இன்று பாஸ்போர்ட் விஷயமாக இந்திய ஹைகமிஷனுக்குப் போக வேண்டி இருந்தது. இதற்கு முன்னமே இரண்டு தடவை போயிருக்கிறேன். சந்தையில் நுழைந்தது மாதிரி தான் இருந்தது. நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. தீபாவளிக்கு சென்னை ரங்கநாதன் தெருவிற்கு போன மாதிரி இருந்தது. முதலில் வெளியில் டோக்கன் வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு நூறு டோக்கன் தான் த்ருவார்கள். அங்கே பொறுமையாக க்யூவில் நின்று கொண்டிருக்கும் போதே..ஏஜன்ட் என்று சொல்லிக்கொண்டு நாலு சிங் மாமாக்கள் க்யூவையெல்லாம் மதிக்கவே இல்லை. அங்கேயே எனக்கு சாமி ஏறிவிட்டது. ஒரு ஆட்டம் ஆடி டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால் எள் போட்டால் கீழே விழாத அளவு நெருக்கியடித்துக் கொண்டு கூட்டம்.
ஒருத்தருக்காவது எதற்கு எங்கே நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. டோக்கன் நம்பர் எல்லாம் விசாவிற்கு வந்திருப்பவர்களுக்குத் தானாம். பாஸ்போர்ட்டுக்கு உம்மாச்சியை வேண்டிக் கொண்டு குலுக்கல் முறையில் ஒரு க்யூவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிற்க வேண்டும். கிளம்பும் போது நல்ல வேளையில் கிளம்பி இருந்தால் கரெக்டாக போய்விடலாம். இல்லாவிட்டால் பாதியிலேயே உள்ளே கவுண்டரில் இருப்பவர் தண்ணி குடிக்கவோ, மூச்சா போகவோ எழுந்து போய்விடுவார். அப்புறம் தேவுடா தேவுடா தான். விசா குத்தி பாஸ்போர்ட் வாங்குவதற்கும் ஒரு கவுண்டரில் சுரத்தே இல்லாமல் சின்னதாக ஏலம் போடுவார்கள். நீங்கள் சித்த நேரம் பராக்க பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் போச்சு திரும்ப கேட்டு அவர் குடுப்பதற்குள் விசா காலாவதியாகிவிடும்.
எங்கேயும் தெரிகிறமாதிரி ஒரு அறிவிப்புப் பலகை இல்லை. கிட்டப் போனால் நெஞ்சில் குத்திக் கொண்டிருப்பது மாதிரி குட்டியா ஒரு நேம் போர்டு. இருக்கிற கூட்டதில் யானைக்கு எலிக் கோமணத்தை கட்டிய மாதிரி இருக்கு. போர்டு இருக்கிறது என்று சொன்னால் தான் தெரியும்.
வேறு நாட்டு தூதரகத்திற்கெல்லாம் போனால் செக்யூரிட்டி கார்டிடம் கூட அதிர்ந்து பேச முடியாது. இங்கே ஷேர் மார்க்கெட் மாதிரி எல்லாருமே கூவி கூவித் தான் பேசவேண்டும். பாஸ்போர்ட்க்கு வெளியிலே டோக்கன் வாங்கிவிட்டோம் என்று தெனாவெட்டில் இருந்தால் ரப்பரால் அழித்துவிடுங்கள். இங்கே ஒரு க்யூ நிற்கும் அதில் நின்று தான் போகவேண்டும். அப்போ எதற்கு டோக்கன்? என்று தொலைத்து விட்டீர்களானால் க்யூவில் உங்கள் முறை வரும் போது அதை கண்டிப்பாக கேட்பார்கள். இல்லையென்றால் "ர்ர்ர்ர்ரிப்பீட்டு".
வெட்கக் கேடு ஒரு வழிமுறையே இல்லை. ஹை கமிஷனர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ரூமில் உட்கார்ந்து கொண்டு என்னை மாதிரி ப்ளாக் அடித்துக் கொண்டிருக்கிறாரோ என்னமோ. இதை விட முருகன் இட்லி கடையில் அழகாக டோக்கன் குடுத்து நடத்துகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது வெளிநாட்டில் வெளிநாட்டினர்களுக்கு மத்தியிலா இப்பிடி மானம் போகவேண்டும்? இந்தியாவைப் பற்றி தெரியாமல் முதன் முறையாக இங்கு வருபவர்களுக்கு இப்பிடியா அறிமுகம் கிடைக்க வேண்டும்? திரு.அப்துல் கலாமிற்கு தான் எழுத வேண்டும். எந்த முகவரிக்கு எழுத என்று உங்களுக்குத் தெரியுமா? லண்டனில் மட்டும் தான் இப்பிடியா இல்லை மற்ற இடங்களிலும் இப்பிடியா என்று தெரியவில்லை.
Friday, November 11, 2005
Subscribe to:
Post Comments (Atom)
65 comments:
Hi,
Don't get tensed so much., It is all in the game. This situation is not only in your city but also in other places..
But, as of Indian High Commision in Singapore, it is much organised in terms of queue and meeting the officers. And they have different timings for filing the applications and for collection of the respective documents. So, you may not waste any time apart from the queue time...
Few negatives points are: less number of tokens, less number of counters and the entire place looks old fashioned... Right from the token machine to announcement system... Information in the website and the actual forms are not in Sync. And the area is much smaller. When they are serving for a large number of people, it can be with a better ambience. The Indian High Commision office in Singapore is a Typical Indian Bangalow... But, it looks like "Booth bangalow" (pai, pisasu thanga namma tamil cinema la yellam oru periya maligai katuvangale., athu mathiri).... Konjam bright a.... and colour full a... irundha nalla irukkum....
Shankar sir than vanthu., colour kudukanum pola irruku ;-)
I've been to the offices in San Francisco. Its not like this. I liked the experience there. I am surprised at your experiences.!!
Good luck dubukku.!!
http://presidentofindia.nic.in/scripts/writetopresident.jsp
"Sivaji" padathula Rajni is a NRI. He visits the Indian High Commission and finds that in shambles. In the flashback, he wd have already visited all the other embassies and would have been treated like a royal. He vows that it shouldn't happen this way at the Indian HC and you know the rest.. :P
btw, enakkum passport renew pannanum... 1-2 mths la nalla muhurtham paathu poganum.
