Thursday, February 23, 2006

நம்மளப் பத்தி நாலு விஷயம்

ராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க...ஒரு சங்கிலிப் பதிவு

Four jobs I have had:

  • மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் - சென்னையில் பார்ட் டைமாக படித்துக் கொண்டிருந்த போது நம் வயதிலுள்ள எல்லோரும் வேலைக்குப் போகிறார்களே என்று நம நமவென்று அரித்து..இந்த வேலையை எடுத்துக் கொண்டேன். எந்த எக்ஸ்பீரியன்ஸும் இல்லாமல் எடுத்த எடுப்பில் ரொம்ப நல்ல சம்பளம். கம்ப்யூட்டர் அப்போது தான் ஆபிஸ்களிலேயே புழங்க ஆரம்பித்திருந்தது. அந்த நேரத்தில் எல்லோ பேஜஸ் சி.டிக்கு(வெறும் சி.டி மட்டும் தான்) ஆர்டர் பிடிக்கும் வேலை. பாரிஸ் கார்னரில் எல்லா செட்டித் தெருக்களிலும் பீடா போடும் சேட்டுகளிடம் எதையுமே கண்ணுல காட்டாமல் இதுக்கு ஆர்டர் பிடிக்கறதுக்கு பதிலா பேக்கிரவுண்டில் "ஓம்" கேசட் போட்டு மடம் வைத்து ஊரை ஏமாத்துகிற சாமியார் வேலை தேவலை. எனக்குத் தெரிந்த "கலம் கஹாங் ஹை" ஹிந்தி அங்கே உதவாது என்பதால் "தன்யவாத்", "மாஃப் கீஜியே" என்று புதிதாக இரண்டு பதங்களை தெரிந்து கொண்டு மொத்தம் மூன்று நாட்கள் வேலை பார்த்தேன். முதலாளி நல்லவர் மூன்று நாட்களானாலும் நல்ல சம்பளம் போட்டுக் குடுத்தார். அப்புறம் கடையை மூடி விட்டு ஓடிவிட்டார் என்று கேள்விப் பட்டதும் கொஞ்ச நாளைக்குப் பாரிஸ் கார்னர் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. அந்த நேரத்தில் தான் "முஜே பச்சாவ்"ம் எனது ஹிந்தி புலமையில் சேர்ந்து கொண்டது.


  • ப்ரோக்ராமர் - டை கட்டிக் கொண்டு ப்ராஜெக்ட் மேனேஜரை ஏமாத்தும் வேலை


  • டேடாபேஸ் ஆர்கிடெக்ட் - கோட் சூட் போட்டுக் கொண்டு ப்ராஜெக்ட் மேனேஜரோடு சேர்ந்து கொண்டு கோட் சூட் போட்டுக் கொண்டிருப்பவர்களை ஏமாத்தும் வேலை


  • Four movies I would watch over and over again:
  • லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்

  • **ahem***உன்னால் முடியும் தம்பி

  • சலங்கை ஒலி

  • இதற்கடுத்த படியாக உள்ள படங்களில் பேசும் படம் காதலிக்க நேரமில்லை, தெனாலி தில்லுமுல்லு, தில்லானா மோகனாம்பாள் என்று நிறைய தேறும்.


  • Four places I have lived (for years):
  • அம்பாசமுத்திரம்

  • சென்னை

  • லண்டன்

  • என் மனைவியின் இதயத்தில் (ஹீ ஹீ ரொமாண்டிக்கா இருக்கு இல்ல?)



  • Four TV shows I love to watch:
  • குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை சிதம்பர ரகசியம் வேணும்னா தேறும்.


  • Four places I have been on vacation:

  • கொடைக்கானல்

  • பாரிஸ்

  • அம்பாசமுத்திரம் (இப்போ விடுமுறைக்கு அங்க தான் போவோம்...சொந்த ஊருக்குப் போவதே தனி சுகம் தான்)


  • Four of my favourite foods:

    வெறும் நாலு தானா?
  • வட இந்திய , தென்னிந்திய சாப்பாட்டு வகைகள்ன்னு சொன்னா கரெக்டா இருக்கும்னு நெனைக்கறேன்.(சப்பாத்தி சென்னா மசாலா இருந்தா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்)


  • Four places I'd rather be now:
  • யாருமே இல்லாத நீலமான தெளிவான கடற்கரையில் (என் குடும்பத்தோடு) - ஒரு வாரத்திற்கு

