இந்தப் பதிவு முந்தைய பதிவின் நீட்சியே. அதனால் இதைப் படிப்பதற்கு முன் முந்தைய பதிவைப் படிப்பது தெளிவு பயக்கும். ஹாட்டன் கார்டன்ஸ் கொள்ளை பற்றி மேலும் பல தகவல்களும் தியரிகளும் வந்த வண்ணம் உள்ளன. அவை உண்மையாய் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சோகம் நீங்கலாக, அது நடத்தப் பட்டிருக்கும் விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனம், துல்லியம், ப்ரொபஷனலிஸம் எல்லாம் அட என்று வாயைப் பிளக்க வைக்கிறது. எனக்கு ஜார்ஜ் க்ளூனி நடித்து வந்த Oceans Series ஹாலிவுட் படங்கள் பார்த்த போது கூட நிறைய லாஜிக்கல் ஓட்டைகள் தெரிந்திருக்கின்றன. "ஹூம் இண்ட்ரஸ்டிங் ஆனால் இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்" என்று நினைத்திருக்கிறேன். ஆனால் ஹாட்டன் கார்டன்ஸ் திருட்டில் வந்து கொண்டிருக்கும் தியரிக்களின் அடிப்படையில் அவற்றையெல்லாம் தாண்டிய புத்திசாலித்தனம் தென்படுகிறது.
முதலில் சில facts and background
யூ.கே வில் மின் தட்டுப்பாடு என்பது மிக மிக மிக மிக அரிது. கடந்த பதினைந்தாண்டு காலத்தில் இது வரை ஒரே ஒரு முறை மட்டும் எங்கள் வீட்டில் பத்து நிமிஷத்திற்கு மின்தட்டுப்பாடு இருந்தது. அதுவும் ஒரு ஆக்சிடெண்டினால் விளைந்த ஒரு பிசகை சரிசெய்ய முந்தைய நாளே "நாளைக்கு பத்து டூ பத்தரை முஹூர்த்தம் குறித்திருக்கிறோம் சிரமத்திற்கு பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்" என்று நோட்டீஸ் கொடுத்து அரை மணி நேரம் டயம் வாங்கி பத்து நிமிஷத்துக்குள்ளாகவே சரி செய்தார்கள். இங்கே ரொம்ப பெரிய மிஷன் க்ரிட்டிக்கல் டேட்டா செண்டர் மாதிரியான ஆப்பரேஷன்ஸ் தவிர எங்கும் பெரிதாக யூ.பி.எஸ் எல்லாம் இருக்காது. பெரிய பெரிய கம்பெனிகளிலும் செர்வர் மாதிரியான செட்டப்புகளுக்கு மட்டுமே யூ,பி.எஸ் இருக்கும். 2001ல் நான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஏரியாவில் ஒருநாள் ஒரு தீ விபத்தில் ட்ரான்ஸ்பார்மர் டமாலாகிவிட்டது. ஆபீஸில் சர்வர் தவிர வேறு ஒன்றுக்கும் கரெண்ட் இல்லை. ட்ரான்ஸ்பார்மர் இருந்த திசையை நோக்கி "நல்லா இருங்க சாமியோவ்" என்று கும்பிடு போட்டுவிட்டு எல்லாரும் அப்படியே குஜால்சாக பையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்.
