Sunday, June 14, 2009

மல்லீ

இந்தக் கதை "'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது"
***********************************

"அம்மா பூ கொண்டாந்திருக்கேன்.." என்று சத்தம் கேட்டாலே அது கனகுவாய் தான் இருக்கும். சத்தம் குடுத்த கையோடு முன் அறையில் சவுகரியமாய் உட்கார்ந்து கொள்வாள். கனகு என் மனைவியின் ஆஸ்தான பூக்காரி. தோள் எலும்பு தெரிய வரும் கனகுவுக்கு ஓரத்தில் நரை முடி தெரியும். எப்பவோ கணவன் விட்டுப் போயிருந்தாலும், பெரிய பொட்டு மட்டும் குடுத்தியான முகத்தில் பிரதானமாய் இருக்கும். வீட்டம்மா வெளில போயிருக்கு இன்னிக்கு பூ வேண்டாமென்று நான் சொன்னாலும் விடமாட்டாள். “அம்மா விளக்குக்கு வைக்கவாது நூறு பூ வாங்குவாங்க அப்புறம் உங்கள சண்டை பிடிக்கப் போகுது”ன்னு பிடிவாதமாய் சத்தியாகிரகம் செய்வாள்.

கனகு எனக்கு கல்யாணமான வருடத்திலிருந்து வீட்டிற்கு பூ போட கரெக்டாய் வந்துவிடுவாள். "பத்தாம் நெம்பர் வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டிருந்தால்ல கவுரி...அவள நேத்து போலீஸுல பிடிச்சிட்டுப் போய் அடி நிமித்திட்டாங்கம்மா...நீங்க நான் சொன்னபோது நம்பல...அவ தான் அந்த வூட்டுப் பிள்ளையோடு செயின களவாடியிருக்களாம்...இந்தக் காலத்துல உழைச்சுத் திங்கிதே நிக்க மாட்டேங்குது இதுல களவாடினா வெளங்குமா..." கொசுறாக ஊர் சேதியெல்லாம் என் மனைவிக்கு அப்டேட் செய்வதே கனகுதான்.

"நானா கேட்டேன்...எனக்கு அந்த கவுரி யாருன்னே தெரியாது...இவளுக்கு யார்கிட்டயாது சொல்லனும் என்கிட்ட அன்யோன்யமா சொல்லறா...சொல்லிட்டுப் போகட்டுமே...பாவம்...நல்ல பூக்காரம்மா...நீங்க எதுக்கு நாங்க பேசறதையெல்லாம் ஒட்டுக் கேட்டுண்டு" என மனைவி கனகுவை சில சமயம் விட்டே குடுக்கமாட்டாள்.

"சித்ரா பௌர்ணமி விளக்க சுத்தி நல்ல பூவு வைங்கம்மா...வீடு நல்ல லெஷ்மி கதாட்சமாய் இருக்கும்" கனகுவுக்கு செண்டிமென்ட் ஜாஸ்தி. "இன்னிக்கு ஜாதி மல்லி ஏலம் எடுத்தேம்மா...மொத போனியே நம்மூட்டுக்குத் தான்...கூட நூறு வாங்கிக்கோங்க...உங்க கை எனக்கு ராசியா இருக்கும்....எம்ம்பொண்ணுக்கும் உன்ன மாதிரி நல்ல நீளமான முடிம்மா...ஆனா வாத்தி புள்ள மக்குன்னு பூ வைடின்னு சொன்ன கேட்டாத் தானே...எல்லாருக்கும்மா நீளமா முடி வாய்க்குது...நீ நிறைய பூ வைம்மா...வீட்டுக்கும் புருஷன் ஆயுசுக்கும் நல்லதும்மா " என மனைவி அவளுடைய சென்டிமெண்டுக்கு எல்லாம் ஈசியாய் மசிவாள்.

