லேட் ஆகுவதற்கு முன்னால்(??!!!) சொல்லிவிடுகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
கிறிஸ்துமஸ்க்கும் புத்தாண்டுக்கும் நடுவில் ஆபிஸுக்கு மட்டம். இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்னாலே ஹாலிடேயில் என்ன செய்ய வேண்டும் என்று உருப்படியாக திட்டம் போட்டு அதை வழக்கம் போல் குப்பையாக எல்லா சாமான்களையும் அடைத்துவைத்து உபயோகமே படுத்த முடியாத மாதிரி வைத்திருக்கும் அறையில் வைத்து பூட்டிவிட்டோம்.
உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முறையாக எல்லா என்.ஆர்.ஐக்களையும் மாதிரி நாங்களும் பாக்ஸிங் டே சேல்க்கு முதல் முறையாக படையெடுத்தோம். இந்த பாக்ஸிங் டே சேலின் மகிமையே இரண்டு வருடம் முன்னாடி தான் நண்பர்களின் வழியாக உணர்ந்து கொண்டோம். அது வரை நம்ம சேல் அனுபவமெலாம் திருநெல்வேலி போத்தீஸிலோ ஆரமெகேவியிலோ போடும் இரண்டு வைகிங் ஜெட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ஃப்ரீ வரை தான். அதிலேயே ஏகப்பட்ட டகால்டி வேலை நடக்கும். திருநெல்வேலியில் போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் மூன்று நான்கு கட்டிடங்களில் இருப்பதால், சும்மானாச்சுக்கும் முதலாளியோட க்ளாஸ்மேட் மாதிரி (எல்லாம் அவங்க குடும்பத்தில் நம்ம வயதில் யாராவது ஒரு ஒரு சின்னப் பையன் இருப்பார் என்ற நம்பிக்கையில்) "முதலாளி இன்னிக்கு இந்தக் கடையில் இருக்காரா இல்ல அங்க இருக்காரா"ன்னு கேட்டால் விற்பனை பிரதிநிதி கொஞ்சம் உதறலோடு "அங்க தான் இருக்கார் சார்"ன்னு சேர் எடுத்துப் போடச் சொல்லி ஒரு லெமன் ஜூஸ் தருவார். திரும்ப பில் கட்டும் போது இதே பிட்டைப் போட்டால் ஜிப் வைத்த மணிபர்ஸ் கேட்காமலே தருவார்கள். சில சமயம் ராங்கி பிடித்த காஷியர்கள் "எந்த முதலாளியக் கேக்கறீங்க"ன்னு கொக்கி போடுவார்கள். நம்ம பாரம்பரியத்தில் தாத்தா பெயர் தான் பேரனுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் "விஸ்வநாதன்.... அதான் விச்சு"ன்னு கேஷுவலாக சொன்னால் "சின்ன ஐய்யா கடைக்கு வரமாட்டாரே..பெரிய ஐய்யா தான் இருப்பார்...மணி, சார முதலாளி ருமுக்கு கூட்டிக்கிட்டு போ"ன்னு கூட ஒரு ஆள் வரும். சில சமயம் வரும் மணி நல்லவராய் இருப்பார். மணியை அப்பிடியே நைஸாக லேடிஸ் ட்ரெஸ் செக்க்ஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் தஙகமணி எடுத்துவைத்திருக்கும் ஜவுளிக் கடலுக்குப் பில்லைப் போட்டால் "சார் சின்ன ஐய்யாவுக்கு தெரிஞ்சவராம்"ன்னு பில் பத்து பர்ஸன்ட் டிஸ்கவுண்ட் ஆகியிருக்கும். இதுவே ராங்கி பிடித்த மணியாயிருந்தால் முதலாளியே கண்ணாயினாராய் இருப்பார். "விச்சுவ நான் ஃபோனில் பிடிச்சிக்கிறேன்ன்னு "ஹலோ யாரு துபாய் ஷேக்கா? அடுத்த கப்பல்ல முன்னூறு ஒட்டகமும் ரெண்டு எருமை மாடும் வேணும் அனுப்பிருங்க"ன்னு முக்கியமான போனுக்காக மணி கத்தரித்து விடப்படுவார். தங்கமணி நான் என்னம்மோ ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் யாருக்கோ சொந்தம்ங்கிறமாதிரி திசைக்கே வரமாட்டார். வந்தாலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்ட மாதிரி காறிக் காறித் துப்புவார் என்பதால் நானும் கண்டுகொள்ள மாட்டேன்.
