Thursday, March 20, 2014

ட்யூஷன்

"கொங்கைன்னா என்ன?.."

கேள்வியைப் போலவே நேரமும் இசகுபிசகாகத் தான் இருந்தது. இருவருமே உஷ்ணமாய் இருந்தார்கள். அவள் தோள்பட்டையில் அவன் மூச்சுக் காற்று அனலாய் அடித்துக் கொண்டிருந்தது. மழைக்கு ஒதுங்கியது போல் இரண்டுக்கு இரண்டில் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

"ம்ம்..சொல்லு கொங்கைன்னா..."

"எங்க படிச்ச.."

"எங்கையோ...ப்ச்..இப்ப அதா முக்கியம், சொல்லப் போறியா இல்லியா..."

"ம்ம்ம் சொல்லட்டுட்டுமா ...சொல்லட்டுமா..."

"ம்ம்ம்..."

அவன் சொல்லவில்லை.  "ச்சீ...." அவள் வெட்கப்பட்டு உடையை சரிசெய்து அவனைத் தள்ள முற்பட்டாள். மேம்போக்கான முயற்சி தான். செம்புலப் பெயல் நீராகிக் கொண்டிருந்தார்கள்.

"குற்றாலக் குறவஞ்சில இதெல்லாமா எழுதுவாங்க.."

கன்னத்தோடு கன்னம் இழைத்தான்.

"...அதுக்குள்ள மனப்பாடம் பண்ணிட்டியா..,. நான் செய்யுள் பக்கமெல்லாம் போகவேயில்ல.."

"ஏன் நானும் தான், இந்தப் பாட்டு செலபஸிலயே கிடையாது, எங்கயோ படிச்சேன் ஒட்டிக்கிச்சு.."

"ஒட்டிக்கிச்சா... அப்பநீ  மட்டும் ஒட்டமாட்டேங்கிற...."

அதற்கு மேல் அங்கே ஒட்டுவதற்கு இடம் இருந்ததாய் தெரியவில்லை.

"நான் மாட்டேன்பா... டியுஷன் சார் வந்திருவாரு" வாயளவில் சொன்னாளே தவிர இன்னும் ஒட்டிக் கொண்டாள்.

"அதெல்லாம் வர மாட்டாரு..இன்னும் பதினைஞ்சு நிமிஷம் இருக்கு...கோயில்ல ஆறேகாலுக்குத் தான் தீபம் காட்டுவாங்க அதுக்கப்புறம் பத்து நிமிஷம் ஆகும். மணியடிச்சா கேக்கும்"

"இதுலெல்லாம் நல்ல வெவரம் தான்"

"இது சாம்பிள் தான் இன்னும் விவரம் நிறைய இருக்கு,.." கண்ணடித்தான்.

"ஏன் கன்னமெல்லாம் சொர சொரன்னு இருக்கு ஷேவ் செஞ்சியா.."

"பின்ன பசங்கன்னா மாட்டாங்களா.., ப்ரெஞ்ச் பேர்ட் வைக்கலாமான்னு இருக்கேன்

"...ம்ம் வைச்சிக்கோ."

"மீரா சீயக்காயா..." கூந்தலில் வாசம் பிடித்தான்.

"லூசு இது நிஜ செம்பருத்திப்பூ..."

கிறக்கியது. கை அளவளாவியது.

"போன வாரத்துக்கு இப்ப சதை போட்டிருக்க.."

அவள் "ச்சீ..." என்று அவன் கையை தட்டி வெட்கப்பட்ட போது ட்யூஷன் சார் வந்திருந்தார். அவசர கதியில் பிரிய எத்தனிக்கும் போது அவள் கூந்தல் இவன் சட்டை பட்டனில் சிக்கி, பதட்டத்தில் அவன் பிரிக்க இவள் இழுக்க மொத்தமும் சிக்கலாகிப் போனது. முழுதாய் ஒரு நிமிடமாயிற்று.

உட்கார்ந்த போது மூவரும் புத்தகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாடம் நடக்கவில்லை.