"ஏம்மா நீ ஏன் ராகினிகிட்ட மாம்பழத்துக்கு பேரம் பேசி தொண்டத் தண்ணிய வுடுறீங்க...என்னாண்ட சொல்லுங்க நான் வாங்கித்தரேன் எவ்ளோ வேணும்..." சில சமயம் கூடுதல் வியாபாரமும் நடக்கும்.

"இவளுக்கு மாம்பழத்துல கண்டிப்பா கமிஷன் இருக்கும்" என்று நான் சொன்னாலும்..."இருக்கட்டுமே நமக்கு எனிவே இந்த விலைக்கு கிடைக்காது....அவளும் பொழச்சிக்கட்டுமே...அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்குங்க...எல்லாமே வயத்துக்குத் தானே" என்று எனக்கு பதில் உபதேசம் தான் கிடைக்கும்.

"மல்லீ வந்திருக்கு...."ன்னு ஒரு நாள் வயதுப் பெண் வந்த போது எனக்கு அது கனகுவின் பெண் என்று தெரியவில்லை.

"இங்க வழக்கமா ஒரு அம்மா பூ போடுவாங்க...அம்மா அவங்க கிட்ட தான் வாங்குவாங்கம்மா.."ன்னு சொன்னவுடன் அவளுக்கு முகத்தில் ஏகப் பெருமை.

"அண்ணா அது எங்கம்மா தான்ணா...அம்மாவுக்கு காய்ச்சல் அதான் நான் வந்திருக்கேன்.."

"ப்ள்ஸ் டூ படிக்கிறன்னாங்களே உங்க அம்மா ...நல்லா படிக்கிறியா...நல்ல படிச்சு வேலைக்கு போகனும் என்ன" என் மனைவிக்கு அவளை தெரிந்திருந்தது. நான் அவள் பெயர் கேட்டுக்கொள்ளவில்லை ஆனால் அவள் மல்லீ என்று ராகம் போட்டு விற்பதால் அவளை மல்லீ என்றே அழைப்பேன். அவளும் வாய் நிறைய அண்ணா அண்ணா என்று அழைப்பாள்.

"ஏண்ணா...அண்ணிக்கு கூட கொஞ்சம் பூ வாங்கி வைங்கண்ணா..நேத்து அம்மன் கோயிலாண்ட பார்த்தேன் ப்ளூ சாரியில அண்ணீ சூப்பராய் இருந்தது..." - கனகுவின் வியாபார உத்தி அப்பிடியே இவளிடம் இருக்கும் செண்டிமென்ட் உள்பட. ஒரு தரம் எங்கள் வீட்டு நிலைவாசலில் ஒரு துண்டு மல்லிகை மாட்டியிருந்தது.

"நாந்தாண்ணா வைச்சேன்... நிலைவாசல்ல பூ வைச்சா வீட்டுல சந்தோஷம் பெருகும்ன்னு அம்மா சொல்லுவாங்க..அதான் வைச்சேன்"

"மல்லீ...நீ பூ விக்க வேண்டியவளே இல்ல...நல்ல படிச்சு கார்பரேட்ல வேலை பார்க்க வேண்டியவ...நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக்"ன்னு நான் சொன்ன போது அவள் முகம் பிரகாசமாயிருந்தது.

அதற்கப்புறம் கொஞ்ச நாளில் கனகு அம்மன்கோவில் பக்கம் ஒரு சின்ன கடை போட்டுவிட்டாள்.

"சுகர் வந்திருச்சிம்மா அலைய முடியலை அதான் கைல இருக்கிறதையெல்லாம் போட்டு கடைய ஏலம் எடுத்திருக்கேன்...உனக்கு வேணா மகள வீட்டுல வந்து குடுக்கச் சொல்லட்டுமா"

"இல்ல பரவாயில்ல படிக்கிற பொண்ணு...நானே வந்து வாங்கிக்கறேன்...டெய்லி இத சாக்கா வைச்சாவது அம்மன்கோயிலுக்கும் வருவேன்" என் மனைவிக்கும் கனகுவின் தொடர்பை விடப் பிடிக்கவில்லை. இரண்டே வாரம் தான். கனகு மீண்டும் வீட்டிற்கே பூ போட வந்தாள்.

