Tuesday, November 15, 2005

முல்தானி மெட்டி

போன தடவை இந்தியா போன போது கேள்விப் பட்டேன் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு விளம்பரத்தில் வழக்கம் போல் ஒரு அழகான குட்டி பூப்போல சிரித்துக் கொண்டிருக்க பின்ணனியில் ஒரு கரகர மாமா அந்த சோப்பில் முலதானி மெட்டி இருப்பதால் தான் இந்தக் குட்டி இவ்வளவு சிகப்பாக இருப்பதாக அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக விளம்பரத்தில் சொல்வதை எல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். பாதாம், முந்திரி போட்டு அல்வா செய்தால் பேஷாக இருக்கும் இதையெல்லாம் சோப்பில் போட்டால்? சோப்பையா திங்க முடியும்?

அப்புறம் அடிக்கடி முல்தானி மெட்டி பெயர் டீ.வியில் அடிபட அப்பிடி என்னதான் இது என்று கொஞ்சம் ஆர்வம். வூட்டுல வேற இதுக்கு ஏகப்பட்ட ரெக்கமண்டேஷன்.

"முல்தானி மெட்டி ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்காம்...என் ப்ரெண்டு சொன்னா...மேனிக்குப் பொலிவு கூடுதாம்..."

தோழிகள் சொன்னாலே கொஞ்சம் விவகாரமாகத் தான் இருக்கும். தோழி சொன்னா கோழி சொன்னா...என்று டீ டிகாஷன், காய்ந்த ஆரஞ்சு தோல், முட்டை கரு என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் எல்லாவற்றையும் கலக்கு கலக்கி தலைக்கு கொஞ்ச நாள் தேய்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கலவை பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும் கப்பு தாங்காது. அதை தேய்த்துக் குளித்துவிட்டு நாத்ததைப் போக்குவதற்கே ஒரு பாட்டில் ஷாம்பு காலியாகிவிடும். நமக்கு ஷாம்பு காலியாகற ரேட்டைப் பார்த்தே கவலையில் கூட கொஞ்சம் முடி வளர்ந்தது.

ஆனால் முல்தானி மெட்டி வடகிந்திய சினிமா நடிகை மாதிரி பெயரே அம்சமாக இருந்ததால் கொஞ்சம் அசந்துவிட்டேன். இதுமாதிரி எது வாங்குவதாக இருந்தாலும் என் மனைவியிடம் ஒரு ப்ரமாஸ்திரம் ஒன்று இருக்கும். "நீங்க கூட யூஸ் பண்ணி பார்க்கலாம்...உங்க முகமும் பளபளப்பாகிவிடும்". அடுத்த தரம் ஊருக்குப் போகும் போது வாங்குவோம்ன்னு சொல்லி வைத்திருந்தேன்.

இந்த முறை இங்குள்ள சூப்பர் மார்க்கெட் டெஸ்கோவிற்கு போன் போது அதை கண்கொத்திப் பாம்பாக கண்டுபிடித்துவிட்டாள். அவ்வளவு பெரிய கடையில் இத மாதிரி சமாச்சாரங்களை பெண்களால் மட்டும் தான் கண்டு பிடிக்கமுடியும்.இந்தியாவிலிருந்து வந்திருந்தது. ஒன்னும் சாக்கு சொல்ல முடியவில்லை. திரும்பவும் "நீங்களும் வேணா.." பாட்டு பாடி ஒன்றுக்கு மூன்று பாக்கெட்டுக்கள் வாங்கியாச்சு.

உன்னால் முடியும் தம்பிக்கு இதெல்லாம் தேவையில்லை என்றாலும்...தீபாவளி பார்டி வருகிறதே..போட்டோ வேறு ப்ளாக்கில் போடுவோமே...கஜினி வேற வெளிவந்துவிட்டதே..மனுஷனுக்கு ஆயிரம் கவலை இருக்காதோ.

"அந்த முல்தானி மெட்டியைக் கொண்டுவா போட்டு பார்ப்போம்..." பந்தாவா சொன்னாலும்...மைசூர்ல இருக்கறவர்களெல்லாம் மைசூர் போண்டோ பண்ண முடியுமா? அம்மா தாயே பாட்டு பாடி மனைவியே போட்டு விட்டார். அசையாமல் அப்பிடியே அரைமணி நேரம் உட்கார வைத்துவிட்டார். முகம் கழுவி கண்ணாடியில் பார்த்த போது அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி தான் இருந்தது. ஏற்கனவே பொலிவான முகத்தில் கூடக் கொஞ்சம் பொலிவு கூடின மாதிரி தான் இருந்தது.

