Thursday, August 30, 2007

மொக்கை

ஆமாங்க வேலை பின்னி பெடெலெடுக்குதுங்க (ஆபிஸிலயும் :) ) பாரிஸ் ஹில்டன் யாரு பாரதியார் பேத்தியான்னு கேக்கற அளவுக்குப் போயிடுச்சுனா பார்த்துக்கோங்க. "இருடீ...நாலு அனானி கமெண்ட் போடறேன்..அப்பதான் சரியா வருவ"ன்னு அடிக்கடி மிரட்டும் தங்கமணியே "இன்னா ப்ளாக் அவ்வளவுதானா புட்டுக்கிச்சா"ன்னு நக்கல் விட ஆரம்பித்துவிட்டார். சரி சோகத்தை விட்டுவிடுவோம் அப்புறம் நாட்டுல என்ன விசேஷம்? போன பதிவில் ஷ்ரியாவை ஏன் அமைச்சரவையில் சேர்க்கவில்லை என்று நிறைய பேர் கேட்டிருந்தார்கள் அக்சிடென்ட் ஆன அம்பாசிடருக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் இல்லை என்று கேபினெட் உறுதியாக இருக்கிறது. இதில் அபிஅப்பா சின்னத் திரை தீபாவெங்கட்க்கு ஒரு சீட் வேணும்னு துண்டு போட்டு இடம் பிடிக்கப் பார்த்தார். அபி அப்பாஆஆஆஆஆஆஆஆ என்னத்த சொல்ல உங்களை....:)))


டி.வி நிகழ்ச்சிகளை ரொம்ப எதிர்பார்த்து பார்க்கிற பழக்கம் இப்போ ரொம்ப நாளா இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னாடி இங்க சன் டி.வி போட்ட புதுசுல அட நாலு வருஷம் கேப் விட்டுப் பார்த்தாலும் கதை புரியுதேன்னு காய்ஞ்ச மாடு மெட்டி ஒலி பார்த்த மாதிரி கோலங்கள் கிறுக்கு பிடிச்சி அலைந்திருக்கேன். கொஞ்ச நாள்லயே பித்தம் தெளிஞ்சு இந்த கருமத்துக்கு கே.டிவியில் எட்டு மணிக்குப் போடும் படங்களே பார்க்கலாம்ன்னு அதையும் கொஞ்ச நாள் பார்த்து காதல், தாலி, தாய்மாமா, நாய்க்குட்டி இவற்றில் எல்லாம் உபதேசம் பெற்று மூன்றாம் நிலைக்கு அப்புறம் உள்ள மோன நிலையை தொட்டுவிட்டு அப்புறம் அதுவும் வேலைக்காகாமல் நமக்கு எப்ப வேணா பார்த்தாலும் புரிய மாதிரி நடிக்கும் வெள்ளைக்கார பாப்பாக்கள் பக்கமும் திரும்பிவிட்டேன். இருந்தாலும் சனிக்கிழமைகளில் கொத்து பரோட்டா செய்யும் வேளைகளில் நைட்டி அணிந்த கணவர் கான்சப்ட் ஐடியா குடுத்த மகானைத் திட்டிக் கொண்டே திருவாளர் திருமதி (அப்போ தான் நான் எங்கூட்டுல கொத்து பரோட்டா செய்வேன்..) பார்க்க ஆரம்பித்தால் கலக்கப் போவது யாரு ஆரம்பிக்கும் போது நான் தான் என்று கரெக்டாக கொத்துபரோட்டா ஓடவைக்கும்.

சமீபத்தில் எதிர்பார்த்து பார்க்க வைத்திருக்கும் நிகழ்ச்சி "ஊ லலாலா". தமிழ்நாட்டில் இசைக்குழுக்களிடையே நடத்தும் போட்டி. ஏகப்பட்ட பில்டப்களில் இரண்டு எபிசோட்கள் இருந்தாலும் மூன்றாவதிலிருந்து கலக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கலந்து கொள்ளும் அணிகளின் திறமை வியக்க வைக்கிறது, வெட்கம் கொள்ளச் செய்கிறது. மக்கள் இசையில் சுத்திவிட்டு சுளுக்கெடுக்கிறார்கள். அதிலும் முதல் போட்டியில் கலந்து கொண்ட "அகம்" குழுவின் சொந்த கம்போசிஷன் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முதல் தரம் கேட்கும் போதே ஜிவ்வென்று இருந்தது. அவர்கள் ஈ.மெயில் கிடைத்தால் ஒரு பெரிய சபாஷ் போடலாம் என்று நினைக்கவைத்தது. இந்த வாரம் வந்த "ஓம்" குழுவும் கலக்கிவிட்டார்கள். சென்னை டியூன்ஸின் (இல்லை மெட்ராஸ் டியூன்ஸா?) "சங்கரபாண்டி" பாடகர் சும்மா அனயாசமாக கலக்கினார். நாட்டுப்புற குழுக்கள் எதுவுமே கால் இறுதி சுற்றுக்கு தேறவில்லை என்பது வருத்தமாக இருந்தது. மதுரையில் பட்டயக் கிளப்புகிற குழுக்கள் இருக்கின்றன அவையெல்லம் கலந்துகொள்ளவில்லை போலும்.