இப்படியாக சேலில் வாங்கி வந்ததைப் போட்டுக்கொண்டு பவுலில் ஒரு சூப் குடித்துவிட்டோம் என்றால் சேல் சாபல்யம் அடைந்துவிடும்.
இந்த முறை வீட்டுக்குத் தேவையான முக்கியமான இரண்டு விஷயங்கள் வாங்க வேண்டி இருந்ததால் சேலுக்கு காத்துக்கொண்டிருந்தோம் அப்பிடியே, அப்பிடி என்ன தான் சேல்ன்னு பார்க்கலாம் ஒரு ஆவல். இங்கு லண்டனில் இந்த பாக்ஸிங் டே சேல் ரொம்பப் பிரபலம். சில கடைகள் காலை நாலு மணிக்கு இதற்காகத் திறப்பார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நல்ல உருப்படிகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி இருந்தார்கள். நாலு மணியெல்லாம் நமக்கு வேலைக்காது என்பதால் பாதி ராத்திரி ஏழரை மணிக்கு எழுந்து, குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மிகப் பெரிய ஷாப்பிங் பார்க்குக்கு ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தால் இரண்டாயிரம் கார்கள் நிப்பாட்டக் கூடிய கார் பார்க்கில் இடமே இல்லை. அடிச்சுப் பிடிச்சு நிப்பாட்டி விட்டு சேலுக்குப் பிரபலமான ஒரு கடைக்குப் போனால் வெளியிலேயே பெரீய்ய்ய்ய க்யூ. மூன்று மாடிக் கட்டமும் புல்லாம். இனிமே எத்தனை பேர்கள் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர்கள் தான் உள்ளே போகலாம்ன்னு ரெண்டு கடோத் கஜன்கள் காவலுக்கு இருந்தார்கள்.
அரை மணி நேரம் தேவுடு காத்து உள்ளே போனால் களேபரமாக இருந்தது. பெண்கள் எல்லாம் கொல்லைப் புறத்தில் காயப் போட்ட துணியை மழை வந்தால் எடுக்கிற அவசர கதியில் துணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். முக்கால் வாசி துணி அடுக்குகள் காலியாக பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்க்கவா வெளியே இந்த மூதேவி க்யூல வரச்சொன்னான்னு எனக்குக் கடுப்பு. பக்கத்து வீட்டு குண்டு இங்கிலீஷ் மாமா இடுப்பு சைஸ்க்கு மட்டும் உள்ளாடை சல்லிசாக கிடைத்தது. அதில் ஒரு காலிலே என் முழு உடம்பும் போய்விடும், அவ்வளவு பெரிய சைஸ். பேசாமல் அதை எடுத்துக் கொண்டு அடுத்த தரம் ஊருக்குகுப் போகும் போது ஊரில் ஆல்டர் பண்ணி எடுத்துவரலாமா என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டால் திரும்பவும் அவருக்கு நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும், அத்தோடு அவருக்கு ஒரு துணிமணியும் கிடைக்கவில்லை என்ற எரிச்சலும் என் தலையில் விடியும் என்பதால் "என்ன பெரிய சேல்...எங்கூர்லலாம் ரெண்டு வாங்கினா ஒரு டின்னர் பவுல் குடுப்பாங்க தெரியுமா"ன்னு கிடைத்த குண்டு மாமா மலிவு விலை உள்ளாடையையும் திரும்ப கம்பியில் மாட்டிவிட்டு வந்துவிட்டேன்.
"இந்த இழவ விட்டா உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுல படாது. வெள்ளக்காரனப் பாருங்கோ என்னம்மா கேர்ல் பிரெண்டுக்கு ட்ரெஸ் எடுக்கிறான். நான் கூட உங்களுக்கு ரெண்டு சட்டை எடுத்திருக்கேன்...இவ்வளவு பெரிய கடையில் உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுக்கு தட்டுப் படலையா"ன்னு தங்கமணி வேப்பிலையடிக்க ஆரம்பித்துவிட்டார்.
"சரி சரி வருத்தப் படாத நாளைக்கு மெட்லன்ல உனக்கு ஜமாய்ச்சிருவோம், என்னச் சொல்லி குத்தமில்லை..எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார், பழனியில போய் ஒரு பரிகாரம் பண்ணின்னா எல்லாம் நிவர்த்தியாகிவிடும்"ன்னு கலாய்த்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்குப் பக்கதிலிருந்த இன்னொரு நல்ல கடைக்கு போய் நிறைய (சரி கொஞ்சமாய்) துணிமணிகள் வாங்கினோம்.