சரி மேட்டருக்கு வருகிறேன். இங்கே ஹாட்டன் கார்டன்ஸ் தெருவிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் கடந்த புதன்கிழமை (01 apr) அன்று ஒரு பாதாள சேம்பரில் தீவிபத்து ஒன்று ஆரம்பித்தது. இங்கே எலக்ட்ரிக் வயர்கள், தொலைபேசி இண்டர்நெட் வயர்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் அனைத்தும் ரோட்டுக்கு அடியில் பாதாள வழியாக தான் செல்லும்.(வீட்டிலும் தண்ணீர் பைப் மாதிரி பைப்பில் தான் காஸ் வரும், சிலிண்டர்லாம் கிடையாது) ஹாட்டன் கார்டன்ஸ் இருக்கும் ஹால்பார்ன் ஏரியாவில் அந்த பாதாள சேம்பரில் ஒரு எலக்ட்ரிகல் வயரில் ஃபால்ட் ஏற்பட்டு சின்னதாய் தீ விபத்தானது. அது பாதாளத்திலேயே மெதுவாக ஒரு எரிவாயு குழாயை அடைந்து குழாய் உருகி சின்னத் தீயை நல்ல ஹோமம் வளர்க்கிற மாதிரி நன்றாக திகு திகுவென்று எரிய விட ஆரம்பித்துவிட்டது. இவையனைத்தும் பூமிக்கு அடியில் நல்ல ஆழமான பாதாள சேம்பரில் நடந்து திடீரென்று மேன் ஹோல் வழியாக தீ வெளி வரத் துவங்கியது. தீயினால் காஸ் பைப்பில் லீக் ஆகியதால் இந்த மேன் ஹோல் வழியாக தப்பிக்கும் காஸ் எரிந்து கொண்டிருந்தது. இது தவிர பாதாளத்தில் எரிந்த தீ வேறு அதற்கு மேல் இருந்த ரோட்டிற்கு structrual instability and damageஐ கொடுத்திருந்தது. இது பெரிய இன்சிடெண்டாக ரேட்டிங் உயர்த்தப் பட்டு ஏகப்பட்ட தீயணைக்கும் வண்டிகளும் வீரர்களும் ஈடுபடுத்தப் பட்டனர். இதற்குள் பாதாளத்தில் எலக்ட்ரிகல் வயர்களில் தீ பரவி ஹால் பார்ன் ஏரியாவே மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. தீயணைக்கும் வீரர்களால் தீயை உடனே அமர்த்தமுடியவில்லை. அதில் ஒரு முக்கிய சிக்கல் இருந்தது. பாதாளத்தில் காஸ் லீக் ஆகியிருந்ததால் ஆக்சிஜன் தட்டுப்பாடால் அது முழுவது எரியாமல் பாதாளப் பாதையில் அங்கங்கே பில்டப் ஆகியிருந்தது. வீட்டில் காஸ் பர்னரில் எரிவது மாதிரி வெளியேறும் காஸ் ரோடு லெவலில் மட்டும் மேன் ஹோல் கவரில் எரிந்து கொண்டிருந்தது. ரோடு வேறு ஸ்டெபிலிட்டி பிரச்சனை என்பதால் ஏரியாவையே சீல் செய்துவிட்டார்கள். அந்தப் பகுதில் இருந்தவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டார்கள். பூமிக்கடியில் காஸ் பில்டப் ஆகியிருக்கும் என்பதால் மேன் ஹோல் வழியாக அது தப்பித்து எரிந்து தீரும் வரையில் காத்திருப்பது மட்டுமே தீயணைக்கும் படைக்கு ஆப்ஷனாக இருந்தது. அது இல்லாமல் உடனே தீயை அணைத்து விட்டால் பில்டப் ஆகியிருந்த காஸ் வெடித்து சிதறும் அபாயம் இருந்தது. பயங்கர பிஸியான வர்தக ஏரியாவாக இருந்தாலும் அதை ஏற்கனவே மூடிவிட்டதால் காஸ் எரிந்து தீர்வது வரை ஷிப்ட் முறையில் கண்காணித்து காத்திருக்க ஆரம்பித்தனர். புதன்கிழமை ஆரம்பித்த தீ வியாழன் சாயங்காலம் தான் அமர்ந்தது. வெள்ளிக்கிழமையிலிருந்து ஈஸ்டர் விடுமுறை ஆரம்பித்தது. அதற்கப்புறம் அந்த ஏரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மின்னினைப்பை சரியாக்க ஆரம்பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஹாட்டன் கார்டன்ஸ் லாக்கர் கம்பெனியில்