"சூப்பர் நல்லாத் தான் இருக்கு " என்று பாக்கெட்டில் இருந்த ஒரு துண்டு சீட்டை படித்த போது தூக்கிவாரிப் போட்டது. முல்தானி மெட்டி என்பது ராஜஸ்தானிலிருந்தோ வேற எங்கிருந்தோ வந்த சலிக்கப்பட்ட களிமண் என்று தெளிவாக போட்டிருந்தது.

அடப் பாவிங்களா...ஏற்கனவே மண்டயில தான் களிமண்ன்னு பார்த்தா..இப்பிடி மூஞ்சியிலயும் களிமண்ணப் பூசிட்டீங்களேடா...அப்போ பொலிவு கூடினதா தோணினதெல்லாம் பிரம்மையா...அதானே...ஏற்கனவே களையான முகம் என்பதால் ஏமாந்துவிட்டேன் என்று தோன்றியது.

அதோடு என்னுடைய முலதானி மெட்டி சகவாசம் முடிந்தது. வூட்டுல மட்டும் இன்னமும் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இப்போவெல்லாம் எதையும் குப்பையில் போடுவதற்கு முன்னால் இது உபயோகப் படுமா என்று மனைவியிடம் கேட்டுவிட்டுத் தான் குப்பையில் போடுகிறேன்.

21 comments:

பத்மா அர்விந்த் said...

ரங்கா, இதென்ன மிட்டியை மெட்டி ஆக்கிவிட்டீர்கள். மிட்டி என்றால் மண் என்றுதானே பொருள்.
அழகுக்கு அழகு சேர்த்தா தப்பில்லை

யாத்ரீகன் said...

ஹாஹாஹா.... :-))))

உங்க வீட்ல இதெல்லாம் படிக்க மாட்டாங்கனு தைரியத்துல போட்டுடீங்களா ?? ;-)

[ 'b u s p a s s' ] said...

dubukks,

intha "pakkathu elaiku payasam please" range'ku mitti vaangittu, pinna atha pathiye kindal adikireengale...

enakennavo athu Red Soil'a irukum'nu thonuthu..illana sivappa aaga mudiyuma ? :)

துளசி கோபால் said...

:-)))))))

Anonymous said...

dubuks, last line punch super ;-))

Usha said...

Edo mannai poosindalum, Indiya Manna poosindeengale....oru maddiri Bharathiyar range le oru patriotic twist kuduthu mark vangirukalame...adai vituteengale...adu sari meesaiyil mann ottitha???

வெளிகண்ட நாதர் said...

அதுக்குத் தான் சொல்லுறது கண்ட களிமண்ணையும் பூசிக்ககூடாததுன்னு.பதினாறு வயதினிலே சப்பாணி மஞ்ச தேச்சு குளிச்சமாதிரி ஆயிடுச்சு பாத்திங்களா!

துளசி கோபால் said...

அட! உஷா சொன்னபிறகுதான் எனக்குத் தோணறது. பேசாம
'தாய் மண்ணே வணக்கம்'னு டைட்டில் வச்சிருக்கலாம்.இல்லே?

Unknown said...

:)

JVC said...

Naan Hyderbad-la irundu thindaaduraen. Neenga anga. Ella veetlaeyum ippadi thaanaa? Indha super marketla adhellam kidaikkaadhu endru solli samaalikkiraen enga veetil. Ennaikku maatta poerennu theriyala.
(appappa unga "unnal mudiyum thambi" bit padatha poetturuveengalae!)

Paavai said...

Kallo manno, mugam oru rendu nimishathukkavadu pala palanu achaa illaiya?

Munimma said...

mittiya metti aakitteenga! pondatti mela avalavu paasama? :-)

next enna, fair and handsome creama? ;-P

meesaila mattuma mannu :-)

Dubukku said...

Padma - ஓ அது மிட்டியா..மாத்திட்டாங்களா..."மிட்டின்னா மண்" அதையும் மாத்திட்டாங்களா...:)
அழகுக்கு அழகு சேர்ப்பது - ஹீ ஹீ நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்.