"என்னத்த சொல்றது என் தலையெழுத்து...அந்த நீலவேணி நான் அவ கடைய ஏலமெடுத்தேன்னு என்னைய ஆள வைச்சு தகராறு பண்றாம்மா...குடிச்சிப்புட்டு வீட்டுப் பக்கமும் வந்துட்டாங்க..வயசுப் புள்ளைய வைச்சிக்கிட்டு நமக்கு ஆள் இருக்கா அம்பு இருக்கா...அதான் கடைய விட்டுக்கொடுத்திட்டேன்...இப்போ குத்தைகாரன் கிட்ட காசுக்கு அலைஞ்சிகிட்டு இருக்கேன்...எனக்கு இது தேவையா... ஆனா நல்ல வாழற உங்க வீட்டுல வைச்சு சொல்லக்க்கூடாது அவ அதுக்கு அனுபவிப்பாம்மா...அந்த அம்மன் அவளுக்கு கொடை கூலி குடுக்கும் பார்த்துக்கிட்டே இருங்க.."

எல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கப்புறம் மீண்டும் கனகுவை வீட்டுப் பக்கம் காணவே இல்லை. என் மனைவிக்கு பூ வாங்குவதை விட அவளைப் பற்றியே கவலையாய் இருந்தது. "ஏங்க கொஞ்சம் விசாரிங்க...அவ கிட்ட காசுக்கு அவங்க ஏதாவது தகறாரு பண்ணியிருப்பாங்க"ன்னு என்னை கொஞ்ச நாள் நச்சரித்துக்கொண்டிருந்தாள்.

"நான் எங்க போய் விசாரிப்பேன்...டோன்ட் வொர்ரி அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது..." என்று நான் சொன்னாலும் எனக்கும் அதே சந்தேகம் தான் இருந்தது.

"கனகு வீடு பூட்டியிருக்கு அவ வீட்டைக் காலி பண்ணிட்டாளாம்..பக்கத்து விட்டு சுலோச்சனாம்மா வீட்டு வேலைக்காரி சொன்னாளாம்" என்று என் மனைவி சொன்ன போது பூக்கடையில் கூட இவ்வளவு பாலிடிக்ஸா என்று எனக்கு வருத்தமாய் இருந்தது.
"கவலப் படாத...அவ நல்லா தான் இருப்பா...எத்தனை தரம் நமக்கே பூ குடுத்து ஆசிர்வாதம் பண்ணியிருக்கா அந்த நல்ல மனசுக்கே அவளுக்கு எங்க போனாலும் நல்லா தான் இருப்பா " என்று சமாதானம் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. அதற்கப்புறம் சில மாதங்கள் பிறகு கனகுவை மறக்கவில்லை என்றாலும் அவளைப் பற்றி நானும் மனைவியும் அதிகம் பேசவில்லை. என் மனைவி மனதே இல்லாமல் அம்மன் கோயில் கடை தவிர்தலாக மற்ற கடைகளில் பூ வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.

ப்ளஸ் டூ வில் அந்த தரமும் மாணவிகளே அதிக மதிப்பெண் எடுத்தார்கள் என்று பேப்பரில் படித்த போது எனக்கு மல்லீயின் நியாபகம் தீற்றலாய் வந்தது.

பின்னொரு நாளில் மெடிக்கல் ஷாப் சேகரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த முரட்டு மீசை ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்க வந்தான். கனகு பற்றி சும்மா கேட்பது மாதிரி அவனிடம் கேட்டேன்.