Dubbukku,
Same experience for me. I went in last week. But the good thing is they treat the foreigners and us the same way as my friend says. Also the foreigners get a feel about India before even they visit and thats a good thing. See the positive side mate.....
//லண்டனில் மட்டும் தான் இப்பிடியா இல்லை மற்ற இடங்களிலும் இப்பிடியா என்று தெரியவில்லை.//
என்னத்தை சொல்வது..இந்தியனுக்கும் பே பே தான் பக்கத்து நாட்டுக்காரனுக்கும் அதுதான் இங்கே..
டுபுக்கு, முதலில் எழுதிய நண்பர் சொன்னது போல் சிங்கையில் மோசமில்லை என்று தான் சொல்ல சொல்ல வேண்டும். இதைப் பற்றி நிச்சயமாக எழுதுங்கள். இந்திய அமைப்புகளுடன் தொடர்ப்பிருந்தால் அவர்கள் மூலமாகவும் pressure கொடுங்கள். நம் ஏர்போர்டுகளும், இது போன்ற embassyகளும் is an unfortunate introduction to such a fabulous country.
அதெல்லாம் சரி டுபுக்கு நைனா, இந்த ஹைகமிஷன்னா இன்னாப்பா :-) அப்புறம் சீரியஸான ஒரு கேள்வி 'பாஸ்போர்ட்'டுக்கு தமிழில் என்ன ???
How tough is it to learn to manage a few hundred people through an organised queue system??? I bet there is no shortage of people in the Indian embassy in the U.K. Adaan favorites ku preferred posting ah irukume? Nejamave vekkakedudaan. velilayavadu konjam manathai kaapathika koodada?
Appuram anda yanaiku eli komanam, aiyo, karpanai panni paathu sirichu sirichu vayiru kizhinju pochu! Inimel oru discalimer potudunga: "Read blog at your own risk.Vayiru kizhinjal dubukku porupalla" appadeenu.
Hello,
The High commission at Edinburgh is much better compared to what you have described about London High Commission. The staff were polite (though not friendly as they acted like typical babus on certain matters !). I wanted an attestation for a photo copied marriage certificate and since I didnot had the original, staff at the counter refused. I demanded to meet the commissioner and he gave me an audience and listened to my ramblings with patience. He explained in detail on what the consequences are for him, if he had to attest without proper backups. One thing which he said and I agree is, 'other embassies refuse with a smile and our men do it without it and this makes all the difference !'.. I had visited French, Italian and dutch embassies in edinburgh and they are well organised compared to what I experienced in Indian embassy.
Dubukks my view of the Indian HC is very different, I have a lot of issues with the other HC/embassies and also with the way the customers behave in the Indian HC. Will write my views on this soon, unga post innum oyunga padikkale, vootukku poi IE-la nidhanamaa padikiren, can't read it properly on Firefox
Pazham perumai pesi pesi nambalukku oru thadithanam ellathuleyum irukku. It is embarassing that we leave such a horrible impression on people from outside of India and it is a lot of trouble for us to find our way through this mess and get things done.
Kalaamku ezhudumbodu - Paavaikooda solranganu mention pannunga :)-
I never had any bad experience in any of the consulates in U.S.A. First of all I never had to go in-person to any of the operations. Recently I renewed my Indian passport. I did sent the old passport and application form with fee to Indian Consulate at Chicago thru courier and I got it back on 7th day with the job done. We dont have any Indian consulate in Michigan. If you want you can travel down to Chicago and get the work done in-person or by courier / postal, but either way they are pretty decent. Norweigian and German consulates also I didnt have any bad experience.
Not only the consulate operations, also other U.S oriented operations like Insurance, Driving license, US Visa stamping in US (earlier...they dont do that from last year), getting US Passport, Birth Certificate for my daughter every thing was very easy and very prompt. My physical appearence was requested only for the Driving License & US passport (for my daughter) operations. Other things were done just by mailing.
U.S Vaazhga.
நம்ம எல்லோருக்கும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சிட்டா.. எங்கிருந்துதான் பொருப்புனர்வு வருதுனு தெரியல..
சும்மா வரிஞ்சு கட்டிகிட்டு கமெண்ட் குடுக்க, விமர்சிக்க வந்துருவாங்க....
கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க..
மென்பொருள் வேலை பார்க்குரவுங்க, ப்ளாக் படிக்குறீங்க, பதியுறீங்க,படம் போடுறீங்க, ஜொள்ளித்திரியுரீங்க, வராத மின்னஞ்சலுக்கு செக் பண்றீங்க, FWD அனுப்புறீங்க, காப்பி குடிக்க பிரேக், லஞ்ச் பிரேக் (யப்பா.. யாரங்கே.. ஒரு சோடா குடுப்பா.. நேத்து புரட்சி கலைஞர் படம் பார்த்தது தப்பா போச்சு..) இதுக்கு நடுவில வேலை, ஆபிஸ்ல முடிக்க முடியாட்டி லாப்டாப் தூக்கிட்டு வீட்ல..
அதுக்காக.. ரொம்ப எளிதான வேலைனு சொல்லலை, ஒரு சில நாள் ராத்திரி பகலா வேலை பாக்குறீங்க சரி.. ஆனால் ஓவராலா கொஞ்சம் யோசிங்க..
உங்களுக்கும்/நம்க்கும் கஸ்டமர்களோட நாள் முழுதும் interact பண்ண வேண்டியிருந்தா.. நாமளும் கஷ்டப்படுவோம்.. ஆக.. சும்மா, டீ குடிக்கப்போற, மூச்சா போறதெல்லாம் பெரிசா பேசாதீங்க.. (டுபுக்கு..எனக்கு மனசுல தோணுறத சொல்றேன், உங்க மனசு புண்படுத்தியிருந்தா மன்னிக்கவும்.. கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க..)
சரி.. இவ்ளோ நடக்குதே, அந்த ஹை கமிஷனரை குறை சொல்றீஙகளே , அந்த ஏஜெண்ட்களை யாரும் குறை சொல்லவில்லையே..