(சே வர வர ப்ளாக் போஸ்டல் கூட சினிமா மாதிரி சுபம் போட ஆரம்பித்துவிட்டேன் :) )
Sunday, January 06, 2008
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
Aiyah!!! me the first ... will come back and leave a detailed pinnoottam
Endrum Anbudam
Sriram, Boston
வழக்கமா ஆன்லைனில் இந்த சேல் எல்லாமே வருவதால் நமக்கு இவ்வளவு சிரமம் இல்லை. இந்த வருடம்தான் சும்மா ஒரு எக்ஸ்பீரியன்ஸ் அப்படின்னு சொல்லிக்கிட்டு நாலு மணிக்கு கடைக்குப் போனா நமக்கு முன்னாடி ஒரு ஆயிரம் பேர் நிக்கறாங்க. இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்ற முடிவில் அடித்துப் பிடித்து கடைக்குள் போய் காசு செல்வழித்து விட்டு வந்துட்டோமில்ல!
vikatan kooda compare panna odane 15 naaluku oru post poduratha?
porupppppa 1 week 1post podunga.
hey ur blog z really super, i really admire ur style of writing, itz gr8, can u write more
Attagaasam Thalaivaa !!! Sale...Sale...Sale... Nalla vizhundhu vizhundhu sirichean. Ingayum(US) Thanksgiving Sale-nu onnu irukku andha kodumai perum kodumai...
:-)
Arun.
Hello Dubuks,
ha..ha.. Sale..Sale... I am allergic to that. As usual you have painted the topic with your humour. I like your thangamani's comment. Athu yenna Kovannathosham? I thought you would have bought something on the Boxing day. Anyhow, I make all the purchase when I require since there are lots of hiccups in these sale.
Nice post.
Wish you a happy new year. Left a message on your phone.
=)
Sale(s) are both a blessing and a curse. OR is it a curse and a blessing. As long as there is no gumbal in the kadai, I like it. If not, to hell with sale. :D
Have fun! Good to see you back :)
Sema superunga Dubukks!
Nalla oru article.. arumaiya eluthiyirukeenga!!
Anbudan, Anand
ha ha ha.. ............................................
innum mudiyala.. sirichi mudichitu varen
hey dubukku
எப்படி தான் இப்படி பின்னுறீங்களோ, கலக்கல்!!! esp.
//"முதலாளி இன்னிக்கு இந்தக் கடையில் இருக்காரா இல்ல அங்க இருக்காரா"// very true!!!
//திரும்ப பில் கட்டும் போது இதே பிட்டைப் போட்டால் ஜிப் வைத்த மணிபர்ஸ் கேட்காமலே தருவார்கள்.// hahaahahhahaa ROTFL
//தங்கமணி நான் என்னம்மோ ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் யாருக்கோ சொந்தம்ங்கிறமாதிரி திசைக்கே வரமாட்டார்//அங்கயுமா இந்த விஷயம்!? :-)
//சளி கட்டிக் கொண்ட மாதிரி காறிக் காறித் துப்புவார் // chancey illa!!!
//எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார், பழனியில போய் ஒரு பரிகாரம் பண்ணின்னா எல்லாம் நிவர்த்தியாகிவிடும்// இந்த பிரச்சனை உங்களுக்குமா, எங்க ரங்குக்கும் பழனிக்கு ஒரு டிக்கட் போடனும் போல!! எல்லாம் ஒரே குட்டையில ஊரின மட்டைங்க !!!
:-) yet another super post!!
cheers
Deeksh!
happy new year to you and your family.vazhakkam pola kalakkal,kadaisila unga budget evaalvu thangamani budget evvalovu.enna kada vasalile edhaiyo thollacha madhiri ukaara rangamanis thaan niraya!!!!!!!!!
nivi.
girl friendnna niraya vangikodukkalammnu dubukku thalaivare feel panararu ,illaya boss!!!!!edhukkum kudupinnai venum.
nivi.
ஜி, சூப்பரா இருக்கு.
இன்னொரு தகவல்.
ஆரெம்கேவி விஸ்வநாதன் மூணு மாசத்துக்கு முன்னால ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டார்.
//இன்னொரு தகவல்.