"அதெல்லாம் அன்னிக்கே ஃபைசல் பண்ணியாச்சு சார்...அவ காசு எனக்கெதுக்கு சார்...நான் விளங்க வேண்டாமா...அதெல்லாம் கனகு செம உஷார் பார்ட்டி சார்...மேட்டர் வேற சார்...அவ புள்ள... பூ போடற வீட்டுல காதல் பண்ணி இழுத்துகிட்டு ஓடிப் போயிரிச்சி. அப்புறம் அவங்க போலிஸ்ல சொல்லி கனகு வீட்டைக் காலி பண்ணிரிச்சி. ரெண்டு மாசம் மின்னாடி கண்டுபிடிச்சி.. அவங்க பையன கூட்டிட்டு போயிட்டாங்க..இப்போ கனகும் அந்தப் புள்ளையும் எம்ஜியார் நகர்ல வீடெடுத்திருக்கிறதா பசங்க சொன்னாங்க.” எனக்கு கனகுவைப் பற்றி ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.

அப்புறம் எம்ஜியார் நகர் கடக்கும் போது நியாபகம் வரும் போதெல்லாம் கனகு எங்கேயாவது தட்டுப் படுகிறாளா என்று பூக்கடையெல்லாம் பார்ப்பேன்.

ஒரு நாள் என் மாமியாரை அயோத்யா மண்டபத்தில் கச்சேரிக்கு ட்ராப் செய்துவிட்டு வரும் போது வெஸ்ட் மாம்பலத்தின் ஒரு சந்தின் திருப்பத்தில், முற்றிலும் எதிர்பார்க்காத தருணத்தில் மல்லியைய் சந்திக்க நேர்ந்தது. ட்ராபிக் நகர காதிருந்த போது "மல்லீ..." என்று தெரிந்த குரல் கேட்க தலை அனிச்சயாய் திரும்பியது.

ஒரு குட்டி ஒன்டிக் குடித்தனத்தில் வாசலில் டேபிளில் மல்லிகையும் கனகாம்பரமும் அடுக்கி மல்லீ விற்றுக்கொண்டிருந்தாள். கனகு ஒரு பெட்டியை வீட்டிற்குள் நகர்த்திக் கொண்டிருந்தாள், நான் பார்த்த மல்லியா இது என்று எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தலை மொட்டையடித்து வளரவே விடாமல் ஒட்ட கிராப் செய்யப் பட்டிருந்தது. மூக்குத்தி குத்தியிருந்தாள். அந்த சந்தர்பத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களை சந்தித்து நோகடிக்க விரும்பவில்லை. என் மனைவியிடம் சொல்லி உதவி செய்யச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

முகத்தைத் திரும்பி கிளம்பும் போது தான் கவனித்தேன்...அவர்கள் வீட்டு நிலைவாசலில் பூ மாட்டியிருந்தது.

31 comments:

rapp said...

me the first

tejaswie said...

I am the 2nd...

சுரேஷ் கண்ணன் said...

ம்.. நல்லா இருந்ததுங்க.

tejaswie said...

the story was good. but why the label - கதா காலட்சேபம் ?

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Narmadha said...

Konjam heavy subject....but nevertheless, quality stuff...

Anonymous said...

good one
nicely written

குப்பன்_யாஹூ said...

wow awsome, u proved u r master in heavy subject writing as well

Rams said...

Good One..Especially the last sentence.

Anonymous said...

so nice.ganamana kadaikaruvudan koodiya kadhaiyum ungallal saralamaga ezudha mudigarathu.thodarndhu ezhudhungal.aanal ungal nagaichuvai unarvu serindha kadhai dhaan migavum rasithadhhaga engal veetu rengamani sonnar.enakkum appadiye.ungal kadhaigalai aavaludan edhirpargum
nivi matrum rengamani

sridhar said...

நல்ல முயற்சி. ஆனால் பழைய சுஜாதா கதைகளின் inspiration தெரிகிறது. But the punch in sujatha stories and ஒரு நூலிழையாய் நம்முள் ஒட்டிக்கொண்டு திரும்ப திரும்ப யோசிக்க வைக்கும் சின்ன சோகம், ஆச்சரியம், வினோத உணர்வுகள் எல்லாம் missing.