*************
"யமுனாம்மா, கணேசன் சார் டியூஷன் செண்டர் எப்படி இருக்காம், நல்லா சொல்லிக்குடுக்கிறாங்களாமா? இவளுக்கு ராஜன்சார் சொல்லிக் குடுக்கறது புரியவே இல்லைங்கிறா. அடிக்கடி கோச்சிக்கிறார்ன்னு வேற சொல்லுறா.. மார்க் குறைஞ்சிரும் டியூஷன் மாத்தனுங்கிறா. கொஞ்சம் யமுனா வந்தா பேசச் சொல்லுங்களேன்"

"இல்ல மச்சான், அங்க டைம் வேஸ்டாகுதுடா, அவரு வேற ரொம்ப ஸ்லோவா சொல்லிக்குடுக்குறாரா, நமக்கு ஸ்பீடா ஃபினிஷ் பண்ணாத் தானே ரிவைஸ் பண்ண முடியும் அதான்..உங்க செண்டர்ல சேரலாம்னு இருக்கேன், கோ எட் இல்ல"

"இல்லீங்க, ரொம்ப சாரி, எனக்கு ஸ்பைனல் கார்ட்ல கீழ நுனில ரப்சர்ங்கிறார் டாக்டர், சவுகரியமா உட்கார முடியல. அப்படி இப்படித் தான் உட்கார முடியுது. வயசுக்கு வந்த பொண்ணுங்க இருந்தா தோதா இருக்காதில்ல அதான் பசங்க மட்டும் தான்னு மாத்திட்டேன். தேர்ட் க்ராஸ் சாந்தி டீச்சர ட்ரை பண்ணுங்களேன், எக்ஸ்பீரன்யஸ்ட் ஹாண்ட், பொண்ணுங்க மட்டும் தான் அங்க, ஐ வுட் ஸ்ட்ராங்லி ரெக்கெமெண்ட் தேர்"

"போடி எப்டி சொல்றதுன்னு தெரியல, அங்க என்னமோ ஒரு மாதிரி சரியில்ல ...அதான் மாறிட்டேன்"

"அவருக்கு பொண்ணுங்கன்னா வீக்னெஸ்ஸாம், மின்னாடிலாம் எடுத்துக்கினு இருந்தாரு, எங்க என்ன ஆச்சோ.. எல்லாரும் பார்த்துக்கினு இருப்பாங்களா இப்போ பசங்க மட்டுந்தான்"

12 comments:

Anonymous said...

Hi Dubukku.. This is Srinivasan from TVL. Myself first..

Anonymous said...

Reminds of Sujathas a Pudhiya Thoondil story.
SN.

Anonymous said...

Very different post when compared to your old ones! But v interesting though...it reminds me of a similar incident that happened in the tution I went during school days :-)
- Deepa

Anonymous said...

very diff - almost un-dubukkish! And a nice read...

Shubha

Anonymous said...

Looks like you have been reading a lot of Saroja Devi story books. karmamda.

Unknown said...

Sorry Dubuks. didn't like this much - bit sleazy. Seems to have been written in a hurry, lacks your usual style. Lakshmi

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!

Dr B Jambulingam said...

வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

Gopikaa said...

ரொம்பவே வித்தியாசமா எழுதி இருக்கீங்க. கடைசி வரையிலும் கதை புரியாத செல்வராகவன் படம் மாதிரியே ஒரு ஃபீல்!

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Dubukku said...

Srinivasan - dank you
SN - ahaa அது என்ன கதைன்னு மறந்து போச்சே
சுபா - ஆமாம் கொஞ்சம் வேறு மாதிரி முயற்சிக்கலாமே என்று தான். நன்றி
அனானி - :) பிடிக்கலை என்று தெரிகிறது
Lakshmi - yes wanted to make it little undubukkish. Looks like not to your taste :) thanks for letting me know

திண்டுக்கல் தனபாலன் - தகவலுக்கு மிக்க நன்றி. சாரி கொஞ்சம் லேட்டாகிவிட்டது பதில் போட

கோபிகா - ஹா ஹா Facebook Dubukku pagela ராஜேஷ் நான் சொல்ல வந்ததை கரெக்டாக உணர்ந்திருந்தார். அது கீழே
//எல்லாரும் அவங்கவங்க பாயிண்ட் ஆப் வியூல பொய் சொல்றாஙகன்னு தெரியுது. கடைசில பாவம் அந்த வாத்தியார் மேலே பழி சொல்றதுதான் மெர்சலாவுது.//

கார்த்திக் - தகவலுக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.

மனு - தமிழ்ப் புதிர்கள் said...

நல்ல ஆசிரியர், பிறர் குறைகளை தன் மேல் ஏற்றிக்கொள்கிறார்.
நல்ல கதை வாழ்த்துகள்.

Post a Comment

Related Posts