சமீபத்திய சினிமா
கொஞ்ச நஞ்சமில்லை ஐந்து வாரங்கள் (ஹீ ஹீ சரி மூன்று வாரங்கள்) வேலை பின்னிப் பெடலெடுத்துவிட்டது. ரொம்ப அலுப்பாயிருக்கும் போது சாப்பாட்டுக்கு அப்புறம் சினிமா போனால் சொஸ்தமாகிவிடும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறாரே என்று சினிவேர்ல்ட் இணையத்தைப் பார்த்து அரக்கப் பரக்க அவசரமாய் போய் "சார் எச்சூஸ்மீ ஐ அம் தி அர்ஜென்ட்"ன்னு உட்கார்ந்தால் தலைப்பு ஜிலேபி ஜிலேபியாய் இருந்தது. சரி இது ஒருவேளை ரொம்ப அட்வான்ஸ்ட் டைட்டில் டிசைன் போல நமக்குத் தான் புரியவில்லை என்று பார்த்தால் எல்லோரும் மலையாளத்தில் சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எந்தா இது குருவாயூரப்பா !! நான் தான் தியேட்டர் மாறி வந்து உட்கார்ந்துவிட்டேனோ என்று வாயிலில் போய் என்ன சினிமா என்று திரும்பப் பார்தால் உறுமி என்று ஆங்கிலத்தில் போட்டிருந்தார்கள். "டேய் தமிழன அப்பரஸ் பண்ணுறீங்களாடா...கூப்பிடுடா தியேட்டர் மேனேஜர" என்று சவுண்டு விடுவதற்கு முன்னால் எதற்கும் தங்கமணியைக் கூப்பிட்டு கேட்போம் என்று கேட்டதில் உறுமி ஒரிஜினல் அக்மார்க் மலையாளப் படம் தான் என்று கன்பர்ம் செய்தார். அதற்குள் ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன் என்று டைட்டில்ஸ் ஆங்கிலத்தில் போட்டார்கள். இந்த வாரம் எதிர்பாரா சந்தோஷம் மும்மடங்கு வாய்க்கும்ன்னு இதைத் தான் தினமலர்ல சொன்னாங்க போல என்று சேரநன்னாட்டிளம் பெண்களுடனே செட்டில் ஆகிவிட்டேன்.
சந்தோஷ் சிவன் கேமிரா மற்றும் இயக்கம். வித்யா பாலன் குனிந்து நிமிர்ந்து ஒரு ஐயிட்டம் சாங் ஆடுகிறார். கஷ்ட காலம் தொப்பையை வைத்துக் கொண்டு இப்படி ஆடுவதற்கு பதில் புடவையை உடுத்திக் கொண்டு பூப்போல சிரித்தாலே நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நித்யா மேனன் மனதையும் அள்ளி வூட்டுக்கு வந்து கூகிளிலும் சித்தித்தார், தித்தித்தார் (கவித கவித). ஜெனிலியா இடுப்பு கச்சத்தை ட்ராயர் மாதிரி அணிந்து கொண்டு பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். ப்ரித்விராஜ் ஆர்ம்ஸ் காட்டுகிறார். ஜெனிலியா அவர் பக்கத்தில் கோழிக் குஞ்சு மாதிரி இருக்கிறார். வாஸ்கோடகாமா காலத்து நல்ல களம். திரைக் கதை தான் கொஞ்சம் வள வளவென்று ஆகிவிட்டது போல் தோன்றியது. கலையும் கேமிராவும் குடுத்த காசுக்கு வசூல். மூன்று கதாநாயகிகள் பொங்கல் போனஸ். வசனம் புரியவில்லை ரெண்டாந்தரம் போனால் தான் புரியும் என்று வீட்டில் வாய்தா வாங்குவதற்குள் படத்தை தூக்கிவிட்டார்கள். நல்ல படங்களை நாம் ஆதரிக்கும் லட்சணம் இவ்வளவு தான்.