சமீபத்தில் பார்த்த படங்களில் மிகப் பிடித்தது "சீனி கம்". படத்தின் கதை எதாகவேண்டுமானல் இருக்கட்டும், போலித்தனம் நிறைந்ததாகவே இருக்கட்டும் சொல்லுகிற விதம் போரடிக்காமல் கட்டிப்போட்டு பார்க்கவைத்து "கலக்கியிருக்கான்ல" என்று சொல்ல வைத்தால் நல்ல படம் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் பிடிக்கும். படத்தில் பயங்கர ஜாலியான குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள். வசன கர்த்தா கலக்கியிருக்கிறார். அவருக்காகவே பார்க்கலாம். "சக் தே இந்தியா" படமும் பார்த்தேன். விறுவிறுப்பாக கதையில் அவுட் ஆப் போகஸ் ஆகாமல் அழகாக எடுத்திருக்கிறார்கள். முடிவு என்ன என்று தெரிந்தும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வது என்பது சவாலான விஷயம் அதில் நன்றாகவே செய்திருக்கிறார்கள். சமீபத்திய நட்பின் காரணமாக இரண்டு நல்ல (குடும்பப்பாங்கான) மலையாளப் படங்களும் பார்த்தேன். ஆக நாளொரு மேனியும் பொழுதொரு படமுமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

30 comments:

Anonymous said...

Manikkoru dhadavai refresh pannittu irukkom-la. First commenta pottuttu thaaney matteravey padippom ???

Thanks for making my day!
-Arun.

ILA (a) இளா said...

படம் பார்க்கிறது, நாடகம் பார்க்கிறது எல்லாம் வெச்சுகிட்டு வேலைன்னு கதை வேற. மீசை மாதவன், ரன்வே இந்த வாரம்தான் பார்த்தேன். நீங்களும் பாருங்க.:)

rv said...

//திருவாளர் திருமதி (அப்போ தான் நான் எங்கூட்டுல கொத்து பரோட்டா செய்வேன்..)//

:)))


------
அப்புறம் கடசியில குடும்பப்பாங்கானனு ஒரு வார்த்தை ரொம்ப மொடையா சேர்த்திருக்கீங்களே. அதுதான் டவுட்ட கிளப்புது...

ILA (a) இளா said...

//ஆக நாளொரு மேனியும் பொழுதொரு படமுமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.//
hmmm.

இலவசக்கொத்தனார் said...

//சனிக்கிழமைகளில் கொத்து பரோட்டா செய்யும் வேளைகளில்//

நீதான்யா ஜூனியர். சொன்னதெல்லாம் கரெக்ட்டா பாலோ பண்ணி டச் பண்ணிட்ட போ! சாம்பார் சாதமும் செய்யறதானே? :)

//சமீபத்திய நட்பின் காரணமாக இரண்டு நல்ல (குடும்பப்பாங்கான) மலையாளப் படங்களும் பார்த்தேன்.//

ஆரா அது? சேச்சியிட போட்டோண்டோ?

theevu said...

//அதையும் கொஞ்ச நாள் பார்த்து காதல், தாலி, தாய்மாமா, நாய்க்குட்டி இவற்றில் எல்லாம் உபதேசம் பெற்று மூன்றாம் நிலைக்கு அப்புறம் உள்ள மோன நிலையை தொட்டுவிட்டு அப்புறம் அதுவும் வேலைக்காகாமல் நமக்கு எப்ப வேணா பார்த்தாலும் புரிய மாதிரி நடிக்கும் வெள்ளைக்கார பாப்பாக்கள் பக்கமும் திரும்பிவிட்டேன்.//

:)

துளசி கோபால் said...