  • எந்த தொந்தரவும் இல்லாமல் ஹாயாக பாரிஸில் - முதல் நாள்

  • மனைவி குழந்தைகளோடு பாரிஸ் டிஸ்னி லேண்டில் விளையாட்டு - இரண்டாவது நாள்

  • மனைவியையும் குழந்தைகளையும் டிஸ்னி லேண்டில் விளையாட விட்டுவிட்டு நான் மாட்டும் ஹோட்டல் ரூமில் இண்டர்னெட் கனெக்க்ஷனோடு ப்ளாகில் -மூன்றாவது நாள்


  • Four sites I visit daily:

  • டுபுக்குவோட ப்ளாக்

  • டுபுக்குவோட ப்ளாக் கமெண்ட்ஸ்

  • யாஹூ (பழைய ப்ளாகில் யாராவது கமெண்ட் போட்ருக்கிறார்களான்னு பார்க்க)

  • டுபுக்கோட ப்ளாக் ட்ராபிக் பேஜில் - யார் யார் எங்கிருந்து எப்போ வந்திருக்கிறார்கள்ன்னு பார்க்க


  • Four People I would like to tag:
    செயின் பதிவுகளில் ரொம்பப் பெரிய ஆர்வம் இல்லை...அதனால் யாரையும் பெயர் சொல்லிக் கட்டாயப் படுத்த விரும்பவில்லை. ஆர்வமிருந்தால் இங்கே வரும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.(டுபுக்கு அழைக்கிறார்)..ஆர்வமிருந்தால் செய்யவும்.

    17 comments:

    யாத்ரீகன் said...

    >> முஜே பச்சாவ்"ம்
    >> கோட் சூட் போட்டுக் கொண்டிருப்பவர்களை

    :-))))))

    முன்றாவது நாளுக்கு சொன்னது தப்பா எதுவும் டைப் பண்ணீட்டீங்களா ?? ;-))))

    இருந்தாலும் அந்த ரொமான்ட்டிக் டச் அருமையோ அருமை, வீட்ல அப்போ இன்னைக்கு சப்பாத்தி சென்னா மசாலா கிடைக்கும்னு சொல்லுங்க..

    Unknown said...

    என்ன டுபுக்கு...தாமிரபரணி நதிக்குளியலே, கிருஷ்ணா தியேட்டர் படத்தை/முறுக்கை, திருநெல்வேலி அல்வாவை, கல்லிடைக்குறிச்சி அப்பளாத்தை....எல்லாம் விட்டுவிட்டிங்களே....good show, keep it up.

    the woman said...

    "என் மனைவியின் இதயத்தில் (ஹீ ஹீ ரொமாண்டிக்கா இருக்கு இல்ல?)"

    You expecting something from your wife huh? :P

    இராமச்சந்திரன் said...

    "புழங்காத ஆரம்பிதித்திருந்தது" - ரொம்ப அவசர போஸ்டிங் போல இருக்கு. எனக்கு தெரிஞ்சு இது வார்த்தை பிழை. சரியா ?

    இன்னிக்கு சாயந்திரம் கொஞ்சம் போஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்...பார்க்கலாம்.

    லதா said...

    // அம்பாசமுத்திரம்
    சென்னை
    லண்டன்
    என் மனைவியின் இதயத்தில் (ஹீ ஹீ ரொமாண்டிக்கா இருக்கு இல்ல?) /

    Wife's heart - last place ?
    வீட்டுக்குபோனா இருக்கு உங்களுக்கு ;-)))

    Ananthoo said...

    ஓ..லதா முந்திகொண்டுவிட்டார்!
    போட்டுக்குடுக்கலாம்னு பார்தேன்:-)
    a good one dubuks..
    (btw my first oppam in tamizh)

    neighbour said...

    .(டுபுக்கு அழைக்கிறார்)...

    ennanga election vera kita varadhu...ethaaavadhu mudivu panneerukeengalaa....

    sollra thoraniayaa seri illaiyae...

    Yours Truly said...

    Aahaa! Semma hindi knowledge Sir ungaLukku. "Ek gaon mein Ek kisan raghu thaathaa" Hindi professor dhaan unga guru-vaa?? :-P

    Usha said...

    Interesting.
    Paris ah! parle tu francais?
    apram unga blog poku varathai monitor panra information romba crucial - inimel denam rendu daram vandu check panrathai naan niruthanum..heheheh..
    adu enna ellame oorai emathum velai appadeengareenga- Post graduate in eimatral technology padicheengala? ille M.B.A va? heheh...

    பழூர் கார்த்தி said...

    டுபுக்கு, உங்களைப் பற்றி எனது சங்கிலிப்பதிவில் எழுதியிருக்கிறேன்..