எல்லோரும் நிர்வாகத்தை தான் குறை சொல்லிக்கிட்டே காலத்தை கடத்திறோமே தவிர.. நிர்வாகத்தில் நாமளும் ஒரு பங்கு, சமூகத்துல நாமளும் ஒரு பங்குன்றதை மறந்துற்றோம்..
சரி... ஒத்துக்குற்றேன் நிர்வாகத்தலைமைக்கு பங்கு அதிகம் உண்டு, அவுங்க மேலயும் தப்பு இருக்கு.. ஆனால் நம்ம மேல தப்பு நிறைய வைச்சுகிட்டு... அவுங்கதான் மாபாதகம் பண்ற மாதிரி கூச்சல் போட்டா.. அவுங்களுக்கு எரிச்சல் வராம என்ன வரும்...
appraisal-னு ஒண்ணு மென்பொருளாளர்களுக்கு எதுக்கு.. ஊக்கப்படுத்ததானே... என்னதான் நல்ல சம்பளம் இருந்தாலும் இதல்லாம் தேவைப்படுதுதானே...
அந்த அரசு ஊழியர்கள் செய்யும் சில நல்ல விஷயங்களை எத்தனை பேர் பாராட்டி இருப்போம்..
ஆக மாற்றத்தை நம்மிடத்திலிருந்து ஆரம்பிப்போம்..
-
செந்தில்/Senthil
//அப்புறம் சீரியஸான ஒரு கேள்வி 'பாஸ்போர்ட்'டுக்கு தமிழில் என்ன ???
//
Passport = கடவுச் சீட்டு
கட்டுரை உங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினாலும்,
1. கூச்சல் போடுவதும் பங்குச் சந்தை போன்று கூவுவதும் ஊழியர்களா? தூதரகத்திற்கு வருபவர்களா?
2. முண்டியடிப்பது, தாண்டிச் செல்வது (நல்ல வேளை. முதல் காட்சி க்யூவில் தோளின் மீது ஏறிச் செல்வார்களே. அது போல இல்லை) ஊழியர்களா அல்லது வாடிக்கையாளர்களா?
3. வாரம் முச்சூடும் கூட்டம் இருக்கிறதா? இந்த மாதிரி தூதரகங்களிலும் Peak Hours-ம் Off peak hours-ம் உண்டு. சற்று முன் கூட்டித் திட்டமிடும் பட்சத்தில் கூட்டம் குறைவான தினங்களில் செல்ல முடியும். இல்லையா?
இது நமது சுய ஒழுக்கம் தொடர்பான பிரச்சினை. தூதரகம் சேவையை மேம்படுத்தவேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், இங்கு பள்ளியிலிருந்து பயிற்றுவிக்கப் படுவதுபோல், சிறுவயதிலிருந்தே பொதுவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நடைமுறையில் யாரும் பயிற்றுவிக்கப் படாததால்தான் 'காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்ததைப் போல' நாம் பாய்கிறோம் என்று தோன்றுகிறது. நமது குழந்தைகளுக்கும் நாம் இத்தகைய சுய ஒழுக்கங்களைச் சொல்லிகொடுப்பது மூலம் அவர்கள் வளர்ந்ததும் வரிசையில் நிற்க நேரிடும்பாது அமைதியாகக் கூச்சல் பொடாமல் நிறகச் சாத்தியம் இருக்கிறது! :)
உமா, கட்டாயம் ஆதங்கம் புரிகின்றது.. யாருக்குத்தான் இல்லை அந்த ஆதங்கம்..
ஏன் வெளிநாடுவாழ் இந்தியருக்கென்றே, அல்லது தமிழ்ச்சங்கங்களோ இல்லையா அந்த ஊரிலே... தனி ஒரு மனிதனாக இந்திய ஹைகமிஷனரை சந்திப்பதைவிட.. இதன் மூலம் சந்திக்கலாமே.. பலன் இருக்குதோ இல்லையோ.. அதைப்பத்தி ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட செயலில் இரங்கலாமே..
என்ன என்ன குறைபாடுகள் கண்டோம், அதை சரிப்படுத்த நம் பரிந்துரைகள் என்ன,என்ன.. என்று பட்டியலிட்டு அவரிடம் குடுக்கலாமே...
வெளிநாட்டில் உள்ளோம், ஒழுக்கத்துடன் நடந்து கொள்வோம் என்று சாதாரண் அட்டை போர்டுகள் எழுத்திக்குடுக்கலாமே...
இதேல்லாம் அவுங்க வேலை, நாம சொன்னா ஏத்துப்பாங்களானு தயக்கம் இல்லாம முயன்றால், ஒருவேளை இத்தகைய உதவியை அவர்களும் எதிர்பார்த்து இருந்து, கிடைத்தவுடன் உடனே உதவினால் ?!!
கட்டாயம் இதைவிட effective-ஆன சிந்தனைகள் இருக்களாம்...!!!!
சுந்தர் சொன்ன மாதிரி, நாம சொல்ற குறைகள்ல பல அங்கே வருபவர்களிடமே தவிர வேலைபார்ப்பவர்களிடம் இல்லை..
அட, நான்லாம் ஒழுங்காத்தாங்க நின்னேன், எனக்கு முன்னே இருந்தவுங்கதானு சொன்னீங்கனா.. சபாஷ்.. உங்களுக்கு பாரட்டுக்கள்.. அப்படியே அந்த முன்னே இருந்தவரிடம் வெளிநாட்டிலையும் இப்படியா அப்படினு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உங்களுக்கு தலைவணங்குகின்றேன்.. ;-)
நான் சொல்றதெல்லாம் ஈஸியா சொல்லிடலாம்.. ஆனா முயன்றால் முடியாதது இல்லை பாருங்க..
கலாம்க்கு மின்னஞ்சல் அனுப்புனா பார்பாருன்ற நம்பிக்கையை இதிலும் வைப்போம்
ரொம்ப டயலாக் விட்டுருந்தா, இவனுக்கு வந்தா இவன் இலட்சணம் தெரியும்னு விட்ருங்க.. :-)
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்..