அதான் கொஞ்ச நாளா ஆளையே காணொமா?

தங்கமணி கொடுத்து வச்சவங்க:-)

Anonymous said...

post pottacha?...hmmm...ini oru maasathuku apparam than adutha post. therinjathu thana.....

:(

ஆடுமாடு said...

சீனிகம் படம் ஓ.கே. என் வயசுல இருக்கிறவங்களோட ஃபீலிங் கண்ணு அது. இளையராஜா அண்ணன்தான் பாட்டுல ரொம்ப ஏமாத்திட்டாரு. மன்றம் வந்த தென்றலுக்கு பாட்டையும்
இன்னும் ரெண்டு தமிழ் பாட்டு டியூனையும் அப்படியே உல்டாவாக்கி குடைஞ்சுட்டார். அப்புறம்... நாளைக்கு கெடைச் சோறு பண்ணப் போறேன். அப்படின்னா தெரியும்லா?
தெரியலைன்னா அடுத்தாப்ல சொல்றேன்.
http://aadumaadu.blogspot.com

Aani Pidunganum said...

dubuks,

Amaicharavaila Y Halleberryku oru chance kudukalai! appadiyeh serthuvita, koncha varushathula oru life time award vaangi aapitu aagalameh... Yosichu oru nalla mudivu sollunga

//ஆமாங்க வேலை பின்னி பெடெலெடுக்குதுங்க (ஆபிஸிலயும் :) )// Ingaiyeh purinjuruchu edhavechu sonninganu...

Anonymous said...

weekend neenga thhaan samayala?adra sakkai.andha ooru serial,namma oor serial ellthaiyum vittuttu blog la niraya ezhutthunga.onnum illana kothuparatta seinja kadhaiyavadhu sollunga.padikka naanga irukkomla......cheenikum raja pottadhaiye pottu konjam emmathitaarulla?chak de superr....
nivi.

Geetha Sambasivam said...

HAPPY AANI

sriram said...

யோவ் டுபுக்கு, டிவி டிராமா, ஸினிமா, டான்ஸ் ப்ரொக்ராம் எல்லாம் பார்த்து விட்டு பிஸி என்று அலட்டல் வேற. இத்தோட 2 மொக்கை போஸ்ட் போட்டாச்சு,எங்க பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. ஆமா சொல்லி புட்டேன். உடனடியாக ஒரு காமடி போஸ்ட் வந்தாகணும்..
என்றும் அன்புடன்
Sriram

மடல்காரன்_MadalKaran said...

உஙகளோட வேலை 'பிஸி' ல வலைபூ எழுதுவதையும் சேர்த்துக்கோங்க..
ஒரு மாசம் காக்க வச்சது ரொம்ப அதிகம்..

Anonymous said...

//இரண்டு நல்ல (குடும்பப்பாங்கான) மலையாளப் படங்களும் பார்த்தேன். //

ROTFL :))

Anonymous said...

//இரண்டு நல்ல (குடும்பப்பாங்கான) மலையாளப் படங்களும் பார்த்தேன். //

ROTFL :))

dubukudisciple said...

enna guruve!!
tv la oru prog vudama parthutu.. oru cinema vidama parthutu ippadi aani jaasthi adu thaan post podalenu oru mokkai vera...

seri adu enna kudumbapangana malayala padam.. sonna naangalum parpom

மெளலி (மதுரையம்பதி) said...

//அதையும் கொஞ்ச நாள் பார்த்து காதல், தாலி, தாய்மாமா, நாய்க்குட்டி இவற்றில் எல்லாம் உபதேசம் பெற்று மூன்றாம் நிலைக்கு அப்புறம் உள்ள மோன நிலையை தொட்டுவிட்டு அப்புறம் அதுவும் வேலைக்காகாமல் நமக்கு எப்ப வேணா பார்த்தாலும் புரிய மாதிரி நடிக்கும் வெள்ளைக்கார பாப்பாக்கள் பக்கமும் திரும்பிவிட்டேன். //

அது, அது..........

Anonymous said...

ippadi mokka post podava ivalavu naalu? romba jasthinganna....

நாமக்கல் சிபி said...

ரொம்ப நாள் கழிச்சி கலக்கலா வந்திருக்கீங்க!

மகிழ்ச்சி!

