நூறு ரூபாய்க்கு பெரிய பை நிறைய வெடி வாங்குவது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்த காலத்தில், ஐம்பது ரூபாயிலிருந்து வீட்டில் பேரத்தை ஆரம்பித்து நாற்பது ரூபாய்க்கு படிந்து, சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "யார்ட்டயும் சொல்லாத கூடக் கொஞ்சம் வெடி வாங்கிக்கோ" என்று அம்மாவும் மாமியும் ஆளுக்குத் தரும் இருபது ரூபாயாயையும் சேர்த்து மொத்தம் என்பது ரூபாய்க்கு வெடி வாங்கி, பக்கத்து வீட்டு லெஷ்மி வெடி குப்பையையும் நைஸாக சேர்த்துப் போட்டு "இந்த தரம் மொத்தம் நூறு ருபாய்க்கு வாங்கினேன்டா" என்று உதார் விட்டு வெடிக்கும் பிஜிலியும் சீனி சரமும், ரெட் ஃபோர்ட் யானை சரமும், நாக் அவுட்டும் இன்ன பிறவும் அன்று குடுத்த சந்தோஷத்தை இன்று ஏக விலை குடுத்து வாங்கும் சீன பேன்ஸி அயிட்டங்கள் எனக்குத் தருவதில்லை. அடுத்த நாள் தெருவையே பெருக்கி குமிந்திருக்கும் குப்பையில் ஒரு பிஜிலி வெடி மருந்தைத் தூவி, இரண்டு வெடிக்காத ராக்கெட்டையும் கலந்து கொளுத்தி, விளையும் மாயாஜாலக் காட்சியை - எங்கே வெடித்து விடுமோ என்று பயத்துடன் தூரத்திலிருந்து பார்க்கும் அந்த திரில்க்கு முன் இந்த சீன வெடிகள் கால் தூசு பெறமாட்டா.இருந்தாலும் இவற்றை வெடிக்கும் மகள்களின் முகத்தில் மத்தாப்பாய் மலரும் சந்தோஷத்திற்காகவாவது ஊரில் கொண்டாடி நிஜ தீபாவளியைக் காட்ட வேண்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்
இனிய தீபாவளி வாழ்த்துகள்