இந்த வெளிநாட்டுக்காரங்க, ஒரு வரி பேச ஆரம்பிக்கும் போது ஒரு நன்றி, முடிக்கும் போது ஒரு நன்றினு சொல்றாங்க, அது பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை பார்க்குறவுங்கனாலும் சரி, அதே நாம அங்க போகும் போது, நாமலும் பதிலுக்கு அந்த அளவுக்கு கட்டாயம் பதில் மரியாதை தருவோம்.. ஆனால் நம்ம தூதரகத்துல வந்தா, இதைக்குடுக்குறது அவர் வேலை, இதில என்ன நன்றி சொல்லிக்கிட்டுனு இருக்குற சில நண்பர்கள் இருக்காங்க... அதையும் நாம தவிர்க்கப்பாக்கனும்...
யாத்ரீகன். உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.
எனக்கொரு ஜென்மப் பகைவன் இருக்கிறார். பெயர்: ஆசிப் மீரான்! :)) விடாப்பிடியாகத் தமிழில் (முடிந்தவரை) பேசும் ஆள். அவரைச் சந்திக்கும்போது தன்னிச்சையாகவே பேச்சில் முடிந்த அளவு ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேசத் தொடங்கிவிடுவேன்!
இதே போல் நாம் முடிந்த அளவு சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்துப் பிடிவாதமாக இருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
தன்னார்வலர்கள் சிலர் மனது வைத்தால் இந்த மாதிரி சந்தைகளை வரைமுறைப்படுத்த முடியும்!
போக்குவரத்துக் காவலரின் நில் என்ற அறிவிப்பை மதிக்காமல் பறக்கும் அதே ஆட்கள் என்எஸ்எஸ் என்ஸிஸி மாணவர்கள்/குழந்தைகள் சாலையில் நின்று கைகாட்டும்போது மதித்து நிறுத்துகிறார்கள். எப்படி?
முயன்றால் மனதுவைத்தால் முடியாதது இல்லை.
அன்புடன்
சுந்தர்.
இல்லை. ஹை கமிஷனர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ரூமில் உட்கார்ந்து கொண்டு என்னை மாதிரி ப்ளாக் அடித்துக் கொண்டிருக்கிறாரோ என்னமோ.
ROFLMAO
Lakshmi - romba danks. Glad that Indian High commission is doing better in Singapore :) thanks for letting me know on this. Shankara parthaa sollaren..alternatively Sabu Siril will be the man I guess :)
Narayanan - Really Happy to know about that. thanks for sharing :)
Sriram - romba thanks. Idha than thedikittu irundhen. Will do the needful there.
Chakra - good luck mate :) keen to know what your observation. Pls do share.Except for the chaos My job was done :)
Anonymous - hmmmm is that really possitive? but ture that their expectations are managed but the fact is I was ashamed.
Theevu - hmmmm sad.
Ramya - Happy to know abt singapore. Yeah sure planning to write to the President. Whatever the reactions be atleast will be satisfied for having done my part.
சோம்பேறி பையன் - தெரியலைங்க...அதான் அப்பிடி எழுதினேன். சுத்த தமிழில் நான் ரொம்பவே வீக்
Uma Krishna - hmm unfortunately not the case I have seen. All the three times were chaotic. Yeah needs to be done something.
Usha - same thoughts here. Managing should not be really a problem. All I am surprised is there is no process in place.May be process is in papers not implemented or followed. Thats what is worrying.
Bhaskar - You should experience what I mean. Extreme chaos. Atleast You dont expect that in an high commission. I have been the french as well. Process are well defined and practised.
Wicked Angel - "the customers behave in the Indian HC" - I think we discussed this when you were here. Yes I know customers here have extra priviledge thats a different story but my point here is a lack of system or process. Once thats in place I think rest will be easy to tackle.
Paavai - exactly. Adhu thaan vayetherichala irukku. This is post is nothing that I am angry just ennoda vayetherichal. En ippidi asingama nambala patthi aduthavangala nenaika vidaromnu.
Ramachandran - Same will be the case here for postal applications I guess except for timescales. But fingers crossed though.
யாத்திரீகன்.... You are comparing apples with oranges. We (IT guys) do whatever you said (tea, arattai..etc..etc..), but we never let our customer suffer like that and we will be thrown out of job if that happens to our customer. Time and Delivery is the prime factor in IT (Software).
Atleast this is my experience.
என்ன, நம்ம பின்னூட்டத்துக்கு ஒரு பதிலயும் காணோம்?
Hello Dubukku
I am sorry to hear your bad experiences in UK. I have had better experience in the USA.
My renewal of passport was done by San Francisco office in just 3 days. I could not believe it when i received the old and new passports on the 3rd day. It was almost 7 years ago :)
Then we had to change my wife's last name in chicago. It also went fine. We managed to give our passport just when the counter was closing in the AM and got it done the same a/n. There was no crowd at all there...
Only bad experience if I can say is of getting the PIO card for my daughter in Houston consulate. It took about 2 weeks and I heard from my friends that typicall the processing time is slow in Texas consulate.
Muldri
We have to go there one day to change our names (and surnames!!!) Thanks for the pre-warning.
I am thinking of choosing a novel unique surname (has anyone seen "friends", the episode in which pheebe changes her name?) let us see how it goes.
Namba R.T.O aapees rangukku irundadhunu sollunga!
BTW, i havent been to an indian embassy/HC anywhere. Not even to the US embassy[i got my visas thro drop box, adhu oru kanakaalam].
But i have almost been to all Schengen embassies, and i found the whole process nasty.
Italian embassy in mumbai needed sponsor's letter to be faxed to the embassy directly.
So if the guy at the counter says they havent received the fax[even after u have confirmed with ur sponsor that he had sent it], you just cant do anything.
I wasted 3 days of appointment[during last year mahamakam. my plans to go to kumbakonam was all spoilt,] me sitting devudu kaathufying at italian embassy in mumbai.
யாத்திரீகன் - Thanks for sharing your honest opinion. No you have not offended me (I dont get offended easily here but just here :))But I feel you have missed the whole point what I was trying to convey.
மென்பொருளில் வேலை பார்கிறவங்க பத்தி பொதுவா பேசும் போது நான் என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். நான் ப்ளாக் படிக்கிறேன் ஜொள்ளித் திரியறேன். ஆனா என்னோட deliverables எனக்கு நிர்ணயம் பண்ணியதிலிருந்து நான் தவறினால் இதெல்லாம் பண்ணமுடியும்ன்னு நினைக்கிறீங்களா. என் மேலாளர் நேரா வந்து சட்டைய பிடிப்பார். இவ்வளவு ஏன் நான் இங்க தான் கோமாளி வேஷம் போடறேன். நானும் க்ளையன்ட் இடங்களுக்குப் போகிறவன் தான். அங்க போகும் போது இதே மாதிரி ப்ளாக் எழுதவோ மெயில் பார்க்கவோ முடியாது. அங்கே கட்டுகிற வேஷமே தனி.
