இந்தப் பதிவு இந்த வலைத்தளத்தின் பத்தாவது அனிவெர்சரி அன்று பதிவதாய் இருந்தது. ஹீ ஹீ வழக்கம் போல....
2001ம் ஆண்டு - இங்கிலாந்து வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எழுத்துரு எல்லாம் நிறுவி இடுப்பழகி சிம்ரன் ஆப்பிள் சூஸ் குடிக்கும் போது செகெண்ட் ஹீரோயினை என்ன சொல்லி திட்டினார் என்று இணையத்தில் கிசு கிசு படித்த காலம். அப்போது தமிழ் யுனிகோட் வரவில்லை (வந்திருந்தாலும் என்னைப் போன்ற பாமரர்களிடையே பிரபலமடையாத ஒரு காலம்). எங்கிருந்தோ ஒரு தமிழ் நிரலி கிடைக்க, நாய் கையில் (அதாவது காலில்) கிடைத்த தேங்காய் மாதிரி உருட்டிக் கொண்டிருந்தேன். அப்படியே பிரவாகமாய் வருவதையெல்லாம் எழுதி யாருக்காவது எப்படியாவது காட்டவேண்டும் என்று ஒரு உத்வேகம். "எனது பக்கத்து வீட்டுக்காரர் பல்லே தேய்க்காமல் டெய்லி வந்து குட்மார்னிங் சொல்கிறார் அவரை திருத்த நீங்கள் தான் ஒரு வழி காட்டவேண்டும்" என்று அன்புள்ள அல்லிக்கு எழுதி போடுவது வரை யோசித்திருக்கிறேன்.
2003ல் நெருங்கிய நண்பன் சக்ரா ஆங்கிலத்தில் ப்ளாக் என்ற உலகத்தை அறிமுகப் படுத்தினான். அவனுடைய பதிவுகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது தான் நாம் ஏன் அன்புள்ள அல்லியை இங்கே அரங்கேற்றம் செய்யக் கூடாது என்று பல்பு எரிந்தது. அப்போதெல்லாம் என்ன பதிவுகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள திரட்டிகள் கிடையாது. முகவரி தெரிந்தால் மட்டுமே ஒருவர் பதிவிற்குப் போக முடியும். அதனால் ஆபிஸில் முக்கிய வேலையே தெரிந்தவர் பதிவுகளுக்குப் போய் அங்கே கமெண்டியிருக்கும் மற்றவர்களின் (முக்கியமாய் பெண் பதிவர்) பதிவுக்குப் போய் "Excellent post, very nice, keep it up" என்று கமெண்ட் போட்டுவிட்டு வருவது தான். மூன்று நான்கு தரம் இவ்வாறு செய்தால் (பெண்களுக்குப் பத்து தரம்) அவர்களும் நம் பதிவில் வந்து "உங்க ப்ளாக் தீமே நன்றாக இல்லை கண்ணை உறுத்துகிறது please change it" என்று விளக்கேற்றி வைத்து விட்டுப் போவார்கள். அப்போது பதிவு பெயர்களெல்லாம் ஆங்கிலத்தில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டுவார்கள். ப்ளாக் பெயரைப் பார்த்தாலே பத்து ஆஸ்கர் வாங்கிய படம் மாதிரி கேராக இருக்கும், அத்தோடு ஆங்கிலப் படங்கள் மாதிரி "The whole world is a bathroom" என்று ஒரு ஒன் லைன் டேக் வேறு உண்டு. ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் இப்படித் தான் கற்றுக் கொண்டேன். எனக்கு தமிழில் தான் எழுத வரும் என்று நன்றாகத் தெரியுமாகையால் தமிழ்ப் பெயராகவே வைக்கலாம் என்று எண்ணம். சங்கத் தமிழில் லொடுக்குப் பாண்டி என்று வைக்கலாமா இல்லை டுபுக்குன்னு வைக்கலாமா என்று இங்கி பிங்கி போட்டு டுபுக்கு என்ற பெயரே அழகாக இருக்கிறது என்று ஆரம்பித்துவிட்டேன். வைகறையில் வைதேகி, புல்வெளியும் பனித்துளியும் என்று கவித்துவமான பெயர்களுக்கிடையே "What is this name Dubukku ya very funny " என்று பெண்கள் கேட்கவும் "Planning makes Perfect" அப்பாடா பட்ட கஷடம் வீண்போகவில்லை என்று எனக்கு திருப்தியாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது வந்து "யோவ் அது ஒரு கெட்ட வார்த்தைய்யா உடனே மாத்து" என்று அன்பாய் எச்சரிப்பார்கள். போங்கண்ணே நான் லத்தீன் மொழியில் உள்ள சாமி பெயர் டுபுக்குல்லா வச்சிருக்கேன் என்று சொல்லிவிடுவேன்.