Poetry said...

Romba nalla irundhadhu...

அது ஒரு கனாக் காலம் said...

நல்லா இருந்தது... சாதரணமா... பூ விக்கறவங்க நிறய பேர் கிராப் தான் ..அதை கூட பார்த்து , நினைவில் நிறுத்தி எழுதி இருக்கீங்க ... வாழ்த்துக்கள்

Aazhi Mazhai said...

nalla irunthathu konjam neelam jasthi iruntha maathiri thonichu !!!

Mahesh said...

ஸ்வாமின்... கதை அருமை... வழக்கம் போல.... ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடை !!!

அப்பிடி ஒரு நடை நம்ம திண்ணைக்கு வந்து நம்ம கதையையும் படிச்சுட்டு போறது !!

Madhuram said...

The style of writing is very good but kadaisila chappunu mudicha madhiri ayiduchu. Ungalukku sujatha madhiri irukku savithri madhiri irukkunu compare panna pidikadhunu theriyum, but you know I was expecting a BAM and felt that it was not there in the end.

பாசகி said...

இந்த மாதிரி மாசம் ஒரு போட்டி நடத்துங்கப்பா, அப்பவாது நம்ம அண்ணன் தொடர்ந்து எழுதறாரானு பாப்போம் :)

Ji, awesome narration. வாழ்த்துகள்!

zhu said...

fine. but why so heavy subject. ??? it'z defenitely not yr style. i"ve sujested yr site to a VIP . let me see if he reads. after that i"ll contact u.

sriram said...

ஹாய் ரங்கா
Rare occassion - உங்கள் பதிவு படித்து விட்டு சிரிக்காமல் இருந்தது. பிரசவ பதிவிற்கு பிறகு இதுதான் என்று நினைக்கிறேன்.
பரிசு நிச்சயம். Good one and Good luck
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

Veera said...

I second Sriram....

ச.சங்கர் said...

Best of Luck

rapp said...

superaa irukkunne:):):)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ம்.. ஓகே..

alfred devanesan samuel said...

மிக்க நல்ல கதை

சிங்கக்குட்டி said...

நல்ல கதை, பல வரிகள் எனக்கு நன்கு தெரிந்து என் சிறு வயதில் பார்த்தது, நன்றி.

Suresh said...

Good one Renga !!!

அறிவிலி said...

நல்ல நடை. மனதை பாதிக்கும் கதை.

gayathri said...

ramesh anna,
dis s gayathri. hope u remember me. i just saw ur blog today. dis s really interesting. keep rocking

Dubukku said...

ராப் - ஓகே அட்டென்டென்ஸ் போட்டாச்சு :)

தேஜஸ்வீ - உங்களுக்கும் அட்டென்டென்ஸ் போட்டாச்சு :). சும்மா என்னோட சிறுகதைகளுக்கு அந்த மாதிரி லேபில் குடுத்திகிட்டு வர்றேன்

சுரேஷ் கண்ணன் - மிக்க நன்றிங்க உங்க ஊக்கமான கமெண்டுக்கு

தமிழினி - தகவலுக்கு மிக்க நன்றி

நர்மதா - மிக்க நன்றி மேடம். அப்பப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணலாமேன்னு தான்

அனானி - மிக்க நன்றி. பெயரை போடலாமே

குப்பன் - மிக்க நன்றி தல. உங்களுக்கு பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.

ராம்ஸ் - மிக்க நன்றி ஹை

நிவி - உண்மைதாங்க...எனக்கும் நகைச்சுவை தான் எழுதப் பிடிக்கும் ஆனால் அதற்க்கு மனது மிக உற்சாகமாக ஃபிரீயாக இருக்க வேண்டும். சீக்கிரமே முயற்சிக்கிறேன்.