ஆரெம்கேவி விஸ்வநாதன் மூணு மாசத்துக்கு முன்னால ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டார்.//
மூன்று மாசம் இல்லை ஆடுமாடு, ஒரு வருக்ஷம் இருக்கும்
kaamidi karai purandu oadudhu vazhakkam pola... komana dhosham - i think you are right, better do the pariharam. aanalum Vichu pera solli mani moolama discount vangaradhu ellam romba over... super-a poo suthureenga dubukks -- umakrishna
solla marandhutten.. next la ungalukkum aappa? hi hi.. nangalum artha rathiri 7:30 ku ezhundhu ponom, same here... onnu kooda kidaikkalai.. krishna 'unakku yendi indha velainnu' enna patha paarvai irukke, solla mudiyaadhu...idellaam sagajampa nu sollittu m&s la bill-a pottappram dhan manasukku nimmadhi aachu... umakrishna
தொடர்ந்து வரும் பதிவுகளில் பழைய டுபுக்கு ஸ்டைலை காண முடிகிறது. சூப்பர். :D
அந்த ஆரேம்கேவி பெயர் போட்ட ஜிப் வைத்த பர்ஸ் நம்ம எல்லார் வீட்டுலயும் குறைந்தது மூனாவது இருக்கும், இல்லையா? :)
இப்ப எல்லாம் கட்டை வெச்ச Big ஷாப்பர் பை குடுக்கறாங்களாம்.
அம்பி
இதே கதைதான் இங்கும் (US). தீபாவளிக்கு எழுந்திருப்பது போல் Thanks Giving Day காலையில் எழுந்து வர்ண, ஜாதி பேதமின்றி கருப்பரும், வெள்ளையரும், இந்தியரும் ம்ற்று உலகத்து மனிதர் எல்லாம் கொடும் பனியும் கொடிய குளிரும் தாக்கும் நவம்பரில் best buy, circuit city, staples என முன் கூட்டியே flyerகளை மேய்ந்து எங்கே போனால் நமக்கு வேண்டியது குறைந்த விலையில் கிடைக்கும் என ஆய்ந்தறிந்து lineல் மணிக்கணக்கில் நின்று வாங்கி வருவது பேரனுபவம்.
dubukku indha thadava poi (vichu irukkara)bitta podathinga.awar oru accidentla eranthutar.ennave namma oorkarara irunthutu update ahama irukire.
isthri potti
வழக்கம் போல சான்ஸே இல்லாத சூப்பர் பதிவு
//எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார்//
எப்படித் தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ?
:))
ஸ்ரீராம் - அண்ணே என்ன அப்பிடியே எஸ்கேப்பூ போல? :)) படிச்சீங்களா இல்லையா?
கொத்ஸ் - என்னாது ஆன்லைன்னா...அதெல்லாம் வீட்டுல ஒத்துக்கிறாங்களா...இங்க அத போங்காட்டம்ன்னு சொல்லிட்டாங்க. நல்ல வேளை நாலு மணிக்கு போகனும்ன்னு அடம் பிடிக்கலை. ஆனா நாலு மணிக்கு திறந்த கடைக்கு எட்டு மணிக்கு போனா சுனாமி அடிச்ச மாதிரி இருந்தது உள்ள.
அனானி1 - பார்த்தீங்களா நீங்க தானா அது. ஒரு பெயர போட்டுக்கலாம்ல...அப்பதானே அடுத்த தரம் கமெண்ட் போடும் போது உங்கள அடையாளம் கண்டுக்கின முடியும்
அனானி2 - உங்க பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி. அடிக்கடி போஸ்ட் போட முயற்சிக்கிறேன்.
அருண் - வாங்க ரொம்ப நன்றி தல. அந்தக் கொடுமைக்கு பேரு அங்கையும் கொடுமையா? :)))
பாலாஜி - எனக்கும் இந்த அலர்ஜி இருந்தது. வேப்பிலை வைத்தியத்துல குணமாயிடிச்சு. தங்கமணீஸ் வழியா வைத்தியத்த பத்த வைக்கிறேன் அடுத்த தரத்துக்குள்ள உங்களுக்கும் குணமாயிடும். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சிவா - :))
வித்யா - கூட்டமிருந்தா பிடிக்குமா உனக்கு...கோயில்ல கூட நல்ல கூட்டமிருக்குமே....:))
ஆனந்த்- உங்க பாராட்டுக்கும் ரொம்ப நன்றி ஹை ஆனந்த்.
