Thursday, December 20, 2007

இவனுங்க திருந்தவே மாட்டானுங்க

டீ.வியில் "குரு" படம் ஓடிக்கொண்டிருந்தது. "நான் வணங்குகிறேன்...சபையிலே" - துணிப் பஞ்சத்தில் அடிப்பட்ட ஸ்ரீதேவி ஆடுகிற குத்தாட்டத்துக்கு என்னம்மோ பரதநாட்டியம் மாதிரி நடராஜர் சிலையெல்லாம் வைத்திருந்தார்கள். நடராஜர் கையில் இருக்கிற உடுக்கையை கீழே வைத்துவிட்டு கண்ணைப் பொத்திக்கொள்ளாமல், என்னை மாதிரி நைஸா ஜல்சா டேன்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.

சாய்பாபா மாதிரி முடியை வைத்துக்கொண்டு ஒரு வில்லன் ஜன்னலிலிருந்து துப்பாக்கியால் கமலை குறிவைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீதேவி பூவெல்லாம் நடராஜர் மேல் போட.. நடராஜர் இப்பவும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கண்ணை பொத்திக் கொள்ளாமல் கவுண்டமணி மாதிரி "ஹ.. லெப்ட்ல பூசு ஹ...ரைட்டுல பூசு இங்க பார் இங்க பூசு"ன்னு போஸ் குடுத்துக் கொண்டிருந்தார்.

நடராஜரே கண்ணை முடிக்கவில்லை...இந்தப் படத்தை பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போது நான் எதுக்காக கண்ணை மூடிக்கொண்டேன் என்று இப்ப வருத்தமாக இருந்தது.

"மாடியில குழந்தை குளிச்சிண்டு இருக்கா துண்டு எடுத்துக் குடுத்துட்டு வாங்க" அடுக்களையில் இருந்து குரல் வந்தது. அதானே...அதெல்லாம் கரெக்டாக மூக்கில வேர்த்திரும்.

ஸ்ரீதேவியைப் (இப்ப) பிடிக்காவிட்டாலும் பாட்டு நல்ல பாட்டே என்று கேட்டுக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம் இரும்மா...நானே இங்க கணக்கு டேலியாகாம மணடைய பிச்சிக்கிட்டு இருக்கேன்.." என்ன கணக்குன்னு அடுத்து குடைச்சல் கேள்வி வராது என்ற நம்பிக்கையில் அடிச்சிவிட்டேன். மனுஷனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம்ன்னு சுவாமி சுகபோதானந்தா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே கணக்கு குழப்பத்திலிருப்பவன் மாதிரி குரல் குடுத்ததால் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்தது. ஆனால் இரண்டே நிமிடம் தான்...பாட்டு நாலரை நிமிடம். ஸ்ரீதேவி இன்னும் எனர்ஜி லெவெல் குறையாமல் ஆடிக்கொண்டிருந்தார். பாட்டும் நல்ல பாட்டு வேற.

"இப்ப என்ன கணக்கு?" வந்தே விட்டாள். பெண்களுக்கு பொறுமை இல்லை என்று எந்த மஹானுபாவர் கண்டுபிடித்தார்? கைக்கு கிடைத்த மகளின் ஹோம்வொர்க்கை கையில் திணித்து விட்டு..."எல்லாம் கரெக்டாக செஞ்சிருக்கான்னு பாரு...மேத்ஸ்ல இந்த தரம் எப்படியும் சென்டம் வாங்க வைச்சிரனும்...போன தரம் மாதிரி கோட்டை விட்டுரக்கூடாது என்ன.. அதான் டேலி பண்ணிகிட்டு இருக்கேன்...கவனமா எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாரு" துண்டெடுக்க நாலு கால் பாய்ச்சலில் மாடிக்கு போயேவிட்டேன். இல்லாவிட்டால் கணக்கு கணக்குன்னு ஸ்ரீதேவியக கணக்கு பண்றேன் என்று தவறாக அனர்த்தம் ஆகிவிடும் பாருங்கள் அதான்.

கிறுக்குப் பயலுங்க...இந்தப் படமெல்லாம் இப்பத் தான் போடுவானுங்க...ராத்திரி தேவுடு காத்திட்டு உட்கார்ந்திருந்தா "கும்பமேளா"ன்னு கஞ்சா அடிக்கிற சாமியார்களைப் பற்றி டாக்குமென்டரி போடுவானுங்க. இடியட் பாக்ஸுன்னு சும்மாவா பேருவைச்சிருக்காங்க.