ஸ்ரீதர் - உண்மைதான். முதலிக் சுஜாதா அவர்களின் கதையோடு கம்பேர் செய்ததையே பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். ஏனோ இந்தக் கதையை எனக்கு ரொம்ப ட்ரமாட்டைஸ் செய்ய விருப்பம் இல்லை. இது ஒரு அன்றாட நிகழ்வாய் நான் பார்த்ததை வைத்து எழுதியது. அது நீங்கள் சொன்ன குறைகளுக்கு காரணமாய் இருக்கலாம்.

பொயட்ரீ - மிக்க நன்றி மேடம்

சுந்தரராமன் - ரொம்ப கரெக்ட் சார். நான் இந்த முரண்பாட்டைப் பற்றி சில சமயம் பார்க்கும் போதெல்லாம் யோசிப்பேன்.

ஆழி மழை - ஓ நீளம் அதிகமாகிடிச்சோ...அடுத்த தரம் கவனமாயிருக்கிறேன்.

மகேஷ் - வாங்க மிக்க நன்றி. உங்க பக்கம் கூடிய சீக்கிரம் வரேன். தப்பா எடுத்துக்காதீங்க..ப்ளாக் பக்கம் வந்து கொஞ்சம் நாளாகிடிச்சு...மன்னிச்சிக்கோங்க

மதுரம் - நீங்கள் சொன்னது மிக்க சரி. நிகழ்வுகளில் திருப்பமே இல்லாமல் வெறும் நடையிலேயே முயன்று பார்க்கலாமே என்று தான் முயற்சித்தேன். இந்த மாதிரி திருப்பம் இல்லாத சில கதைகள் படித்திருக்கிறேன், பிடித்தும் இருந்தது அதன் விளைவே

பாசகி - கோச்சிக்காதீங்க...நானும் அடிக்கடி இங்க எழுதனும்ன்னு தான் பார்க்கிறேன். ஆனால் முன்னம் சொன்ன மாதிரி மனது அழுத்தம் இல்லாமல் ஃப்ரீயாய் இருக்க வேண்டும் அதற்க்கு

ழு - ஆஹா உங்கள் அன்புக்கு ரொம்ப டேங்க்ஸ்....உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமாய் இருக்கிறது முகமே தெரியாமல் இப்படி உங்கள் அன்பைப் பெற..... மிக்க நன்றி

ஸ்ரீராம் - வாங்க தல...மிக்க நன்றி...பரிசு...ஹி ஹி பார்போம்.

வீரா - மிக்க நன்றி தல.

சங்கர் - நன்றி ஹை நண்பரே

ராப் - ஆஹா இப்போ தான் படிச்சு முடிச்சீங்களா :)))

உண்Mஐத் தமிழன் - மிக்க நன்றி நண்பரே மனதில் பட்டதை சொன்னதற்கு

ஆல்பிரெட்- மிக்க நன்றி நண்பரே

சிங்கக்குட்டி - நானும் தான் இந்தில் நிறைய வரிகளை சின்ன வயதி பார்த்திருக்கிறேன்

சுரேஷ் - மிக்க நன்றி சுரேஷ்

அறிவிலி - மிக்க நன்றி நண்பரே

காயத்ரி- அஹா...இது எந்த காயத்ரி...அம்பாசமுத்திரமா....அய்யோ ஹைய்யையோ எனக்கு கொஞ்சம் உதறுதே...ப்ளீஸ் r_ramn at yahoo dot com க்கு ஒரு ஈமெயில் தட்டுங்களேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்க கதைகளிலேயே எனக்கு பிடிச்ச விஷயம் என்னன்னா படிக்கும்போது எல்லாமே இப்போ கண் முன்னே நடந்த மாதிரியே இருக்கும்.. உரைநடையாவே..

மல்லீயும் அப்படித்தான் :-)

சர்ணா said...

நச்....

Post a Comment

Related Posts