டுபுக்கு டிசைப்பிள் - வாங்க மேடம் . புத்தாண்டுலாம் கொண்டாட்டங்கள்லாம் சிறப்பா இருந்ததா..
தீக்க்ஷன்யா- ஆஹா உங்க ரங்கமணிக்கும் இந்த தோஷம் இருக்கா...நீங்களும் இதே ரியாக்க்ஷன் தானா :))) ரங்கமணி தேச பிர்சனையா இருக்கும் போல இருக்கே. உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி மேடம்.
நிவி - உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பட்ஜட் பத்தி கேக்காதீங்க. நான் என்னம்மோ கடைகாரன் கூட பேசி சதி பண்ணிட்டேன்ங்கிற மாதிரி தங்கமணி கடுப்பில இருக்காங்க.
ஆடுமாடு - நன்றி ஹை. அட அப்பிடியா அடடா நம்மூர்காராரே..இது தெரியாம போஸ்ட்ல காமெடி பண்ணிடேனே
கிருஷ்ணா - தகவலுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் நம்மூர் பக்கமா??
உமா - வாங்க நன்றி. பூசுத்தறது - நான் எழுதறத பேஸ் வேல்யூக்கு எடுத்துகாதீங்க எதையுமே...சும்மா சிரிப்பாணிக்கு. ஆனா இது முற்றிலும் பொய் கிடையாது. போத்தீஸ்ல ஸ்கூல் பிரண்டோட சொந்தம். ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு தரம் எல்லாரும் ஒரே ட்ரெஸ் அங்க தான் எடுத்தோம். செம கவனிப்பு அன்ட் டிஸ்கவுண்ட். இரண்டு வருடம் முன்னாடி ஆரெம்கேவி போயிருந்த போது தங்கமணி வீட்டுல அங்க பழக்கம். அதுனால மேனேஜர் (பீட்பேக் புஸ்தகத்துல லண்டன் முகவரி போட்ட அப்புறம்) ஒரு சூப்பர் பையும் கணிசமான டிஸ்கவுண்டும் குடுத்தார்.
நெக்ஸ்ட் - ஆமாங்க செம ஆப்பு. டெபனாம்ஸும் அப்பிடிதான்:)) இதுகப்புறமும் அடுத்த நாள் கிருஷ்ணா எம்&எஸ்க்கெல்லாம் வந்தாரா என்ன? ;P
அம்பி - நன்றி ஹை. ஆமாம் ஆனா குறிப்பிட்ட அமௌவுண்ட்க்கு மேல் வாங்கும் சில பேருக்குமட்டும் நல்ல பை குடுக்கிறாங்க. எனக்கு போனதரம் தங்கமணி அண்ணாவால் ஒரு நல்ல பேக் கிடைத்தது:))
திரிசங்கு - அட ஹோம்வொர்க்லாம் பண்ணி கலக்கறீங்க. மணிக்கணக்கில் நின்னு வாங்குறது உங்களுக்கு பேரனுபவமா ...நீங்க கல்யாணமான அம்மணியா ;P
இஸ்திரி பொட்டி - வாங்கய்யா உங்களுக்கும் நம்மூரா ரொம்ப சந்தோஷம்வே. மன்னிசிருங்க அந்த விஷயத்த தெரிஞ்சிக்காம போயிட்டேன்.
கைப்புள்ளை - வாங்க தல. ரொம்பநாள் கழிச்சு நம்ம பேட்டையாண்ட வந்திருக்கீங்க. உங்க பாரட்டுக்கு ரொம்ப நன்றி சாமியோவ்.
புத்தாண்டு/பொங்கல் வாழ்த்துக்கள். ரொம்ப லேட்டா சொல்றேன்னு திட்டாதீங்க. (அதே பின்னி பெடலேடுக்கற வேல தான்!) ரொம்ப காலத்துக்கு அப்புறம் நாட்டு நடப்பு பத்தி தெரிஞ்சுக்கலமே அப்படின்னு bloghopping பண்ணினேன். ஸ்ரீதேவி, ஏஞ்சலினா, சன்னா மசாலான்னு சும்மா கலக்கிடீங்க. தங்கமணி மற்றும் ஜூனியர்ஸ் சௌக்கியமா?
isthri potti -peru vachachu.POST ENGA.
கோமண தோஷம்.....பழனி பரிகாரம்...
நல்லா இருக்கு. பரிகாரம் பண்ணும் போது, நெரிசல்-ல அதுவும் போய்டாம பாத்துக்கோங்க.