"இங்க வா என்ன அவசரம்..?...பாரு தலையெல்லாம் இன்னும் ஈரமா இருக்கு...நல்ல துவட்டு ஜலதோஷம் பிடிச்சிக்கும்" - கீழே இந்நேரம் கண்டுபிடித்தாகியிருக்கும். உடனே போய் மாட்டிக்கிறதுக்கு நான் என்ன மெகா சீரியல் புருஷனா. "...என்ன துவட்டியிருக்க...நல்ல ஈரம் போகவேணாமா...அந்த ஹேர்டிரையர எடு...போட்டுவிடறேன்"

"சாப்பாடு ரெடி டயமாச்சு...கீழவாங்க ரெண்டு பேரும்" சவுண்டு விடறது எனக்குத் தான். வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை..."சரி வா கீழ போய் சாப்பிடலாம்"

"என்ன சாப்பாடு சாப்பிடற...? ஊர்ல எல்லாரும் தென்னாலிராமன் குதிரை வளர்த்த மாதிரி வளர்த்திருக்கான்னு சொல்றாங்க...இங்க வா நான் ஊட்டிவிடறேன்...என்ன சாதம் போட்டிருக்க குழந்தைக்கு...கூட கொஞ்சம் போடு " எதிராளி அடி போடறதுக்கு டயமே குடுக்கக் கூடாது நாம் முதல் அடி போட்டுறனும் புதுப்பேட்டையில் செல்வராகவன் சொல்லியிருக்கார்.

"நல்ல காய்கறியெல்லாம் சாப்பிடனும். அதான் ஹெல்தி. யோகா சொல்லித் தரேன் அப்பா புக்குல நிறைய படிச்சிருக்கேன்...முதல்ல பிரீதிங் எக்ஸர்சைஸ்...அப்புறம்..."

"இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்.." பாட்டு அடுக்களையிலிருந்து வந்தாலும் மெசேஜ் எனக்குத் தான். கண்டுக்கவே கூடாது. இருக்கானோ இல்லையோ ஸ்கீரினப் பார்த்து "என்கிட்ட வம்பு வைசுக்காதேன்னு..அப்புறம் அதாகிடுவ இதாகிடுவன்னு" ஹீரோக்கள்லாம் சவுண்டு குடுக்கற மாதிரி எதாவது உளறிக்கிட்டே இருக்கனும். இல்ல எதிராளி சுதாரிச்சிக்குவாங்க.

சானல் சிபிபீஸ்க்கு மாறியிருந்தது. டெலிடப்பீஸ் லூஸு மாதிரி கெக்கபிக்கன்னு சிரித்துக் கொண்டிருந்தது. சதிலீலாவதி எங்க சித்தப்பா பொண்ணு தான்னு பண்ற சதி இது. நாம சேனல திருப்பி மாத்தி நம்மை மறந்து பார்த்துகிட்டு இருப்போம்..வந்து கையும் கள்வுமா மாட்டலாம்ன்னு சதி. "எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.." பாட்டு கூட நல்லா குன்ஸா தான் இருக்கும். பாட்டு ஆரம்பிச்சிருக்கும் இந்நேரம். மனுஷனுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப முக்கியம். பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா?

இதாவது பரவாயில்ல ...என்ன ரசனைப்பா...மனுஷனுக்கு ரசனை ரொம்ப முக்கியம். வயசான ஹாலிவுட் தாத்தாக்களையெல்லம் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டு....ஜார்ஜ் க்ளூனி, ஷான் கானெரி...ஏன் அவங்க தாத்தாவை ஏன் விட்டுட்டீங்க...? நாங்க மனோரமாவைப் பார்த்து ஜொள்ளு விடறோமா?..அப்பிடி ஒரு கபோதிய மட்டும் என் கண்ணுல காட்டச் சொல்லுங்க.......ரசனை..ரசனை..மனுஷனுக்கு...ரொம்ப முக்கியம்.

"என்ன முனுமுனுப்பு??...சேனல மாத்தனும் போல இருக்குமே...?"

"சே...சே...என் ரசனைய பத்தி என்ன நினைச்சிகிட்டு இருக்க?....உங்கள மாதிரியா ..ஏதோ சூர்யானா கூட ஒத்துக்கலாம்..."