இந்தப் பதிவின் நோக்கமே ஒன்றே ஒன்று தான். ஒரு process/ system இல்லாதைப் பற்றி தான். இந்திய ஹைகமிஷன் என்பது இந்தியாவை இந்தியாவின் கவுரவத்தை லண்டனில் பிரதிபலிக்கும் இந்திய அரசாங்கத்தின் முகம். இங்கே ஒரு வரைமுறை அல்லது இல்லை என்று சொன்னால் என்னைப் பொறுத்த வரை வெட்கக்கேடு தான். இதையும் இந்தியன் என்ற ஆதங்கத்தில் தான் சொல்கிறேன் இல்லாவிட்டால் எனக்கென்ன என்று போய்க்கொண்டே இருந்திருப்பேன்.
நான் தண்ணி குடிக்கிறத பத்தியோ மூச்சா போகப் போகிறதப் பற்றி சொல்லவந்ததை சரியா சொல்லலைன்னு நினைகிறேன். அங்கே அதை தனியாளோட குற்றமே இல்லை. இந்தியாவில ரயில்வேஸ்க்கு டிக்கெட் எடுக்கப் போயிருக்கிறீர்களா? மிக அழகாக நடத்துகிறார்கள். எட்டு மணிக்கு டாண் என்று திறப்பார்கள். அங்கே சூப்பரவைஸர்கள் எவ்வளவு பொறுப்பாக இருப்பார்கள் தெரியுமா. கவுண்டரில் இருப்பவர்களுக்கு அழகாக ப்ரேக் குடுத்து இந்தப் பிரச்சனைகளை சமாளிக்கும் வரைமுறைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்பதிலிருந்து ஒரு மணிவரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குத் திறந்திருக்கும் இந்திய ஹைகமிஷனுக்கு சமாளிப்பது ஒரு பிரச்சனையா?
இங்கே நான் இந்த குழப்பத்துக்கு காரணமாக பார்ப்பது ஒருவரை. இந்திய ஹைகமிஷனில் தலைமையாக இருக்கும் ஒருவரைத் தான். And the lapse I see is lack of process or implementing them. தனிமனித ஒழுக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். ஆனால் அது க்யூவைத் தாண்டும் ஏஜண்டுகளிடமும் மக்களிடமும் தான். அதுவும் இங்கே ஒரு ஒழுங்குமுறை (system,process, procedures) வந்து விட்டால் இதை சமாளிப்பதும் மிக எளிதாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மற்ற எம்பஸிகளில் எங்கு நிற்பது எப்பிடி நிற்பது என்பதிலிருந்து எல்லாவற்றிக்கும் வரைமுறை வைத்திருக்கிறார்கள். இதே மக்கள் அங்கு போனால் ஒழுங்காக இருப்பார்கள் இருக்கவேண்டும் அவர்களால் எல்லை மீற முடிகிறதா? ஏன்?
இல்லையென்றால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
அரசு ஊளியர்களை குற்றம் சொல்வது இல்லை இந்தப் பதிவின் நோக்கம். தெளிவான procedures and system இல்லாததை or lack of their implementation நினைத்த ஒரு வயத்தெரிச்சல். I think its the main responsibility of the person who heads this office.அதை மாற்ற எதாவது செய்யமுடியுமா என்ற ஒரு ஆதங்கம் அவ்வளவே. Thanks for sharing your thoughts.
"ஆக மாற்றத்தை நம்மிடத்திலிருந்து ஆரம்பிப்போம்.."
உண்மை...ஆனால் இங்கே அவர் அவர்களுக்கு சரியென்று படுவதை அவரவர்கள் செய்வதை விட என்ன செய்ய வேண்டும் எப்பிடி செய்யவேண்டும் என்று ஹைகமிஷன் சொல்வது செயல்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும் இல்லையென்றால் இன்னும் குழப்பம் தான் மிஞ்சும்.
Sundar
1 & 2 - Completely agree with you. But why are these same people not doing this with any other embassies? Lets create a environment first by enforcing things to begin with. Then people will automatically get used to it. But Again I completely agree this is self discipline but when people forget let the high commision enforce it.
Point 3 - Regardin off peak and busy seasons....when I was beating around the bush with the same point to the near by person there he raised a very valid point. Are they not supposed to be prepared to handle the peak season crowds? Is that too much to expect from High commision?
நமது குழந்தைகளுக்கும் நாம் இத்தகைய சுய ஒழுக்கங்களைச் சொல்லிகொடுப்பது மூலம் அவர்கள் வளர்ந்ததும் வரிசையில் நிற்க நேரிடும்பாது அமைதியாகக் கூச்சல் பொடாமல் நிறகச் சாத்தியம் இருக்கிறது! :)
- Miga sari :)
@Ramachandran:
apples or oranges, doesnt matters when it comes to physically straining work. When i mean by physically straining work, its the monotonous job they do, sitting in their seat allmost the entire day (here i am not talking about the generalized govt employees, i was trying to be specific about the Indian HighCommision employees there).
When we people take a break now and then, doing our job becomes a bit easy (note it , i just mentioned a bit, not very easy).
but just think, if you are made to work like them, how will you be reacting ?!
yeah Time and Delivery are the prime factors, but take them as Humans not machines, thats what i was trying to tell.
Let us all look at the other side of the problem, so that we could solve it instead just complaining from our side.
யாத்திரீகன்
குற்றம் சொல்லவதை விட அதை களையும் வழிமுறைகளைப் பார்க்கலாமே என்று சொல்கிறீர்கள். உண்மை. அந்த நோக்கத்துடன் தான் இங்கே பதிந்திருக்கிறேன். என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைகளுடன் தான் திரு.கலாமுக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன்.
