. And you know what I was totally shocked when I read a Sujatha story recently(he prbly had written that around 60's or 70's) . I had written a very similar theme story way back in 1991/1992 and had got that published in one of Varamalar chennai editions. The major diferreneces were only the narration and the final twist. Ethanai per adha padichuttu ivan suttutannu nenaichangalo :)

Dubukku said...

Premalatha - haven't read that yet. Will search for that (just curious now thalaivar eppidi think panni ezhuthi irukkarnu parka thaan :))

Jeevan - thats relaity huh..hmmm danks for the compliments.

Uma - aiyoooo story is not stolen...(I had no idea abt Mitr :) when I wrote this ) Probly great men think alike? :P

Dubukku said...

Balaji - danks thalaiva.. danku for pointing out those mistakes. Though I tend to be careful sometimes aarva kolarula miss panni iruppennu nenaikaren. Will try to be more careful from now.
Yeah lets catchup soon :)

busspass - danks thala. habbaa sillara therina seri :P

the woman - danks for dropping by and complimenting (despite not having read in full :)). I appreciate your enthu of encouraging :)

ராஜேஷ் - ஹைய்யோ இல்லீங்கோ....இது வேறு அது வேறு...:))
ரொம்ப நன்றி....உங்க நச்சு கமெண்டுக்கு...
ஆனா டீ.வி.யில புதுசு கண்ணா புதுசுக்கு அப்புறம் எரிச்சலான ப்ரெயின் வாஷ் இந்த் சும்மா நச்சுன்னு இருக்கு விளம்பரம் ...போச்சு இன்னிக்கு முழுவதும் மண்டையில இது ஒலிச்சுக்கிட்டே இருக்கும்..

expertdabbler said...

beautiful dubuks.

aana manasu koncham katam ayiruchu..

my suggestion.. neenga naraya comedy kadhai eludhungo pramaadhama varum..

Usha said...
This comment has been removed by a blog administrator.
Usha said...

paavai oru post le ideal self matrum real self pathi ezhudinaanga - adu gyabagam vandadu. namm internet personality or the one we project is our ideal self and people who interact with us see our real self - adaan conflict.

Dubukku said...

the story I was referring to Paavai was about a lottery ticket and the story name itself will be lottery ticket number. very close theme and just the characterisations, narration and final twist are different padichavanga kandippa naan suttutennu thaan nenaichirupanga :)

PK - danks. yeah yeah but matha linenum konjam try pannalamnu thaan :)
"aana manasu koncham katam ayiruchu.." - Puriyala I dont get what katam here is? and why?

Usha - Yeah...very true :) saw your reply in your post. thanks for that and have replied also :)

expertdabbler said...

Aaha adhu katam illai, kashtam.

naanum en typo vum... kashtam!

Post a Comment

Related Posts