"என்னிக்கு நீங்க சுற்றும் விழிச் சுடரேக்கு ஆடிக் காட்டினீங்களோ அன்னிக்கிலெர்ந்து எனக்கு அவன பிடிக்காம போயிடிச்சு..."

"ஹ...அதெல்லாம் இல்ல...நீங்களெல்லாம் ஓவரா வழிஞ்ச வழிசல்ல மவனே ஒற்றே படம்...அப்படியே ஓய்ஞ்சு போயிட்டான்...இப்ப பாரு விளக்கெண்ணை ஊத்தினா இப்படி எரியும் மண்னெண்ணை ஊத்தினா அப்பிடி எரியும்ன்னு பஸ்ஸடாண்டு பக்கம் பெட்டர்மாஸ்க் விளக்கு வைச்சு லேகியம் விக்கிறவன் மாதிரி டயலாக் பேசிக்கிட்டு திரியறான்".

"இங்க மட்டும் என்ன வாழுதாம்...மீரா ஜாஸ்மினாவது என்ன ஆச்சு?...மல்லிகா கபூர்...அந்த ஒரு படத்துக்கு அப்புறம் தமிழ்ல படத்தையே காணோம்..." இன்னும் பல பெயர்கள் வர ஆரம்பித்தன.

"மனுஷன் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடட்டுமா...காலைலேர்ந்து பசி உயிரப் போகுது..." வீரம்னா என்ன தெரியுமா பயப்படாத மாதிரி நடிக்கத் தெரிவது குருதிப்புனல்ல தலைவர் சொல்லியிருக்கார்.

ஆய்ஞ்சு ஓய்ஞ்சு கிடைச்ச கேப்ல ரிமோட உஷார் பண்ணி சேனல மாத்தினா....நம்பியார் குழல் புட்டு செய்யற கேனை கையில மாட்டிக்கிட்டு.."மைக் மைக்"ன்னு மைக்கே இல்லாம...பிளாக் அண்ட் ஒயிட் டீவியில சாய்பாபா வில்லன் கமலை காரில் துரத்துவதை பார்த்துக் கொண்டு ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துக்கிட்டு இருக்கார். கூட இருக்கிற நடிகை வேற ஓவரா ரியாக்ஷன் காட்டுது.

இனிமே சண்டைக் காட்சி தான். தூ இதெல்லாம் ஒரு படமான்னு டீ.வியை அணைத்துவிட்டேன். இவனுங்க திருந்தவே மாட்டனுங்க...

32 comments:

rv said...

:))))))))))))))))))))))))

எதக் கோட் பண்றது எத விடறது...???

நாகை சிவா said...

//இவனுங்க திருந்தவே மாட்டனுங்க...//

சத்தியமா மாட்டானுங்க.. (மாட்டோம்) :)

Radha Sriram said...

சரளம் சரளம்........அப்படி ஒரு சரளமா வந்து விழுந்திருக்கு ஒவ்வொரு வார்த்தையும்......:):)

Girl of Destiny said...

//"என்னிக்கு நீங்க சுற்றும் விழிச் சுடரேக்கு ஆடிக் காட்டினீங்களோ அன்னிக்கிலெர்ந்து எனக்கு அவன பிடிக்காம போயிடிச்சு..."

"ஹ...அதெல்லாம் இல்ல...நீங்களெல்லாம் ஓவரா வழிஞ்ச வழிசல்ல மவனே ஒற்றே படம்...அப்படியே ஓய்ஞ்சு போயிட்டான்...இப்ப பாரு விளக்கெண்ணை ஊத்தினா இப்படி எரியும் மண்னெண்ணை ஊத்தினா அப்பிடி எரியும்ன்னு பஸ்ஸடாண்டு பக்கம் பெட்டர்மாஸ்க் விளக்கு வைச்சு லேகியம் விக்கிறவன் மாதிரி டயலாக் பேசிக்கிட்டு திரியறான்".
//

ஜ்ட்fஹ்fலநொஇம்டிந்ய்
LOL!!!!!!!!!!!!!!!
எப்டி... இதெல்லாம் எப்டி வருது???

பி.கு. விழுந்து விழுந்து சிரிச்சதுல மண்டை கீபோர்ட்-ல பட்டு என்னலாமொ டைப் ஆயிடுச்சு... தடங்கலுக்கு வருந்துகிறேன்.