Ms Congeniality said...

hello anna,
eppdi irukeenga :)
//இந்த கருமத்துக்கு கே.டிவியில் எட்டு மணிக்குப் போடும் படங்களே பார்க்கலாம்ன்னு அதையும் கொஞ்ச நாள் பார்த்து காதல், தாலி, தாய்மாமா, நாய்க்குட்டி இவற்றில் எல்லாம் உபதேசம் பெற்று மூன்றாம் நிலைக்கு அப்புறம் உள்ள மோன நிலையை தொட்டுவிட்டு அப்புறம் அதுவும் வேலைக்காகாமல் நமக்கு எப்ப வேணா பார்த்தாலும் புரிய மாதிரி நடிக்கும் வெள்ளைக்கார பாப்பாக்கள் பக்கமும் திரும்பிவிட்டேன்//
ROTFL :D
naangalum chak dhe india paathom,was very good :)

ஆதிபகவன் said...

//ஆமாங்க வேலை பின்னி பெடெலெடுக்குதுங்க (ஆபிஸிலயும் :) ) பாரிஸ் ஹில்டன் யாரு பாரதியார் பேத்தியான்னு கேக்கற அளவுக்குப் போயிடுச்சுனா பார்த்துக்கோங்க.//????

//ஆக நாளொரு மேனியும் பொழுதொரு படமுமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.//????

ரெண்டும் செட்டாகலியே!!!!

அப்படீன்னா,படம் எல்லாம் ஆபீஸ்லியா பார்க்குறீங்க??? (குடுத்து வச்சவரு. மலையாளப் படமெல்லாம் பார்க்குறீங்க.)....:)))))

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

//சமீபத்திய நட்பின் காரணமாக இரண்டு நல்ல (குடும்பப்பாங்கான) மலையாளப் படங்களும் பார்த்தேன்.//

அட, நீங்களும் கேரளாவுக்கு மாறிட்டீங்களா?

//ஆக நாளொரு மேனியும் பொழுதொரு படமுமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.//

ஆனா சொல்றது என்னவோ "பிஸி" ஆனி ஜாஸ்தி.. ம்ம்ம்...

Anonymous said...

இந்த அறியாத புரியாத தமிழனுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் யாரேனும்..ROTFL அப்படீனா என்ன..?

Kaathambari said...

ஊ ல லா வும் , மலையாள படமும், வெள்ளைகார பாப்பாவும் பாத்துட்டு டைம் இல்லைனு சொன்னா எப்படி? அதுவும் இந்த மொக்கை போஸ்ட் போட ஒரு மாசம் எல்லாம் ரொம்ப ஜாஸ்திங்க. பண்ணின பாவத்துக்கு சீக்கிரம் ஒரு காமெடி போஸ்ட் போட்டு பரிகாரம் தேடுங்க.
அடுத்த போஸ்டாவது கொஞ்சம் சீக்கிரம் போடுங்கண்ணா...இல்லன பாரதியார் பேத்தி கோவுசிக்க போறாங்க (அவுங்க படமாவது போட்டிருக்கலாம்)...அவுங்க பேர சொன்னாலாவது சீககிரம் போடுறிங்களான்னு பாப்போம்...(உங்களுக்காக தமிழ் font எல்லாம் download பண்ணி எழுதியிருக்கேன்...கொஞ்சம் பாத்து பண்ணுங்க..)

Kaathambari said...

ROTFL- Rolling On The Floor Laughing....
டுபுக்கு அண்ணா, நான் சொன்னது சரியா?

Dubukku said...

அருண் - வாங்க அப்புறம் பதிவ படிச்சீங்களா இல்லையா :P

இளா - //படம் பார்க்கிறது, நாடகம் பார்க்கிறது எல்லாம் வெச்சுகிட்டு வேலைன்னு கதை வேற//
நீங்க தங்கமணி சொந்தமா... :) பத்தவெச்சிட்டியே பரட்டை

இராமநாதன் - ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க..நான் எதுவா தான் சொன்னேன் :)

இளா - சர்தான் ஒரு முடிவோடு தான் இருக்கீங்க இன்னிக்கு :))

இலவசகொத்தனார் - நன்றிங்கோவ்...சாம்பார் சாதம் தங்கமணி ஏற்கனவே பட்டயக் கிளப்புவாங்க...இப்போ கொத்து பரோட்டாவும் தூள் கிளப்பறாங்க.
உங்க சேச்சி பெயர் மீரா வாசுதேவன்

பாஸ்டன் பாலா - :) ஸ்மைலி தவிர எதாவது கமெண்ட்டும் போடுங்கண்ணே :)

தீவு - :)