    ****

    கிங்காங் பதிவில் வழக்கம்போல் கிண்டல் அதிகம் :-)

    ambi said...

    Hi dubbukku anna,

    yenna manniku ice balamaa erukku? epdiyum ungala கிங்காங் nu sonnathu sonnathu thaan.

    btw when r u coming for d vacation? sonna kuttiesaa pakka naanum varuven ella?

    ezhuthu pizhai ellam seri pannikitu varen, konjam 5 vathu blogga En veetukum vanthu unga commenta podungoo! "vashishter vayaala brahma rishi" pattam vanga vendum.

    Anonymous said...

    "Four movies I would watch over and over again:

    லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்"

    Naan kooda apdi thaan. KaNakke illai ethanai tharam paathirupen! Since you are in UK, try getting the Extended version of the LoTR films. Inga oru edathuleyum kidakkalai. Oru DVD rental library thaan kidachadhu. Each film runs for about 4 hours, but if you are a fan of LoTR and have the opportunity to watch it, I'd say it's too good to miss.

    Balaji S Rajan said...

    தலைவா...இந்த செயின் .... அந்த செயின்...TAGGING...எதுவும் பண்ணாமல் ஒழுங்கா இருந்தீங்களே... உங்க மேல இருந்த மதிப்பு பல மடங்கு ஜாஸ்தி ஆயிடுச்சு..அப்புறம்..STAT Counter சும்மா போகாதீங்க... நிறைய SPYWARE COOKIES அங்கிருந்து தான் வருது.... அப்புறம் இருட்டு கடை அல்வா விட்டுட்டீங்களே...Ofcourse உங்களுக்கு நிறைய குடுத்து தான் பழக்கம்...இருந்தாலும்... வழக்கம் போல் உங்க போஸ்டுல..சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கு...

    Dubukku said...

    யாத்திரிகன் - அன்னிக்கு உண்மையா அன்னிக்கு சப்பாத்தியும் சென்னாமசாலாவும் கிடைச்சுது தெரியுமா? :)

    ஹரிஹரன்ஸ் - வடிவேலு சொல்ற மாதிரி யாரு எங்கேர்ந்து எப்போ அடிப்பாங்கைன்னே சொல்ல முடியலையேய்யா...உங்களுக்கும் நம்மூர் பக்கம்ன்னு தெரியுது...அப்பிடித் தானே?

    thewoman - hehe he yes :)

    Ramachandran- yes it was...danks for pointing that out. Corrected that day itself.(after seeing your comment only) danks.

    Latha - இது எனக்குத் தோணல பாருங்க...ஆனாலும் நீங்க போட்டுக்குடுத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு விழுந்தது ....எப்பிடிங்க இப்படி தோணுது உங்களுக்கு :))

    Dubukku said...

    Ananthoo - நீங்களுமா அனந்து இப்பிடி போட்டுக்குடுக்கணும்? :))
    தமிழ்ல கலக்குறீங்க

    neighbour- எலெக்கஷனா? அதான் வருஷா வருஷம் இண்டிப்ளாகிஸ்ல தோக்கடிக்கிறீங்களே...அது ஒன்னே போதாதா? ;)

    Sri- Unmai thaane? danks :)

    Yours Truly - hehe avanga illanga...Jolli thirindha kaalam padinga...athula theriyum :P

    Dubukku said...

    Usha - aiyoo thitatheenga...enakku french theriyathu...
    softwarela irundhale emathatharudhan velaiyee :))

    Uma - Ennamo neenga aabisla pannatha maadhiri act vudureenga :P

    Somberi paiyan - Pidikkumnu solli irukkeenga.romba danks. evalavu naalnu paarpom :P

    Ambi - will email you mate. Konjam inga busy a irundhen adhan no comments will do soon :)

    Krithika - yes I have watched the extended one for 2 and 3rd. very nice ones. I have them too.


    Balaji - DRaj koopitu irundhar athan...ama iruttu kadai alwa is something I like too :) danks.
    aabislerndhu avasarathula potten indha post..Will try to switch to different site stat soon.

    Yours Truly said...

    Indha comment post paNNinadhukku appram dhaan JoLLi Thirindha Kaalam padichen. Andha Madras payyan-Mumbai girl episode-la neenga Hindi teacher kooda "Ruk Ruk Ruk" paatuku dance aadra madhiri kanavu kaNdadhu was too hilarious...kaNNula thaNNi vara aLavukku sirichen :D

    Post a Comment

    Related Posts