அட பாவி
Genderயே மாத்திட்டயே டுபுக்கு! Shopping என்ன பெண்களின் உரிமை மட்டும்தானா! உம்மை சொல்லி குத்தமில்ல. உமக்கு US lifeஐ பத்தி தெரியலை அவ்வளவுதான்! உலகத்திலேயே ஆண்கள் விரும்பி shop செய்யும் நாள் US Thanks Giving Day Sale தான். இதில் இரண்டு வகை Sale உண்டு. Staples, best Buy, Office Depot, CompUSA இன்னும் பல கடைகள் electroics பொருட்களை sale செய்யும். Macys, Kohls, Sears போன்ற கடைகள் துணிமணி, cookware, shoes, நகைகள் இன்னும் பிற சமாச்சாரங்களை sale செய்யும். அங்கெல்லாம் பெண்கள் கூட்டம் அலை மோதும். மேற்கண்ட எலெச்ட்ரானிக்ஸ் saleல் 95% ஆண்கள்தான். 42" LCD TV - $700, HP laptop - $ 275 என்று வாரி வழங்குவார்கள். இது தவிர camera, computer accessories என்று பல itemகள் தரைமட்ட விலையில். சில itemகள் mail in rebateற்கு பிறகு freeஆகவே கிடைக்கும். இதெல்லாம் 4 - 5 மணி நேரத்துக்குதான். பிறகு கடை ஈயடிக்கும். உலகத்திலெயே மிக குறைந்த விலைக்கு electronics பொருட்கள் கிடைப்பது USல்தான் especially on Thanks Giving Day. ஆண்கள் வருஷத்தில் 4 மணி நேரமாவது சுதந்திரமாக சந்தோஷமாக இருப்பதை கண்டு உமக்கென்னையா வயத்தெரிச்சல் !!
இனிமேலும் கிணத்து தவளையாட்டம் இருக்காதே அப்பு. மத்த நாட்டு வாழ்க்கைகளையும் தெரிஞ்சுக்குங்க டுபுக்கு.
அடுத்த Thanks Giving Saleக்கு மறக்காம USக்கு நம்ம guestஆ வந்துடுங்க.
வாரீயளா!
ஹலோ புத்தாண்டு போயி, பொங்கலு வந்து, தமிழ்ப் புத்தாண்டு வரப்போகுது...என்னாச்சு அடுத்த பதிவை காணோம்.
சொன்ன வாக்கை காப்பாதணும்யா...
கிருத்திகா - வாங்க ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க. நம்ம பேட்டையில எல்லாரும் நலம் அங்கும் அப்பிடியேன்னு நம்புகிறேன். உங்களுக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
அனானி - நீங்க இஸ்திரி பொட்டிக்கிட்ட தானே கேக்கறீங்க? (புரியலை அதான்)
இராமச்சந்திரன் - வாங்க தல. ஊர் ட்ரிப்லாம் சூப்பரா இருந்ததா? அப்புறம் ஊர்ல என்ன விசேஷம்.
திரிசங்கு - அண்ணே கோச்சிக்காதீங்க. நீங்க சொன்ன கடை பெயரெல்லாம் ஒழுங்கா பார்க்காமா போட்டுட்டேன். நான் சொன்னது கல்யாணமான அம்மணீஸ்லாம் ஷாப்பிங் முடிச்சிட்டு க்யூல நிக்க ரங்கமணிய கூட்டி வந்திருப்பாங்க. அவங்களுக்கு அது பேரானுபவமா இருக்கும்ங்கிற அர்தத்துல. மத்த படி நீங்க சொன்ன கடையில ஒரு கடைக்கும் (ஸ்டேபிள்ஸ்), பி.ஸி.வேர்ல்ட், மேப்ளின் இத்யாதிக்கும் இங்க நானும் போய் கொஞ்சம் பொறுக்கிட்டு வந்தேன். இந்த கிணத்துதவளையையும் கூப்பிட்டிருக்கீங்க..தெரிஞ்ச்சிகிறதுக்காகவாது வந்திருவோம். ரொம்ப நாளா அந்த பக்கம் ட்ரிப் ஒன்னு பாக்கி இருக்கு.
ஆடுமாடு - சாமி பொட்டி ஊத்திக்கிச்சுங்கோவ். ஓவராயில்லுக்குப் போயிருக்கு. இருந்தாலும் நீங்க சொல்றது கரெக்ட்டுத் தான். (ஹீ ஹீ இன்னிக்கு பேருக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்லா)
Post a Comment