துளசி - யெக்கா நீங்களும் பத்தவெச்சிட்டீங்களே...நான் சும்மா எடுபிடி தான் அடுப்படியில் தங்கமணி தான் சகலமும்....நான் இங்க ஸீன் போடறதோட சரி :)

காதம்ஸ் - இல்லீங்க...இன்னோன்னு போட்டாச்சு அடுத்ததும் சீக்கிரம் போடறேன் :)

ஆடுமாடு - வணக்கம் பெரிசு (கோச்சுக்காதீங்க). ஆமாங்க ராஜா ஏமாத்திட்டார். உங்க பதிவு சுவாரசியமா இருக்கு...இன்னும் படிச்சு முடிக்கலை...அடிக்கடி வறேன் உங்க வருகைக்கும் நன்றி :)

ஆணி - வெள்ளைக்கார பாப்பக்களுக்குன்னு வேற ஒரு அமைச்சரவை ஆரம்பிச்சிருவோம்..தல :))

நிவி- சமையல் நானில்லை...நான் சும்மா ஸீன் போடறது மட்டும் தான் :)) புது கிச்சன நாஸ்தி பண்றேனாம் வீட்டுல விடமாட்டேங்கிறாங்க. ஆமாங்க ராஜா பத்தியும் எழுத நினைச்சேன் அவசரத்துல விட்டுப் போச்சு

Dubukku said...

கீதா சாம்பசிவம் - நன்றி மேடம்

ஸ்ரிராம் - அண்ணே மன்னிச்சிகோங்க...வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் வரவேண்டாமா :)))

மடல்காரன் - அண்ணே வாங்கண்ணே...உங்க அன்புக்கு ரொம்ப நன்றி கண்டிப்பா முயற்சி செய்யறேன்

அம்பி - சிரிச்சே பத்தவைக்கிறயேப்பா :))

டுபுக்குடிசைப்பிள் - மன்னிச்சிகோங்க மேடம்...அதெல்லாம் அகால வேளையில் பார்த்தது. மலையாளப் படம் - தன்மாத்ரா (இல்ல தன்மத்ராவான்னு தெரியலை- மோகன்லால் நடிச்சது)

மதுரயம்பதி - ஓஹோ அங்கயும் அதே தானா :))

ராம் கிஷோர் - வாங்க மன்னிச்சிக்கோங்க...இப்போ போட்டாச்சு இனிமே முயற்சி செய்யறேன்

நாமக்கல் சிபி - அண்ணே வாஙண்ணே உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

Ms.Congeniality - வாங்க மேடம் நல்லா இருக்கோம் அங்க எப்படி..? அம்பி ,போலி சாமியார் எல்லோரும் நலமா?

ஆதிபகவன் - பாரிஸ் ஹில்டன் படமெல்லாம் ப்ளாக்லதாங்க படிக்க முடியும். ப்ளாக் பக்கமே வரலைங்கிறத தான் அப்பிடி சொன்னேன் :)) ஆபிஸில மலையாளப் படம் ஹூம்ம்ம் அதுக்கெல்லாம் மச்சம் வேணுங்க

சுமதி - வேற யாரு கேரளாவுக்கு மாறியிருக்காங்க? பிஸி என்னங்க பண்றது அதுதானே உண்மை :))

அனானி - தி கே சொன்ன மாதிரி தரையில விழுந்து சிரிக்கிறாங்களாமாம்... :))

தி.கே - தங்கச்சி (தங்கச்சி தானே?) மன்னிச்சிகோங்க...இன்னிக்கி ஒரு போஸ்ட் போட்டிருக்கேன் :) இனிமே அடிக்கடி போடறதுக்கு முயற்சி செய்யறேன். உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. நீங்க சொன்ன விளக்கம் ரொம்ப கரெக்ட் :))

Dubukku said...

ஆடுமாடு - அண்ணாச்சி உங்களுக்கும் நம்மூரா....எனக்கு அம்பாசமுத்திரம்...கடனாநதியிலிருந்து உங்கள் ஊர் திசையை அறிந்து கொள்ள முடிகிறது....பிரம்மதேசம்..ஆம்பூர்.ஆழ்வார்குறிச்சி???.அந்தப் பக்கம் தானே உங்களுக்கு??

ஆடுமாடு said...

ஆஹா, ங்கொய்யால டுபுக்குக்கு எங்க ஊர் டோய். அப்புறம் அடிக்கடி கண்டுக்குங்க.
ஆடுமாடு.

Post a Comment

Related Posts