யாத்திரீகன் - அப்பிடியெல்லாம் இல்லீங்க...கண்டிப்பா படிப்பாங்க...இந்த போஸ்ட அல்ரெடி படிச்சுட்டாங்க.. :)


Raj - "என்னத்த தேச்சாலும் சட்டியில இருக்குறது தான அகப்பையில வரும்" - சபைல வைச்சு மானத்த வாங்காதீங்க...இந்த டயலாக் தான் வீட்டிலயும் வருது. :))

Dubukku said...

buspass - paayasam athennamo unmai thaanga..irundhalum mannellam romba overnga.


துளசி கோபால் - அட ஆமாங்க அந்த தலைப்பு கூட நல்லாத்தேன் இருக்கு :)

Sundaresan - danks :)) nalla velai veetula adha romba notice pannala :P

Usha - ahaa amaanga thai maana poosikarathu nalla thaan irukku aanaalum...
Meesaila man ottalainga... :) (I like this thinking)

வெளிகண்ட நாதர் - அது தெரிஞ்ச அப்புறம் பூசிக்கிறதில்லைங்க... :)

WA - enna simpla simely pottu mudichiteenga?

Dubukku said...

JVC - ahaa unga veetlayum ithe kathai thana..romba naal samalikka mudiyathu koodiya seekiram mattik kolla vendik kolhiren
(UMT- hehe kandukatheenga :P )

Paavai - Achaanu theriyala ana madhiri konja neram feeling irundhathu ennamo unmai

Munimma - mittiya mettiyo kalimannu therinju pochu :)
Meesaila ottlenga..nambunga :))


Uma Krishna - sammalichufyingaa naan atha unmainu nambikittu irukken. Naan thaan vuttula muhathula manna pusikariyenu kindal pannikittu irukken :)

Jeevan said...

hehehehe... Adukuthan, aallathium vangi pusakudhatu,nalla vala athu kalimanna pochu. i remind a Joke, Vivake will give a creame to Vadivalu, that cream was made in Panikaradi sani.:) yennaku Mette oli tharium, indha multhani oli super

Anonymous said...

Yo Dubukku,

Blog nalla irukuthu.
Waiting for your 'Jolli Thirindha Kallam'. Seekaram update pannu ya.

Varta naina.

expertdabbler said...

dubukks

naanum neengalum oru business pannalaam. bayapadadheenga...

enga area la construction laam neraya nadakudu. raathiryoda rathiriya irukara mann ellam eduthuttu vandhu. nalla thirinchu pona paal, gulab jamun jeera, grape juice, jam
(vazhincu nakiley patta nalla irukanumla?),
"facial cream" nu vikkalam

Asin, UMT kamal (ada neenga daan ) modelling pottudalaam..

veetile kettu sollunga..

(btw UMT kamal ndradhu oru brand identity ... ennaikum yaaru enna sonnalum maatha koodadhu.)

aama erkanavey polivaanga mugam palapalakkum nu ellam solreengaley munnadiye RIN SUPREME, Surf Excel range ku edhuna try pannirupeengalo?
:))

Guruprasad said...

intha thalaivar paattu pinnalayum, avaru veetlayum, dubukku maathiri matter undo?
"mannin meethu manithanukku aasai
manithan meethu mannukku aasai
mannthan kadasiyil jeyikirathu
manamthaan unara marukirathu"

Random Access said...

aasai enbadhu maayai
adhil vizhaadha oru paavai?
ippadi post pottadhu sevai
aanaal vaanga konjum arivu thevai!

Random Access
The search has just begun !!!

Dubukku said...

jeevan - yeah remember that joke.ippo inime jakiraithaya iruppen :)

Anonymous - yo danks mate. panniyachu ba. adikadi vandhutu ponga naina.

susbala- Danks for dropping by and your comments. English posts ..i was doing that once upon a time...but have decided to torture ppl only with my tamil (English is still bad) hope you will understand. Thanks.

PK - oorla kal kuvari man kuvari vechirukkavanga kitta sollidatheenga...neraya competition jaasthiyayidum :)
deal mate

Guru - ahaa irukalam irukalam :)


Random Access - romba nanri swami.

Post a Comment

Related Posts