உமா உள்பட இங்கே பெரும்பாலானோரின் நோக்கமும் அதுவாகத் தான் இருப்பதாகத் தான் நான் பார்க்கிறேன்.
dubukks,
makkal sonna maathiri indian embassy high Commissioner'a mariyaathai nimithamaa santhichi.. menu/manu kudukalaam.
athuku munnadi, ellam sernthu oru sponsor pidichi indian embassy'ku oru "sign board" with ubayam from "thirukovilur kuppusamy brothers" present pannalam, this would help visitors to know which cust token they are helping with and how long it took for the last person...statistics'aalaye makkal manasa kavaralam...
athu thavira, namma ttk services maathiri, oru counter site vachi..anonymous'a (oru nick name maathiri) users can poll "visit" for the given day/month/year. (functional defects irukum, but unique ip, nickname, one click in 3 hours etc can atleast guarantee minimal uniqueness of poll)
that will help visitors to know visit volume in the near future...atleast they will have a idea of what they would expect.
probably if we could ease their front desk work, yaar kandaa..next time namma makkal embassy'ku visit pannum bothu aangalukku vetty sattai'yum pengalukku kunguma simizh'lum parisu thanthu ubasaaram seivaangala irukum... :)
aaakka poorva sinthanai'ya sundi vittuteenga... neengale mudivu sollunga, enna seiyaalaamnu.
cheers.
Yaathirigan/ Sundar - சுந்தர் - ஏஜன்டுகள் க்யூவில் தாண்டிய போது நான் சாமியாடினேன் என்று கூறியிருக்கிறேனே...அப்போது நான் மட்டும் தான் சொல்லிக்கொண்டிருந்தேன்..உள்ளே கவுண்டரில் இருந்தவர் சீட்டு தரமுடியாது என்று சொல்லியிருக்கலாமே...சொன்னாரா..சத்தம் போடாமல் டோக்கன் குடுத்துவிட்டார்.
இதே நிலமை இன்னொரு கடையிலும் சந்தித்திருக்கிறேன்...கவுண்டரில் நின்றவர் க்யூவில் நின்றால் தான் வேலையாகும் என்று தெளிவாக சொல்லிவிட்டார். க்யூ தாண்டியவர் சத்தம் போடாமல் க்யூவில் வந்து நின்று கொண்டார். தனி மனித ஒழுக்கம் இல்லாத் போது enforce பண்ணுவதில் தவறில்லை கட்டாயம் செய்யவேண்டும்.
டுபுக்கு .. நம்ம ரெண்டு பேருக்கும் சுத்தமா வேலை இல்லைனு யாராவது நெனைச்சுரப்போறாங்க.. :-D
கலாமுக்கு அனுப்புவதோடு... அங்கிருக்குற ஹைகமிஷினருக்கும் ஒரு ரிஜிஸ்ட்ர்ட் தபால் மாதிரி எதாவது போட்டுப் பாருங்களேன்
உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கு பதில் அடித்துக்கொண்டிருக்கையில் இடையில் இது.. ;-)
Sundar - தன்னார்வலர்கள் permit செய்வார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் தன்னார்வலர்கள் வந்து தான் செய்ய்வேண்டும் என்ற நிலைமையிலா இந்திய ஹைகமிஷன் இருக்கிறது...வருத்தமாக இருக்கும்.
Muldri - The service level (i.e.duration for services offline)are good here too. But just that the customer interface doesn't have enuf procedures and practices in place. thanks for sharing your experiences.
premalatha - let me know how your experiences and observations were.
TJ - I have been to the french embassy for Schengen visa here in London. You have to call them through phone for appointment. But once you are in their premises. Everything from where to queue how to queue is being instructed by the guards. You can't raise a single question. They strictly follow the procedures and everything is published very well highly visible. But all these are just with the procedures bueracracy is in a different place here :)
கவுன்டரில் உள்ளவருக்கு கவனம் க்யூவில் இருக்கனும்னு சொல்றீங்களா.. வேலையில இருக்கனும்னு சொல்றீங்களா... ஒருவேளை அவர் கவனிக்காமல் வேணும்னா இருக்கலாம்ல..
நான் வீட்டிலிருந்து கொண்டு அடிக்கிறேன் யாத்திரீகன். :)
இல்லை கவுண்டரில் இருந்தவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அவருக்குத் தெளிவாகத் என்ன நடந்தது என்று தெரியும். நானும் வேறு சொல்லிக் கொண்டு இருந்தேன். ஓ.கே ஓப்பனாகவே பேசுகிறேன். உள்ளே இருந்தவருக்கு இவரைத் பரிச்சயம் போல் தெரிந்தது. (ஏஜன்டுகள் அடிக்கடி வருவதால் இருக்கலாம்). அதனால் கண்டுகொள்ளவில்லை. நான் தான் பைத்தியம் மாதிரி சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னாடி இருந்த வெள்ளைக் காரன் நக்கலாக சிரித்த போது எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல் இருந்தது.
@டுபுக்கு: நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரியாததற்கு காரணம், process-ஐ விட அங்கே நடந்துகொள்பவர்களை அதிகம் கமெண்ட் அடித்ததால் என்னவோ :-)
நானும் ஒரு மென்பொருள் பொறியாளன்தான்.. இப்பொழுது கூட, நீங்கள் கூறிய என்னுடைய Deliverablesஐ முடிச்சிட்டு இந்த வேலையை பார்த்துகிட்டு இருக்கேன்..
நான் சொல்ல வந்ததை முன்னமே சொல்லிருக்கிறேன்.. இங்கேயும் அவர்களின் வேலைத்தரத்தை பாருங்கள்.. உங்களுக்கான வேலையை தவறின்றித்தான் செய்கின்றார்கள்..
உங்கள் பதிவைப்படித்ததும் எழுந்த முதல் எண்ணம், அங்கிருப்பவர்களை குறை சொல்கின்றீர்கள் என்றுதானே தவிர.. பிராசஸ் பத்தி நீங்க சொல்ல வந்த மாதிரி எனக்கு புரியல.. :-)
தலைவா.. மதுரை ரெயில்வே ஸ்டேஷன்ல முதல்ல ரிசர்வேஷன் சிஸ்டம் எப்படி இருந்தது, அப்புறம் பத்திரிக்கைகள், தன்னார்வ அமைப்புகள்னு பலரோட அபிப்பராயங்களை கேட்டபின் அது எப்படி மாறுச்சு தெரியுமா..