கால்கரி சிவா said...

எப்படி சார் இப்பிடி

sriram said...

ஹே ராம்
எத்தனை முறை பட்டாலும் புத்தி வராது, என்னை எத்தால் அடித்து கொள்வது? ஆபிசில் டுபுக்கு பக்கம் படிக்க கூடாது என்று சபதம் எடுத்தாலும் ஒரு சபலம்...
Cabin ல தனியா சிரிக்கிறதை கேட்டு மற்றும் ஒரு முறை Collegues வந்து கேட்க மானமே போச்சு.
சரக்கே இல்லாம சிரிக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும் டுபுக்கு.
BTW வாரத்துக்கு மூன்று போஸ்ட் Commitment என்ன ஆச்சு??
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

B o o said...

எங்கயோ போய்ட்டீங்க டுபுக்கு! நான் சிரிச்ச சிரிப்பு அங்க கேட்ருக்குமே? அது போறாதுன்னு, அவர வேற உட்கார வச்சு, படிச்சு காமிச்சு, நாங்க ரெண்டு பேரும் சிரிச்ச சிரிப்புல குழந்தை தூக்கத்துலேந்து எழுந்து,... ஒரே ரகளை தான். வாரம் மூணு போஸ்ட் வேண்டாம், ஒண்ணாவது எழுதுங்க ப்ளீஸ்.

அது சரி. நாங்க ஜார்ஜ் க்ளூனி, ஷான் கானெரி எல்லாம் பாக்கும் போது, பக்கத்துல ஒரு காத்ரீன் ஸீடா ஜோன்ஸோ, ஜூலியா ராபர்ட்ஸோ இல்லாமையா போய்ட்டாங்க?!!

Boston Bala said...

எதக் கோட் பண்றது எத விடறது...???

அதே அதே :))

Anonymous said...

\\ Cabin ல தனியா சிரிக்கிறதை கேட்டு மற்றும் ஒரு முறை Collegues வந்து கேட்க மானமே போச்சு //

அதே அதே :))

பினாதலோட 'Wifelogy' தொடர்ச்சியோ?

-அரசு

dubukudisciple said...

guru!!
thalaipu ungala thaane kurikuthu...

dubukudisciple said...

naanga entha herova parthalum paakthula oru azhagana heroine iruka pora.. neengalum enjoy panna poreenga. idula eduku ivalavu peria pulambal

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

---))))))

ஆடுமாடு said...

ஐயோ ஐயோ ஒரே சிரிப்பாணியா இருந்துச்சு. எப்டியா இதெல்லாம்?

//மல்லிகா கபூர்...அந்த ஒரு படத்துக்கு அப்புறம் தமிழ்ல படத்தையே காணோம்...//

இந்தா வந்துட்டாங்கல்லா... 'புலி வருது' படத்துல. டி.வி.டி, திருட்டு சி.டி கிடைச்சா உடனே பார்க்கவும். உங்க காமெடியை மிஞ்சுது... சிரிச்சு சிரிச்சு...அல்சரே வந்துட்டுனா பாருங்களேன்.

Anonymous said...

//பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா?//

Lol ,dubukku !I have been a silent reader for very long.No more!You simply rock ! Indha maari 4 post- vendam onney oonu porum ,oru vaarathukku entertainment nichayam.

ps:Generalla thaaikulathin aadharavu melum koodi pochunnu Thangamani kovamaaitanga pola irukkey :)?

Anonymous said...

- gap vidama pesiranum illa gap illama adi vilum
ennga veetu thenaliraman kuthirai thanga ippadi yosikithu
engaluku ippo vikatanku adduthu unga post than. very nice

Anonymous said...

டுபுக்கு அண்ணாச்சி

நாங்க நெனச்சோம்!! நீங்க தைரியமா சொல்லிட்டிங்க. 'சாம்பார் 2' சூர்யாவை இந்த பத்திரிக்கைகள் 'hype' பண்ணி தூக்கி நிறுத்த முயற்சி பண்றத பார்த்தா சிரிப்பா வருது. 'வேல்' படம் பார்த்திங்களா. அவனவனுக்கு 'super star'னு நெனப்பு. வெளக்கெண்ணை சிவகுமார் part 2 வை எத்தனை நாள்தான் பார்க்கறது.