அடுத்த நாள் லைப்ரரிக்கு போனால் இந்த வாரம் சந்தோஷ் சிவன் வாரம்ம்ம்ம்ம்ம் என்று "Before the Rains" டிவிடி முழித்துக் கொண்டு இருந்தது. அதில் நந்திதா தாஸ் வெள்ளைக்காரனுடன் ஜல்ஸா சீன் எங்கேயோ பார்த்த நியாபகம் கீற்றாய் வந்து தொலைக்க...என்னா சினிமேட்டோகிராபி தெரியுமா... பார்த்து கத்துக்க ஏராளமா இருக்குன்னு லைப்ரரியனிடம் சொல்லி எடுத்துவந்தேன். படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடமே நான் சொன்ன சினிமேட்டோகிராபி சீன் வந்து விட்டது. ஆனால் படம் ரொம்ப சிம்பிளான நேர்கோடு கதை. புதுமை பண்ணுகிறேன் பேர்வழி என்றில்லாமல் அருமையாய் எடுத்திருக்கிறார். நந்திதா தாஸ் நறுக்கு தெரித்தாற் போல அட்டகாசமாய் நடிக்கிறார். எல்லா ஏமாற்றப்பட்ட அழகான கதாநாயகிகளும் கடைசியில் துறவறம் போவது மாதிரி பிரம்மச்சாரினியாய் ஆவது தான் கொஞ்சம் க்ளீஷேவாக இருக்கிறது. படத்துலயாவது இவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையக்கூடாதா.
இந்த வார படிப்ஸ்சித்திரங்களும் கொஞ்சும் சினிமாவும் - முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய புத்தகம். தமிழ் இலக்கியப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் அவர் மாணவர்களோடு சுற்றுலா போகும் இடங்களில் பொருத்தி மேற்கோள் காட்டி ஜாலியாக கொண்டு போயிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான சுவாரசியமான புத்தகம். இன்னும் முடிக்கவில்லை பாதி தான் படித்திருக்கிறேன்.
இந்த வார கேள்விரொம்ப நாளாயிருந்தாலும் Kookaburra “ஆம வடைக்கு ஏன் அப்படி பெயர் வந்தது” என்று கேட்ட கேள்வியை மறக்கவில்லை. இதை கொஞ்சம் நோண்டிப் பார்த்ததில் இது காரணப் பெயராய் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. ஆமையின் ஓடு மாதிரி இந்த பருப்பு வடையின் வெளிப்புறம் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லுவதாய் புருடாவுட்டிகீறேன்பா :)) தப்புன்னு தெரிஞ்சவங்க சொன்னா கன்னத்துல போட்டு திருத்திக்கறேன்.
இந்த வார போஸ்டர்
தற்போது குறும்படத்திற்க்கு சின்னதாய் ஒரு தரமான நல்ல டீம் அமைந்திருக்கிறது. இந்தியா, யூ.எஸ், யூ.கே என்று மூன்று நாடுகளிலிருந்தும் வெர்ட்சுவலாய் வேலை செய்கிறோம். தொடர்ச்சியாய் குறும்படங்கள் எடுப்பதாய் திட்டம். அடுத்த படம் ஒரு காமெடி என்று ஸ்கிரிப்ட் லெவலில் இருக்கிறது. ஏற்கனவே அஃபீஷியலாய் ப்ரொடெக்க்ஷன் கம்பெனி ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய உபகரணங்களும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது போட்டோஷாப், எடிட்டிங், சவுண்டு மற்றும் மிக்ஸிங் தவிர மிக முக்கியமாய் சினிமேட்டோகிராஃபிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். இதில் சினிமேட்டோகிராஃபிக்கு யூ.கேவில் இருக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சம்பளமாய் எதுவும் தர இயலாத இந்த நிலையில் ஆர்வமும் passion-ம் இருப்பவர்களுக்கே இவை பொருத்தமாய் இருக்கும். பெரிய பிராஜெக்ட் எடுக்கும் பட்சத்தில் வரும் வருவாயை பகிர்ந்தளிக்கும் வாய்ப்பிருக்கிறது. தற்போது ஒரு கலாசலான டீம் என்ற நிலையிலேயே இருக்கிறோம். பிஸினெஸ் ப்ளானோடு காம்பிளானையும் கலக்கிக் குடித்தால் சீக்கிரமே கார் காரேஜில் ஆரம்பித்த கூகிள் மாதிரி பெரிய கம்பேனியாக வளர வாய்ப்பிருப்பதாக கும்மிடிப் பூண்டி ஜோஸ்யர் சொல்லி இருக்கிறார். (சம்பந்தப்பட்ட) தொழில் தெரிந்த ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளவும் (r_ramn at yahoo dot com)ஆர்வமிருக்கும் சினிமா கல்லூரி மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம்.