முதலில் கால்கடுக்க நின்று கொண்டிருக்க வேண்டும்.. பின்னர், வரிசைபோல உட்கார நாற்காலிகள் வந்தன, ஆக தவ்விச்செல்ல வழியில்லை..
lack of process-aa இருக்காது கட்டாயம் வழிமுறைகளை பக்கம் பக்கமாக விளக்கி இருப்பார்கள், implementing-ஆகத்தான் பிரச்சனை இருக்காது,
ஒருமுறை இதுபோன்ற ஒரு பிரச்சனை பற்றி ஒரு அரசு ஊழியரிடம் பேசும் போது, அவர் சொன்ன பல தகவல்கள் கேட்டது.. ஓ இவ்வளவு வேலை நடக்குதா இங்க, அதுக்கு இவ்ளோ பேர்தானா அப்படினு தோணுச்சு..
உதாரணம், போலிஸ்காரர்களை குறை எளிதா சொல்லிர்றோம் ஆனால், அவர்கள் சந்திக்கும் பல பிராக்டிகல் பிரச்சனைகள் நமக்குத்தெரியாது..
அந்தமாதிரி ஒரு காரணமா இருக்கலாம் இல்லையா.. :-D
ஹீம் கஷ்டம்தான் ... :-(
Dubuks,
I can tell without going there. But, people will call me "prejudistic", but I call it "knowledge". lol.
anyway, you have not replied to my "ROFLMAO" comment.
யாத்திரீகன் - புரியாமல் போனது இலைமறைவு காய் மறைவாக சொல்லியதன் விளைவாக இருக்கலாம். ஆனால் ஹைகமிஷனரை மட்டுமே காரணமாகச் சொல்லியிருப்பதின் நோக்கம் இது தான்.
ஹைகமிஷனுக்கு வரும் மக்களை எப்பிடி சமாளிப்பது என்பதற்கு ப்ராக்டிகல் பிரச்சனைகள் இருக்கின்றன என்ற கருத்துடன் நான் ஒத்துப் போகவில்லை. நான் சொன்ன மாதிரி இட்லிக் கடைகள் செய்வதையா ஹைகமிஷன் செய்ய முடியாது? ஏன் ரயில்வேஸ் செய்யவில்லையா...மற்ற துறைகளில் செய்யவில்லையா? ஏன் சிங்கப்பூரில் இருக்கும் ஹைகமிஷன் (இங்கே சொல்லியிருபர்கல் கருத்திலிருந்து) செய்ய்வில்லையா? லண்டன் ஹைகமிஷனர் முடியவில்லை என்று சொன்னால் முதலில் அவரை மாற்றுங்களய்யா.
Premalatha - neraya cross comment anathala (i.e. too many people posting comments at the same time)
miss panniten. en ungalukku avar blogsite theriyuma :P
But seriously let me know your experiences and observations.
dubukks,
u missed my "pinnootam" too.
buspass - sorry miss panniten.
ஹைகமிஷனருக்கு மனு குடுப்பது கண்டிப்பாக செய்யப்போகிறேன். அதையே அப்துல் கலாமுக்கு ஒரு காப்பியுடன் செய்யலாமென்று இருக்கிறேன். கொஞ்சம் effective a இருக்கும் என்று நம்புகிறேன்.
neenga PG in stats aa? ore statistics la thaakureenga? Jokes apart but service level statistics ideava vechu probly plan to increase the productivity
யாராவது வலைப்பூ நண்பர்களோ, அவர்களூடையா நண்பர்களோ, தூரத்து உறவினர்களோ.. அங்கே வேலை பார்த்தால் பேசிப்பாருங்களேன், அல்லது அவர்கள் இந்த பதிவைப்பார்த்தால் விளக்கம் கூறுங்களேன்...
சென்னை அமெரிக்க விசா கவுன்ஸ்லேட்டையும், கல்கத்தா அமெரிக்க விசா கவுன்ஸ்லேட்டையும் கம்பேர் செய்ய முடியாது டுபுக்ஸ் காரணம் வால்யூம், இரு இடத்திலும் கையாளப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கைகள்...
என் பின்னூட்டங்களை படித்துவிட்டு நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றேன் என்று நினைக்க வேண்டாம்..
எனக்கும் அந்த நிர்வாகத்தலைமை மேல் கோபம் உண்டு, ஆனால் வேறு என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று யாராவது ஒருவராவது வேறு கோணங்களில் ஆராய வேண்டும் அல்லவா..
இதையே SIX THINKING HATS principle என்று சொல்வார்கள்..
(யப்பா, யாருக்கும் புரியாம எதாவது சொல்லி நாமலும் அறிவுஜீவினு காமிச்சுகிட்டாச்சுபா ;-)
Yes yathirigan ...All I was saying was based on Blue hat thinking for process control :)
(Naanum arivu jeevi nu kaatikitachuba ;)
டுபுக்கு,
உங்கள் பதிவை படித்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்திய தூதரக அலுவலகத்துக்கு ஒரு வேலையாக சென்றிருந்த போது ஏற்பட்ட அனுபவம் ஞாபகம் வந்தது.. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
ஆனால் தற்போது பிரான்சு நாட்டு விசாவிற்காக அங்கு சென்றிருந்தபோது நம் நாட்டு தூதரகத்திற்கு மேலாக ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை எழுதலாம் என்றிருந்தேன்...
ஒரு முறை செங்கன்(EU) விசாவிற்காக போய் வரிசையில் நின்று பாருங்கள்.. நம் நாட்டு தூதரக அலுவலகம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்..
எல்லா நாட்டு தூதரக அலுவகங்களும் இதில் விதிவிலக்கில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
யாத்ரீகன்.. என் பதிவு உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் சொல்ல வநத்து என்னவெனில்..
நம்மவர் (டுபுக்ஸ்) சொல்வதை பார்த்தால் அதில் கடமை ஒழுங்கின்மை தெளிவாக தெரிகிறது. ஒரு ஒழுங்கு முறைகளை தெளிவாக பின் பற்றும் நாட்டில் இப்படி இருப்பது, இந்தியா இப்படி தான் என்பதை கண்ணாடி போல காட்டும் நிகழ்வாக தெரிகிறது. நாம் சொல்லி திருத்தக்கூடியதல்ல அது. அங்கு பணி புரிபவர்கள் தாம் செய்வதை தெளிவாக தெரிந்து செய்பவர்கள். ஒழுங்கின்மைக்கு சரியான தண்டனை என்று ஒன்று இருந்தால் இப்படி நடக்குமா. அதை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்த நிர்வாகம் அல்லவா.