உங்களின் 'வேல்' பட விமரிசனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

காட்டாறு said...

சூப்பர்.
:-))

Anonymous said...

kalakittenga.awesome."guru"padam marubadiyum podumbodhu thangamani madam please disturb pannatheenga.o.kay vaa.lifella evallov kashtam ungallukku?sudhandirama oru padam pakka mudiyutha!!!!!!!!!!
nivi.

Anonymous said...

One of the many silent readers of Dubukku. This is an awesome post.

Eppidi intha mathri yosichu ezhuthiringa.... siruchu siruchu veetula ellarum romba vithyasama parkaranga.....

Look forward to some more good posts

Aani Pidunganum said...

Hello, Thala

Vazhakkam pola saravedi thaan. Padam enna padamnu sollaveh ellaiyah!, Edho Sridevi adina sari, enna paatu, enna padamnu sollunga, naanum Kannaipothikama paarka try pannaraen,

With you a happy newyear & Happy christmas

Aani

Veera said...

//* பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா *//

Yeppadi thaan ippadi yellaam yosikkareengalo... mudiyala.. mudiyala... inime unga blog-i padikkave poradhu illa... office-la.. :)

ambi said...

அப்படி ஒரு சரளமா வந்து விழுந்திருக்கு ஒவ்வொரு வார்த்தையும்......:):)

மத்த பதிவுகளை விட இந்த பதிவின் நடை(flow) ரொம்ப இயல்பா வந்ருக்கு. எல்லாம் அனுபவம் பேசுது இல்லையா? :p

Deekshanya said...

ROTFL :-) super!! Seasons greetings to yourself,wife and kids! May the coming new year be the best for you in everyway!!
-Deeksh

Jeevan said...

Athukkula mudinchiducha, fighting scene’a pakkalamnu irunthean…. :( as always super thala!

Happy New Year buddy, have an wonderful year with lots of smiles and laught :)

Vidya said...

Happy New Year Dubukku!

Anonymous said...

மனுஷனுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப முக்கியம் - unga sagippu thanmaiya paarattiye aaganum. Superb post in the new year!

paatha thangamani ku bayapadaadhavar maadhiriye irukeeenga, aana unmaiyaa thangamani naa ivalavau bayamaa? kuruthi punal-la thalaivai sonna advice-a nallaave follow pandreenga :-) umakrishna

Dubukku said...

இராமநாதன் - மிக்க நன்றி. பாராட்டறதுக்குன்னு எடுத்துக்கிறேன் ;)

குட்டிபிசாசு - :))

நாகை சிவா - அதானே அதெல்லாம் செஞ்சிருவேமாட்டோம்ல :)

ராதா ஸ்ரீராம் - மிக்க நன்றி மேடம். ஊக்கமாக இருக்கு

கேர்ல் ஆப் டெஸ்டினி - ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. இந்த போஸ்ட் உங்களுக்கெல்லாம் இவ்வளவு பிடிக்கும்ன்னு எதிர்பார்கலை.

கால்கரி சிவா - ஐய்யைய்யோ எனக்கே தெரியலைங்க..தெரியாம வந்திரிச்சுன்னு நினைக்கிறேன்

ஸ்ரீராம் - மிக்க நன்றி ஸ்ரீராம். உங்களை மாதிரி இங்க கமெண்ட் போடறவங்களுக்கெல்லாம் தான் நான் நன்றி நொல்லனும். எல்லாம் உங்க ஊக்கம் தான்.அப்பிடியே சரக்கே இல்லைனு உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்க :) வாரம் மூனு போஸ்ட் ...கொஞ்சம் டைம் குடுங்க கூடிய சீக்கிரம் அந்த ஸ்பீடுக்கு வந்திருவேன்ன்னு நம்றேன்.