சமீபத்தில் புதிய அட்வான்ஸ்ட் அலாரம் சிஸ்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள்.ஆனால் அதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை. இந்த மாதிரி காஸ்ட்லியான பொருட்கள் புழங்கும் லாக்கர் கம்பெனிகளில் அலாரம் சிஸ்டம் மிக நுட்பமாக இருக்கும். நிறைய fallbacks இருக்கும். அதாவது எங்காவது ஒரு இடத்தில் சிக்காவிட்டாலும் இன்னொரு இடத்தில் trap இருக்கும். இப்பொழுது புழங்கும் ஒரு தியரி என்னவென்றால் இந்த தீவிபத்தை தடயமே இல்லாமல் ஆரம்பித்ததே இந்த கொள்ளைக் கும்பலாகத் தான் இருக்கும் என்பது. தீ விபத்து ஏரியாவில் பவர் க்ரிட், போலிஸ், தீயணைப்பு என்று அனைத்து டிப்பார்ட்மெண்ட்களின் கவனமும் குவிந்திருந்தது மட்டுமில்லாமல் ஏரியாவையே காலி செய்ய நேர்ந்தது என்பதால் அந்த ஏரியா ரோந்து பணியனைத்தையும் இங்கே டைவர்ட் செய்தார்கள். இதை சம்பந்தப் பட்ட டிப்பார்ட்மெண்ட் அதிகாரிகளும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் வெள்ளிக்கிழமை அன்று லாக்கர் கம்பெனியில் அலாரம் அடித்த போது கூட அவ்வளவு கவனம் பெறவில்லை போலும். இது போக ஏரியாவில் பவர் கட் என்பதால் கொள்ளைக் கும்பலுக்கும் லாக்கர் கம்பெனியில் அலாரம் சிஸ்டமை backup பவரிலிருந்து எலிமினேட் செய்வதும் எளிதாக இருந்திருக்கும் என்றும் கணிக்கிறார்கள். இதுபோக அந்த ஏரியாவில் இன்னொரு பாதாள ஹை ஸ்பீட் ரயில் ப்ராஜெக்ட் வேறு நடந்து கொண்டிருந்தது. இந்த ரெண்டு அமளி துமளியையும் உபயோகித்து பூமிக்கடியில் சுவற்றையும், 18 இஞ்ச் இரும்புத் தகடு கதவையெல்லாம் அறுக்கும் போது கவன ஈர்ப்பைத் தவிர்த்திருக்கிறார்கள்.
இந்தக் கொள்ளையில் உள்ள சோகத்தை தவிர்த்துப் பார்த்தோமேயானால், இந்த மாதிரி பெரிய கொள்ளையெல்லாம் லேசுப் பட்ட
காரியம் அல்ல. அதுவும் மிகுந்த நடமாட்டம் உள்ள ஏரியாவில் மிகுந்த செக்யூரிட்டி மிகுந்த ஒரு தெருவில், இவ்வளவு ஹெவி ஆயுதங்களும், எக்கியுப்மெண்ட்ஸூம், முஸ்தீப்பும் தேவைப்படும் கொள்ளையை யாருமே துளி கூட சந்தேகிக்காமல் நோட்டம் விடாமல் எந்த சிக்கலும் இல்லாமல் நடத்த மிகுந்த திறமை வேண்டும். இந்தக் கொள்ளைக் கும்பல் அப்பேற்பட்ட திறமை மிகுந்தவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் செய்த காரிய நோக்கம் மட்டும் தவறாக இல்லாமலிருந்தால் முதுகில் தட்டி கொடுக்கலாம் அவ்வளவு மெட்டிகுலஸ் ப்ளானிங். இது மாதிரி இன்னும் சில பயங்கர புத்திசாலி கொள்ளைகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். அவற்றையும் முடிந்தால் தனிப் பதிவாக போட முயற்சி செய்கிறேன்.