தமிழ் யுனிகோடு இல்லாததால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பதிவேற்ற ஆரம்பித்தேன். கொஞ்ச நாளிலேயே "There is no use of playing violin at the back of the buffalo"ன்னு புரிந்தது. நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியது. ஆனால் அப்போது தமிழ் யுனிகோடு விண்டோஸ் இண்ஸ்டலேஷனில் கட்டாயமாக்கப் படவில்லையாதலால் அந்த யுனிகோடு எழுத்துருவை நிறுவினால் தான் பதிவு தெரியும் இல்லையென்றால் செங்கல்பட்டு நம்ம சிட்டி லேஅவுட் மாதிரி கட்டம் கட்டமாய்த் தான் தெரியும். முதலில் இரண்டு ஆம்பிளைப் பசங்க வந்து கட்டம் கட்டமாய் தெரியுது என்றார்கள். வீட்ல யாரும் இல்ல ரெண்டு வீடு போய்ட்டு வாங்கப்பான்னு அனுப்பிவிட்டேன். அப்புறம் இரண்டு பெண்கள் வந்து "ஹே நத்திங் விசிபிள் யா ஒன்லி பாக்சஸ்" என்றார்கள். ஆஹா கோவில்ல கச்சேரி சாமிக்கா வாசிக்கிறோம், இது பெரிய பிரச்சனையாச்சே என்று ரூம் போட்டு யோசித்து பதிவை பிக்கசர் வடிவிலும் ஏற்றி வர ஆரம்பித்தேன். பெண்களும் LOLன்னு ஆதரவளிக்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குறைய என்பதால் எங்கே போனாலும் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு போன மாதிரி திரும்பத் திரும்ப தெரிந்தவர்களையே பெரும்பாலும் பார்க்க நேரிடும்.
ப்ளாகரில் ஆரம்பத்தில் கமெண்ட் வசதி கிடையாது. ரொம்ப நாள் கழித்து கூகிள் வாங்கிய பிறகு தான் அதெல்லாம் வந்தது. ஆரம்பகாலத்தில் backblog போன்ற வேறு plugins தான் பின்னூட்டத்திற்கு உபயோகப் படுத்த வேண்டும். அவர்களும் "தம்பி கல்லால காசு போட்டா நீ கடலை போட்ட அத்தனை கமெண்டயும் வைச்சிக்கிறோம் இல்லாட்டி மொத்தம் ஐம்பது கமெண்ட் தான் மிச்சமெல்லாம் காணாமப்பூடும்" என்று பிச்சையெடுக்க, "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன அந்த கம்பெனிகள் காலப்போக்கில் திவாலாகி ஆரம்பகால கமெண்டுகள் எல்லாம் அவர்களோடு அப்படியே காணாமல் போய்விட்டது - இது ஒரு பெரிய சோகம். இன்றளவும் திடீரென்று பழைய பதிவை நோண்டி ஏன் இந்த பதிவுக்கெல்லாம் ஒருத்தருமே கமெண்ட் போடவில்லை என்று கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.
- தொடரும்