Boo- ரொம்ப நன்றி மேடம். நீங்க சிரிச்சதப் பார்த்தா உங்க வீட்டிலயும் இந்த டயலாகெல்லாம் ஓடியிருக்கும் போல இருக்கே :)) ஜார்ஜ்ஸ் க்ளூனி உங்களமாதிரி ஆட்களை வைச்சு தான் சொன்னேன் :))

பாஸ்டன் பாலா - நீங்களும் பாராட்டி சொன்னதா எடுத்துக்கிறேன் ;)

அரசு - மிக்க நன்றிங்க. பினாத்தலாரோட வைபாலாஜியெல்லாம் பெரிய லெவல்ங்க...:))


டுபுக்கு டிசைப்பிள் - அதே அதே அத அப்பிடிதான் சொல்லிப்பேன் வீட்டுல :)) பக்கத்துல இருக்கிற ஹீரோயினை பார்த்தாலும் புலம்புவோம்ல

சிவா - :))

ஆடுமாடு - நல்லவேளை சொன்னீங்க...இந்தா போய் புலி வருது எடுத்துவந்துருவேம்லா. உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி அண்ணாச்சி


ஆரெஸ்- உங்க அமைதியை இந்த போஸ்ட் உடைத்தது பற்றி மிக்க்க மகிழ்ச்சி :)) அடிக்கடி வாங்க. தங்கமணி அதுக்கெல்லாம் கோச்சிக்கவே மாட்டாங்க :))

அனானி - வாங்க. விகடனோட கம்பேர் பண்ணி புளகாங்கிதமடைய வைச்சிட்டீங்க... இதெல்லாம் எனக்கே ஓவர்ன்னு தெரிஞ்சாலும் குஷியாயிருந்தது. உங்க பாராட்டுக்கு ரொம்ம்ம்ப நன்றிங்க அடிக்கடி வாங்க.

ஸ்ரீதர் - ஆமாங்க இவங்க அலம்பல் தாங்கலைங்க. வேல் - அது படம்ன்னு விமர்சனம்லாம் பன்ணச்சொல்றீங்க...ஓவர்ங்க இது :)) வேணும்னா ஒத்த வார்த்தைல விமர்சனம் பண்ணலாம் - "அசின்" :)))))

ஆடம் - நான் கேட்ட சைட் இது இல்லைங்க... :))


காட்டாறு - நன்றி ஹை :))


நிவி - அதானே உங்களுப் புரியுது...இங்க இனிமே தான் புரியணும் :)) ரொம்ப நன்றிங்க உங்க சப்போர்ட்டுக்கு

டுபுக்கு ரசிகன் - ஏங்க இந்த பெயர் வேண்டாம்ங்க...கூச்சமா இருக்கு. உங்க பாராட்டுக்கு நன்றிங்க...எல்லாம் நீங்க குடுக்கிற ஊக்கம் தான். ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். நன்றி.

ஆணி - போஸ்ட்ல ஸ்ரீதேவிங்கிற வார்த்தைய தவிர வேற எதுவும் தெரியலையா? நான் படம் பெயர் சொல்லைலையா. சரி சரி (வியர்வைய) தொடச்சிக்கோங்க. உங்களுக்கும் உங்கள் கும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வீரா - வாங்க ரொம்ப நன்றிங்க.. எல்லாம் நீங்க ஏத்துற ஏத்தத்துல தான் வண்டி ஓடுது :)) ரொம்ப நன்றி ஹை

அம்பி - நன்றி ஹை. டேய் அனுபவம் கினுபவம்ன்னு வம்புல மாட்டிவிட்டுறாதடா :))

தீக்க்ஷன்யா - ரொம்ப நன்றி மேடம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜீவன் - ரொம்ப நன்றி ஜீவன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வித்யா - வாம்மா ரொம்ப நன்றி ஹை. உனக்கும் உங்க வூட்டுக்காரருக்கும் நம்ப சைட்லேர்ந்து மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

உமா - ரொம்ப நன்றிங்க. ஆமாங்க நான் இங்க அவளுக்குப் பயப்படுற மாதிரியும், எங்க அம்மா அப்பா முன்னாடி அவ எனக்குப் பயபடுற மாதிரியும் இப்படித்தான் நடிச்சுப்போம் :P

Anonymous said...

ஏன் கண்ண மூடினீங்கன்னு எனக்கு புரியுது.. அந்த படத்துக்கு கொஞ்ச நாள் முன்னால வந்த ஜகன்மோகினில ஜெயமாலினிய பாத்த பயம் போயிருக்கல, அப்படித்தானே?

Anonymous said...

Excellent!...

Anonymous said...

summa nachunu irruku !!!

dofollow social bookmark said...

nice commedy.. thanks for the sharing

Techbee said...

Super Blog...
I'm Exporting More...Pls post.
Thanks..
Online Jobs India

Post a Comment

Related Posts