நீங்கள் எந்த நாட்டில் தற்போது உள்ளீர்கள் என்று தெரியாது. இங்கு அமெரிக்காவில் எங்கெல்லாம் வரிசை முறை உள்ளதோ அங்கெல்லாம் ஒரு மஞ்சள் நிற கோடு போட்டு இருப்பார்கள். கூண்டில் இருப்பவர் வரச்சொல்லி சைகை காட்டும் வரை வரிசையில் முன்னால் இருப்பவர் அதை தாண்டக்கூடாது. இது நடைமுறைப்படுத்தப்பட்ட வ்திமுறை.
இதற்கு சுய ஒழுக்கத்தை விட, மீறினால் வேலை நடக்காது என்பதை உணர்த்தும் சுய பயம் தான் தேவை. இதை அமுல் படுத்த வேண்டியது நிர்வாகம்தான்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு, கலப்படமற்ற தமிழில் தட்டச்சு செய்ய வாய்ப்பளித்தற்கு மிக்க நன்றி.
பி.கு:- இதன் காரணமாகவோ என்னவோ எனக்கு ஷங்கரின் சமூக அவலத்தை சாடும் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும்.
Indian High Commission in Sydney is better, I Reckon!
For contacting Dr.Abdul Kalam use this link :
http://www.presidentofindia.nic.in/scripts/writetopresident.jsp
or mail to
presidentofindia@rb.nic.in
Don't forget to mail him about this issue.
For contacting Dr.Abdul Kalam use this link :
http://www.presidentofindia.nic.in/scripts/writetopresident.jsp
or mail to
presidentofindia@rb.nic.in
Don't forget to mail him about this issue.
i hope Mr.'dubukku' ranga is succesful in reaching the Prez...am sure Dr.Kalam will appreciate your suggestions...he often says 'If you dont have the solution, then you are part of the problem'..:)..thanks.
- shivatma
Ella oorum adhey kuttaila vizhundha mattai thaan :P
High commission poganum na 1 day leave ketkamalaiye koduppanga na paathukkongo :P
Random Access
The search has just begun !!!
நியுயார்கிலும் கிட்டத்தட்ட இந்த வழிமுறைதான். ஆனால் இவ்வளவு மோசமில்லை. விசாவிற்கு வருபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தனித்தனி அறைகள். கூட்டமும், பெயர் கூவி அழைக்கும் முறையும் இது போலதான். ஆனால் நான் சென்ற எல்லா தடவைகளிலும், வேலை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிந்தது. மேலும், நமது தூதரகத்தின் இணையதளம் அனைத்து தகவல்களுடன் மிக பயனுள்ளதாக உள்ளது.
'யதா ராஜா ததா பிரஜா' என்பதுபோல அங்கிருக்கும் மேலதிகாரிகளின் தன்மையையே உங்கள் அனுபவம் பிரதிபலிக்கிறது.
Unga manasula irukka aatthiram aallathaium ealuthitinga. kovilla serupuku thaan token taruvanga anna ippa Visaku tharankala.:)
our valiya younga atthiram ellathaiyoum yeluthitinga.
Kovil'la thaan serupuku token taruvanga, ippa Visakum tharangala.:)
our valiya younga atthiram ellathaiyoum yeluthitinga.
Kovil'la thaan serupuku token taruvanga, ippa Visakum tharangala.:)
My personal Happynes will not give me full satisfaction. When i do something for society and childreans i will be very happy.
What is that Programe name, which u saw in NDTV?
I had to go to the Toronto IHC earlier this year. I had similar experiences as you there. After you get the number (which looks like X123, where X can be A, B, C or D) then you have to wait in the queue to get to the counter. The display system only shows 123 and not the intial letter. So you are not sure what letter is being served. The people there are not friendly at all, and are in fact very rude. I am from Sri Lanka, so I wasn't too shocked. There was a Canadian gentleman who was going to India for some Agriculural conference, who was really mad about the whole process and how he had to waste one whole day (the day before) and another half day (when I talked to him) for his visa. The whole scene reminded me of a fish market in a Sri Lankan town, including the smell!
சுரேஷ் - நானும் ப்ரான்ஸ் நாட்டு விசாவிற்கு இரண்டு வருடம் முன்பு போயிருக்கிறேன். நீங்க சொல்லும் பிரச்சினை எனக்குப் புரிகிறது. அங்கே பிரச்சனைகள் வேறு விதம்.
எனக்கு இதுதான் வயத்தெரிச்சலாக இருக்கிறது. நமது Basic ஹைகமிஷனில் இந்த ஒழுங்குபாட்டைக் கொண்டுவந்துவிட்டால் அப்புறம் அடிச்சுக்க ஆள் கிடையாது. We just lack in enforcing the basic discipline and clarity in the procedures which are being followed. Once thats addresses it should be fantastic
Ramachandran - same views. இந்த சிஸ்டம் மட்டும் கொண்டுவந்துட்டாங்கன்னா...நல்லா இருக்கும்.
Anonymous (1,2,3,4) - danks for dropping by and letting me know. Planning to write to him after my next week's appointment.
Random - vayetherichala irukku. Raj sonna madhiri such an introduction to a fabulous country is unfortunate.
Rajesh - 'யதா ராஜா ததா பிரஜா' - அருமையாக ஒரு வரியில் சொல்லிவிட்டீர்கள்.
டி.ராஜ் - இது போன்ற embassyகளும் is an unfortunate introduction to such a fabulous country. - Very true...நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
Jeevan - aathiram illa jeevan vayatherichal hmm
token ella embassylayum kudupanga...embassy ponale nelamai ippidi thaan :)
Suty - hmmm this not rocket science. En panna matengranga nu puiryala.
All who commented recently and wondered where the comments went -
Sorry by mistake I had turned the comment moderation on and hence they were waiting for me to approve. I have turned this off now.
Post a Comment